எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்று பொதுவாக சொல்லக்கேட்டிருப்போம்.
பித்துப் பிடித்தவன்பாடு கொடுமைதான்!. உண்மையில் தெருவோரங்க்களில் அனாதைகளாக குடும்பத்தவர்கள் கவனிக்காமல் அலையும் அவர்களைப் பார்க்கும் போது நமக்கு வருத்தமாகத்தான் உள்ளது!
அவர்களுக்கு உணவும் உறையுமிடமும் கொடுக்கவேண்டியது அரசின் கடமை!! போதுமான அளவு மனநோயாளிகளுக்கான காப்பகங்கள் நம் நாட்டில் இல்லை என்பதுதான் உண்மை.
இந்த இடுகையில் அதைப்பற்றி நாம் பார்க்கப்போவதில்லை. உண்மையில் பித்துப்பிடித்தவர்கள் ஒருபுறமிருக்க சட்டத்துக்குப் புறம்பான செயல்களைச் செய்து அதிலிருந்து தப்பிக்க பைத்தியம் போல் நடிக்கும் நபர்களைப் பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.
இவர்களால் மருத்துவர்களுக்கும் தலைவலிதான். ஏனென்றால் இவர்களை உண்மையான பித்தனா? இல்லை பொய்ப்பித்தனா என்று கண்டுபிடிக்க பல நேரங்க்களில் மருத்துவரும் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டிவரும்.
பொதுவாக உண்மைப்பித்தனுக்கும், பொய்ப்பித்தனுக்கும் என்ன என்ன வேறுபாடு இருக்கும் என்று பார்ப்போம்!
1.திடீரென்று தமிழ்சினிமாபோல் "நான் எங்கே இருக்கிறேன்?" ஆசாமிகளை நடைமுறையில் பார்ப்பதா¢து! உண்மையான பைத்தியம் மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக முற்றிய நிலையை அடையும். திடீர்ப் பித்தர்கள் பெரும்பாலும் "பொய்ப்பித்தர்கள்"!!
2.உண்மையில் ஒருவனுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதற்குக் காரணம் இருக்காது( காதல் பைத்தியங்கள் இந்தக் கட்டுக்குள் அடங்க்காது!.) பொய்யாக நடிப்பவர்கள் பைத்தியமாக நடிப்பதற்கு காரணம் ஏதாவது இருக்கும். பல நேரங்க்களில் கி¡¢மினல் குற்றமாக இருக்கும்!
3.உண்மையான பித்தர்களின் பரம்பரையில் யாருக்காவது பைத்தியம் பிடித்திருப்பது, அல்லது மிகப்பொ¢ய நஷ்டம் என்று ஏதாவது இருக்கும். ஆனால் சூப்பர் ஆக்டிங்க் கொடுக்கும் கி¡¢மினல்களிடம் இதெல்லாம் இருக்காது!
4.உண்மையில் மன நிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாகிவிட்டவர்களிடம் அறிகுறிகள் 24 மணி நேரமும் சீராக ஒரேபோல் இருக்கும். ஆனால் பித்தனாக நடிக்கும் ஆசாமிகள் ஆட்களைக் கண்டவுடன் ஓவர் "குணா கமல்" ஆக்டிங்க் கொடுப்பார்கள்,
5.உண்மையில் பித்துப் பிடித்தவர்களின் முகம் வித்தியாசமாக இருக்கும். வெறுமையான பார்வை காணப்படும். ஆனால் சீட்டிங்க்க் ஆசாமிகளின் முக பாவம் மாறிக் கொண்டே இருக்கும். வலுக்கட்டாயமாக முகத்தைப் பல கோணங்க்களில் வைத்துக்கொள்வார்கள்!
6.இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை உண்மையான பைத்திய நிலையில் இருக்கும். பொய்யாய் நடிப்பவர்கள் தூங்காமல் இரண்டு நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிப்பது கஷ்டம்.
7.உண்மைப் பித்தர் சோறு,தண்ணி தூக்கமில்லாமல் சுறுசுறுப்பாக இயங்க்குவர். ஆனால் நம்ம ஆள் சில நாளிலேயே சோர்வாகிப் படுத்துவிடுவார்.
8.உண்மைப் பித்தன் அழுக்காகவும், சுத்தபத்தமில்லாமல் இருப்பான். ஆனால் நம்ம "நடிகர்திலகம்" கொஞ்சம் சுத்தமாக இருப்பார்.
9.உண்மைப் பித்தனின் தோல்,உதடுகள் வரண்டு, சொரசொரப்பாக இருக்கும். பொய்யாய் நடிப்பவருக்கு அப்படி இருக்காது
10.உண்மைப் பித்தனை எத்தனை முறை வேண்டுமானாலும் சோதிக்கலாம். கண்டுக்க மாட்டான். பொய்யாய் நடிப்பவன் அப்படியில்லாமல் அடிக்கடி சோதித்தால் எ¡¢ச்சல்படுவான், கோபப்படுவான்.
இதெல்லாம் பொதுவாக காணப்படும் அம்சங்கள்!! இதை வைத்து நாம் பித்தன் உண்மையில் பாதிக்கப்பட்டவனா அல்லது நடிகனா என்று கண்டுபிடித்துவிடலாம்!!
34 comments:
//"அவங்க பைத்தியமா? நாம் பைத்தியமா? -10!"//
பொருத்தமான தலைப்பூ......
சுவாரஸ்யத்தோடு நல்ல பதிவு தேவா.என்றாலும் இன்றைய பைத்தியங்களைக் கண்டு பிடிக்க மிக மிகக் கஸ்டம்.
ஹா ஹா ஹா. தலைப்பு சூப்பர் தேவா சார்.
அறிகுறிகள் எல்லாம் தெளிவா சொல்லி இருக்கீங்க. இதையும் மீறி நடிப்பவர்களை மருத்துவரீதியாக நிரூபிக்க முடியுமா டாக்டர்?
ஓ இவ்வளவு விடயமிருக்கா..
நீங்கள் தீவிரப் பைத்தியத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். நாம் எல்லாருமே பைத்தியம்தான். எதில் பைத்தியம் எவ்வளவு பைத்தியம் என்பதுதான் மாறுபடுகிறது!
http://kgjawarlal.wordpress.com
நீங்க ஒரு பைத்தியம் அப்படின்னு மனைவி அடிக்கடி சொல்றா..??
நிஜமா டாக்டர்..??
தலைப்பு சூப்பர் தேவா சார்.
மிக நல்ல இடுகை
314 பாலோயர் Great
அதிரடித் தலைப்பூ மருத்துவரே..
/ஆனால் நம்ம "நடிகர்திலகம்" கொஞ்சம் சுத்தமாக இருப்பார்.
//
ஹ ஹ ஹா.. இது சூப்பரு
இப்பிடி விடயத்தைப் புட்டுப் புட்டு வைத்தால் நம்ம நடிகர்கள் ஒழுங்காக நடிக்கப் போகிறார்கள். வைத்தியர்கள் தலையைப் பிய்க்கப் போகிறார்கள். ஹ ஹஹா.
அகல்விளக்கு said...
//"அவங்க பைத்தியமா? நாம் பைத்தியமா? -10!"//
பொருத்தமான தலைப்பூ......
02 December 2009 01:07//
தலையில் பூவா? ஹி ஹி ..
Blogger ஹேமா said...
சுவாரஸ்யத்தோடு நல்ல பதிவு தேவா.என்றாலும் இன்றைய பைத்தியங்களைக் கண்டு பிடிக்க மிக மிகக் கஸ்டம்.//
என்னைத் தெரியல!!! ஹி ஹி
Blogger S.A. நவாஸுதீன் said...
அறிகுறிகள் எல்லாம் தெளிவா சொல்லி இருக்கீங்க. இதையும் மீறி நடிப்பவர்களை மருத்துவரீதியாக நிரூபிக்க முடியுமா டாக்டர்?//
முடியும் !!
Blogger நாணல் said...
ஓ இவ்வளவு விடயமிருக்கா..//
ஆமா! ஆமா!!
----------------------------
02 December 2009 02:31
Delete
Blogger Jawahar said...
நீங்கள் தீவிரப் பைத்தியத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். நாம் எல்லாருமே பைத்தியம்தான். எதில் பைத்தியம் எவ்வளவு பைத்தியம் என்பதுதான் மாறுபடுகிறது!///
உண்மைதானுங்கோ!
http://kgjawarlal.wordpress.com
02 December 2009 03:14
Blogger butterfly Surya said...
நீங்க ஒரு பைத்தியம் அப்படின்னு மனைவி அடிக்கடி சொல்றா..??
நிஜமா டாக்டர்..??//
கூல் !! அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க!! புரியுதா!
Blogger நேசமித்ரன் said...
தலைப்பு சூப்பர் தேவா சார்.
மிக நல்ல இடுகை
314 பாலோயர் Great//
நன்றிங்கோ!!
-----------------------------
02 December 2009 04:28
Delete
Blogger சூரியன் said...
அதிரடித் தலைப்பூ மருத்துவரே..///
சும்மா கலாட்டா!!
Blogger ஈரோடு கதிர் said...
/ஆனால் நம்ம "நடிகர்திலகம்" கொஞ்சம் சுத்தமாக இருப்பார்.
//
ஹ ஹ ஹா.. இது சூப்பரு//
மெய்யாலுமா!!
Blogger ஜெஸ்வந்தி said...
இப்பிடி விடயத்தைப் புட்டுப் புட்டு வைத்தால் நம்ம நடிகர்கள் ஒழுங்காக நடிக்கப் போகிறார்கள். வைத்தியர்கள் தலையைப் பிய்க்கப் போகிறார்கள். ஹ ஹஹா.
02 December 2009 05:13/
ஏற்கெனவே குழம்பிப்போய்தான் இருக்கோம்!!
ஆகா ஆகா இத்தனை வேறுபாடுகள் இருக்கா - பலே பலே
நல்ல இடுகை நல்வாழ்த்துகள்
இம்புட்டு இருக்கா, சரி டாக்டர், இதெல்லாம் படிச்சுட்டு தெளிவா நடிக்க முயற்சி செஞ்சா எப்டி கண்டுபுடிப்பீங்க?
சொல்லிட்டிங்கல்ல, இனிமே கரிகட்டா நடிச்சிகிறோம்!
Super..
வித்தியாசமா எல்லா வித்தியாசத்தையும் சொல்லி இருக்கீங்க...வழக்கமா எல்லோரும் ஆறு வித்தியாசம் தான் கண்டுபிடிப்பாங்க (நம்ம பத்திரிக்கைகள்-ல தான்). நீங்க பைத்தியத்துக்கு பத்து சொல்லிருக்கீங்க... அருமை.
// butterfly Surya said...
நீங்க ஒரு பைத்தியம் அப்படின்னு மனைவி அடிக்கடி சொல்றா..??
நிஜமா டாக்டர்..?? //
அப்பா நீங்க "நடிகர் திலகம்"-னு சொல்லுங்க தல...:-))
//ஆனால் நம்ம "நடிகர்திலகம்" கொஞ்சம் சுத்தமாக இருப்பார்.//
இல்லையினா செவாலியே விருது குடுத்திருப்பாங்களா !? :-)
பிடிக்க இருந்த பைத்தியம் விட்டுடுச்சி சார்.....பைத்தியத்தில் இத்தனை ரகங்களா?
இந்த கேரக்டரிலும் நிஜ வாழ்வில் நடிப்பா? விந்தையான உலகம் தான்....
S.A. நவாஸுதீன் said...
அறிகுறிகள் எல்லாம் தெளிவா சொல்லி இருக்கீங்க. இதையும் மீறி நடிப்பவர்களை மருத்துவரீதியாக நிரூபிக்க முடியுமா டாக்டர்?
இதில் எல்லாம் விவரமா இருப்பீங்க..என்னை டார்ச்சர் கொடுக்கிற உங்களுக்கும் ஒரு டெஸ்ட் எடுக்கலாம்னு நினைக்கிறேன் எப்படி வசதி?
cheena (சீனா) said...
ஆகா ஆகா இத்தனை வேறுபாடுகள் இருக்கா - பலே பலே
நல்ல இடுகை நல்வாழ்த்துகள்
02 December 2009 05:44
//
நன்றி ஐயா!!
தமிழரசி said...
S.A. நவாஸுதீன் said...
அறிகுறிகள் எல்லாம் தெளிவா சொல்லி இருக்கீங்க. இதையும் மீறி நடிப்பவர்களை மருத்துவரீதியாக நிரூபிக்க முடியுமா டாக்டர்?
இதில் எல்லாம் விவரமா இருப்பீங்க..என்னை டார்ச்சர் கொடுக்கிற உங்களுக்கும் ஒரு டெஸ்ட் எடுக்கலாம்னு நினைக்கிறேன் எப்படி வசதி?
02 December 2009 19:25//
நல்ல முடிவு!!!
ஜோசப் பால்ராஜ் said...
இம்புட்டு இருக்கா, சரி டாக்டர், இதெல்லாம் படிச்சுட்டு தெளிவா நடிக்க முயற்சி செஞ்சா எப்டி கண்டுபுடிப்பீங்க?
//
தொடர்ந்து செய்ய முடியாதுங்க!!
-------------------------
02 December 2009 06:08
வால்பையன் said...
சொல்லிட்டிங்கல்ல, இனிமே கரிகட்டா நடிச்சிகிறோம்!
//
அய்யய்யோ!!
-------------------------
02 December 2009 06:37
கோபிநாத் said...
Super..
//
மிக்க நன்றிங்க!
02 December 2009 06:54
Blogger ரோஸ்விக் said...
வித்தியாசமா எல்லா வித்தியாசத்தையும் சொல்லி இருக்கீங்க...வழக்கமா எல்லோரும் ஆறு வித்தியாசம் தான் கண்டுபிடிப்பாங்க (நம்ம பத்திரிக்கைகள்-ல தான்). நீங்க பைத்தியத்துக்கு பத்து சொல்லிருக்கீங்க... அருமை.
// butterfly Surya said...
நீங்க ஒரு பைத்தியம் அப்படின்னு மனைவி அடிக்கடி சொல்றா..??
நிஜமா டாக்டர்..?? //
அப்பா நீங்க "நடிகர் திலகம்"-னு சொல்லுங்க தல...:-))
//ஆனால் நம்ம "நடிகர்திலகம்" கொஞ்சம் சுத்தமாக இருப்பார்.//
இல்லையினா செவாலியே விருது குடுத்திருப்பாங்களா !? :-)//
10 ன்னு கொடுத்தால் கொஞ்சம் எளிமையா இருக்கும என்றுதான் ..10ஆகக் கொடுத்தேன்!
டாக்டர், நீங்க நடிக்க சொல்லி தருகின்றீரா? இல்லை கண்டுபிடிக்க சொல்லி தருகின்றீரா?
ஆ.ஞானசேகரன் said...
டாக்டர், நீங்க நடிக்க சொல்லி தருகின்றீரா? இல்லை கண்டுபிடிக்க சொல்லி தருகின்றீரா?
02 December 2009 20:0///
கேள்வியெல்லாம் ”நீங்க நல்லவரா? கெட்டவரா? “ பாணியிலேயே இருக்கே!!!ம் !!ம்!உங்க பின்னூட்டத்திலெ கவனிச்சிக்கிறேன்!!
நல்ல விளக்கம் சார்
பொய்யானவனைபார்த்தால் நாமதான் பைத்தியக்காரனாகிவிடுவோம் போல இருக்கு
hi sir
vanakam
nan unga pathivugala padichikitu iruka oru student
my doubt is when some one behave in wrong way in a public place what can we do
one request pls delete this comment as soon as u read it
Post a Comment