Wednesday 16 December 2009

குழந்தைகளுக்கு முழங்கையில் அடிபட்டால் ? அறியவேண்டிய-7 குறிப்புகள்!!

பொதுவாக மருத்துவம் என்பது பற்றி அறிவியல்பூர்வமாக நாம் அறிந்து கொள்வது மிக அவசியம். அதுவும் நம் குழந்தைகளுக்கு என்று வரும்போது இன்னும் எச்சரிக்கை தேவை!!
குழந்தைகள் கீழே விழும்போது முழங்கை எலும்பு முறிவு ஏற்பட்டால் என்ன செய்யக்கூடாது என்ன செய்யலாம்? என்று நாம் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும்.
1.குழந்தைகளுக்கு முழங்கையில் அடிபட்டு வீக்கம், வலி காணப்பட்டால் அவசியம் எலும்பு உடைந்துள்ளதா? என்று எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பது சிறந்தது.
2.முழங்கையில் எண்ணை, வலிக்கான களிம்புகள் போட்டு தேய்த்துவிடக் கூடாது.அப்படிச்செய்தால் முழங்கையைச் சுற்றியுள்ள தசை, சவ்வுப்பகுதிகளில் உபரியான எலும்புகள் தோன்றி முழங்கை மடக்க விடாமல் தடுக்கும். இதற்கு மயோசைடிஸ் ஆஸ்ஸிபிகன்ஸ் என்று பெயர்(Myositis ossificans) என்று பெயர்.
3.எலும்பு உடைந்திருந்தால் நாட்டு வைத்தியம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் கை திரும்பி இணையும் அபாயம் அதிகம்.
4.முழங்கைக்கு சற்று மேல் எலும்பு உடைந்து இருந்தாலோ அல்லது முழங்கை எலும்பு விலகி இருந்தாலோ எலும்பு மருத்துவரிடம் காண்பித்தல் அவசியம்.
5.முழங்கைக்கு சற்று மேலே உடைந்திருந்தால் பல நேரங்களில் மருத்துவரிடம் கேட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால் அறுவை சிகிச்சை செய்து கொள்வதே மிக நல்லது.
6.முழங்கை எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் உடைந்த வித்தியாசம் தெரியாத அளவுக்கு மிகச் சரியாகப் பொறுத்த முடியும்.
7.ஏற்கெனவே முழங்கை எலும்பு உடைந்து நாட்டுக் கட்டுப் போட்டு எலும்பு தவறாக இணைந்திருந்தாலும் அதையும் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

20 comments:

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப ரொம்ப அவசியமான தகவல்கள் தேவா சார். ரொம்ப நன்றி.

நல்லதொரு பகிர்வு

pudugaithendral said...

குறிப்புக்களுக்கு நன்றி தேவா,

எங்க அம்மம்மா சொன்னது

first aid மருத்துவமா அடிபட்ட இடத்தில் ஐஸ் க்யூப்/ ஐஸ் தண்ணியால ஒத்தடம் கொடுத்தா வலி/வீக்கம் குறையும். அப்புறம் கண்டிப்பா டாக்டர் கிட்ட கூட்டிகிட்டு போகணும்.

அப்துல்மாலிக் said...

அருமையான தகவல் உதவி

நிறைய குழந்தைகள் பெரியவர்களின் தப்பான முடிவால் நிறைய உடல் ஊணத்தால் அனுபவிக்கிறார்கள்

தகவலுக்கு நன்றி

priyamudanprabu said...

நல்லதொரு பகிர்வு

தேவன் மாயம் said...

Blogger S.A. நவாஸுதீன் said...

ரொம்ப ரொம்ப அவசியமான தகவல்கள் தேவா சார். ரொம்ப நன்றி.

நல்லதொரு பகிர்வு//

நன்றி நவாஸ்!

தேவன் மாயம் said...

Blogger புதுகைத் தென்றல் said...

குறிப்புக்களுக்கு நன்றி தேவா,

எங்க அம்மம்மா சொன்னது

first aid மருத்துவமா அடிபட்ட இடத்தில் ஐஸ் க்யூப்/ ஐஸ் தண்ணியால ஒத்தடம் கொடுத்தா வலி/வீக்கம் குறையும். அப்புறம் கண்டிப்பா டாக்டர் கிட்ட கூட்டிகிட்டு போகணும்.//

உங்க அம்மம்மாவே அறிவாளின்னா நீங்க?

தேவன் மாயம் said...

Blogger அபுஅஃப்ஸர் said...

அருமையான தகவல் உதவி

நிறைய குழந்தைகள் பெரியவர்களின் தப்பான முடிவால் நிறைய உடல் ஊணத்தால் அனுபவிக்கிறார்கள்

தகவலுக்கு நன்றி//

இவற்றை கடைப்பிடித்தால் நிச்சயம் ஊனம் குறையும்!!

தேவன் மாயம் said...

Blogger பிரியமுடன் பிரபு said...

நல்லதொரு பகிர்வு///

நன்றி பிரபு!!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

தகவல்களுக்கு நன்றி டாக்டர்.ஈரோடுக்கு வரீங்களா?

தேவன் மாயம் said...

ஸ்ரீ said...
தகவல்களுக்கு நன்றி டாக்டர்.ஈரோடுக்கு வரீங்களா?
17 December 2009 05:12 //

இன்னும் பூரண குணம் இல்லை!!

Jerry Eshananda said...

/இன்னும் பூரண குணம் இல்லை!!//
நல்ல டாக்டரா பாத்து காமிங்க,சரியாபோயிரும்.

வால்பையன் said...

தகவலுக்கு ரொம்ப நன்றி டாக்டர்!

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நல்லதொரு பகிர்வு

கமலேஷ் said...

ரொம்ப ரொம்ப அவசியமான தகவல்கள் தேவா சார். ரொம்ப நன்றி.

நல்லதொரு பகிர்வு

நட்புடன் ஜமால் said...

2-ஆவது குறிப்பு புதிது

3-ஆவது குறிப்பு முழுதாக உடன் பட இயலவில்லை

----------

மற்றபடி நல்ல தகவல்கள் தேவா.

ஆ.ஞானசேகரன் said...

நல்லதொரு தகவலுக்கு நன்றி டாக்டர்

Chitra said...

Useful information. Thank you very much,

அன்புடன் நான் said...

பயனுள்ள பதிவுங்க மருத்துவரே..... தகவலுக்கு நன்றிங்க.

Anonymous said...

மேலும் ஒரு பயனுள்ள பதிவு சார்... நன்றி

SUFFIX said...

பயனுள்ள‌ சிறு குறிப்புகள் டாக்டர்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory