Wednesday, 9 December 2009

வைரஸ் காய்ச்சல்!

”காய்ச்சலுக்கு அரசு ஆஸ்பத்திரியில் ஸ்பெசல் ஊசி!!” என்று பதிவு போட்ட மறுநாளே வைரஸ் காய்ச்சல் படுக்க வைத்து விட்டது.
சரியாக நேற்றிரவு 3.00 மணிக்கு படுக்கையிலிருந்து விழிப்பு வந்தது. நெற்றி சுடுவது போல் இருந்தது. முழங்கால் இரண்டும் நகற்ற முடியவில்லை. இடுப்பு வலியோ அதை விட.காலை ஆறு மணிக்கு மேரி பிஸ்கட்டுடன் பால் சாப்பிட்டு மாத்திரை சாப்பிட்டேன். ஊசியும் போட்டுக் கொண்டேன்.( டாக்டருக்கே ஊசியா என்று கேட்கிறீர்களா?).ஓரளவு பரவாயில்லை. இதோ இப்போது உடல் கண கண என்றுள்ளது. இன்றிரவும் தூக்கமற்றுப் போகுமோ? தூக்கம் இல்லாமல் நினைவும்,கனவும் கலந்தார்ப் போல் காய்ச்சலுடன் கூடிய இரவு கொடியது. நோயாளிகளும் இப்படித்தானே அவதிப் படுவார்கள் என்று உணரும்போது மனம் வருத்தம் அடைகிறது. இந்தக் காய்ச்சல் இன்னும் நோய்வாய்ப் பட்டோருக்கு சிறந்த கவனிப்பையும், சிகிச்சையையும் அளிக்க உதவட்டும். ரொம்ப யோசிக்கவோ, எழுதவோ முடியவில்லை.
“ தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்” என்பார்கள். எனக்கு நன்றாகப் புரிகிறது.
மீண்டும் இழந்த ஆற்றல்களைச் சேகரித்துக் கொண்டு வருகிறேன். எவ்வளவு காய்ச்சலையும் தாங்கிப் பதிவு போடுகிறான்கப்பா!!என்று எண்ணத் தோன்றும். அதுவே பதிவுலகம் நமக்குத் தந்திருக்கும் உற்சாகம்.
வருகிறேன்.
தமிழ்த்துளி தேவா!

38 comments:

செ.சரவணக்குமார் said...

டாக்டருக்கே வைரஸ் காய்ச்சலா? சீக்கிரம் தேறி வாங்க மக்கா.

Jerry Eshananda said...

யான் பெற்ற இன்பம்,பெருக இவ்வையகம்.

SUFFIX said...

விரைவில் குணமடைவீர்கள் டாக்டர்!!

தேவன் மாயம் said...

Blogger செ.சரவணக்குமார் said...

டாக்டருக்கே வைரஸ் காய்ச்சலா? சீக்கிரம் தேறி வாங்க மக்கா.//

உங்கள் ஆசியுடன் வருகிறேன்!

தேவன் மாயம் said...

Blogger ஜெரி ஈசானந்தா. said...

யான் பெற்ற இன்பம்,பெருக இவ்வையகம்.//

நீங்கதான் காரணமா?

தேவன் மாயம் said...

Blogger SUFFIX said...

விரைவில் குணமடைவீர்கள் டாக்டர்!!//

நல்ல உள்ளமே நன்றி!

வெற்றி-[க்]-கதிரவன் said...

இன்னும் மருத்துவதுறையை/ மருத்துவத்தை பற்றி எழுத நிறைய இருக்கு... சீக்கிரம் எழுந்து வாங்க....

உங்கள்கிட்ட பேசலாம்ன்னு பாத்தா, உங்கள் கைபேசி என்னை தவறவிட்டுவிட்டேன் :(((

ஈரோடு கதிர் said...

20 நாட்கள் ஆகியும்...

இன்னும் அங்கங்கே வலிக்குதுங்க...


சீக்கிரம் குணமாக வாழ்த்துகள்

cheena (சீனா) said...

அன்பின் தேவகுமார்

விரைவினில் உடல் பூரண குணமடைந்து பணிக்குத் திரும்ப நல்வாழ்த்துகள்

pudugaithendral said...

நல்லா ரெஸ்ட் எடுத்து தேறி வந்து பதிவு போட்டு தாக்கலாம் தேவா.

சீக்கிரம் குணமாயிடும்

க.பாலாசி said...

//இந்தக் காய்ச்சல் இன்னும் நோய்வாய்ப் பட்டோருக்கு சிறந்த கவனிப்பையும், சிகிச்சையையும் அளிக்க உதவட்டும்//

சரிதான்...

அஞ்சாநெஞ்சன் வாழ்க்...விரைவில் குணமடைய டாக்டருக்கு வாழ்த்துக்கள்...

தேவன் மாயம் said...

Blogger [ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் said...

இன்னும் மருத்துவதுறையை/ மருத்துவத்தை பற்றி எழுத நிறைய இருக்கு... சீக்கிரம் எழுந்து வாங்க....

உங்கள்கிட்ட பேசலாம்ன்னு பாத்தா, உங்கள் கைபேசி என்னை தவறவிட்டுவிட்டேன் :(((//


எழுத்துக்கு ஏது தடை!! என் கைபேசி எண் 9751299554!!

தேவன் மாயம் said...

Blogger ஈரோடு கதிர் said...

20 நாட்கள் ஆகியும்...

இன்னும் அங்கங்கே வலிக்குதுங்க...


சீக்கிரம் குணமாக வாழ்த்துகள்//

உங்கள் அன்பு என்னை விரைவில் நலம் பெற வைக்கட்டும்!

தேவன் மாயம் said...

Blogger cheena (சீனா) said...

அன்பின் தேவகுமார்

விரைவினில் உடல் பூரண குணமடைந்து பணிக்குத் திரும்ப நல்வாழ்த்துகள்//

மிக்க நன்றிங்க!!

தேவன் மாயம் said...

Blogger புதுகைத் தென்றல் said...

நல்லா ரெஸ்ட் எடுத்து தேறி வந்து பதிவு போட்டு தாக்கலாம் தேவா.

சீக்கிரம் குணமாயிடும்///

வருகிறேன்!! வாழ்த்துகளுக்கு நன்றி

தேவன் மாயம் said...

Blogger க.பாலாசி said...

//இந்தக் காய்ச்சல் இன்னும் நோய்வாய்ப் பட்டோருக்கு சிறந்த கவனிப்பையும், சிகிச்சையையும் அளிக்க உதவட்டும்//

சரிதான்...

அஞ்சாநெஞ்சன் வாழ்க்...விரைவில் குணமடைய டாக்டருக்கு வாழ்த்துக்கள்//


அன்புக்கு நன்றி நண்பரே!!

Ashok D said...

Get well soon :)

சொல்லரசன் said...

விரைவில் உடல் நலம்பெற வேண்டிகொள்கிறேன்

ஷாகுல் said...

ஓய்வெடுத்துக் கொண்டு புத்துனர்வுடன் வாருங்கள்!

காந்தி காங்கிரஸ் said...

என்ன
உங்களுக்கும் ...
சரி,
சரியாகி வரவும் .

நசரேயன் said...

சீக்கிரமா வாங்க டாக்டர்

புலவன் புலிகேசி said...

மருத்துவரே நல்ல மாத்திரையா சாப்பிட்டு சீக்கிரம் வாங்க...

தினேஷ் said...

மருத்துவரே சீக்கிரம் வாங்க..

அ.மு.செய்யது said...

விரைவில் குணமடைந்து ஃபார்முக்கு திரும்பி வாங்க தேவா !!!

காற்றில் எந்தன் கீதம் said...

விரைவில் நலம் பெற வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..........

S.A. நவாஸுதீன் said...

விரைவில் குணமடைய பிரார்த்தனையுண்டு தேவா சார்.

(ஆமா நல்ல டாக்டரா பாத்து காமிங்க)

விஜய் said...

வெகு விரைவில் குணமடைய வேண்டுகிறேன் ஆண்டவனை

விஜய்

தேவன்மாயம் said...

அன்புடன் என் உடல்நலம் விசாரித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!!!நன்றி!!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நானும் இப்பதான் நாலு நாள் படுத்து எந்திரிச்சேன்.

கண்மணி/kanmani said...

அவ்வவ் டாக்டருக்கே காய்ச்சலா? விரைவில் குணமடையுங்கள் .

வரதராஜலு .பூ said...

விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

உடல் நலம் பெற வாழ்த்துகிறேன்.
வாழ்க நலமுடன்.

உங்கள் உடலை நன்கு நீங்கள் பார்த்துக் கொண்டால் தானே உங்களிடம் வரும்
நோயாளிகளை கவனிக்க முடியும்.

ஹுஸைனம்மா said...

இப்பப் பரவால்லைங்களா உடம்பு? கவனமா இருந்துக்கங்க.

அப்துல்மாலிக் said...

ஊரே பத்திக்கிட்டு எரிஞ்சாலும் பிடில் வாசிப்பை நிருந்த்தவில்லையாம் அந்த கதையா இருக்கு உங்க பதிவு எழுதும் திறன்..

நல்ல டாக்டரா போய் பார்த்து ட்ரீட்மென்ட் எடுங்க தல‌

விரைவில் குணமடைய பிரார்த்தனை

அத்திரி said...

திருநெல்வேலிக்கே அல்வாவா???.............. பூரண குணமடைய வேண்டுகிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

சீக்கிரம் குணமாக வாழ்த்துகள்

"உழவன்" "Uzhavan" said...

அடடா.. சரியாயிடுச்சா டாக்டர்?

Anonymous said...

சார் நிஜமாவே உடல் நலமில்லையா எனத்தோன்றுகிறது..உடல் நலமில்லாது போனலும் பதிவில் சுறுசுறுப்பு குன்றவில்லை ஊட்டமருந்து இந்த உங்கள் பதிவு...ஓய்வெடுங்கள் தேவா சார்...

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory