அன்பு நண்பர்களே!!
நேற்றிரவு வேட்டைக்காரன் படம் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது! ஒரு படம் கலைப்படமா இல்லை பொழுதுபோக்குக்காக எடுக்கப்பட்டதா என்பது ஒரு படத்தைப் பார்க்கப் போகும் முன் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
அந்த விதத்தில் இது ஒரு பொழுதுபோக்குப் படம். அந்த மன நிலையில் இந்தப் படத்தைப் பார்க்கச் சென்றதில் எனக்குத் தோன்றியவை.
1.விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் என்று காட்ட டைரக்டர் ஏகப்பட்ட பில்டப் கொடுத்து மிகவும் பிரயாசைப்பட்டிருக்கிறார். இது நாம் ரஜினி உட்பட எல்லா ஆக்ஷன் ஹீரோக்களுக்கும் நமது இயக்குனர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கொடுத்தாகவேண்டிய கட்டாய ஃபார்முலா!! உங்களிடமோ என்னிடமோ இப்படி ஒரு படத்தை டைரக்ட் செய்யக் கொடுத்தால் இன்றைய ட்ரெண்டில் இதைச் செய்தாக வேண்டும். இல்லையென்றால் படத்திலிருந்து நம்மைத் தூக்கிவிடுவார்கள்!!
2.ஒரு வணிகப் படத்தில் விஜய் இந்தப் படத்தில் செய்திருப்பதைவிடச் சிறப்பாகச் செய்ய வழியில்லை.
3.படத்தில் விஜய் காஸ்ட்யூமில் இன்னும் அக்கரை காட்டி இருக்க வேண்டும். சில இடங்களில் சட்டைக்குப் பொருந்தாத காட்டன் கால்சட்டைகள் பொருந்தவில்லை.
4.கதாநாயகி கட்டாயம் வேறு ஒருவரைப் போட்டிருக்கலாம். முகபாவனைகள் தமிழ் செண்டிமெண்டுக்கு ஒத்துப் போகவில்லை.
5.காதல் சம்பவங்களை இன்னும் ரொமாண்டிக்காகப் பின்னியிருக்கலாம்.
6.படத்தில் வன்முறை மிக அதிகமாகக் கையாளப் பட்டுள்ளது. இது தற்போது எல்லாத் தமிழ்ப்படங்களிலும் காணப்படும் விரும்பத்தகாத ஒன்று.
7.ஒரு நல்ல போலீஸ் அதிகாரி போலீஸ் துறையினரின் உதவியுடனேயே தன் குடும்பம், கண் பார்வை இழப்பதும், குடும்பப் பெண்கள் ரவுடி செல்லாவால் கற்பிழப்பதும் நம் சமூக அமைப்பில் சாதாரண மக்கள் மற்றும் நல்ல போலீஸ் அதிகாரிகள் மதிப்புடன் வாழ முடியாதோ என்ற அவ நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
8.எல்லாத் தமிழ்ப்படங்களிலும் காட்டப்படும்- டிட் ஃபார் டாட் வகை வில்லன் ஹீரோ பழி வாங்கும் ஃபார்முலா நிகழ்ச்சிகள் இந்தப் படத்திலும் கையாளப் பட்டிருப்பதால் அடுத்து என்ன செய்வார்கள் என்பதை படம் பார்க்கும் நாம் கணிக்க முடிகிறது.
9.படம் முடிந்தவுடன் என் மகன் சொன்னது” அப்பா!! படம் சூப்பர்! ஹிட்டுதாம்பா”.
39 comments:
நல்ல அலசல் டாக்டர்
ஜெட்லி said...
நல்ல அலசல் டாக்டர்
23 December 2009 07:55//
கருத்துக்கு நன்றி லி!!
உங்க தைரியம் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு தேவா சார்..
மருத்துவரே... வித்யாசமா விமர்சனம் போட்டு அசத்திட்டீங்க...
குழைந்தகளுக்கு படம் பிடிக்கிறது என்பதை நாசூக்கா சொன்னீங்க பாருங்க அங்கதான் நீங்க நிக்கறீங்க..
படம் குழந்தைகளுக்கான படம் என்பதையும் சொல்லாம சொல்லிட்டீங்க..
குழந்தைகளுக்கான படத்தில் வன்முறைகளைக் கொஞ்சம் குறைச்சு இருக்கலாம் என்பது சரிதான். ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம்.
// கார்த்திகைப் பாண்டியன் said...
உங்க தைரியம் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு தேவா சார்.. //
மருத்தவராச்சேப்பா... எவ்வளவு அறுவை (சிகிச்சை?) பார்த்து இருப்பார். இத கூட தாங்கலைன்னா அப்புறம் எப்பூடீஈஈஈஈஈஈஈஈஈ?
// ஜெட்லி said...
நல்ல அலசல் டாக்டர் //
அப்படியா ... நான் எலும்புசிகிச்சை டாக்டர் என்றல்லவா நினைத்திருந்தேன்... அலசல் டாக்ரா?
ஆளாலுக்கு விமர்சனம் சொல்லனும் என்றே ஒரு தடவையாவது பார்த்துவிடுகிறார்கள்.. ஆக போட்ட பணம் கிடைத்துவிடுகிறது நல்லா இருக்கோ இல்லையோ...
டாக்டரின் பார்வையில் விமர்சனம் குட்
நேர்மையான விமர்சனதிருக்கும்
உங்களின் பகிர்வுக்கும் என் நன்றிகள்...
அலசல் அருமைங்கோ !!!
//9.படம் முடிந்தவுடன் என் மகன் சொன்னது” அப்பா!! படம் சூப்பர்! ஹிட்டுதாம்பா”.
//
எப்பூடீ,,,அதுதான் விஜய்...!
தேவன் சார்.
இளைஞர்களுக்கு படம் பிடிக்கிறதோ இல்லையோ,குழந்தைகள் மத்தியில் விஜய் தான் சூப்பர் ஸ்டார்..
படம் பற்றிய உங்கள் பார்வை அருமை!
வித்தியாசமான பார்வை தான் தேவா!
நீங்கள் சொன்ன கருத்துகள் அவர்களுக்கு சென்று சேர்ந்தால் நலம்.
நம்ம வசந்தே இன்னும் குழந்தை தான் பாருங்க.
குழந்தைகளை ஏமாத்துறார் விஜய்...
நீங்களும் தியேட்டர் போய் படம் பார்த்தீங்களா...........
ரொம்ப தைரிம் சார் உங்களுக்கு.........
ஓகோ அப்படியா..!!
nalla sonnerkal
நல்ல அலசல்
டாக்டர் அவதார் படம் பாருங்க,அதுதான் ஒரிஜினல் வேட்டைக்காரன்
"இராகவன் நைஜிரியா said...
// கார்த்திகைப் பாண்டியன் said...
உங்க தைரியம் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு தேவா சார்.. //
மருத்தவராச்சேப்பா... எவ்வளவு அறுவை (சிகிச்சை?) பார்த்து இருப்பார். இத கூட தாங்கலைன்னா அப்புறம் எப்பூடீஈஈஈஈஈஈஈஈஈ?"
sema cmd appaa
unga nermai enakku romba pidichu irukku
எத்தனை அறுவை சிகிச்சை செய்திருப்பீர்கள்? உங்களுக்கு இதெல்லாம் பழகிபோயிருக்குமே தேவா!!
வித்தியாசமான அலசல் தேவா சார். அருமை.
இந்த ஆண்டின் மோசமான திரை விமர்சனம் இதுவாகத்தான் இருக்கும்.
சன் டிவி டாப் 10ல் இதில் உள்ள கருத்துகளை எடுத்துக் கையாளலாம்.
நம்முடைய சினிமாகள் தரம் தாழ்ந்து போனதற்கு சினிமாகளை சரியாக விமர்சனம் செய்யத் தக்கவர்கள் இங்கே உருவாகாமல் போனதும் ஒருகாரணம். தியோடர் பாஸ்கர் உள்பட ஒருசிலர் மட்டுமே நல்ல விமர்சகர்களாக அறியப்பட்டுள்ளனர். வெகுஜன பத்திரிகைகளில் சினிமாவைப் பற்றிய அரிச்சுவடே தெரியாதவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஆபூர்வமாக நடக்கும் நல்ல படமாக்கும முயற்சிகள் இப்போது அடிக்கடி நடக்கிறது. அதில் எதிலும் பங்கேற்க மாட்டேன் என்று பிடிவாதமாக இப்படியான படங்களை உருவாக்கும் விஜயையும் அவரது படங்களையும் குழந்தைகளுக்குப்பிடிப்பது நம் சமூகத்தைப் பிடித்திருக்கும் நோய். இதை வைத்தியம் பார்க்க உங்களால் முடியுமா டாக்டர்? இதை நல்ல அலசல் என்று அலறிய சக பதிவர்கள் விஜய் முதல்வர் ஆனதும் வோட்டுப் போடுவார்கள், போட வேண்டும்...
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்
இந்த ஆண்டின் மோசமான திரை விமர்சனம் இதுவாகத்தான் இருக்கும்.
Blogger கார்த்திகைப் பாண்டியன் said...
உங்க தைரியம் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு தேவா சார்..///
திரை விமரிசனம் என்றால் சொல்லித்தானே ஆகவேண்டும்!!
==================================
23 December 2009 08:20
Blogger இராகவன் நைஜிரியா said...
மருத்துவரே... வித்யாசமா விமர்சனம் போட்டு அசத்திட்டீங்க...
குழைந்தகளுக்கு படம் பிடிக்கிறது என்பதை நாசூக்கா சொன்னீங்க பாருங்க அங்கதான் நீங்க நிக்கறீங்க..
படம் குழந்தைகளுக்கான படம் என்பதையும் சொல்லாம சொல்லிட்டீங்க..
குழந்தைகளுக்கான படத்தில் வன்முறைகளைக் கொஞ்சம் குறைச்சு இருக்கலாம் என்பது சரிதான். ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம்.///
அதனை குறைத்திருக்கவேண்டும்!!
=================================
23 December 2009 08:23
Blogger இராகவன் நைஜிரியா said...
// கார்த்திகைப் பாண்டியன் said...
உங்க தைரியம் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு தேவா சார்.. //
மருத்தவராச்சேப்பா... எவ்வளவு அறுவை (சிகிச்சை?) பார்த்து இருப்பார். இத கூட தாங்கலைன்னா அப்புறம் எப்பூடீஈஈஈஈஈஈஈஈஈ?//
ஹி ஹி ஹி!
--------------------------------
23 December 2009 08:25
Blogger இராகவன் நைஜிரியா said...
// ஜெட்லி said...
நல்ல அலசல் டாக்டர் //
அப்படியா ... நான் எலும்புசிகிச்சை டாக்டர் என்றல்லவா நினைத்திருந்தேன்... அலசல் டாக்ரா?///
குடலை அலசிவிடுவதும் உண்டு!!
===============================
23 December 2009 08:27
Blogger அபுஅஃப்ஸர் said...
ஆளாலுக்கு விமர்சனம் சொல்லனும் என்றே ஒரு தடவையாவது பார்த்துவிடுகிறார்கள்.. ஆக போட்ட பணம் கிடைத்துவிடுகிறது நல்லா இருக்கோ இல்லையோ...
டாக்டரின் பார்வையில் விமர்சனம் குட்
///
நான் ஒரு பொதுவான பார்வையில்தான் பார்த்தேன்!!
-------------------------------
23 December 2009 08:34
Blogger kamalesh said...
நேர்மையான விமர்சனதிருக்கும்
உங்களின் பகிர்வுக்கும் என் நன்றிகள்...
///
மிக்க நன்றி நண்பரே!!
===============================
23 December 2009 09:56
Blogger பூங்குன்றன்.வே said...
அலசல் அருமைங்கோ !!!
//
எனக்குத் தோன்றியதை துளிகூட மாறாமல் சொல்லியுள்ளேன்!!
==================================
23 December 2009 11:18
Blogger பிரியமுடன்...வசந்த் said...
//9.படம் முடிந்தவுடன் என் மகன் சொன்னது” அப்பா!! படம் சூப்பர்! ஹிட்டுதாம்பா”.
//
எப்பூடீ,,,அதுதான் விஜய்...!///
உங்கள் மகிழ்ச்சிக்கு நன்றி வசந்த்!!
=============================
Blogger வெற்றி said...
இளைஞர்களுக்கு படம் பிடிக்கிறதோ இல்லையோ,குழந்தைகள் மத்தியில் விஜய் தான் சூப்பர் ஸ்டார்..
படம் பற்றிய உங்கள் பார்வை அருமை!//
இது என் கண்ணோட்டம் .. அப்படியே சொல்லியிருக்கிறேன்!
==============================
23 December 2009 11:54
Delete
Blogger நட்புடன் ஜமால் said...
வித்தியாசமான பார்வை தான் தேவா!
நீங்கள் சொன்ன கருத்துகள் அவர்களுக்கு சென்று சேர்ந்தால் நலம்.
நம்ம வசந்தே இன்னும் குழந்தை தான் பாருங்க.
///
வசந்துக்கே அலசல் பிடித்துருக்கிறதே!!
==================================
23 December 2009 15:55
Delete
Blogger புலவன் புலிகேசி said...
குழந்தைகளை ஏமாத்துறார் விஜய்...///
நீங்க ஏமாறலியே!!!
-----------------------------
23 December 2009 16:51
Delete
Blogger Sangkavi said...
நீங்களும் தியேட்டர் போய் படம் பார்த்தீங்களா...........
ரொம்ப தைரிம் சார் உங்களுக்கு.........
///
என் வீட்டில் உள்ளோருக்காக!!
==================================
23 December 2009 17:36
Delete
Blogger முனைவர்.இரா.குணசீலன் said...
ஓகோ அப்படியா..!!///
ஆம்!!!
==================================
23 December 2009 18:18
Delete
Anonymous Anonymous said...
nalla sonnerkal///
நன்றிங்க!
===============================
===============
23 December 2009 18:48
Delete
Blogger T.V.Radhakrishnan said...
நல்ல அலசல்///
மிக்க நன்றி!!
=================================
23 December 2009 18:54
Delete
Blogger ஜெரி ஈசானந்தா. said...
டாக்டர் அவதார் படம் பாருங்க,அதுதான் ஒரிஜினல் வேட்டைக்காரன்///
அது கலைப்படமில்லையே சாமி!!
===============================
23 December 2009 18:59
Delete
Blogger டம்பி மேவீ said...
"இராகவன் நைஜிரியா said...
// கார்த்திகைப் பாண்டியன் said...
உங்க தைரியம் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு தேவா சார்.. //
மருத்தவராச்சேப்பா... எவ்வளவு அறுவை (சிகிச்சை?) பார்த்து இருப்பார். இத கூட தாங்கலைன்னா அப்புறம் எப்பூடீஈஈஈஈஈஈஈஈஈ?"
sema cmd appaa
23 December 2009 20:07
Delete
Blogger டம்பி மேவீ said...
unga nermai enakku romba pidichu irukku
///
நெஞ்சில் பயமில்லை!!
==========================
23 December 2009 20:07
Delete
Blogger தண்டோரா ...... said...
எத்தனை அறுவை சிகிச்சை செய்திருப்பீர்கள்? உங்களுக்கு இதெல்லாம் பழகிபோயிருக்குமே தேவா!!
///
அறுவை சக்ஸஸ்!!!
================================
23 December 2009 21:37
Delete
Blogger S.A. நவாஸுதீன் said...
வித்தியாசமான அலசல் தேவா சார். அருமை.///
நான் பேச நினைத்ததைப் பேசினேன்!!
===============================
23 December 2009 21:49
Delete
Blogger பொன்னுசாமி said...
இந்த ஆண்டின் மோசமான திரை விமர்சனம் இதுவாகத்தான் இருக்கும்.
சன் டிவி டாப் 10ல் இதில் உள்ள கருத்துகளை எடுத்துக் கையாளலாம்.
நம்முடைய சினிமாகள் தரம் தாழ்ந்து போனதற்கு சினிமாகளை சரியாக விமர்சனம் செய்யத் தக்கவர்கள் இங்கே உருவாகாமல் போனதும் ஒருகாரணம். தியோடர் பாஸ்கர் உள்பட ஒருசிலர் மட்டுமே நல்ல விமர்சகர்களாக அறியப்பட்டுள்ளனர். வெகுஜன பத்திரிகைகளில் சினிமாவைப் பற்றிய அரிச்சுவடே தெரியாதவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஆபூர்வமாக நடக்கும் நல்ல படமாக்கும முயற்சிகள் இப்போது அடிக்கடி நடக்கிறது. அதில் எதிலும் பங்கேற்க மாட்டேன் என்று பிடிவாதமாக இப்படியான படங்களை உருவாக்கும் விஜயையும் அவரது படங்களையும் குழந்தைகளுக்குப்பிடிப்பது நம் சமூகத்தைப் பிடித்திருக்கும் நோய். இதை வைத்தியம் பார்க்க உங்களால் முடியுமா டாக்டர்? இதை நல்ல அலசல் என்று அலறிய சக பதிவர்கள் விஜய் முதல்வர் ஆனதும் வோட்டுப் போடுவார்கள், போட வேண்டும்...
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்//
உங்கள் சமுதாயப்பார்வை நன்று!! படத்தின் நோக்கத்தை ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன்!! அந்நோக்கத்தை வைத்தே இந்த விமரிசனம்!! ஒருவன் நேர்மையாக இருந்து இந்த புரையோடிய சமுதாயத்தைத் திருத்தமுடியாது என்பதே படத்தின் உள்கருத்து!! இதைவிடச் சிறந்த கருத்து என்ன இருக்கப்போகிறது?
===============================
23 December 2009 22:16
Delete
Blogger sudhan said...
இந்த ஆண்டின் மோசமான திரை விமர்சனம் இதுவாகத்தான் இருக்கும்.///
ஏன் என்று சொல்லுங்கள் நண்பரே!!
23 December 2009 22:40
Delete///
==================
யாரு எப்டி கரைஞ்சாலும்,
கத்துனாலும்,
கதறுனாலும்,
காண்டானாலும்,
நீங்க எழுதியிருக்குறது மறுக்கமுடியாத உண்மை!!
சமுதாயத்தைத் திருத்த நேர்மையாக இருந்தால் போதாது என்ற உருப்படியான கருத்தை நீங்கள் நடிகர் விஜயிடம் இருந்து கற்றுக் கொண்டதற்கு நன்றி டாக்டர்...
விஜயிடம் இருந்தும் கூட சமூக சிந்தனைகளைக் கற்றுக் கொள்ளும் இந்த சமூகத்தை நினைத்தால்.. இந்த நாடும் நாட்டு மக்களும் மங்களமாக வாழட்டும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது..
விஜயை வைத்து இப்படியான காட்சிகள் வைக்கவில்லை என்றால் அந்த இயக்குநருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று சொல்லியிருந்தீர்கள்..
சரிதான் டாக்டர், இயக்குநர்கள் மகேந்திரன், கற்றதுதமிழ் ராம், பசங்க பாண்டிராஜன்,போன்றவர்களை எல்லாம் உங்களுக்குத் தெரியுமா தெரியாதா?
இவர்களை எல்லாம் யார் தூக்கியெறிந்தார்கள்? பேரரசை யார் தூக்கி வைத்தார்கள்? சிந்தியுங்கள்
ஆக மொத்தத்தில் இந்த ஆண்டின் இணையற்ற சூப்பர் விமர்சனம் இதுதான் சுதன்..
:-))))))))))
என்ன டாக்டர், நீங்களும் ஜோதியில ஐக்கியமாகிட்டீங்க போல?!
:)
விஜயிடம் இருந்து இதற்கு மேல் எதிர்பார்க்க என்ன இருக்கு....
எதிர் பார்ப்புகள் பொய்க்கும் போது ஏற்படும் வலி தான் பலரின் விமர்சனங்களில் தெரிகிறது....
எதிர் பார்த்தது இவர்கள் தவறு.
நல்ல விமர்சனம் தல..
டாக்டர் கமெண்ட்ஸ்களுக்கு பதில் எழுதும் போது கட் அண்ட் பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும்... ஜஸ்ட் @பெயரை குறிப்பிட்டு பதில் எழுதுங்கள்.
intha maathiri thyavu seithu mooka vimarsanam panna vaendam..uruppidiya ethavuthu...pannunga
நேற்றிரவு வேட்டைக்காரன் படம் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது!
////
அட பாவமே??!?!?!?
உங்க தைரியம் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு தேவா சார்..
ரிபிட்டேஏஏஏஏஏஎ
அப்புறம் நான் வசந்த் இல்ல பிரபு
என் பதிவை படித்துவிட்டு வசந்தை பாராட்டினால் எப்படி???
ரிஸ்க் எடுக்கறது உங்களுக்கு ரஸ்க் சாப்பிடறது மாதிரி போல.
என்ன டாக்டர், ஒரு தடவ முடிவு பண்ணிட்டா அப்புறம் உங்க பேச்ச நீங்களே கேட்க மாட்டீங்க போல :-)
சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையோடு இவரை ஒப்பிடுவது நியாயமா?
9.படம் முடிந்தவுடன் என் மகன் சொன்னது” அப்பா!! படம் சூப்பர்! ஹிட்டுதாம்பா”.//
இதுதான் விஜய்யின் வெற்றி...என்பேன்..
Post a Comment