Wednesday, 27 January 2010

சிக்குன்குன்யா-10

சிக்குன்குன்யா காய்ச்சல் என்பது தமிழகத்தில் மிக அதிகமாகப் பரவி வரும் நேரம் இது. பொதுவாக தினமும் கேள்விப்படும் சொல்லாக இருந்தாலும் இதில் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விசயங்கள் உள்ளன.

1.காய்ச்சல் (இல்லாமலும் வரலாம்), மூட்டுக்களில் வலி, முகம் மற்றும் உடல் தோல் கருத்தல்.

2.பொதுவாக மூட்டுவலி, பாதங்கள், கணுக்கால்,கை, விரல்கள் ஆகியவற்றிலும் தோள்பட்டையிலும் வரும்.  

3.இது இளையோருக்கு குறைந்த நாட்களும்(5-15), நடுத்தர வயதினருக்கு மாதக்கணக்கிலும்(1-2.5), முதியோருக்கு இன்னும் அதிக் நாட்களும் இருக்கும். கர்ப்பிணிகளை அதிகம் தாக்குவதில்லை. மிகச்சிலருக்கு மூட்டுவலி 1 வருடத்தைத் தாண்டியும் இருக்கும்.

4.எலிசா, பி.சி.ஆர் பரிசோதனைகளில்  இதனைக் கண்டறியலாம். டெங்கு, லெப்டோஸ்பைரோசிஸ் போன்றவற்றிலிருந்து பரிசோதனைகள் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.

5.வலி,காய்ச்சல் ஆகியவற்றுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். மூட்டுக்களில் வீக்கமும் வலியும் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து குளோரோகுயின் மாத்திரைகள் சாப்பிடலாம்.

6.கொசுக்களை ஒழிப்பதுதான் ஒரே வழி. கை நீளச்சட்டை,முழு நீளக் கால் சட்டை அணிவது நலம்.

7.கொசு கடிக்காமல் இருக்க ஓடாமாஸ் போன்ற களிம்புகள் தடவலாம்.

8.தண்ணீர் வீட்டருகில் தேங்க விடக்கூடாது. பூந்தொட்டி, மீன் தொட்டிகளில் தண்ணீர் இருந்தல் வாரம் ஒருமுறை மாற்றிவிடவேண்டும்.

9.சிக்குன் குனியா வந்தவர்கள் கொசுக்கடி உடலில் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த நபரைக் கடித்த கொசு வேறு யாரையும் கடிப்பதன் மூலம் காய்ச்சல் பரவும்.

10.சிக்குன்குனியா வைரஸ் அமெரிக்காவின் ராணுவத்தில் உயிரியல் ஆயுதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது உலகம் முழுவதும் ரசாயன,உயிரியல் ஆயுதங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

15 comments:

Jerry Eshananda said...

தலைப்ப பாத்து பயந்து போயிட்டேன்,இன்னும் பத்து தடவை வரும்மோனு.

Jerry Eshananda said...

பத்தாவது பாயின்ட் பயங்கரம்."இன்னும் என்னவெல்லாம் வருமோ?"

தேவன் மாயம் said...

பத்தாவது பாயின்ட் பயங்கரம்."இன்னும் என்னவெல்லாம் வருமோ?"//

வந்துக்கிட்டே இருக்கு...

நட்புடன் ஜமால் said...

மறுபடியுமா

2006லேயே நெம்ப கஷ்ட்டப்பட்டாச்சி

சைவகொத்துப்பரோட்டா said...

உபயோகமான தகவல்களுக்கு நன்றி மருத்துவரே.

தேவன் மாயம் said...

மறுபடியுமா

2006லேயே நெம்ப கஷ்ட்டப்பட்டாச்சி//

ஜமால் பயம் வேண்டாம்!

தேவன் மாயம் said...

உபயோகமான தகவல்களுக்கு நன்றி மருத்துவரே.

வருகைக்கு நன்றி நண்பரே!!

S.A. நவாஸுதீன் said...

ஊருக்கு வரும் நேரம் பயம் காட்டுறீங்களே தேவா சார்.

பகிர்வுக்கு நன்றி.

தேவன் மாயம் said...

ஊருக்கு வரும் நேரம் பயம் காட்டுறீங்களே தேவா சார்.

பகிர்வுக்கு நன்றி.
//

வருக வருக

Ashok D said...

உண்மைதான் நண்பரே! இங்கே(சென்னை) காய்ச்சல் அதிவேகமா பரவிட்டுயிருக்கு.. ஆனா காய்ச்சல் பாதிச்சவங்களுக்கு முகம் வீக்கம்... உதடு சிவப்பாய் மாறிவிடுகிறது அந்த ஜுரத்திற்கு என்ன பேருங்க?

தேவன் மாயம் said...

உண்மைதான் நண்பரே! இங்கே(சென்னை) காய்ச்சல் அதிவேகமா பரவிட்டுயிருக்கு.. ஆனா காய்ச்சல் பாதிச்சவங்களுக்கு முகம் வீக்கம்... உதடு சிவப்பாய் மாறிவிடுகிறது அந்த ஜுரத்திற்கு என்ன பேருங்க?
//

அதுவும் இது போல் மூட்டுவலிகளுடன் இருப்பதால் சிக்குன்குன்யாதான்.

kailash,hyderabad said...

நோய் பயங்கரமா பரவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தேவையான பதிவு.

சொல்லரசன் said...

//எலிசா, பி.சி.ஆர் பரிசோதனைகளில் இதனைக் கண்டறியலாம். //


நல்ல தகவல் டாக்டர்சார்,இந்த பரிசோதனைகளை மருத்துவர் அறிவுரைபடி செய்யலாமா அல்லது தனியார் பரிசோதனைகூடங்களில் செய்யலாமா?

Jaleela Kamal said...

/கொசுக்களை ஒழிப்பதுதான் ஒரே வழி. கை நீளச்சட்டை,முழு நீளக் கால் சட்டை அணிவது நலம்//

மிகச்சரியே.
நல்ல தகவல்,இப்போது இந்த வியாதி தான் எங்கு பார்த்தாலும். இப்ப கூட ஒருவர் சொன்னார் கை கால் எல்லாம் வீங்க் நடக்க முடியல என்று சொன்னாங்க‌
எல்லோருக்கும் பயனுள்ள பதிவு.

குமுதம் உங்கள் ஆக்கஙக்ளை எடுத்து போட்டுள்ளார்கள் என்றீர்கள், என் ஆக்கஙக்ள் அனைத்தும் தினகரனில்..

சிங்கக்குட்டி said...

பயனுள்ள நல்ல தகவல்களுக்கு நன்றி!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory