Thursday, 14 January 2010

சில பொங்கல்களும் அர்ச்சனைகளும்!!

பொங்கலும் அர்ச்சனையுமா? என்று ஆச்சரியப்படுகிறீர்களா?

ஆமாங்க! எல்லோருக்கும் இது நடந்து இருக்கும்.   என்னன்னு மேட்டருக்குப்போவோம்!!

நான் ஹாலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன்.  என் மனைவி” ஏங்க பாத்துக்குங்க! 5 நிமிடம் வந்துவிடுகிறேன்”  ன்னு சொன்னது அரைகுறையாகக் காதில் விழுந்தது.( நமக்கு எது முழுசா விளங்கியிருக்குங்கிறீங்களா?)

எதைப் பார்த்துக்கச் சொல்றா? இவ எங்கே போறா? என்ற கேள்வி எழுந்தாலும் படிக்கிற சுவாரசியத்தில் அது அமுங்கிப் போய் ”சரி என்னத்தையாவது இவ பாட்டுக்குச் சொல்லுவா” என்று அரைச் சமாதானத்துடன் பத்திரிக்கையை மேய ஆரம்பித்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து ”ஏங்க பாத்தீங்களா?”  இதோ வந்து விட்டேன்! என்ற  குரல் அறைக்குள்ளிருந்து வந்தது.

குரல் காதில் விழுந்து மண்டையில் சில சிக்கலான சர்க்கியூட்டுகளில் புகுந்து வெளிவந்து நமக்கு உறைப்பதற்குள் என் மனைவி அறைக்குள்ளிலிருந்து வெளியே வந்து விட்டாள்.( அவ்வளவு வேகம் நம்ம மூளை…….நம்ம இல்லை… உங்களையும் ஏன் இதில் சேர்க்க…..என் மூளை!!)

என்ன நடக்கப்போகிறது என்று இப்போதே உங்களுக்குப் புரிந்தால் நீங்கள் அனுபவசாலி!!

நேராக அடுப்படிக்குப் போனவள் ஒரு கருப்புக்கலர் சட்டியுடன் வெளியே வந்தாள்.

”என்ன இது சட்டி கருப்பா இருக்கு?” என்று கேட்கும்போதே மூளைக்குள் அலாரம் அடிக்க ஆரம்பித்தது.. சம் திங் ராங்க்…என்று…

ஏங்க பாலை அடுப்புல வச்சிட்டு  பாத்துக்கங்கன்னு சொன்னனே!! பார்க்கலையா நீங்க?  பால் அப்படியே அடிப்பிடித்துப் போச்சே….அப்படி என்னதான் இருக்கு இந்தப் பேப்பரில்.. என்று நான் சுதாரிப்ப்அதற்குள் காளி அவதாரம் எடுத்து என் கையிலிருந்த பேப்பரைப் பிடுங்கி இரண்டாகக் கிழித்தாள். அடுத்து என்ன நடக்குமுன்னு  நமக்குத்தான் தெரியுமே!! அதுக்கு மேல் அங்கே  நின்னா உடம்பு புண்ணாப்போகுமே……….

இந்தப் பொங்கல் அடிக்கடி நம்ம வீட்டில் நடக்கும்!! ஹி!! ஹி!!!

சரி!! உங்க வீட்டில் பால் பொங்கி விட்டதா? 

38 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் மருத்துவரே..

வெ.இராதாகிருஷ்ணன் said...

ஹா ஹா! பொங்கலுக்கு புது அர்த்தம் சொன்னீங்க டாக்டர்.

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.

தமிழர்களுக்கு எல்லாம் இதுதான் கதினு நினைச்சிரப் போறாங்க.

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் முனைவரே!!

தேவன் மாயம் said...

வெ.இராதாகிருஷ்ணன் said...

ஹா ஹா! பொங்கலுக்கு புது அர்த்தம் சொன்னீங்க டாக்டர்.

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.

தமிழர்களுக்கு எல்லாம் இதுதான் கதினு நினைச்சிரப் போறாங்க.//

உண்மையும் ஹாஸ்யமும் கலந்த பொங்கல்!

Jaleela said...

ஹா ஹா
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

amaithicchaaral said...

//பேப்பரைப் பிடுங்கி இரண்டாகக் கிழித்தாள்//

அவங்க படிக்கிறதுக்காக இருக்கலாம். இதுக்குப்பேர்தான் மறுபாதியா...:)

Jaleela said...

ஹா ஹா பொங்கல் அர்ச்சனைகள்.ரொம்ப சூப்பர்.

ஜெஸ்வந்தி said...

என்ன தான் இருந்தாலும் நல்ல நாளும் அதுவுமாய் இப்பிடியா உண்மையைப் போட்டு உடைப்பது?
பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கல் அடிப் பிடிக்க வில்லை தானே? அது சரி உங்களை நம்பி பொங்கலை விட்டுப் போயிருக்க மாட்டா !

தேவன் மாயம் said...

வாங்க ஜலீலா!! வாழ்த்துக்கள்!

தேவன் மாயம் said...

அமைதிச்சாரல்: பேப்பரை இரண்டாகக் கிழித்தாள் .... நான் நின்றிருந்தால் ...........

தேவன் மாயம் said...

ஜெஸ்வந்தி!! பொங்கலைப் பத்தி நினைத்தாலே இதுதான் ஞாபகம் வருது!!

டம்பி மேவீ said...

MILES TO GO BEFORE MARRIAGE

எனக்கு தனிப்பட்ட அனுபவமில்லை என்றாலும் ......... இதே போல் நிறைய பார்த்து இருக்கிறேன் ...அனுபவித்தும் இருக்கிறேன்

ஞானிகள் எல்லோரும் இப்படி தான் இருப்பாங்க .... அதனால கவலை படாதிங்க

டம்பி மேவீ said...

வாழ்த்துக்கள் டாக்டர்

தேவன் மாயம் said...

டம்பி!! இந்தச் சின்ன வயசில் இவ்வளவு ஞானமா!!!

ஹுஸைனம்மா said...

//சில சிக்கலான சர்க்கியூட்டுகளில் புகுந்து வெளிவந்து நமக்கு உறைப்பதற்குள் .... அவ்வளவு வேகம் நம்ம மூளை…….நம்ம இல்லை… உங்களையும் ஏன் இதில் சேர்க்க…..என் மூளை!!)//

அவங்கவங்க வீட்டுக்குள்ள வந்துட்டா எல்லா ஆம்பிளைங்க மூளையும் அப்படித்தான் ஆயிடும் போல...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ஓ.கே..., ஓ.கே.., பார்த்துங்க தல.., மடிக்கணிணிக்கு ஏதாவது ஆகிவிடப் போகிறது..,

cheena (சீனா) said...

அன்பின் தேவா

நல்ல நகைச்சுவை - பொங்கலுக்கு புதுப் பொருள் விளக்கம்

எங்அக் வூட்ல பொங்க பால் பொங்கிடுச்சே

நல்வாழ்த்துகள்

தருமி said...

இனிமேலாவது தங்ஸ் அப்படியெல்லாம் ஆர்டர் போட்டா அவங்க தலை மறைஞ்சதும் போய் அடுப்பை அணச்சிட்டு வந்து உக்காந்துக்கங்க... சரியா?

அனுபஸ்தன் அட்வைஸ் எப்படி?!

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள் தோழரே

மாதவராஜ் said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே!

நிலாமதி said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

சிரிப்பு பொங்கல் ...

சைவகொத்துப்பரோட்டா said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள். அடுத்த முறை பேப்பர் இரண்டாகும் முன் சென்று பார்த்து விடவும்.

சொல்லரசன் said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்

உமா said...

ஹ ஹஹ் ஹாஆ.....
தாங்க முடியலையே!

நல்ல நகைச்சுவை, வாழ்த்துகள்.

ஸ்ரீ said...

எங்களுக்கு இப்படிப் பொங்கல் எல்லாம் கெடயாது.தப்பிச்சோம்.

புதுகைத் தென்றல் said...

( நமக்கு எது முழுசா விளங்கியிருக்குங்கிறீங்களா?)//

ரங்கமணிகளிடம் தங்க்ஸ்கள் கஷ்டம் அதிகமாவதே இதனாலதானே.

:)))

Sinthu said...

நல்ல சமாச்சாரம்.
பிந்திய தைத்திருநாள் வாழ்த்துக்கள்

இய‌ற்கை said...

ஹா ஹா ஹா ஹா :-)
பொங்கல் நல் வாழ்த்துக்கள்

பிரவின்குமார் said...

நல்ல பகிர்வு மருத்துவரே..! இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
இத்தமிழ் புத்தாண்டில் தங்களது சிறந்த கருத்துக்கள், பதிவுகள், அனைத்தும் நம் உலகத் தமிழர்களிடம் சென்றடைய என்றும் வாழ்த்துக்களுடன் பிரவின்குமார்.

பிரியமுடன் பிரபு said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

சும்மா பின்னிட்டாங்க போல....ஹ்ஹஹஹா மறக்கமுடியாத பொங்கலா சார்...இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள் மேடம்...ம்ம்ம்ம்ம்ம்ம் உங்களால முடிஞ்சது என்னலா முடியலையே என்ற ஏக்க பெருமூச்சுத்தான் வேற என்ன....

Anonymous said...

மேடம் நீங்க சாரை கிழிச்சதுக்கு கூட இவ்வளோ வருத்தப்படலை பேப்பரை நீங்க கிழிச்சிருக்ககூடாதுங்க..காசு கொடுத்து வாங்கியதில்லையா?

S.A. நவாஸுதீன் said...

அவங்க கிழிச்ச பேப்பர் பேரு தேவா தானே சார்?

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

சே.குமார் said...

அர்ச்சனைகள்.ரொம்ப சூப்பர்.

கமலேஷ் said...

சிரிக்க முடியல வயறு வலிக்குது....வாழ்த்துக்கள்..

அன்பரசன் said...

உங்க உடம்புக்கு ஒண்ணும் சேதாரம் இல்லியே?

ஜெரி ஈசானந்தா. said...

சூடான பொங்கல் தான்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory