Sunday, 24 January 2010

கீட்டமைனும் போதைக்கலாச்சாரமும்!

கீட்டமைன், கீட்டமின், என்று பலவாறாக உச்சரிக்கப்படும் மருந்தைப் பற்றிப் பலரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

அறுவை அரங்கில் மயக்கத்துக்காகக் கொடுக்கப்படும் மயக்கமருந்துகளில் ஒன்றுதான் கீட்டமைன். இந்தக் கீட்டமைன் தற்போது தவறாக போதைப்பொருளாக உபயோகப்படுத்தப்படுகிறது.

இது பற்றி தமிழ் மக்கள் அதிகம் அறியாவிட்டாலும் தமிழகத்திலிருந்து இது பெருமளவில் கடத்தப்படுகிறது என்பது சமீபத்தில் செய்தியாக வந்தது. 

தமிழகத்திலும் இதை உபயோகிப்போர் அதிகமாகி வருவதால் நாம் இதுபற்றி நாம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது.

முன்பெல்லாம் பணக்கார வீட்டு இளைஞர்கள்தான் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிக் கிடப்பார்கள். இன்றைய நிலை அப்படி இல்லை., கால்சென்டரும், பி.பி.ஓ.வும் பெருகிய சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில்   பணக்காரர்களில் மட்டுமல்லாது நடுத்தர வர்க்கத்து குடும்பங்களைச் சேர்ந்த ஆண்/பெண் இரு பாலரிடமும் கூட போதை பழக்கம் தொற்றிக் கொண்டுவிட்டது. சென்னையிலும் கீட்டமைன் உபயோகித்தல் அதிகமாகி வருவது உண்மையில் கவலைகொள்ள வைக்கிறது.

ஆகையால் இதைப்பற்றி அறிவது மிக அவசியம்.

இது பொடியாகவும், ஊசிமருந்தாகவும் கிடைக்கிறது.

இதன் உபயோகங்கள்:

1.குழந்தைகளுக்கு மயக்கம் தருவதற்கு.

2.அறுவை சிகிச்சையில் பிற மருந்துகளுடன் சேர்த்து உபயோகிக்க.

3.சிறு மற்றும் அவசர அறுவை சிகிச்சையில்.

4.கால்நடை அறுவை சிகிச்சையில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.

கீட்டமைன் பிற மயக்க மருந்துகளைப்போல் இருந்தாலும்:

1.பிற மருந்துகளைவிட மூச்சுவிடுதலைக் குறைவாகவே தடுக்கிறது.

2.இதயத்துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது.

இதன் விளைவுகள்:

1.ஹாலுசினேஷன்( தமிழில் இதற்கு என்ன பெயர் என்று தெரிந்தால் சொல்லவும்!)- நடக்காத ஒன்று நடப்பதுபோல் இருப்பது- கயிறு பாம்புபோல் தெரிவது, யாரோ தன்னைக் கூப்பிடுவதுபோல் கேட்பது.. ஆகியவை( இவை ஹெராயின்,கொக்கைன் போன்ற போதைப் பொருட்களிலும் உண்டாகும்).

2.கே-ஹோல்(K-HOLE)- உடலிலிருந்து தனியே பிரிந்து செல்வது போல் இருப்பது.

3.பறப்பதுபோலும், பிரபஞ்சத்தில் உலாவுதல் போலவும், கடவுள் காட்சி தருவது போலவும் மாயத் தோற்றங்களை விளைவிக்கிறது.

நீண்ட கால விளைவுகள்:

1.ஞாபக மறதி மற்றும் நரம்புக்கோளாறுகள்!

2.சிறுநீரகக்கோளாறுகள்

சென்னை டி.டி.கே. புனர்வாழ்வு மருத்துவமனையில் நாளொன்றுக்கு 20 புதிய போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஒரு மருத்துவமனையிலேயே இவ்வளவு என்றால் பிற மருத்துவமனைகளிலும், சிகிச்சைக்கு வராத போதை அடிமைகளும் எவ்வளவு இருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள்.

26 comments:

நட்புடன் ஜமால் said...

இதுவரை கேள்வி பட்டதில்லை தான்.

கவலையாகத்தான் உள்ளது ...

புதுகைத் தென்றல் said...

முன்பு தூர்தர்ஷனில் BUNIYADH எனும் தொடர் போதை மருந்துக்கு ஆட்பட்டவர்கள் பற்றியதுதான். அதை மறுஒலிபரப்பு யாராவது செய்தால் இந்தத் தலைமுறையினருக்கு நல்லா புரியும்.

பகிர்வுக்கு நன்றி தேவா

இராகவன் நைஜிரியா said...

கொடுமை... பணத்திற்காக வருங்கால சந்தததியரை எப்படியெல்லாம் இந்த போதை மருந்து விற்பவர்கள் கெடுக்கின்றனர். கொடுமை.. கொடுமை..

புதுகை தென்றல் அவர்கள் கூறியதை நானும் வழி மொழிகிறேன்.

சைவகொத்துப்பரோட்டா said...

விழிப்புணர்வு கொடுக்க கூடிய பதிவு, நன்றி டாக்டர்.

S.A. நவாஸுதீன் said...

நானும் இதுவரை கேள்விப்பட்டதில்லை. நல்ல விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் இடுகை தேவா சார்.

ஜெஸ்வந்தி said...

எனக்குப் புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி தேவா.

D.R.Ashok said...

//இதுவரை கேள்வி பட்டதில்லை தான்.

கவலையாகத்தான் உள்ளது ...//

நானும்தாங்க

ஹுஸைனம்மா said...

கவலையான விஷயம்தான்.
இம்மருந்து பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் கொடுக்கப்படுமா மருந்துக் கடைகளில்?

ஹேமா said...

இன்றைய இளைய தலைமுறையினர் எந்தெந்த வழிகளில் எல்லாம் சந்தோஷம் தேடுகிறார்கள்.அதன் பின் விளைவுகள் பற்றி யோசிக்காமல் !நன்றி தேவா.யாராவது ஒருவர் கண்ணில் உங்கள் பதிவு பட்டாலே நல்லதுதான்.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//யாரோ தன்னைக் கூப்பிடுவதுபோல் கேட்பது.. //

அனுஷ்கா, தமன்னா கூட யாரோவா உங்களுக்கு?

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் - நன்றி

புதுகைத் தென்றல்- மறு ஒளிபரப்பு செய்ய சானல்கள் தயாராக இருக்கனுமே!

இராகவன் நைஜிரியா: கருத்துக்கு நன்றிங்க!

சைவகொத்துப்பரோட்டா, நவாஸ்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

kailash,hyderabad said...

நம்மாளுங்கதான் எதை எப்படிடா போதையா உபயோகப்படுத்தலாம்னு ரூம் போட்டு யோசிப்பாங்க போலிருக்கு.
(கிராமத்தில் பார்த்தினியம் விஷசெடியின் தண்டை காய வைத்து பீடிபோல குடிப்பதை கண்டிருக்கிறேன்.)
விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் பதிவு .

தேவன் மாயம் said...

ஜெஸ்வந்தி - அதனால்தான் எழுதினேன்!!

D.R.Ashok - நன்றி நண்பா!!

ஹுஸைனம்மா - பணத்துக்கு ஆசைப்பட்டு விற்பதுதான்!

ஹேமா- உங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஹேமா!!

சுரேஷ், கைலாஷ் இருவருடைய உக்குவித்தலுக்கும் மிக்க நன்றி.

ஜெரி ஈசானந்தா. said...

பயனுள்ள,பயமுள்ள பதிவு.

அக்பர் said...

விழிப்புணர்வூட்டும் பதிவு தேவா சார்.

கவலையாக இருக்கிறது.

கோபிநாத் said...

டாக்டர், இந்த போதைப் பழக்கம் அமெரிக்காவிலிருந்து தான் கொஞ்சம் கொஞ்சமாக அங்கு தொத்திக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். இப்பொழுது வரும் ஹாலிவுட் படங்களில் எல்லாவற்றையும் விலாவாரியாக காட்டுகிறார்கள்.எப்படி மூக்கின் வழி உறிஞ்சுவது.. எப்படி ஊசி வழியாக ஏற்றிக் கொள்வது என படம் போட்டு காட்டுகிறார்கள்.இது மாதிரி காட்சிகள் இல்லாத படங்களே குறைவு எனலாம். அந்த படங்களை பார்க்கும் யாருக்கும் அதை ஒருமுறை அனுபவித்து பார்த்துவிட தோன்றும். திருடனாய் பார்த்து தான் திருந்த வேண்டும். நன்றி. நல்ல பதிவு.

அன்பரசன் said...

சரியான தகவல்.
இனிமேலாவது திருந்துவார்களா?

அபுஅஃப்ஸர் said...

//சென்னை டி.டி.கே. புனர்வாழ்வு மருத்துவமனையில் நாளொன்றுக்கு 20 புதிய போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது//


கவலைதரும் விடயம்தான், பெற்றோர்கள்தான் விழிப்புடன் இருக்கவேண்டும்

உபயோகமான பதிவு

முனைவர்.இரா.குணசீலன் said...

விழிப்புணர்வளிக்கும் இடுகை!!
தொடருங்கள் மருத்துவரே..

வெ.இராதாகிருஷ்ணன் said...

அன்றாடம் ஆய்வகத்தில் உபயோகப்படுத்தப்படும் ஒரு பொருள் தான் இது, நல்லதொரு விழிப்புணர்வு கட்டுரை.

SUFFIX said...

புதிய தகவல் டாக்டர்!!

மயக்குனர் said...
This comment has been removed by the author.
மயக்குனர் said...

நல்லதொரு பதிவு.பாராட்டுக்கள் சார்

ரோஸ்விக் said...

இதையும் விட்டுவைக்கவில்லையா இவர்கள். அடப்பாவிகளா...

புதுகைத் தென்றல் said...

PERSONALITY DEVELOPMENT http://pudugaithendral.blogspot.com/2010/01/personality-development.html//

பதிவுத் தொடர் ஆரம்பிச்சிருக்கேன் தேவா கண்டிப்பா வாங்க

அமுதா said...

நல்ல விழிப்புணர்வு பதிவு.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory