Friday, 5 February 2010

மதுரை பதிவர் சந்திப்பு-முழுப்படங்கள்,கேள்வி பதில்கள்!!

image  
 
image  
image image  
image image  
 
மதுரை பதிவர் சந்திப்பு முடிந்து பதிவுகளும் வெளிவந்து விட்டன. குழந்தைகள் பற்றி மட்டுமல்லாது பொதுவான கேள்விகளும் மரு.ஷாலினியிடம் கேட்கப்பட்டன. அவற்றில் குழந்தைகள் பற்றிக்கேட்டதில் எனக்கு ஞாபகத்தில் உள்ள சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

1.”குட் டச் பேட் டச்”- சாராம்சம் என்ன?

பதில்:

           அ.அம்மாவும் குழந்தையும் மட்டும் தொட அனுமதிக்கும் உடல் பகுதிகள்.

            ஆ.பிறர் தொட அனுமதிக்கக் கூடாத உடல் பகுதிகள்.

மேலே சொன்ன இரண்டையும் சொல்லித்தருவதும் நடைமுறைப் படுத்துவதுமே!

2.எந்த வயதில் சொல்லித் தர வேண்டும்?

பதில்: மூன்று வயதிலிருந்து.

3.மறைவுப் பகுதிகளின் பெயர்களை ஏன் சொல்லித்தரவேண்டும்?

ஏனெனில் பிறர் எந்தப் பகுதியைத் தொட்டனர் என்பதை அம்மாவிடம் பெயருடன் சொல்ல வேண்டும் என்பதற்காக.

4.ஆண்,பெண் உடலுறுப்புகளை என்ன பெயரில் சொல்லிக் கொடுக்கிறார்கள் – பொதுவாக?

ஆண் உறுப்பை பெனிஸ் என்றே சொல்லிக் கொடுக்கலாம். பெண் உறுப்பை ’க்ராட்ச்’-CROTCH என்ற பொதுவான பெயரிலேயே சொல்லிக் கொடுக்கலாம்.

5.அதைப் பிறர் தொட்டால் குழந்தை என்ன செய்ய வேண்டும்?

இதைத் தொடாதீர்கள் என்று மறுக்கலாம். அந்த இடத்திலிருந்து வந்து விடலாம். வந்து அம்மாவிடம் சொல்லலாம்.

6.இப்படி ’பேட் டச்’ யாரெல்லாம் செய்கிறார்கள்?

பொதுவாக நமக்கு நெருக்கமானவர்களே!!

7.குழந்தை இத்தகைய நிலையில் இருப்பதை எப்படி அறிவது?

குழந்தை மூடியாக கலகலப்பில்லாமல் இருக்கும். அந்த வீட்டுக்குப் போகமாட்டேன் என்றோ குறிப்பிட நபர்களிடம் போகப் பிரியம் இல்லாதிருத்தல் ஆகியவை போன்றவற்றிலிருந்து அறியலாம்.

8.இதை எப்படித்தடுப்பது?

குழந்தைகளிடம் அம்மா நெருக்கமாக இருக்க வேண்டும். குழந்தையின் எல்லா சந்தேகத்துக்கும் திட்டாமல் பதிலளிக்க வேண்டும். என்ன நடந்தாலும் அம்மாவிடம் சொன்னால் சரி செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையையும் தைரியத்தையும் குழந்தைக்கு ஏற்படுத்த வேண்டும்.

தொல்லை விட்டால் சரி என்று குழந்தைகளை யாராவது பார்த்துக்கொள்ளட்டும் என்று கவனிக்காமல் விட்டுவிடுவது தவறு.

9.பெண் வயதுக்கு வருவது தெரியும். ஆண் வயதுக்கு வருவது என்றால் என்ன?

முதலில் விந்து வெளிப்படுவதே அதன் அறிகுறி.

அந்தப் பருவத்தில் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை அம்மா பெண் குழந்தைக்கும், மகனுக்கு பெற்றோர் இருவரும்கூட சொல்லித்தர வேண்டும்.

மேல் சொன்னவற்றை நாம் கடைப்பிடித்தாலே ஓரளவு குழந்தைகளிடம் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இன்னும் எழுத வேண்டியது நிறைய உள்ளது. அவற்றையும் பின்னர் பார்ப்போம்.

தமிழ்த்துளி,

தேவா.

பி.கு: மேற்கண்ட படங்களை தந்துதவிய(சுட்ட?) பதிவர் தருமி,காவேரிகணேஷ்,கார்த்தி,வெற்றி ஆகியோருக்கு நன்றி..

46 comments:

Sangkavi said...

மதுரைய குலுக்கீட்டிங்க போல.....

☼ வெயிலான் said...

அனைத்து விசயங்களும், படங்களும் கலந்த அழகான தொகுப்பு!

க.பாலாசி said...

சமூகத்திற்கு தேவையானதொரு நிகழ்ச்சியினை மதுரை பதிவர்கள் சார்பாக நிகழ்த்தியிருக்கிறீர்கள்...

நிகழ்வினை கேள்வி பதிலாகவும் பகிர்ந்தளித்தமைக்கு நன்றிகள்...

நட்புடன் ஜமால் said...

தெளிவான விடயங்கள் தெளிவோடு

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்....

தேவன் மாயம் said...

மதுரைய குலுக்கீட்டிங்க போல.//

பிரச்சினைகள் அதைவிட அதிகமாகவே உள்ளன சங்கவி!!

தேவன் மாயம் said...

அனைத்து விசயங்களும், படங்களும் கலந்த அழகான தொகுப்பு!///

வெயிலான் நீங்களும் வந்து சிறப்பித்தீர்கள்!!

தேவன் மாயம் said...

சமூகத்திற்கு தேவையானதொரு நிகழ்ச்சியினை மதுரை பதிவர்கள் சார்பாக நிகழ்த்தியிருக்கிறீர்கள்...

நிகழ்வினை கேள்வி பதிலாகவும் பகிர்ந்தளித்தமைக்கு நன்றிகள்.//

மிக மிக சுருக்கமாகத்தான் சொல்லியுள்ளேன்!

தேவன் மாயம் said...

தெளிவான விடயங்கள் தெளிவோடு//

வாங்க ஜமால்!!

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள்....//

நன்றி நண்பரே!!

Sword Fish said...
This comment has been removed by a blog administrator.
Sword Fish said...

Dr Devan!

Being a doctor yourself, what are the appropriate words in Tamil to indicate genital organs of both sexes?

If you happen to address rural masses, will you ask them to use PENIS and CROTCH?

Looking forward to your learned response.

Sword Fish said...

Now on the Bloggers meet proper.

You seem to have formed an elite group - swanky rendezvous, that would have cost you a lot, to hire and arrange, wouldn't?

Madurai bloggers appear to have come from creme de la creme of Madurai society!

How I wish I were wrong!

தேவன் மாயம் said...

Dr Devan!

Being a doctor yourself, what are the appropriate words in Tamil to indicate genital organs of both sexes?

If you happen to address rural masses, will you ask them to use PENIS and CROTCH?

Looking forward to your learned response.///

ஸ்வோர்ட் பிஷ்!! தமிழில் சில வார்த்தைகளைச் சொல்லும்போது தமிழர்களே கூச்சம் கொள்கின்றனர்.ஆகையினாலேயே எளிமைக்காக இப்படி சொல்லச் சொல்கிறேன். தமிழில் நல்ல வார்த்தைகளாக நாம் எடுத்துப் பயன்படுத்தலாம்.

வி.பாலகுமார் said...

பகிர்வுக்கு நன்றி சார்.

தேவன் மாயம் said...

Blogger Sword Fish said...

Now on the Bloggers meet proper.

You seem to have formed an elite group - swanky rendezvous, that would have cost you a lot, to hire and arrange, wouldn't?

Madurai bloggers appear to have come from creme de la creme of Madurai society!

How I wish I were wrong!//

வாள் மீன் அவர்களே!!மதுரை கல்லூரி வளாகத்தில் நடந்ததால் செலவுகள் ஏதுமில்லை.
வந்தவர்கள் அனைவரும் ஆசிரியர்களும் குடும்பத்தலைவிகளும் மாணவர்களுமே!!

சைவகொத்துப்பரோட்டா said...

நல்லா பகிர்வு, ஆமா இந்த படங்களில் நீங்கள் இருக்கிறீர்களா.

நாஞ்சில் பிரதாப் said...

பதிவர் சந்திப்பு பயனுள்ளதாக இருந்திருக்கிறது. வாழ்த்துக்கள் சார்...

அபுஅஃப்ஸர் said...

கலந்துக்கொண்ட திருப்தி பதிவு பார்த்து, நன்றி தேவா சார்

Sword Fish said...

Dr Devan!

Why dont you attempt and tell us தமிழில் நல்ல வார்த்தைகள்?

Please remember, Alvaars mention the genital organs in their paasurams. For e.g யோனி for your English CROTCH.

தமிழர்கள் கூச்சப்பட்டார்களா?

தமிழிலே சொற்கள் இல்லை; என்வே penis, crotch என்று நாம் தமிழருக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றால்...!

(இதற்கு மேல் எழுதினால் This post has been removed by blog administrator என்று போட்டு விடுவீர்கள்)

சொல்லுங்கள்..தமிழ் அவ்வளவு குறைவான மொழியா?

குறைவு என்றால் தம்மக்கள் நாகரிகமாகக் குறிப்பிட சொற்கள் இல்லை என்று பொருள்.

Please reconsider and put up a learned response again. Also remember Tamil is your mother tongue. You should do justice both to your mother tongue and to her speakers.

Sword Fish said...

மதுரை கிராமிய மணங்கமழும் ஓரூர். அஃது இன்றும் அன்னிலையைக் காப்பாற்றி வருகிறது என்று சில்லாண்டுகளுக்கு முன் நான் மதுரைப் பேருந்து நிலையத்திலிருந்து கள்ளழகர் கோயில் செல்லும்ப்போது கண்டேன். மக்களும் எந்த ஆர்ப்பாட்ட செயற்கைத் தோரணையின்றித்தான் இருக்கின்றனர்.

அடுத்த சந்திப்பு பதிவர்கள் மதுரைக்கருகிலுள்ள கிராமச்சூழ்னிலையில், அம்மக்களால் செய்யப்பட்ட உண்வை உண்டு, பேசி வந்தபின் ஒரு பதிவு போடவும்.

இதுவே என் பின்னூட்டத்தில் உட்பொருள்.

Sword Fish said...

யாரையும் நையாண்டி பண்ண நான் என்ன காணப்போகிறேன்?

கண்ணகி said...

நல்ல முயற்சி டாக்டர் சார். இது எல்லாமாவட்டங்களிலும் ஏன் ஒவ்வொரு பள்ளிகளிலும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தினால் பயனுள்ளதாக இருக்கும்...முன்மாதிர்யாக அரசுப்ப்ள்ளிகளில் ஆரம்பித்தால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள் சார்.

அத்திரி said...

டாக்டர் படமெல்லாம் ஓகே.அப்படியே பேரெல்லாம் போட்டிருக்கலாம்

குடந்தை அன்புமணி said...

மதுரை நிகழ்வு படத்தொகுப்பும், சாரசம்மும் தெரிந்து கொண்டோம். மிக்க மகிழ்ச்சி. இதை ஒவ்வொரு பெண்கள் பள்ளியிலும் நடத்தலாம்.

Sword Fish said...

Good touch and bad touch.

Here, Dr says only what is what. Further, she says we must teach girls to distinguish between the two.

I think this is not an erudite analysis.

In intellectual development, girls keep pace, till they complete their adolescence, faster than boys. So an adolescent boy does not have the power of intellect equal to an adolescent girl.

He outruns her only after he crosses teenage. It explains why girls participate in family affairs eagerly and seriously, whereas boys tend to take life playfully. The conversation among girls in elementary schools, too, center around human drama, in family and outside. If a female class teacher is not in her self on a particular day, it strikes the girls acutely so that it becomes a piece of their conversations that day. Boys just don't care for such nice human angles in their tender age.

So, the girls know quite well what is good and what is bad in touches.

Then, what is the problem?

The problem lies in picking up courage. This becomes nearly impossible to girls because the culprit is a person of authority or close to parents, or within the family circle like an uncle, or a periyappa or siththappa, or a cousin.

More often, it is her teacher.

How to pick up courage against these people in family cirlces or in position of authority like a teacher?

Dr Devan! Such a question does not come under the purview of medical science, I think.

Please tell us how to make her pick up courage and report to her parents?

தேவன் மாயம் said...

Dr Devan!

Why dont you attempt and tell us தமிழில் நல்ல வார்த்தைகள்?

Please remember, Alvaars mention the genital organs in their paasurams. For e.g யோனி for your English CROTCH.

தமிழர்கள் கூச்சப்பட்டார்களா?

தமிழிலே சொற்கள் இல்லை; என்வே penis, crotch என்று நாம் தமிழருக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றால்...!

(இதற்கு மேல் எழுதினால் This post has been removed by blog administrator என்று போட்டு விடுவீர்கள்)

சொல்லுங்கள்..தமிழ் அவ்வளவு குறைவான மொழியா?

குறைவு என்றால் தம்மக்கள் நாகரிகமாகக் குறிப்பிட சொற்கள் இல்லை என்று பொருள்.

Please reconsider and put up a learned response again. Also remember Tamil is your mother tongue. You should do justice both to your mother tongue and to her speakers.
///
வாள் மீன் அய்யா வணக்கம்! உம் தமிழ் ஆர்வம் கண்டு வியக்கிறேன். தமிழில் அழகிய வார்த்தைகள் உள்ளன. அந்தந்த ஊரில் உபயோகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகியுங்கள். அதுவும் சிறப்பே!

தேவன் மாயம் said...

மதுரை கிராமிய மணங்கமழும் ஓரூர். அஃது இன்றும் அன்னிலையைக் காப்பாற்றி வருகிறது என்று சில்லாண்டுகளுக்கு முன் நான் மதுரைப் பேருந்து நிலையத்திலிருந்து கள்ளழகர் கோயில் செல்லும்ப்போது கண்டேன். மக்களும் எந்த ஆர்ப்பாட்ட செயற்கைத் தோரணையின்றித்தான் இருக்கின்றனர்.

அடுத்த சந்திப்பு பதிவர்கள் மதுரைக்கருகிலுள்ள கிராமச்சூழ்னிலையில், அம்மக்களால் செய்யப்பட்ட உண்வை உண்டு, பேசி வந்தபின் ஒரு பதிவு போடவும்.

இதுவே என் பின்னூட்டத்தில் உட்பொருள்//

இதில் கலந்துகொண்ட நிறைய ஆசிரியர்கள் மதுரையின் புறநகர் கிராமங்களுக்குச் செல்பவர்களே!! ஆகயினால் அடுத்த நிகழ்ச்சி அப்படியே செய்யலாம். நீங்கள் வந்து கலந்து கொள்ளவும்.

தேவன் மாயம் said...

Good touch and bad touch.

Here, Dr says only what is what. Further, she says we must teach girls to distinguish between the two.

I think this is not an erudite analysis.

In intellectual development, girls keep pace, till they complete their adolescence, faster than boys. So an adolescent boy does not have the power of intellect equal to an adolescent girl.

He outruns her only after he crosses teenage. It explains why girls participate in family affairs eagerly and seriously, whereas boys tend to take life playfully. The conversation among girls in elementary schools, too, center around human drama, in family and outside. If a female class teacher is not in her self on a particular day, it strikes the girls acutely so that it becomes a piece of their conversations that day. Boys just don't care for such nice human angles in their tender age.

So, the girls know quite well what is good and what is bad in touches. //

இதனை மிக இளம் வயதிலிருந்தே சொல்லித்தரச் சொல்லுகிறோம்.
மேலும் பெண் மிக விரைவில் விசயங்களைப் புரிந்து கொள்வதும் உண்மை. ஆயினும் மிக அதிகமாக பாதிக்கபடுவதும் பெண் குழந்தைகள்தான்!

கார்த்திகைப் பாண்டியன் said...

//Sword Fish said...
Now on the Bloggers meet proper.
You seem to have formed an elite group - swanky rendezvous, that would have cost you a lot, to hire and arrange, wouldn't? Madurai bloggers appear to have come from creme de la creme of Madurai society!How I wish I were wrong//

அன்பின் நண்பரே.. இந்த வார்த்தைகளுக்கு மதுரைப் பதிவர்களின் சார்பாக ஒரு சின்ன விளக்கம்.. மதுரைப் பதிவர்கள் எல்லோரும் ஏதோ பெரிய பெரிய ஆட்கள் என்கிற ரீதியில் பேசி இருக்கிறீர்கள்.. அப்படி எல்லாம் கிடையாது.. எல்லாருமே நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான்.. குறிப்பாக பதிவர்களில் இரண்டு பேர் மாணவர்கள்.. அனைவருமே தங்களால் இயன்ற சிறு தொகையை இந்த நிகழ்வுக்காக தந்து உள்ளனர்.. ஒரே காரணம், மதுரையில் ஒரு நல்ல நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பதற்காக.. அமெரிக்கன் கல்லூரி தங்களுடைய செமினார் ஹாலை இலவசமாகவே அளித்தார்கள்.. டாக்டர் வந்து போவதற்கான செலவு, வீடியோ, மற்றும் நிகழ்ச்சிக்கு வந்த நண்பர்களுக்கான சிற்றுண்டி செலவை மட்டுமே நாங்கள் பார்த்துக் கொண்டோம் என்பதை இங்கே தெளிவுபடுத்துகிறேன்..

தேவன் மாயம் said...

நல்ல முயற்சி டாக்டர் சார். இது எல்லாமாவட்டங்களிலும் ஏன் ஒவ்வொரு பள்ளிகளிலும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தினால் பயனுள்ளதாக இருக்கும்...முன்மாதிர்யாக அரசுப்ப்ள்ளிகளில் ஆரம்பித்தால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள் சார்.//

அதற்கு அனைத்து பிளாகர்களும் ஒன்றுபட வேண்டும். ஆயினும் தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்பாடுகள் நடந்துகொண்டுள்ளன!!

தேவன் மாயம் said...

டாக்டர் படமெல்லாம் ஓகே.அப்படியே பேரெல்லாம் போட்டிருக்கலாம்
///

போட்டிருக்கலாம். இனிமேல் செய்கிறேன்.

தேவன் மாயம் said...

மதுரை நிகழ்வு படத்தொகுப்பும், சாரசம்மும் தெரிந்து கொண்டோம். மிக்க மகிழ்ச்சி. இதை ஒவ்வொரு பெண்கள் பள்ளியிலும் நடத்தலாம்.

நிச்சயமாக செய்யலாம் அன்புமணி!!

ஸ்ரீ said...

//Madurai bloggers appear to have come from creme de la creme of Madurai society!//

கூடவே இருந்து நம்மை பார்த்திருக்கிறார்.நான் என்னுடைய ford காரிலும் , காத்திகைப் பாண்டியன் தன்னுடைய வோல்க்ஸ் வேகனிலும் , ஜெரி தன்னுடைய செவ்ரோலேட்டிலும் வந்ததைப் பார்த்திருப்பார். க்ரீமாம் க்ரீமு.இங்க ஒரு மாசத்த ஓட்ரதுக்குள்ள நாக்குத் தள்ளுது.

Sword Fish said...

Sri and K.Pandian

That is a good piece of information: Madurai bloggers make a motley crowd.

A blogger circle should be like that. I welcome such a crowd.

Young and old; professionals and laymen; men and women; diverse religious affiliations - will mean what I call 'motley crowd.'

Bloggers may not think themselves to be the creme de la creme.

But solidarity among them will make them think so in future. Esprit de corp will bring the nature of creme de la creme to any group. It is bound to happen!

Creme de la creme - dear Sri - does not necessarily refer to financial status. It also refers to intellectual status. UPSC selects creme de la creme of students, meaning the brightest among the bright, as IAS officers. IIM and IITs boast that they have the creme de la creme of student community, meaning the same.

(I am teaching English here ha...ha...ha)

Sri is an intellecutal of sorts and well educated. He knows the word: Intelligentsia. My word creme de la creme, if applied to Madurai bloggers, will mean the :Intelligentsia.

By the way, sociologists and general commentators, more often than not, use the word, Intelligentsia, pejoratively.

I wont, if something good comes out of Madurai bloggers circle off and on. Without intelligentsia in a society, fearless and frank, there wont be a climate of opinion generated.

Madurai bloggers, by their persistent views on certain social issues, as they did last by taking up the subject 'sexual molestation and how to combat it' seems, I think, to have shown the way to other circle of bloggers. If you do that persistenly and aggressively, you, as the creme de la creme of society, can creat a climate of opinion.

Best wishes.

I wont participate in your meet although I am beholden to you for the invite. Reason: I am an unclubbable man.

As an insider, I cant write such critique of your circle, can I K.Pandian and Sri?

I have drawn my feedbacks in this blog to an end.

Many thanks.

D.R.Ashok said...

Good touch & bad touch - தெளிவா சிம்ளா எழுதியிருக்கீங்க.. நல்ல பகிர்வு

பிரியமுடன்...வசந்த் said...

தெளிவான விளக்கங்கள் சார்

வாழ்த்துகள்

கார்த்திகைப் பாண்டியன் said...

@ Sword Fish

you have a valid point to talk abt buddy.. u surely have.. for all u have said, as of wat i can understand, have been said with proper care on society.. am very hapy.. i on behalf of madurai bloggers, assure to carry forward the good work.. hope to.. thanks mate

//As an insider, I cant write such critique of your circle, can I K.Pandian and Sri?//

fact..:-)))

keep on posting ur constructive suggestions..

and finally, am awestruck by ur language boss.. u rock..:-))

SUREஷ் (பழனியிலிருந்து) said...

இடுகை சின்னதேன்னு பார்த்தா..,

வால், பெரீரீரீசாசாசாசாசா இருக்கே..,

துபாய் ராஜா said...

தொடருங்கள். தொடர்கிறோம்.

Thekkikattan|தெகா said...

வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்! இதில டாக்டர். ஷாலினி அப்பாக்களையும் பெண் குழந்தைகளுக்கு முன்னாடி ஒரு "ஆண்" மட்டுமேங்கிற மாதிரி தன்னிச்சு சொன்ன மாதிரியே ஒரு ஃபீலிங்குங்க. அப்படியா :-(( ... அப்பாங்கிறவர், ஃப்ரேம்குள்ளரவே இல்லையே...

Cable Sankar said...

நல்ல தொகுப்பு..

சிங்கக்குட்டி said...

பகிர்ந்தமைக்கு நன்றி!.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல தொகுப்பு நன்றி டாக்டர்

வால்பையன் said...

சுருக், நறுக்!

Thekkikattan|தெகா said...

சில கேள்விகள், ஐயப்பாடுகள் மதுரை கருத்தரங்கு தொடர்பாக, வாசிப்பிற்கு...

மதுரை "குழந்தைகள் மன நலப் பேணல்" நிகழ்ச்சி சார்ந்து...

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory