நடைப்பயிற்சி: நடைப்பயிற்சியைப் போல் சிறப்பான உடற்பயிற்சி இல்லை என்று சொல்லுவார்கள். அதுவும் சக்கரை நோயாளிகள், இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள், உடல் எடை அதிகமுள்ளவர்கள் ஆகியோருக்கு இது மிகவும் சிறந்தது.
தற்போது நடக்கும்போது இரண்டு கைகளிலும் அரைக்கிலோ அல்லது கால்கிலோ மணல் மூட்டைகளை தூக்கிக்கொண்டு நடந்தால் தசைகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். மேலும் நீண்டதூரம் நடப்பதைவிட குறைவான தூரத்திலேயே அதிக கலோரி செலவாகி எடை குறைப்பு, சக்கரை குறைப்பு ஆகியவற்றை எளிதில் செயல்படுத்த முடியும்.
ஆயினும் இதய நோயாளிகள்,மூட்டுவலி, மூட்டுப்பிடிப்பு, காலில் புண் பொன்றவை உள்ளவர்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்பே இதனைச் செய்யலாம்.
இன்றைய இளைஞர்கள் அடிக்கடி வேலை நிமித்தம் வெளியில் சென்று கொண்டிருப்பதால் தினசரி இரண்டு அல்லது சில நேரங்களில் மூன்று வேளையும் வெளியில் சாப்பிடுகிறார்கள். அப்படிச்சாப்பிடுபவர்களுக்கு குடும்பத்தில் சக்கரை நோய் இல்லாவிட்டாலும் சக்கரை நோய் இளமையிலேயே வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
வெளியில் சாப்பிடும் உணவில்
குறைந்த நார்ச்சத்து, அதிக மாவுச்சத்து, அதிக உப்பு, அதிக மசாலா, அதிக எண்ணைக் கொழுப்பு ஆகியவை உள்ளன.
அதேபோல் சக்கரை நோயாளிகளுக்கு இட்லி,தோசை செய்யும்போது உளுந்து அதிகமாகவும், அரிசி குறைவாகவும் போடவேண்டும்.
ஆனால் உணவகங்களில் அரிசி அதிகம் போடுவார்கள்.
அதேபோல் சாம்பாரில் சக்கரை, பரோட்டாவில் மாட்டுக்கொழுப்பு, சப்பாத்தி மாவில் வாழைப்பழம் போன்றவை சேர்ப்பதாலேயே உடல் எடை அதிகரித்தல், சக்கரை கூடுதல் ஆகியவை ஏற்படுகின்றன!!
28 comments:
என்ன டாக்டர் இன்னைக்கு பதிவு இனிப்பா இருக்கு.
வாங்க டாக்டர்,சக்கரையான சேதி
பயனுள்ள செய்தி டாக்டர்.
உணவகங்களில் அரிசி அதிகம் போடுவார்கள்.
அதேபோல் சாம்பாரில் சக்கரை, பரோட்டாவில் மாட்டுக்கொழுப்பு, சப்பாத்தி மாவில் வாழைப்பழம் போன்றவை சேர்ப்பதாலேயே உடல் எடை அதிகரித்தல், சக்கரை கூடுதல் ஆகியவை ஏற்படுகின்றன!!
......மாட்டு கொழுப்பு? ஐயோ........ தகவல்களுக்கு நன்றி.
பயனுள்ள செய்தி...
உபயோகமான பதிவு
பரோட்டாவில் மாட்டு கொழுப்பு
இதுவரை கேள்விப்படாத தகவல்
எங்களூரில் முட்டை அல்லது பால் அல்லது சுடுதண்ணீர் கொஞ்சம் சர்க்கரை சேர்ப்பார்கள்...
பயனுள்ள பதிவு
நானும் எடைகுறைய வழிதேடிக்கிட்டு இருக்கேன் சார்... நல்லா நடந்துட்டு வந்து மூக்கு பிடிக்க தின்றேன் என்ன சார் பண்ண என்னை?
அருமையான தகவல்கள்.. நன்றி
ஜெரி!!! இனிப்பான செய்தி வழக்கமானதுதான்!!!
நன்றி
அக்பர்,
சங்கவி,
அண்ணாமலையான்,
ராதாகிருஷ்ணன்,
கவிதைக்காதலன்!!!
உணவகங்களில் அரிசி அதிகம் போடுவார்கள்.
அதேபோல் சாம்பாரில் சக்கரை, பரோட்டாவில் மாட்டுக்கொழுப்பு, சப்பாத்தி மாவில் வாழைப்பழம் போன்றவை சேர்ப்பதாலேயே உடல் எடை அதிகரித்தல், சக்கரை கூடுதல் ஆகியவை ஏற்படுகின்றன!!
......மாட்டு கொழுப்பு? ஐயோ........ தகவல்களுக்கு நன்றி.///
எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது!!
ஐயா, ஓசி டெஸ்ட் எடுத்தாங்க.
கொழுப்பு ரொம்ப குறைவாம்.
வெயிட்டு கொஞ்சம் கம்மியாம்.
பிரஷர் கண்ணாபின்னான்னு இருக்குதாம். 150/110.
நானும் வாக்கிங்லாம் போறேன்.
எப்படி இதெல்லாம் குறைக்கிறதுன்னு சொன்னா யூஸ் புல்லா இருக்கும்.
அதோட டாக்டர் சொன்ன இன்னொரு விஷயம்:
தினமும் 3 வேளை சாப்பிடுங்க.
பரோட்டாவில் மாட்டு கொழுப்பு
இதுவரை கேள்விப்படாத தகவல்
எங்களூரில் முட்டை அல்லது பால் அல்லது சுடுதண்ணீர் கொஞ்சம் சர்க்கரை சேர்ப்பார்கள்..///
உண்மைதான்!! எனக்கே புதிய செய்திதான்!!
தமிழரசி said...
நானும் எடைகுறைய வழிதேடிக்கிட்டு இருக்கேன் சார்... நல்லா நடந்துட்டு வந்து மூக்கு பிடிக்க தின்றேன் என்ன சார் பண்ண என்னை?
///
இதுக்கு நான் என்ன சொல்வது?
srisin02 said...
பயனுள்ள பதிவு
//
நன்றிங்க!!
------------------------
ஆடுமாடு said...
ஐயா, ஓசி டெஸ்ட் எடுத்தாங்க.
கொழுப்பு ரொம்ப குறைவாம்.
வெயிட்டு கொஞ்சம் கம்மியாம்.
பிரஷர் கண்ணாபின்னான்னு இருக்குதாம். 150/110.
நானும் வாக்கிங்லாம் போறேன்.
எப்படி இதெல்லாம் குறைக்கிறதுன்னு சொன்னா யூஸ் புல்லா இருக்கும்.
அதோட டாக்டர் சொன்ன இன்னொரு விஷயம்:
தினமும் 3 வேளை சாப்பிடுங்க.
///
ரொம்ப சிக்கலான மேட்டரா இருக்கே!
காலை எழுந்து கண்மூடி தியானத்தில்
கருத்தை இருத்தல் நலம்.
நடையும் ஓட்டமும் நாளும் பழகினால்
அடையும் நன்மை பல
உடலும் மனமும் ஓய்ந்திருந்தால் வாழ்வில்
கடலாய் பெருகும் கடன்.
அளவாய் தூக்கம் அறுசுவை உணவு
நலமாய் வாழும் நிலை.
ஆட்டமும் ஓட்டமும் நன்றாம் சிருவர்க்கு
நாட்டம் அதிலே நிறுத்து.
[ஒரு மாறுதலுக்காக குறள்தாழிசை யில்.]
பயனான தகவல்களுக்கு நன்றி டாக்டர்.
உமா said...
காலை எழுந்து கண்மூடி தியானத்தில்
கருத்தை இருத்தல் நலம்.
நடையும் ஓட்டமும் நாளும் பழகினால்
அடையும் நன்மை பல
உடலும் மனமும் ஓய்ந்திருந்தால் வாழ்வில்
கடலாய் பெருகும் கடன்.
அளவாய் தூக்கம் அறுசுவை உணவு
நலமாய் வாழும் நிலை.
ஆட்டமும் ஓட்டமும் நன்றாம் சிருவர்க்கு
நாட்டம் அதிலே நிறுத்து.
[ஒரு மாறுதலுக்காக குறள்தாழிசை யில்.]///
உமா!! மிக அருமைங்க!!! தொடர்ந்து தமிழ் வெண்பாக்களின் மீதான காதல் எனக்கு மிகவும் வியப்பளிக்கிறது!!
எப்பவும்போல தேவையான குறிப்புக்கள்தான்.நன்றி தேவா.
பயனுள்ள தகவல்கள்.
உபயோகமான பதிவு!!
மூன்று வேளையும் வெளியில் சாப்பிடுகிறார்கள். அப்படிச்சாப்பிடுபவர்களுக்கு குடும்பத்தில் சக்கரை நோய் இல்லாவிட்டாலும் சக்கரை நோய் இளமையிலேயே வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
////////
நான் 6 வருசமா வெளியதான் சாப்பிடுரேன்
எவ்வளவுதான் உடல் ஆரோக்கியத்தை பற்றி பதிவிட்டாலும், படிக்கும்போது இதெல்லாம் செய்யனும்னு மனசு சொன்னாலும் பிராக்டிக்கலா எதுவுமே செய்யமுடியலே, நாமே நொந்துக்கவேண்டியதுதான்
இருந்தாலும் தொடருங்க..
thanks for sharing.. helps me a gr8 deal!
மருத்துவரின் ஆலோசனை மிக பயனுள்ளது.... கடைபிடிப்போம்.
மருத்துவரே...
வீரன் வயல் உதயகுமார் என்பவர் ஒர் குருங்கவிதை எழுதியிருந்தார்....
”வாழ்க்கையே கசந்துவிட்டது......
சர்க்கரை நோய்”
சும்மா பகிர்ந்துக் கொண்டேன்... நன்றிங்க.
உபயோகமான தகவல்கள் டாக்டர், சில அதிர்ச்சியான தகவல்களும் கூட, கவனத்தில் வச்சுக்கிறோம்.
Post a Comment