நடைப் பயிற்சி பற்றிச் சில முக்கிய விபரங்களைக் கேள்வி பதிலாகத் தொகுத்துள்ளேன். பத்து கேள்விகளாகத் தெரிந்தாலும் தகவல்கள் இக்கட்டுரையில் அதைவிட அதிகமாகவே உள்ளன. ஆகையால் படித்து மேலும் சந்தேகங்கள் இருப்பின் கேட்கவும்.
1.நடப்பதற்கு முன் ஏதாவது சாப்பிடலாமா?
நிச்சயம் சாப்பிடலாம்! கீழே கொடுத்துள்ளபடி முறையாகச் சாப்பிட்டு விட்டு நடக்கலாம் :
- முழுதானிய ( ஓட்ஸ், அவல்,) சிற்றுண்டி
- முழு கோதுமை பிரட்
- வாழைப்பழம
- சாப்பிடுவது வயிற்றை நிரப்புவதாக இல்லாமல் குறைந்த அளவாக இருக்க வேண்டும்.
- கொழுப்பு நிறைந்ததாக இருக்கக் கூடாது.
- நடப்பதற்கு 1 மணிநேரம் முன்னதாக சாப்பிட வேண்டும்.
- சாப்பிட்டால் நீரும் அருந்த வேண்டும்.
2.ஒரு மணிநேரம் நடந்தால் எவ்வளவு கலோரிகள் செலவாகும்?
இது நாம் நடக்கும் வேகம், தூரம், நடப்பவரின் உடல் வலு ஆகியவற்றைப் பொருத்து மாறு படும். பொதுவாக 300 கலோரிகள் செலவிடப்படும்.
3.நடையில் வேகம் எப்படி இருக்க வேண்டும்?
நடையை மெதுவாக ஆரம்பிக்க வேண்டும். இதனால் நமது தசையும், மூட்டுக்களும் நடைக்குத் தயாராகும். அதே போல் நமது இதயத்தின் செயல்பாடும், இரத்த ஓட்டமும் மெதுவாக, சீராக அதிகரிக்கும். இதுவே உடலுக்கு நல்லது.
நடையின் முடிவில் 10 நிமிடம் வேகத்தை சீராகக் குறைத்து வந்து மெதுவாக அமர்ந்து இருந்தால் இதயமும் , இரத்த ஓட்டமும் சீராகக் குறைந்து பழைய நிலைக்கு வரும். இதனால், அதிக களைப்பு, மயக்கம் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.
4.நல்ல நடைப்பயிற்சி தூரம் எவ்வளவு?
பொதுவாக நல்ல உடல்நிலையிலுள்ளோர் 10 நிமிட நடையில் 1 கிலோமீட்டர் தூரம் நடக்கலாம். ஆனால் இது ஒவ்வொருவரின் உடல் நலம், நடக்கும் விதம், நடக்கும் நில அமைப்பு ஆகியவற்றினால் மாறும்.
5.நடக்கும் போது கைகளில் எடை வைத்துக் கொள்ளலாமா?
- பளு இல்லா நடையே சிறந்தது.
- கைகளில் எடையுடன் நடந்தால் நடப்பதில் சிரமம் ஏற்படும்.
- இரத்த அழுத்தம் கூடும்.
- மூட்டுகளில் உள்ள ஜவ்வுகள் சேதமாகலாம்.
- தனியாக எடை தூக்கும் பயிற்சி வைத்துக் கொள்வதே சிறந்தது.
6.நடக்கும் ஷூ எப்படி இருக்க வேண்டும்?
- குதிகால் உயரம் கூடாது.
- சரியாகப் பொருந்த வேண்டும்.
- ஷூவின் அடிப்பாகம் வளையும் தன்மையுடன் இருக்க வேண்டும்.
- ஷூ எடை குறைவாகவும், காற்றோட்டத் தன்மையுடனும் இருக்க வேண்டும்.
7.ஷூவை எவ்வளவு நாட்களுக்கொருமுறை மாற்ற வேண்டும்?
6-12 மாதத்துக்கொருமுறை மாற்றுதல் நலம். அதிகம் நடப்போர் இதற்க்கிடையில் மாற்றலாம். கால் வியர்வையால் ஷூ பாதிக்கப்படும். ஆகையால் 2 ஷூ வைத்துக் கொண்டு ஒரு நாள் ஒரு ஷூவும், அடுத்த நாள் மறு ஷூவும் என உபயோகித்தால் ஷூவில் உள்ள ஈரம் காய்ந்து விடும்.
8.நடைபயிற்சியால் ஓட்டப் பயிற்சியில் கிடைக்கும் அளவு உடலுக்கு நலன் கிடைக்குமா?
கிடைக்கும். வேகமாக நடத்தலில் ஓட்டத்தில் கிடைக்கும் பலன்கள் கிடைக்கின்றன.
9.நாம் நடக்கும் வேகத்தை எப்படிக் கணக்கிடுவது?
- இதனைக் கருவிகளின் உதவி இல்லாமலேயே கணக்கிடலாம்.
- ஒரு நிமிடத்துக்கு நீங்கள் நடைப்பயிற்சியின் போது எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறீர்கள் என்று எண்ணிக் கொள்ளவும். அதனை 30 ஆல் வகுக்க வேண்டும்
- உதாரணத்துக்கு ஒரு நிமிடத்துக்கு 60 அடிகள் எடுத்து வைத்தால்,
- 60/30= 2 , அதாவது உங்கள் நடைவேகம் ஒரு மணிநேரத்துக்கு 2 மைல்.
- எல்லோராலும் அதிக வேகமாக நடக்க முடியாது. குறைந்த வேகத்தில் நடப்பதும் நடைப் பயிற்சியில் கிடைக்கும் முழுப் பலனையும் தரும்.
- மேலும் சாதாரணமாக 2 மைல் வேகத்தில் நடப்பது, மூட்டுக்களின் மேல் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்துகிறது.
- ஆகையினால் வயதானவர்கள், கால் வலியுள்ளவர்கள் மெதுவாக நடப்பதே போதும்.
10.நடைப் பயிற்சியின்போது கால் அரிப்பு ஏற்படுகிறதே, ஏன்?
குறைந்த இரத்த ஓட்டத்தினால் காலில் அரிப்பு ஏற்படலாம். அது நடக்க நடக்க இரத்த ஓட்டம் அதிகரித்து சரியாகிவிடும்.
பொதுவாக வியர்வையால் அரிப்பு அதிகரிக்கும். இப்படி இருந்தால் உங்கள் கால் தோல் வறட்சியாலும் இருக்கலாம். இதற்கு வாசலின் போன்ற தோலை உலர விடாமல் தடுக்கும் களிம்பு, எண்ணைகள் தடவலாம்.
37 comments:
உபயோகமான பதிவு டாக்டர்..
சூப்பர். அவசியமான பதிவு. நன்றி டாக்டர்.
நல்ல உபயோகமான தகவல்கள்,
ஓட்டு குத்திட்டேன்
பயனுள்ள தகவல்கள் டாக்டர் .
பகிர்வுக்கு மிக்க நன்றி .
நடைபயிற்சியின் பயன்கள்.??
பெண்கள் கருவுற்று இருக்கும் போது நடக்க்லாமா..? இன்னும் இவை பற்றியும் எழுத்லாமே டாக்டர்.. Plz.
பயனுள்ள தகவல் நன்றிங்க மருத்துவரே.
நல்ல உபயோகமான தகவல்கள்
it takes long time to open yr blog, 1st rectify that please, then lets go for walk or jog or swim
உபயோகமான பதிவு டாக்டர்..
காலையில் நடக்கும் போது உங்க ஞ்பகம் வருதே என்ன செய்ய
??
Cable Sankar said...
உபயோகமான பதிவு டாக்டர்.///
நன்றி கேபிள்!!
butterfly Surya said...
சூப்பர். அவசியமான பதிவு. நன்றி டாக்டர்.
///
நடைபயிற்சியின் பயன்கள்.??
பெண்கள் கருவுற்று இருக்கும் போது நடக்க்லாமா..? இன்னும் இவை பற்றியும் எழுத்லாமே டாக்டர்.. Plz///
நிச்சயம் எழுதுகிறேன்!
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
பயனுள்ள தகவல்கள் டாக்டர் .
பகிர்வுக்கு மிக்க நன்றி///
நண்டு! நன்றி!
சி. கருணாகரசு said...
பயனுள்ள தகவல் நன்றிங்க மருத்துவரே.///
கருணா!! நன்றி!
சென்ஷி said...
நல்ல உபயோகமான தகவல்கள்///
சென்ஷி! நன்றி!
டெம்ப்ளட் புதுசு? நானும் மாற்றியுள்ளேன்
ராம்ஜி_யாஹூ said...
it takes long time to open yr blog, 1st rectify that please, then lets go for walk or jog or swim///
சரி செய்ய முயல்கிறேன், சிரமத்தைப் பொருத்தமைக்கு நன்றி!
பிரியமுடன் பிரபு said...
காலையில் நடக்கும் போது உங்க ஞ்பகம் வருதே என்ன செய்ய
??///
ஒரு டிக்கெட் எடுத்து வாங்க!
இல்லைன்னா எனக்கொரு டிக்கெட் அனுப்புங்க!!
டெம்பிளேட் புதுசுதான், லோட் ஆக நேரமாகுதா என்ன?
ஒரு டிக்கெட் எடுத்து வாங்க!
இல்லைன்னா எனக்கொரு டிக்கெட் அனுப்புங்க!!
.///////
I LIKE IT
//
டெம்பிளேட் புதுசுதான், லோட் ஆக நேரமாகுதா என்ன?
////
NO PROBLEM HERE
BUT IN INDIAN NET SPEED?
நன்றி தேவா!
ஒரு டிக்கெட் எடுத்து வாங்க!
இல்லைன்னா எனக்கொரு டிக்கெட் அனுப்புங்க!!
.///////
I LIKE IT
//
டெம்பிளேட் புதுசுதான், லோட் ஆக நேரமாகுதா என்ன?
////
NO PROBLEM HERE
BUT IN INDIAN NET SPEED?///
நண்பர் ராம்ஜி இப்படிச்சொல்லியுள்ளாரே!!
ராம்ஜி_யாஹூ said...
it takes long time to open yr blog, 1st rectify that please, then lets go for walk or jog or swim
ஜமால் நன்றி!!
நண்பர் ராம்ஜி இப்படிச்சொல்லியுள்ளாரே!!
/////
OH
படிக்க நல்லாதான் இருக்கு, செய்யனுமே
தேவையான பதிவு சார்
very useful info. :-)
நடை பயிற்சி பற்றி மிகவும் விளக்கமா சொல்லி இருக்கீங்க நன்றி
( நடப்பதற்கு முன் ஏதாவது சாப்பிடலாமா? சாப்பிடலாம் ஆனால் என்ன சாப்பிட்லாம் எவ்வளவு நேரத்துக்கு முன் சாப்பிடலாம் என்பதை குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி)
ரொம்ப நன்றி
.நடப்பதற்கு முன் ஏதாவது சாப்பிடலாமா\\\\\\\\
நான் அதிகாலையில் {ஐந்தரையிலிருந்து ஆறரைவரை}
பயிற்சி செய்வேன் எதுவும் சாப்பிடாமல்
போகும் முன் மிகக் குறைவாய் தண்ணீர் மட்டும்
அருந்திச் செல்வேன்.
வந்தபின் 15_20 நிமிடங்கள் கழித்துத்தான் மீண்டும்
அதிக நீர் அருந்துவேன்
சிலரைப் பாத்திருக்கின்றேன் கையில் தண்ணீர் போத்தலுடன்
ஓடி முடிந்த கையுடன் மடமடவென நீர் அருந்தி முடித்து
விடுவார்கள் இது சரியில்லையென்பது என் கருத்து
மருத்துவரய்யாவின் பதில்?? தயவுகூர்ந்து!
சூப்பர் பதிவு
5.நடக்கும் போது கைகளில் எடை வைத்துக் கொள்ளலாமா?
• பளு இல்லா நடையே சிறந்தது. \\\\\\\\\
நான் நடக்கும் போது கைகளை{விரல்களை}
மடக்கிப் பொத்தி வீசி நடப்பேன்
இது சரியா?தவறா? மருத்துவரய்யா!
மற்றவைகள் அனைத்தும் உங்கள்
குறிப்பின் படிதான் செய்கிறேன்
மிக்க நன்றி உங்கள் ஆக்கமான
தகவலகளுக்கு!
உபயோகமா இருந்ததுங்க
நன்றி
அவசியமான பதிவு. உடம்பு மெலிய இவ்வளவும் செய்யணுமா?
மிக மிக அவசியமான தகவல்கள்
நன்றி
டாக்டர் திரும்பவும் நடக்கச் சொல்றீங்களே.
கலா பண்ற கரைச்சல் தாங்கமுடில.
நட நட நடன்னு நடப்பிக்கிறா !
நன்றி.....
பூங்கொத்துப் பதிவு!
நன்றி
பின்பற்றுவதற்கு எளிமையாய் குறிபபுகள். நன்றி.
Post a Comment