இதற்கு முந்தைய இடுகையைப் படிக்க சுட்டி:அன்பால் இணைந்த பதிவர்கள்!!
போன பதிவில் சிங்கைநாதன் எப்படி இருக்கிறார் என்று கேட்டிருந்தனர். அவர் மிக்க நலமுடன் இருக்கிறார். சந்திப்பின் போது பதிவர்களுக்கு தன் வீட்டில் செய்த பூசணி அல்வா வழங்கினார்.
திரு. ரவி வெட்டிக்காடு என்ற http://vssravi.blogspot.com/ பதிவில் ஒரு காலத்தில் எழுதி இருக்கிறார். தஞ்சையில் படித்து அமெரிக்காவில் வேலை செய்து தற்போது சிங்கப்பூர் அல்காடெல் கம்பெனியில் உயர் பதவி வகிக்கிறார். பதிவர் சந்திப்புகளில் கலந்து பெரும் பங்காற்றும் இவர் பதிவுகள் எழுத ஆரம்பிக்க வேண்டும்.
கீழே:மண்ணின் மைந்தன் முகவை ராம்குமார்.http://mugavairam.blogspot.com/ சிங்கையில் இவர் தமிழில் பேசுவதைக் கேட்கக் கேட்கத் தேன் வந்து பாயுது காதினிலே! என்றால் மிகையில்லை. தமிழர் இசை பற்றிய பரிசு பெற்ற கட்டுரையை செந்தமிழில் விமரிசனம் செய்தார். விருது வழங்கும் விழாவுக்கு தமிழரின் உடையில்( அதுதாங்க! வேட்டி, சட்டை) யில் வந்து அசத்தினார்.
இவரைப் பற்றிச் சொல்லவேண்டுமா? என்ன! நம் அம்மா அப்பா ஞானசேகரன் தான்!!http://aammaappa.blogspot.com/ தன் கெனான் கேமிராவில் எல்லோரையும் சுட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார். திருச்சிக்காரர்.
கீழே: பாவம் கலர் கம்மியாக இருப்பவர் நம் அறிவிலி ராஜேஷ்!http://kirukkugiren.blogspot.com/( அதுதான் தெரியுமே என்கிறீர்களா?- எல்லாம் பதிவுலகுக்குப் புதியவர்களுக்காகத்தான்!
கீழே பயங்கரமாக சிரிப்பவர் பிரபல் பதிவர் ரோஸ்விக்!!http://thisaikaati.blogspot.com/ இந்தவாரம் வலைச்சரத்தில் கலக்குபவர். சிவகங்கைச் சீமைக்காரரான இவர் இருந்தாலே அந்த இடத்தில் கலகலப்புக்குப் பஞ்சமிருக்காது!!
கீழே:இரா. நீதிப்பாண்டி(த்துரை) இனி ஆரம்பம் http://pandiidurai.wordpress.com/ நாம் என்ற இதழை சிங்கையிலிருந்து வெளியிடுகிறார். சிங்கம்புணரிக்கருகில் காளாப்பூர்தான் இவர் ஊர்.
கீழே:கலந்துரையாடல்- சிங்கை கிழக்குக் கடற்கரைச் சாலைப் பூங்காவில்! அங்கு பார்பகியூவில் கோழி, காளான் ஹாட் டாக் ஆகியவை தயாரித்து அருமையான விருந்தும் வழங்கப்பட்டது.
கடைசிப் படத்தில் சிகப்பு, நீலம் டிசட்டை அணிந்து உள்ளவர்கள்……. தெரியும் தானே!! அடுத்த பதிவில் பார்ப்போம்.. படங்களைத் தட்டி பெரிதாக்கிப் பார்க்கவும்.
33 comments:
வணக்கம் மருத்துவரே.
கலக்கல்.
nice photos. :-)
பதிவுலகம் நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொடுக்கிறது என்பது மகிழ்வைத் தருகிறது. இதே ஆரோக்கியம் எல்லாப் பதிவர்களிடமும் வளர்ந்தால் மிக்க மகிழ்ச்சி!
-ப்ரியமுடன்
சேரல்
கருணாகரசு நன்றி!!
வாங்க சித்ரா!
Good Post...
சேரல் said...
பதிவுலகம் நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொடுக்கிறது என்பது மகிழ்வைத் தருகிறது. இதே ஆரோக்கியம் எல்லாப் பதிவர்களிடமும் வளர்ந்தால் மிக்க மகிழ்ச்சி!
-ப்ரியமுடன்
சேரல்
///
நம்புவோமாக!!
அட்டகாசம் தல கலக்குங்க
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...
நல்ல எண்ணங்களை விதைக்கும் முயற்சி
நன்றி
//நம் அம்மா அப்பா ராஜசேகரன்//
ஞானசேகரன்-தானே..
செந்தில்நாதன் நலமாக இருப்பது பற்றி மகிழ்ச்சி. நன்றி.
:)
புகைப்படக் கருவிக்குள்
“அடக்கிச்” சென்றவர்களை
அருமையாய் உலாவர விட்டிருக்கிறீகள்
உங்கள் வலைத் தளத்தில்
மிக்க மகிழ்ச்சி நன்றி
அட்டகாசம் தல கலக்குங்க///
நன்றி கார்த்திக்!
அஹமது இர்ஷத் நன்றி!!
ஜாக்கி சேகர் said...
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..//
நன்றி ஜாக்கி சேகர்!
Sabarinathan Arthanari said...
நல்ல எண்ணங்களை விதைக்கும் முயற்சி
நன்றி
/
ஆம் நண்பரே!!
Vidhoosh(விதூஷ்) said...
//நம் அம்மா அப்பா ராஜசேகரன்//
ஞானசேகரன்-தானே..
செந்தில்நாதன் நலமாக இருப்பது பற்றி மகிழ்ச்சி. நன்றி.
:)///
ஆகா!! அவசரத்தில் எழுதி விட்டேன்! அவர் என் நெருங்கிய நண்பர்!
கலா said...
புகைப்படக் கருவிக்குள்
“அடக்கிச்” சென்றவர்களை
அருமையாய் உலாவர விட்டிருக்கிறீகள்
உங்கள் வலைத் தளத்தில்
மிக்க மகிழ்ச்சி நன்றி
///
வருகைக்கு நன்றிங்க!!
பதிவுலகம் நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொடுக்கிறது என்பது மகிழ்வைத் தருகிறது. இதே ஆரோக்கியம் எல்லாப் பதிவர்களிடமும் வளர்ந்தால் மிக்க மகிழ்ச்சி!
அங்க இருந்து உங்களை சந்திக்க இயலவில்லைன்ற ஏக்கம் அதிகமாயிட்டு வருது
நண்பர்களை புகைப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்ததில் மகிழ்ச்சி.
வாஞ்சையுடன்
ராஜன்
படங்களுக்கு நன்றி.
நெசமாவா சார் சொல்றீங்க?? :-)))
கொஞ்சம் அழகா இருக்கிற போட்டோவா போட்டாலே... பயமுறுத்துற மாதிரி இருக்கும். இதுல இப்படி ஒரு படத்தைப் போட்டா எப்படி சாரே!! :-)
குமரை நிலாவன் said...
பதிவுலகம் நல்ல நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொடுக்கிறது என்பது மகிழ்வைத் தருகிறது. இதே ஆரோக்கியம் எல்லாப் பதிவர்களிடமும் வளர்ந்தால் மிக்க மகிழ்ச்சி!///
ஆம் நிலவன்!!! இவ்வளவு நட்புகள் கிடைத்தது அதிர்ஷ்டமே!!
நட்புடன் ஜமால் said...
அங்க இருந்து உங்களை சந்திக்க இயலவில்லைன்ற ஏக்கம் அதிகமாயிட்டு வருது
நண்பர்களை புகைப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்ததில் மகிழ்ச்சி!///
மிக்க மகிழ்ச்சி ஜமால்!!
வருகைக்கு நன்றி ராஜன்!
மாதேவி கருத்துக்கு நன்றி!!
ரோஸ்விக் said...
நெசமாவா சார் சொல்றீங்க?? :-)))
கொஞ்சம் அழகா இருக்கிற போட்டோவா போட்டாலே... பயமுறுத்துற மாதிரி இருக்கும். இதுல இப்படி ஒரு படத்தைப் போட்டா எப்படி சாரே!! :-)
///
இந்த போட்டாதான் கண்ணுக்கு அழகா இருக்கு ரோஸ்விக்!!
வணக்கம் டாக்டர் மிக்க மகிழ்ச்சி..
சிங்கைப் பதிவர்கள் பற்றிய குறிப்புகளுடன் கலக்கிட்டிங்க போங்க.
கடைசிப் படத்தில் சிகப்பு, நீலம் டிசட்டை அணிந்து உள்ளவர்கள்……. தெரியும் தானே!
////////////
ஆனாலும் இதெல்லாம் ஓவரு
Blogger Vidhoosh(விதூஷ்) said...
//நம் அம்மா அப்பா ராஜசேகரன்//
ஞானசேகரன்-தானே..
/////////////???
மாற்றிவிடுங்க
ஞானசேகரன்-தான்
டாக்டர் சார்,
//பதிவர் சந்திப்புகளில் கலந்து பெரும் பங்காற்றும் இவர் பதிவுகள் எழுத ஆரம்பிக்க வேண்டும்.//
சிறு திருத்தம். சிங்கப்பூர் பதிவர் சந்திப்புப்களைப் பொருந்தவரையில் என்னுடைய பங்களிப்பு ஒன்றும் கிடையாது. ஒரு சில சந்திப்புகளில் மற்றும் கலந்து கொண்டுள்ளேன்.
மண்ற்கேணி நிகழ்சிகளில் பங்குகொண்ட பிறகு மீண்டும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. என்னுடைய MBA படிப்பு இந்த மாதத்துடன் முடிவடைகிறது. ஜூலையில் என்னுடைய வலைப்பதிவு எழுத்துகள் ஆரம்பமாகும் :)
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
Post a Comment