எந்தவித விருப்பு வெறுப்புகளும் இல்லாத பதிவர்கள் சிங்கப்பூர்ப் பதிவர்கள். அவர்களுக்குள் ஈகோப் பிரச்சினைகளோ, வேறு விதமான பிரச்சினைகளோ இல்லை. அனைவரும் அன்பால் ஒன்றிணைந்தவர்கள். அவர்கள் எங்களை பாசத்தில் திக்குமுக்காட வைத்துவிட்டார்கள்!!
மணற்கேணி 2009 கருத்தாய்வு போட்டியின் வெற்றியாளர்கள் மூவரும் ஒரு வாரம் காலம் சிங்கப்பூரில் வெற்றியின் பரிசாக சுற்றுபயணம் மேற்கொண்டு நலமுடன் திரும்பினர்.
நலமுடன் திரும்பினரை ஏன் தடிமனான எழுத்திலிட்டிருக்கிறேன் என்றால் வெற்றியாளர்கள் சிங்கை சென்ற இரண்டு நாட்களில் ஏர் இந்தியா மங்களூரில் விபத்துக்குள்ளான துயர நிகழ்வு. வெற்றியாளர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.
இன்று காலை செய்தியில் கிங் பிசர் விமானமும் இன்னொரு விமானமும் நேருக்கு நேர் மோதல் தவிர்க்கப்பட்டது என்று செய்தி. மங்களூர் விமான விபத்துக்குப் பிறகு இதுவரை ஆறு விமான விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாம். கொடுமை. ஏர் பஸ், போயிங் போன்ற சர்வதேச விமானங்களைத்தான் எல்லா நாடுகளும் உபயோகிக்கின்றன. அதை உபயோகிப்பதில் போதிய கவனமின்மைதான் காரணமா? இல்லை திறமையின்மையா? விமானத்தில் பெருந்தொகை செலுத்தி விமானப் பயணம் செய்யும் மக்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை கவலை அளிக்கிறது.
ஏவுகணைத் தொழில் நுட்பத்தில் சாதிக்கும் இந்தியா சாதாரண பயணிகள் விமான சேவையில் கோட்டை விடுவது வருத்தமளிக்கிறது.
வெற்றியாளர்களின் இரண்டாம் நாள் நிகழ்வாக சிங்கப்பூர் வலைப்பதிவருகளுடன் சந்திப்பாக 23-05-2010 மாலை 4:30 மணிற்கு மேல் மேற்குகடற்கரை பூங்காவில் நடைப்பெற்றது. வெற்றியாளர்களும் சிங்கப்பூர் பதிவர்களும் தங்களின் மகிழ்வை பகிர்ந்துகொண்ட நிகழ்வு மிகச்சிறப்பாக இருந்தது.
பொதுவாகவே சிங்கப்பூரில் எல்லா இடத்திலும் புற்கள், செடிகள்தான். இதில் பூங்கா என்றால் சொல்ல வேண்டுமா? இதில் பிளாஸ்டிக் டெண்டுகளுடன் இரண்டு நாள் விடுமுறைகளில் வந்து இளைப்பாறிச் செல்கின்றனர்.
மேலும் இங்கு சிமெண்டால் கட்டப்பட்ட இறைச்சி சுட்டு உண்ணும் வசதியான அடுப்புகளுடன் ஒரு சிறு குழு அமர்ந்து விருந்துண்ணும் அமைப்புகளும் இருக்கின்றன!! பதிவர்களுக்காக ஒரு விருந்தை பதிவுலக நண்பர்கள் அனைவரும் சமைத்து வழங்கினர். பார்பகியூ கோழியின் சுவை அற்புதம். சிங்கை நாதன் அல்வா செய்து கொண்டு வந்திருந்தார். அனைவரும் மிகுந்த மகிழ்வுடன் கலந்துரையாடி உண்டு மகிழ்ந்தனர்.
மேற்குக் கடற்கரைப் பூங்காவில் மேலும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் சிறுவர், பெரியவர் என்றில்லாமல் அனைவரும் வித விதமான வண்ண வண்ணக் காத்தாடிகளை விட்டுக் கொண்டிருந்தனர். அனைத்தும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது. அவற்றில் சிலவற்றின் புகைப்படம் கீழே.
கீழேயுள்ள படத்தில் இருப்பவர்தான் விஜய் என்கின்ற வெற்றிக் கதிரவன், நாடறிந்த சிங்கைத் தம்பி. சிங்கப்பூர் செல்லும் பதிவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர். நமக்குத் தேவையானவற்றை மனங்கோணாமல் செய்து தருபவர். இவர் பிரமாதமான பயணக்கட்டுரைகள் எழுதுபவர். மணற்கேணி சிங்கைப் பதிவர்கள் தொகுத்த புத்தகத்தில் இவருடைய கட்டுரை இடம் பெற்றுள்ளது. என் மனதைக் கவர்ந்த இவர் சிங்கைப் பதிவர்களின் செல்லத்தம்பி!!
மேலேயுள்ள படங்களில் சிகப்பு பனியனுடன் ஸ்டைலாக இருப்பவர் ஜோஸப் பால்ராஜ். என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே!! அவரைப் பற்றியும் இன்னும் சிங்கையிலுள்ள பதிவர்கள் பற்றியும் தொடர்ந்து எழுதுகிறேன்.
46 comments:
வெற்றிகரமாக திரும்பிய நண்பர்களுக்கு வாழ்த்துகள்..!
பல சுவாரஸ்யமான தகவல்கள் பதிவர்கள் பற்றியும், சிங்கப்பூர் குறித்தும் (ம)தொழில்நுட்பம் குறித்து் சொல்லியிருக்கீங்க..! பகிர்வுக்கு நன்றி நண்பரே..!
ஆம் பிரவீன்!!! சிங்கப்பூரில் நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய உள்ளது!
மணற்கேணி விருதுபெற்று பரிசாக சிங்கப்பூர் சென்று நலமுடன் திரும்பிய தங்களுக்கு எனது தாமதமான வாழ்த்துகள்.
மணற்கேணி விருதுபெற்று பரிசாக சிங்கப்பூர் சென்று நலமுடன் திரும்பிய தங்களுக்கு எனது தாமதமான வாழ்த்துகள்//
நன்றி அன்பு!! ரொம்ப நாளாக் காணோமே அன்பு!!
பகிர்விற்க்கு நன்றி டாக்டர்...
//ரொம்ப நாளாக் காணோமே அன்பு!!//
பணிச்சுமை அதிகமாகிவிட்டது. நேரம் கிடைக்கும்போது வந்து போகிறேன்.
பகிர்விற்க்கு நன்றி டாக்டர்//
குழலி!! உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்!!
//ரொம்ப நாளாக் காணோமே அன்பு!!//
பணிச்சுமை அதிகமாகிவிட்டது. நேரம் கிடைக்கும்போது வந்து போகிறேன்.
//
ஹைக்கூக்களாவது எழுதுங்க குடந்தை!!
வாழ்த்துக்கள் டாக்டர்
உங்களை இங்கு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!
பகிர்வு நன்று!
நிறைவு நிகழ்ச்சியான கவிமாலை நிகழ்ச்சியும் சிறப்பாக அமைந்தது. பணியின் காரணமாக தமிழ் நாட்டுக்குத் திரும்ப வேண்டிய சூழ் நிலையில் நீங்கள் கலந்து கொள்ள இயலவில்லை.
உங்கள நிறைய மிஸ் பண்ணினோம்!
பகிர்வுக்கு மிக்க நன்றி!
உங்களை இங்கு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!///
எனக்கும் அதே!!
பகிர்வு நன்று!
நிறைவு நிகழ்ச்சியான கவிமாலை நிகழ்ச்சியும் சிறப்பாக அமைந்தது. பணியின் காரணமாக தமிழ் நாட்டுக்குத் திரும்ப வேண்டிய சூழ் நிலையில் நீங்கள் கலந்து கொள்ள இயலவில்லை.
உங்கள நிறைய மிஸ் பண்ணினோம்!
///
கவிமாலைக்கு ஏதாவது எழுதலாம் என்று கூட எண்ணியிருந்தேன். உங்கள் அன்பு மறக்க இயலாதது!!
நல்ல பகிர்வுக்கு நன்றி டாகடர்
வாழ்த்துக்கள் டாக்டர்
//எந்தவித விருப்பு வெறுப்புகளும் இல்லாத பதிவர்கள் சிங்கப்பூர்ப் பதிவர்கள். அவர்களுக்குள் ஈகோப் பிரச்சினைகளோ, வேறு விதமான பிரச்சினைகளோ இல்லை. அனைவரும் அன்பால் ஒன்றிணைந்தவர்கள். //
இதுவே கேட்க இதம இருக்குங்க .
வாழ்த்துக்கள் டாக்டர்.
பகிர்விற்க்கு நன்றி .
நல்லது டாக்டர்.,
பகிர்வுக்கு.... மகிழ்ச்சிங்க மருத்துவரே.
மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த வாழ்த்துக்கள் மருத்துவரே.
வாழ்த்துக்கள் டாக்டர்.
//////ஏவுகணைத் தொழில் நுட்பத்தில் சாதிக்கும் இந்தியா சாதாரண பயணிகள் விமான சேவையில் கோட்டை விடுவது வருத்தமளிக்கிறது.
////////
மிகவும் வருத்தம் தரும் ஒன்றுதான் .
சிங்கை சென்று திருப்பிய அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
அன்பின் தேவன் மாயம்
சிங்கை சென்று சிறப்புப் பரிசு பெற்று வந்தமைக்கு நல்வாழத்துகள் - நலமே விளைக !
சிங்கையில் பதிவர்கள் சந்திப்பு இடுகை அருமை - புகைப் படங்கள் சூப்பர் - சோசப்பு இவ்வளவு யங்கா இருக்காரு - ம்ம்ம்ம்ம்
நல்வாழ்த்துகள் தேவன் மாயம்
நட்புடன் சீனா
-:)
மன்னிக்க. பெயர் பிழையாகி விட்டது. :(
செந்தில் நாதன் நலமா> மற்றும் அவர் குடும்பத்தினர்கள் எப்படி இருக்கிறார்கள்?
அன்பால் இணைத்ததைக் காணும் போது மனம் நெகிழ்கிறது. சந்தோஷமாக இருக்குங்க. இக்கணம் இப்படியே உறைந்து விட இறைவனை வேண்டுகிறேன்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
உங்களை அங்கு இருந்து சந்திக்க இயலாமல் போயிற்றேன்னு வருத்தம் ஒரு புறமிருக்கு.
--------------------
நல்ல படியாக வந்தமைக்கு வாழ்த்துகள்.
பகிர்வு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது தேவா சார்...
மணற்கேணியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பரிசு என்று சொன்னார்களே மறந்து விட்டனரா இல்லை மறைத்துவிட்டனரா தேவா சார் கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்...
நேசமித்திரன் நன்றி
-----------------------------
நண்டு நொரண்டு- உண்மைதான் நண்பா!!
--------------------------------
நன்றி கும்கி!!
------------------------
கருணாகரசு நலமா!!
-----------------------
சாகுல் வருகைக்கு நன்றி
--------------------------
சரவணக்குமார் நன்றி!!
வாழ்த்துக்கு நன்றி !!சங்கர்!!
சீனா அய்யா!!சோசப்பு யங்கு+ ஸ்டைலு !!
விதூஷ்! செந்தில்நாதனுடன் பேசிக்கொண்டிருந்தோம்!! பூசணி அல்வா அன்புடன் கொண்டுவந்து அனைவருக்கும் வழங்கினார்!! மிக்க நலமாயுள்ளார்!!
ஜமால் இங்கு சந்திப்போம்!!
பிரியமுடன் வசந்த்! பரிசு பற்றி கேட்டுச் சொல்கிறேன்!!
வாழ்த்துக்கள்.. அப்படியே மற்ற போடோவில் இருப்பவர்கள் யார் யார் என்று சொன்னால் நன்றாக இருக்கும் :)
அருமையான கட்டுரை டாக்டர் சார்!
மகளுக்கு திருமண நிச்சயம் முடிந்திருக்கிறது. (மருமகன் சிங்கையில்தான் இருக்கிறார்) அவரை காண நம் பதிவுலகம் என்கிற குடும்பம் தான் உதவியது.
சொந்த, பந்தம் சிங்கையில் இருக்கிறார்கள்.ஆனால்,
குறிப்பிட்ட தேதிக்குள் மாப்பிள்ளையை பார்த்து முடிவு சொல்ல வேண்டிய நிலை எனக்கு.
கையும் காலும் ஓடாத சூழல்.
நானும்தானடா உன் சொந்தம் என முன் வந்தவர் சத்ரியன்.(மனவிழி) கூடுதலாக கருணாவும். (சி. கருணாகரசு)
இது வலையால் நிகழ்ந்தது.
பின்னாடி பதிவா போடணும் சார். இப்போ, பார்வைக்கு.
இந்த அடர்த்தியான சூழலில், இதன் 'காற்று' குறித்து பதிய விருப்பம்.
அதுக்கே இது.
நன்றி பதிவுலகம்!
அதாவது,
"அன்பால் இணைந்த பதிவர்கள்"
டாக்டர் சார்,
புகை படங்களின் கீழாக யார் யார் என தெரியப் படுத்தவும்..
கண் நிறைத்து கொள்ளவே... ப்ளீஸ்..
வாழ்த்துகள் தேவா சார்.. பேசலாம்னு நேத்து ராத்திரி கூப்பிட்டேன்.. கட் பண்ணிட்டீங்களே..? நேரம் இருக்கும்பொழுது கூப்பிடுங்க..
நல்ல தலைப்பு
///
எந்தவித விருப்பு வெறுப்புகளும் இல்லாத பதிவர்கள் சிங்கப்பூர்ப் பதிவர்கள். அவர்களுக்குள் ஈகோப் பிரச்சினைகளோ, வேறு விதமான பிரச்சினைகளோ இல்லை. அனைவரும் அன்பால் ஒன்றிணைந்தவர்கள்.
//////
இன்னும் சத்தமா சொல்லுங்க
//சிங்கை வந்து எங்களுக்கு சொல்லாம போயிட்டீங்களே சார்.//
யோவ் பட்டா நான் சிங்கை வந்தூ சொன்ன உடனே வந்து பாத்துட்டீங்க. ஏன் இந்த விளம்பரம்.
அபிதேவா கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா நாம சிங்கைல மீட் பண்ணிருக்கலாம்..
Hello my friend!
Really excellent posting. Very nice picturs and excellent space. have a nice week.
பயணக் கட்டுரை அருமையாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பா..
இன்னும் நிறையப் பரிசுகள் வாங்க வேண்டும் என தமிழ்ப் பதிவுலகம் சார்பில் வாழ்த்துகிறோம்.
நீங்கள் இந்தக் கட்டுரையைத் தொகுத்தளித்த விதம். கலக்கல். புகைப் படங்கள் கொஞ்சம் தெளிவில்லாமல் இருக்கு.
//எந்தவித விருப்பு வெறுப்புகளும் இல்லாத பதிவர்கள் சிங்கப்பூர்ப் பதிவர்கள். அவர்களுக்குள் ஈகோப் பிரச்சினைகளோ, வேறு விதமான பிரச்சினைகளோ இல்லை. அனைவரும் அன்பால் ஒன்றிணைந்தவர்கள். அவர்கள் எங்களை பாசத்தில் திக்குமுக்காட வைத்துவிட்டார்கள்!! //
இப்ப நடக்கிற பிரச்சனையில் இப்படி கூட எழுதறது நல்லாயில்ல. கண்ணு படப்போகுது. கொஞ்சம் மிளகாய் சுத்தி போடுங்க. உடனேயே செய்யுங்க.
Post a Comment