தமிழர் பண்டிகைகளில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் திருவிழாக்களின்போது மஞுவிரட்டு, அல்லது ஜல்லிக் கட்டு என்று மாடு பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.
இதில் மதுரையில் அலங்காநல்லூரிலும், காரைக்குடி வட்டாரத்தில் சிறாவயல் மஞ்சுவிரட்டும் பிரபலமாக நடைபெறும். அலங்காநல்லூரில் குறுகலான பாதையில் மாட்டை ஓட விடுவர். ஆனால் காரைக்குடி வட்டாரங்களில் பெரிய திறந்த வெளி மைதானத்தில் மாடுகளை விடுவார்கள்.
மஞ்ச்விரட்டு நடக்க்கும் ஊருக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றிலிருந்து மஞ்சு விரட்டு அன்று மருத்துவக் குழு ஆம்புலன்சுடன் செல்லும்.
முன்பெல்லாம் மாடு பிடிக்கும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கவே நாங்கள் செல்வோம்.
இப்போது அப்படி அல்ல!
- மஞ்சு விரட்டு ஆரம்பிக்கும் முன்பே மாடு பிடிக்கும் வீரர்கள் மது அருந்தியுள்ளார்களா என்று கருவி மூலம் சோதிக்க வேண்டும்.
- மாட்டுக்கும் சில நேரம் ஊற்றிக் கூட்டிக்கொண்டு வருவார்கள். அதையும் கால்நடை மருத்துவர் சோதிப்பார்.
- தண்ணி அடிக்காத மாடுபிடி வீரர்களுக்கு ஒரே கலரில் பனியனும், மாட்டுக்குக் கழுத்தில் கட்டத் துண்டும் அளிக்கப்படும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் பனியன் வாங்குவதற்கென்றே ஒரு கூட்டம் வரிசையில் நின்று வாங்கிக் கொண்டு போய் விடும். அதே நேரம் உண்மையான மாடுபிடி வீரர்களுக்கு பனியன் இருக்காது. 200 பேருக்கு பனியன் கொடுத்தால் ஒரு 30 பேர்தான் பனியனுடன் களத்தில் இருப்பர். நேரம் ஆக ஆக பனியன் இல்லாத 50 பேர் உள்ளே இறங்கி மாடு பிடிக்க ஆரம்பித்து விடுவர். பொது மக்களும் வேடிக்கை பார்ப்பதற்காக தடுப்புக் கம்புகளுக்குள் புகுந்து வந்து விடுவார்கள்.
மேலே: தனியாத் தான் நிற்கிறேன், வந்து பாருங்க என்று சவாலாக நிற்கும் மாடு!!
மேலே:தனியா மாட்டிக்கிட்டா சரணடைவதைத் தவிர வழியில்லை!! ஆனாலும் மாடு நல்ல மாடு!
மேலே:நான் எடுத்த சிறிய காணொளி
பெரும்பாலும் மாடு குத்துவது கை, கால் ஆகியவற்றில் என்றால் சாதாரண சிகிச்சையே போதுமானது. ஆனால் வயிற்றிலோ, விலாப்பகுதி, நெஞ்சுப்பகுதி, முதுகுப்பகுதி ஆகியவற்றில் குத்தினால்தான் ஆபத்து.
ஏனென்றால் நெஞ்சில் நுரையீரல், இதயம் ஆகிய உறுப்புகளில் காயம் ஏற்படலாம்.
வயிற்றில் முதுகில் குத்தும் போது கல்லீரல், குடல், சிறுநீரகம், இரைப்பை போன்றவற்றில் ஆழமாக காயம் ஏற்பட்டால் இரத்தமிழப்பு ஏற்படலாம். அல்லது குத்துப்பட்ட காயத்தில் தொற்றுக்கிருமிகள் இருந்து வயிற்றில் செப்டிக் ஆகி மரணம் ஏற்படலாம்.
மாடு குத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை ஒரு கேஸ் ரிப்போர்ட்டுடன் அடுத்த பதிவில் எழுதுகிறேன்!!
21 comments:
காணோளி நல்லாயிருக்குங்க .
ஆமா ,அந்த மாட அணஞ்சாங்களா ? இல்லையா ? அத சொல்லையே டாக்டர் .
அந்த மாடு மாட்டவே இல்லை!!
பாத்தாவே தெரியது சொமய ரவுண்டு கட்ரான் அந்த மாட்டுப்பையன் .சரியான ஆளுதான் .சுட்டிப்பையன்.
மிக ரம்மியமான இடுகை .பகிர்வுக்கு மிக்க நன்றிங்க டாக்டர் .
டாக்டர் அப்போ மஞ்சு விரட்டுனா மஞ்சுவ விரட்டுறது இல்லயா? அவ்வ்வ் :-))))))))
பகிர்வுக்கு நன்றி
• மஞ்சு விரட்டு ஆரம்பிக்கும் முன்பே
• மாடு பிடிக்கும் வீரர்கள் மது
• அருந்தியுள்ளார்களா என்று
• கருவி மூலம் சோதிக்க வேண்டும்.
• மாட்டுக்கும் சில நேரம் ஊற்றிக்
• கூட்டிக்கொண்டு வருவார்கள்.
• அதையும் கால்நடை மருத்துவர்
• சோதிப்பார்.
• தண்ணி அடிக்காத மாடுபிடி
• வீரர்களுக்கு ஒரே கலரில்
• பனியனும், மாட்டுக்குக்
• கழுத்தில் கட்டத் துண்டும்
• அளிக்கப்படும். \\\\\
மருத்துவரே இதில் இவ்வளவு விடயங்கள்
அடங்கியுள்ளதா? நேரில் பார்த்த அனுபவம்
இல்லை{சிங்கையில்}இல்லை திரைப்படங்களில்
பார்திருக்கிறேன்.இதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை
பாவம் ஜந்தறிவுள்ள அப்பிராணியை ....
மஞ்சுவிரட்டுடன் மருத்துவக் குறிப்பும் பிரமாதம்
நன்றி .
மாடு பெரிய மாடுங்க நண்டு!! பக்கத்தில் போவதே ஆபத்து!
வருகைக்கு நன்றி தமிழ்பார்க்!
கலா!! சிங்கப்பூரில் மஞ்சுவிரட்டுப் பார்க்க முடியாது! விமானம் ஏறி பத்திரமா தரையிறங்கி இந்தியா வாங்க!! ஓகே!
சிறந்த இடுகை மருத்துவரே
இத்தகைய கேஸ் ஸ்டடிகள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது
சுவாரஸ்யமானதாக இருக்கிறது தலைப்பு :)
எனக்கும் இதில் உடன்பாடு இல்லை, அந்த மாடும் கஷ்டப்படுது, அதால நாமும் கஷ்டப்படனும் ...
படங்கள்... படட்த்திற்கான குறிப்பு,
காணோளி.... மொத்தத்தில் பதிவும் பகிர்வும் நல்லாயிருக்கு....
நீங்களும் வேடிக்கை பாக்கத்தான் போனிங்களா...?
நீங்க மாடு பிடிப்பதை கடைசிவரைக்கும் காட்டவேயில்லையே மருத்துவரே!!!
வரலாம்தான்...!
விமானம் ஏறி {பத்திரமா}
தரையிறங்கி
இந்தியா வாங்க\\\\
இதற்கு உத்தரவாதம் உண்டா?
அப்புறம்
காளைமாடு பார்க்கும் ஆசையில்
வந்தால் எருமைமாடு அல்லவோ
கயிறு வீசிவிடும் எனக்கு!!
தெரியாத பல விவரங்களை அறியத் தந்துள்ளீர்கள். நன்றி. என்னதான் பாரம்பரியமான வீர விளையாட்டு என்றெல்லாம் சொன்னாலும் இந்த நூற்றாண்டில் இது தடை செய்யப்பட வேண்டிய ஒன்றென்பதே பலரையும் போல என் கருத்தும்.
தமிழர் பண்டிகைகளில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் திருவிழாக்களின்போது மஞுவிரட்டு, அல்லது ஜல்லிக் கட்டு என்று மாடு பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.//
மேலை ஒரு எழுத்து மாறி விட்டது என்று நினைக்கிறேன்.
இந்தக் காளையை அடக்கும் விளையாட்டு ஸ்பெயின் நாட்டில் மிகவும் பிரபலமானது. இந்தக் காளையை அடக்கும் போட்டியின் போது ஸ்பெயின் நாட்டில் உயிரிழப்புக்களும் ஏற்படுவதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்.
http://www.spain-info.com/Culture/bullfighting.htm
இது ஸ்பெயின் நாட்டில் இடம் பெற்று வரும் காளையை அடக்குதல் பற்றிய விபரணம்.
மாட்டை அடக்கி, வீரத்தை நிருபித்து திருமணம் செய்து கொள்வது, பரிசைப் பெறுவது என்பதெல்லாம் பழைய கதை. இப்போது மஞ்சு விரட்டு நடப்பதெல்லாம் புருடா கதை-ஒரு விளம்பரம்தான்.
ஆனா எங்க குதாபார் ல நடக்குற ஜல்லிக் கட்டு ல உங்களை மாதிரி டாக்டர்களை பார்த்ததில்லை ...... மேலும் எதாச்சு ஒரு அனுபவத்தை சொல்லிருந்தால் நல்ல இருந்திருக்கும்
கண்டிப்பட்டி, சிராவயல் மஞ்சுவிரட்டு பார்த்த மாதிரி இருந்துச்சு சார். :-)
காணோளி நல்லாயிருக்குங்க
ஆமா நீங்க போகலயா????
அடக்க??????
Post a Comment