கவிதாவை இந்த இரண்டு வருடங்களில் இரண்டு நாட்களாகத்தான் அடிக்கடி நினைத்தான் சுரேந்தர். மனித உணர்வுகள் புரியாதவன் என்று இரண்டு வருடங்களுக்கு முன் சுரேந்தரிடமிருந்து பிரிந்து சென்று விட்டாள். அவளுக்கு மட்டும் புரிகிறதா?(அ) இந்தக் கம்பியூட்டர் யுகத்தில் மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தேவையில்லை என்று சுரேந்தரும் அலட்சியமாக இருந்து விட்டான்.ஆனால் குழந்தை சூர்யா? அவனை மாத இறுதி நாட்களில் வைத்துக் கொள்வதற்காகப் போராடி நீதிபதியின் அனுமதி பெற்று நேற்றுத்தான் கவிதாவின் வீட்டிலிருந்து காரில் அழைத்து வந்தான்.
வழிமுழுக்க குழந்தை மழலை மொழியில் என்னென்னவோ பேசிக் கொண்டே வந்தான். இந்த நான்கு வயதுக்கு மீறிய மூளை. இரண்டு கம்பியூட்டர் இஞ்சினீயர்களின் குழந்தை அல்லவா? இரவு வீட்டுக்கு வந்தவுடன் சூர்யாவைக் கவர்ந்தது அந்த சமைக்கும் மிஷின்தான். ஒரு கோடி கொடுத்து சுரேந்தர் அமெரிக்காவிலிருந்து வரவழைத்தது. பட்டன்களைத் தட்டினால் என்ன உணவு வேண்டுமானாலும் அதுவே சமைத்துக் கொடுத்து விடும்.சமைத்துக் கொடுக்க அம்மா படும் அவஸ்தையை விதவிதமாகச் சொன்னான் சூர்யா. சுரேந்தரும் “எல்லா வீட்டிலும் இந்த மிஷின் வந்து விடும், அம்மாக்கள் ஆடும் ஆட்டம் அடங்கி விடும்” என்று சிரித்துக் கொண்டே கூறினான்.தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடும் அப்பாவின் முரட்டுத்தனமான விளையாட்டு, அணி வித்தியாசமாக இருக்க சந்தோசமாகத் துங்கினான்.
காலை எழுந்திரிக்கும் போதே சுரேந்தருக்கு அவசரமாக வரச்சொல்லி அலுவலகத்தில் இருந்து போன் கால்கள் வர, சூர்யாவை எழுப்பி, சமைக்கும் மிஷினில் நேற்றுச் சொல்லித் தந்தபடி பட்டனை அழுத்தச் சொல்லிவிட்டு ஒரு மணி நேரத்தில் வந்து விடுவதாகக் கூறிவிட்டு ஓடினான்.
மிஷினிலிருந்து வந்த சுவையான உணவை சாப்பிட்டு சூர்யா குஷியாகியிருப்பான் என்று நினைத்துக் கொண்டே வந்து பார்த்தவனுக்கு ஆச்சரியம்! உணவு அப்படியே இருந்தது.”என்ன சூர்யா? சாப்பிடவில்லை” என்று கேட்டான். ”அம்மா ஊட்டினால்தான் நான் சாப்பிடுவேன். இந்த மிஷின் சமைத்துத் தருகிறது, ஆனால் ஊட்டி விட மாட்டேன் என்கிறது” என்றான் சூர்யா.
சுரேந்தர் என்ன சொல்வதென்று தெரியாமல் விக்கித்து நின்றான்.
( இது நான் எழுதிய கதை அல்ல!! )
32 comments:
ம் ம், குட் .,,
நல்லாருக்குங்க மருத்துவரே
படைத்தவருக்கு வாழ்த்துகள்
இன்னும் கொஞ்சம் செதுக்கலாம்
:)
நல்லாயிருக்குங்க
நல்லாயிருக்கு..... வாழ்த்துகள்
சீக்கிரம் தனியா ப்ளாக் ஆரம்பிங்க மேடம்.
அருமையா இருக்கு.
பாசத்திற்கு ஏங்கும் ஒரு குழந்தையின் ஏக்கத்தை பிரதிபலிக்கும் கதை. என்னதான் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி பெற்றாலும்.. பாசத்தை தர இயலாத மனித இயந்திரங்களுக்கு இக்கதை சவுக்கடி. பகிர்வுக்கு நன்றி.. மருத்துவரே..!
நல்லாருக்குங்க... குழந்தைதான் அவ்வப்போது நீதியை கூறும்...
ஒரு நிமிடக் கதை. கலக்கல். பாசத்தின் ஏக்கத்தினைத் தத்ரூபமாகச் சுட்டி விட்டிச் செல்கிறது கதை. வாழ்த்துக்கள்.
ரோகிணிசிவா said...
ம் ம், குட் .,,
நன்றி
நல்லாருக்குங்க மருத்துவரே
படைத்தவருக்கு வாழ்த்துகள்
இன்னும் கொஞ்சம் செதுக்கலாம்
:)
//
கருத்துக்கு நன்றி நண்பரே!
கருத்துக்கு நன்றி கதிர்.
( இது நான் எழுதிய கதை அல்ல!! )
...... இருந்தாலும் என்ன? இங்குதான் முதலில் வாசிக்கிறேன். :-)
வாழ்த்துக்களூக்கு ந்ன்றி ஞான்ஸ்!
வாழ்த்துக்களூக்கு ந்ன்றி ஞான்ஸ்!
ஜோசப் பால்ராஜ் said...
சீக்கிரம் தனியா ப்ளாக் ஆரம்பிங்க மேடம்.
அருமையா இருக்கு.
//
ஹி!ஹி!ஹி!......ஓகே.
பாசத்திற்கு ஏங்கும் ஒரு குழந்தையின் ஏக்கத்தை பிரதிபலிக்கும் கதை. என்னதான் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி பெற்றாலும்.. பாசத்தை தர இயலாத மனித இயந்திரங்களுக்கு இக்கதை சவுக்கடி. பகிர்வுக்கு நன்றி.. மருத்துவரே..!
ஆம் பிரவீன்! நவீன யுகத்தின் பிரச்சினைகளில் இது ஒன்று!
நல்லாருக்குங்க... குழந்தைதான் அவ்வப்போது நீதியை கூறும்..//
அதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமே!!
ஒரு நிமிடக் கதை. கலக்கல். பாசத்தின் ஏக்கத்தினைத் தத்ரூபமாகச் சுட்டி விட்டிச் செல்கிறது கதை. வாழ்த்துக்கள்//
ஆம் கமல்!! நன்றி!!
( இது நான் எழுதிய கதை அல்ல!! )
...... இருந்தாலும் என்ன? இங்குதான் முதலில் வாசிக்கிறேன். :-)
//
கதையைப் பற்றிச் சொல்லலையே !!
//இது நான் எழுதிய கதை அல்ல//
என்னங்க டாக்டர் கடைசியில இப்படி சொல்லி சஸ்பன்ஸ் கொடுத்திட்டீங்களே
நீங்க எழுதிய கதை இல்லை என்றாலும், தோன்றிய சந்தேகத்துக்கு விடை சொல்லுங்க..
ஒரு நிமிடக் கதை-ன்னு சொன்னீங்க.. ஆனா கதை, ஒரு நாளில் தொடங்கி அடுத்த நாளில் முடியுதே எப்படி?
நல்லதொரு கதை தந்ததுக்கு
நன்றி தேவா.
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
//இது நான் எழுதிய கதை அல்ல//
என்னங்க டாக்டர் கடைசியில இப்படி சொல்லி சஸ்பன்ஸ் கொடுத்திட்டீங்களே//
உண்மையில் நான் எழுதியது இல்லை!!
பிரேமா மகள் said...
நீங்க எழுதிய கதை இல்லை என்றாலும், தோன்றிய சந்தேகத்துக்கு விடை சொல்லுங்க..
ஒரு நிமிடக் கதை-ன்னு சொன்னீங்க.. ஆனா கதை, ஒரு நாளில் தொடங்கி அடுத்த நாளில் முடியுதே எப்படி?
///
ஒரு ந்மிடத்தில் படித்து முடித்தீர்களா இல்லையா?
ஹேமா said...
நல்லதொரு கதை தந்ததுக்கு
நன்றி தேவா///
நன்றி ஹேமா!
எழுதினது யாரா இருந்தாலும் அருமை.
இயந்திரம் தருமா பாசம்?
ஒரு நிமிடக் கதை நெஞ்சை தொட்டது.
கொல்லான் said...
எழுதினது யாரா இருந்தாலும் அருமை.///
வாழ்த்தை அவரிடம் சேர்த்து விட்டேன்!
கோமதி அரசு said...
இயந்திரம் தருமா பாசம்?
ஒரு நிமிடக் கதை நெஞ்சை தொட்டது.//
கருத்துக்கு நன்றிங்க!!
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்.... அம்மாவை வாங்க முடியுமா என்ற பாடல்தான் ஞாபகத்துக்கு வந்தது.... பகிர்ந்து கொண்ட உங்களுக்கும், படைத்தவருக்கும் நன்றி...
எத்தனை கோடி கொடுத்தாலும் தாயை மட்டும் வாங்க முடியாது..நல்ல் கதை.
நல்லதொரு கதை. படைத்தவருக்கு வாழ்த்துகள்.
Post a Comment