Monday 21 June 2010

சர்க்கரை நோயும்!களைப்பும்!



சர்க்கரை நோயாளிகள் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது நோயின் அறிகுறிகள்! பல நேரங்களில் நாம் மாத்திரையோ, ஊசியோ சரியாக எடுத்துக்கொள்ளுவோம், சர்க்கரையின் அளவும் இரத்தம், நீர் ஆகியவற்றில் சரியாக இருக்கும். ஆனால் இவ்வளவு உணவுக்கட்டுப்பாடு மற்றும் மருந்துகளைச் சரியாகச் சாப்பிட்டும் சிலருக்கு,  உடல் அசதி, அன்றாட வேலைகளைக்கூடச் செய்ய முடியாமல் இருத்தல் ஆகியவை இருக்கும். சர்க்கரை கட்டுப்பாட்டில் இருந்தால் போதும் உடல் நலமாக இருக்கும் என்று நினைத்தால் அது சரியல்ல. உடலில் தோன்றும் அறிவுறைக்கு ஏற்ப சிகிச்சை பெறுவது மிக அவசியம்.
சர்க்கரை நோயாளிகள் அன்றாட வேளைகளைச் செய்வதற்கு சக்தி அவசியம். சர்க்கரையைக் குறைப்பதற்காக காலையில் வாக்கிங் சென்று விட்டு வந்து ஒன்று அல்லது இரண்டு இட்லியை உண்கிறார் என்றால் சர்க்கரை குறையும், ஆனால் அன்றாட வேலைகளைச் செய்வதற்கான சக்தி இருக்காது. அவரால் அலுவலக வேலைகளைச் சரிவரச் செய்ய முடியாது.
சர்க்கரை அதிகமாக இருந்தாலும் தேவையான அளவு உணவுகளை உண்ண வேண்டும். எப்படி சத்துக் குறைவு இருப்பதைக் கண்டு பிடிப்பது? உங்களால்

  • மாடிப்படி ஏறி இறங்க முடிகிறதா?(மூட்டுவலி உள்ளவர்களுக்கு சாதாரணமாகப் படிகளில் ஏறமுடியாது. அது வேறு....)
  • தரையில் அமர்ந்திருந்து இலகுவாக எழுந்துகொள்ள முடிகிறதா?
  • அன்றாட வேலைகளை அலுப்பில்லாமல்  செய்ய முடிகிறதா?
  • குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு நடக்க முடிகிறதா?
  • கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்கி வரமுடிகிறதா?
மேற்சொன்னவற்றைச் செய்ய முடிந்தால் உங்கள் உடல் தகுதியுடன் உள்ளது என்று அர்த்தம்.
 உதாரணமாக நடுத்தர வயதுடைய ஒருவருக்கு உடல் எடை75 கிலோ என்று வைத்துக்கொள்வோம். அவர் மருத்துவரை அணுகி சர்க்கரையைக் குறைக்க மருந்து,மாத்திரைகள் எடுத்துக்கொண்டு வருகிறார். சர்க்கரை நோய் குறையும் என்பதற்காக இவர் தினமும் நடைப்பயிற்சி செய்ய முயலுகிறார். ஆனால் அவரால் சாதாரணமாகக்கூட நடக்க முடியவில்லை, மூச்சுவாங்குகிறது( நிறையப்பேருக்கு இந்தப் பிரச்சினை உள்ளது..) என்கிறார். என்ன செய்வது? இது எதனால் இப்படி? என்றால் காரணம் அவர் உடல் தகுதி குறைவாக உள்ளது என்று அர்த்தம்!! உடல் தகுதி குறைவாக உள்ளவர்களால் நடைப் பயிற்சியில் ஈடுபட முடியாது என்பதுதான் உண்மை!
சர்க்கரை நோயாளிகள் அன்றாட உணவைத் தவிர்க்கக் கூடாது. கால சிற்றுண்டி, மதியம் சரியான நேரத்தில் அளவான மதிய உணவு, இரவு உணவு ஆகியவற்றை அறிவுரையின்படி தவறாமல் உண்ணவேண்டும்.
நடக்க முடியாமல் உடல் தகுதியில்லாமல் இருப்பவர்கள் அன்றாடம் எவ்வளவு உணவு உண்கிறார்கள் என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். அவர்கள் ஒரு நாளைக்குத்தேவையான ஏறக்குறைய 1500 கலோரியைவிடக் குறைவாக உண்பார்கள். நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சில நேரம் ஒருவேளை உணவைத் தவிர்த்துவிடுவோரும் உண்டு. 
இப்படியுள்ளோருக்கு களைப்பு, உடல் சோர்வு,நடக்க முடியாமை ஆகியவை இருக்கும்.
இவர்களுடைய உணவில்{உடலில் சர்க்கரை அதிகமாக இருந்தாலும்} 1500 கலோரி இருக்குமாறு உணவை அதிகரிக்க வேண்டும். சரியான ஓய்வு மற்றும் தேவையான அளவு உறக்கம் ஆகியவை முக்கியம். இவற்றுடன் அறைக்குள் கை,கால்களை மடக்கி  நீட்டி இலகுவான பயிற்சி எடுத்துக்கொண்டால் போதும். பிறகு வராந்தாவில் மெதுவான நடைப்பயிற்சி என்று முறைப்படி, படிப்படியாகச் செய்தால் வியக்கத்தக்க முறையில் உடல் நலம் சீரடைந்து வெகுவிரைவில் களைப்பில்லாமல் நடைப்பயிற்சியில் ஈடுபட முடியும்.
ஆகையினால் உங்களுக்கு நடக்க இயலாம, அன்றாட வேளைகளைச் செய்ய முடியாத களைப்பு ஆகியவை இருந்தால் சரிவிகித உணவு உண்டு உடல் தகுதியை அதிகரித்துக் கொள்வதே அவசியம்!!!










24 comments:

அப்துல்மாலிக் said...

பயனுள்ள பதிவு.. தேவையானவர்களுக்கு லின்க் கொடுத்துவிட்டேன்

நன்றி

Sabarinathan Arthanari said...

பகிர்ந்தமைக்கு நன்றிங்க

சென்ஷி said...

அருமையான பதிவு மருத்துவர் அய்யா...

வரதராஜலு .பூ said...

பலருக்கும் இந்த விஷயத்தில் தெளிவு இருப்பதில்லை. நல்லதொரு விரிவான அலசல்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

பயன்தரும் பதிவு

அன்புடன் நான் said...

பயனுள்ள தகவலை மிக தெளிவாக விலக்கியமைக்கு மிக்க நன்றிங்க மருத்துவரே.

CS. Mohan Kumar said...

மிக உபயோகமான பதிவு; இது போன்ற பதிவுகள் தொடருங்கள் சார்

தேவன் மாயம் said...

அபுஅஃப்ஸர் said...
பயனுள்ள பதிவு.. தேவையானவர்களுக்கு லின்க் கொடுத்துவிட்டேன்

நன்றி///

மிக்க நன்றி அபு!!

தேவன் மாயம் said...

Sabarinathan Arthanari said...
பகிர்ந்தமைக்கு நன்றிங்க

///

வருகைக்கு நன்றிங்க!!!

தேவன் மாயம் said...

வரதராஜலு .பூ said...
பலருக்கும் இந்த விஷயத்தில் தெளிவு இருப்பதில்லை. நல்லதொரு விரிவான அலசல்.

///

தெளிவாகச் சொல்ல முயற்சி செய்துள்ளேன்!!

தேவன் மாயம் said...

சேரல் said...
பயன்தரும் பதிவு

///

நன்றிங்க!!

தேவன் மாயம் said...

சி. கருணாகரசு said...
பயனுள்ள தகவலை மிக தெளிவாக விலக்கியமைக்கு மிக்க நன்றிங்க மருத்துவரே///

கருணா!! வருகைக்கு நன்றி!!

தேவன் மாயம் said...

மோகன் குமார் said...
மிக உபயோகமான பதிவு; இது போன்ற பதிவுகள் தொடருங்கள் சார்///

சரிதான்!!

தேவன் மாயம் said...

சென்ஷி said...
அருமையான பதிவு மருத்துவர் அய்யா...

///
நன்றி சென்ஷி!!

Unknown said...

உபயோகமான தகவல். தொடரட்டும்...

தேவன் மாயம் said...

ஜீயெஸ்கே said...
உபயோகமான தகவல். தொடரட்டும்..///

நன்றி நண்பரே!!

Chitra said...

பயனுள்ள குறிப்பு. நன்றி.

beer mohamed said...

sariyaka soninga
www.athiradenews.blogspot.com

Anonymous said...

Pls write about high blood pressure.

priyamudanprabu said...

தாமதமா வருகிறேன்

நல்ல பதிவு
என் அப்பாவின் அம்மாவுக்கு இருந்தது(காடைசி காலத்தில் காலின் எற்ப்பட்ட காயம் பெரியதகி சில விரல்கள் நீக்க பட்டன)
என் அப்பாவுக்கும் இருக்கு அவரை போல சக வ்வயது உடையவர்கள் போல அல்லாமல் மிக வயதானவர் போல அவர் இருக்கிரார் செயலில்

சரி இப்படி பரம்பரையா வருமா??
விளக்கமாக சொல்லவும்

பதிவுக்கு நன்றி

priyamudanprabu said...

ஓட்டும் போட்டாச்சு

இப்படி பயனுள்ள பதிவா எழுதுங்க(சினிமா பதிவெழுத நிறைய ஒஏரு இருக்காங்க)

'பரிவை' சே.குமார் said...

பயனுள்ள பதிவு..

வல்லிசிம்ஹன் said...

பட்டேன். பாராமீட்டர்ஸ் எல்லாம் ஓகே. உங்க பதிவைப் பார்த்ததும் தோன்றுகிறது. சாப்பாட்டில் குறை என்று.
உடல் எடை குறைந்தால் மட்டும் போதாது. சுறு சுறுப்பாகவும் இருக்க ஆவல். இனி கவனம் எடுத்துக் கொள்ளுகிறேன். மிகவும் நன்றி.

மதுரை சரவணன் said...

பயனுள்ள பதிவு. அருமையான எளிய தமிழில் மருத்துவ குறிப்பு. பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory