Tuesday 28 September 2010

டீன் ஸ்டார்-ஜஸ்டின் பீபர் !

image

சென்னையில் பள்ளிக்கூடப் பிள்ளைகளிடம் கேளுங்கள, அவர்களின் மனதுக்குப் பிடித்த பாடகர்கள் யாரென்று?  ஜஸ்டின் பீபரின் பெயர் கட்டாயம் அதில் இருக்கும்.

ஜஸ்டின் பீபர் என்ற இந்தப் பெயர் ஆங்கிலப் பாடல் உலகில் பிரசித்தம். எனக்கோ உங்களுக்கோ பீபரைத் தெரியவில்லையெனில் நமக்கு வயதாகி விட்டது என்றுதான் அர்த்தம்! ஏனெனில் பீபர் பிறந்ததே கனடாவில் 1994ல் தான்.

தந்தையால் பிறந்தவுடன் கைவிடப்பட்ட தன் அம்மாவுக்கு 18 வயதில் பீபர் பிறந்து விட்டான். தந்தையால் கைவிடப்பட்டாலும் அவனுள் புதைந்திருந்த  வீரியம் அவனைக் கைவிடவில்லை. 12 வயதில் சின்ன இசைப்போட்டியில் கலந்து இரண்டாம் இடம் பெற்ற அவன் வீடியோக்களை அவன் அம்மா மேல்லெட் யூடியூபில் போட்டார். அப்புறமென்ன?

அவன் யூடியூப் வீடியோக்கள் ஸ்கூட்டர் பிரான் என்ற மார்க்கெட்டிங்க் மந்திரவாதியின் பார்வையில்பட 13 வயதில் அட்லாண்டா பறந்தான்.

image

அவன்  பாடிய முதல் பாட்டேOne Time" “ஒரு முறை”  கனடா டாப் 12 ல் வந்துவிட்டது. அதிர்ஷ்ட தேவதை அவசரகதியில் அவனைத் தழுவிக்கொள்ள பீபர் ஆங்கில இசையுலகின் இளவரசனாகிவிட்டான்.

2010ல் அவனுடைய பாடல்கள் உலகெங்கிலும் பெரும் வெற்றியைப் பெற்றன."Baby" பேபி என்ற அவனுடைய ஆல்பம் யூடியூபில் மிகவும் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாகியது.

ஸ்டீவ் வொண்டருக்கு அடுத்து மிக இளம் வயதில் புகழின் உச்சியை அடைந்தது ஜஸ்டின்தான்!

புகழின் உச்சியில் இருக்கும் நட்சத்திரங்களைப்பற்றி பொய்ச்செய்திகள் பரப்பப்படுவது வாடிக்கை! ஜஸ்டினும் அதற்கு விலக்கல்ல!

அடிக்கடி ஜஸ்டின் இறந்துவிட்டதாகப் புரளிகள் கிளப்பிவிடப்பதும் அவற்றில் உண்டு!

 Justin Bieber Died - Biebs is Dead?

Is Justin Bieber dead? Did Fox News report Justin Bieber died?

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து பாப் பாடல் உலகில் புகழின் உச்சியில் இருக்கும் ஜஸ்டின் பீபர் கண்டுபிடிக்கப்பட்டது யூடியூபில்தான்.

என்ன இளைஞர்களே! உங்கள் பாடல்களை யூடியூபில் ஏற்றத்தயாராகி விட்டீர்களா?

15 comments:

vinthaimanithan said...

நமக்கெல்லாம் டின் பீருன்னா கேட்டா தெரியும்! ஜஸ்டின் பீபர்னா நானும் ஏதோ புது டைப்பு பீருன்னு நெனச்சிட்டேன் போங்க டாகடர்!

நட்புடன் ஜமால் said...

அவுட் ஆஃப் ஸிலபஸ்

சைவகொத்துப்பரோட்டா said...

ரைட்டு :))

thiyaa said...

ம்
என்னத்த சொல்ல

priyamudanprabu said...

என்ன இளைஞர்களே! உங்கள் பாடல்களை யூடியூபில் ஏற்றத்தயாராகி விட்டீர்களா?
////

ம்ம் கண்டிப்பா ,
லிங்க உங்களுக்கு அனுப்புகிறேன்

priyamudanprabu said...

நமக்கெல்லாம் டின் பீருன்னா கேட்டா தெரியும்! ஜஸ்டின் பீபர்னா நானும் ஏதோ புது டைப்பு பீருன்னு நெனச்சிட்டேன் போங்க டாகடர்!
//

HA HA HA

அருண் பிரசாத் said...

அந்த பாட்டின் யூடியூப் லிங்க் கொடுத்திருக்கலாம்

Unknown said...

நம்ம பாட்டெலாம் பாத்ரூமுல மட்டும்தான் சார் ...

ஜீவன்பென்னி said...

அப்புடியே ஒரு தொடுப்பையும் கொடுத்திருந்தீங்கன்னா நல்லாயிருந்திருக்கும்.

Praveenkumar said...

இளம் பாப் பாடகர் பற்றி சுவாரஸ்யமான தகவல் தொகுப்பு..! நான் இசையை கேட்பதோடு சரி. அதைப்பாட முயற்சித்து கொடுமைபடுத்த மனம் விரும்பவில்லை. நம்முடைய வலைப்பக்க பாடகர்களுக்கு வாழ்த்துகள். மேலும் தேவா சாருக்கும் வாழ்த்துகள்.

Jerry Eshananda said...

போட்டோவெல்லாம் போட்டு இப்படி வயித்தெரிச்சல கிளப்பலாமா?

'பரிவை' சே.குமார் said...

இளம் பாப் பாடகர் பற்றி சுவாரஸ்யமான தகவல் தொகுப்பு..!

Anonymous said...

இளம் பாப் பாடகர் பற்றி சுவாரஸ்யமான தகவல் தொகுப்பு..//
-;))

Anonymous said...

GOOD POST

குமரை நிலாவன் said...

இளம் பாப் பாடகர் பற்றி சுவாரஸ்யமான தகவல் தொகுப்பு

தேவா சார் நலமா

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory