Saturday 16 October 2010

சரி! விடுங்க! நம்ம நேரம்!!

image

ஒரு  வாரம் முன்பு சாயங்காலம் 6 மணி இருக்கும்! அன்று  சனிக்கிழமை. வானம் சற்று மேகமூட்டமாக இருந்தது.

அந்த நேரத்தில் திடீரென்று சதுரங்கம் சொல்லித்தர என்னைச் சேர்த்து விடு என்று மகள் அடம் பிடிக்க ஆரம்பிக்கவும் வானம் இடி மின்னலுடன் குமுறவும் சரியாக இருந்தது. சனி, ஞாயிறு இரண்டு நாட்கள்தான் பயிற்சி வகுப்புகள்!  ஒரு வாரமாக வீட்டில் சொல்லி வருவதால் இன்று கிளம்பாவிட்டால் வீட்டில் குமுறி விடுவார்கள் என்பதால் சரி வருவது வரட்டும் என்று காரை எடுத்து விட்டேன்.

அதுவரை தூறிக் கொண்டிருந்த மழை காரைப் போர்ட்டிகோவிலிருந்து வெளியே எடுத்தவும் முழுவீச்சில் கொட்ட ஆரம்பித்தது.

சும்மாவே ஏழரை! மழை,இடியைக் கண்டவுடன் சும்மா இருப்பானா ஈ.பி.(E.B)? கரண்டைக் கட்டிங் போட்டுவிட்டான்.  சரி! இன்னைக்கி சகுனம் நல்லாத்தான் இருக்கு ! என்று எண்ணிக்கொண்டு “ வீட்டம்மாவிடம்” நாளைக்கு …. என்று சொல்ல ஆரம்பிக்கும் போதே அவரின் முகம் போன கொடூரத்தில் வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொள்ள பயந்து வண்டியை எடுத்து விட்டேன்.   

சரி! அட்ரஸ் என்னம்மா? என்று கேட்டேன். ”சுப்பிரமணிய புரம் நாலாவது தெருதான் வடக்குப் பக்கமா தெற்குப்பக்கமா என்று தெரியவில்லை போங்க பார்த்துக் கொள்ளலாம்” என்று வீட்டம்மாவிடமிருந்து  அசால்டாக பதில் வந்தது.

நம்ம ஊரில் எந்தக் கிறுக்கன் பேர் வைத்தான் என்று தெரியவில்லை, சுப்பிரமணியபுரத்தை இரண்டாக வகுந்து முதல் வீதி  வடக்கு, முதல் வீதி தெற்கு  என்று வரிசையாக ஏழு, எட்டுத் தெருக்களுக்கு   மொத்தமாகப் பேர் வைத்து விட்டான்.( நம் போல் தேடுகிறவனுக்குத்தானே சிக்கல் தெரியும்…)

நம்ம திறமை நமக்குத்தானே தெரியும் .பகலிலேயெ பசுமாடு…. கேஸ் நம்ம!  சரி! என்று  தைரியமாக வண்டியை எடுத்துவிட்டேன். வெளியே நல்ல இருட்டு. கார் கண்ணாடிகளிலோ நல்ல கருப்பு கூலிங் ஒட்டியிருந்தது.. பார்த்தீர்களா… எவ்வளவு சோதனை என்று. குருடன் வண்டியோட்டியதைப் போல் குத்து மதிப்பாக ஹெட்லைட் வெளிச்சத்தில் ஒட்டிக்கொண்டு போனேன்.  நாலாவது வீதி வந்து விட்டது.

ஏதாவது அடையாளம் உண்டா? என்று மனைவிடம் கேட்டேன். பார்க்குக்கு எதிர் வீடு, செஸ் சொல்லித் தரப்படும் என்று வெளியே போர்டு இருக்குமாம் என்று பதில் வந்தது.

நமக்குத் தெரிந்து புல்லே இந்த ஏரியாவில் இல்லையே! பார்க் ஏது? என்று குழப்பத்துடன் வண்டியை உருட்டிக் கொண்டு போனேன். அது தவிர பார்கெல்லாம் நம்ம ஊரில் பிளாட் போட்டு விற்று விடுவார்கள்!  ஒரு நாலு கிரவுண்ட் இடம் காலி காம்பவுண்டாக இருந்தது. காரை நிறுத்தினேன்.  உள்ளே பொட்டல், நாலு சிமிண்ட் பென்ச் இருந்தது. இதுதான் பார்க்கோ? குழப்பத்துடன் எதிரில் இருந்த வீட்டைப் பார்த்தேன். 

நல்ல வேளையாக எதிரில் இருட்டில் ஒரு நபர்  மரத்துக்குக் கீழ் நின்றிருந்தார். அந்த வீட்டில் போர்டும் இல்லை

“ சார்! பார்க் இதுதானா? “ என்றேன்.

”ஆமாம்! என்ன வேண்டும்?” என்றார். பார்க்குக்கு எதிர் வீட்டில் செஸ் சொல்லித்தருகிறார்களாமே? “ என்றேன்.

”எத்தனாவது வீதி?” என்றார்.

சுனா.புரம் 5 வது வீதி என்றேன்.

அப்படியா? இது 4 வது வீதி, நீங்க அடுத்த தெருவில் போங்க! ஒரு வீட்டில் வெளியில் போர்டு தொங்கும்” என்றார்.( ஆபத்தில்கூட கடவுள் வழி சொல்ல நமக்கு இந்த மழை இருட்டில் ஒரு ஆளை நிறுத்தி இருக்கிறாரே! என்னே உன் திரு விளையாடல்! என்று எண்ணிக்கொண்டு)  அந்த  ஆபத்பாந்தவனுக்கு  நன்றி சொல்லிவிட்டு அடுத்த தெருவுக்குப் போனேன்.

அவர் சொன்னது போல் போர்டுடன் வீடு!  அருகில் போய்ப் பார்த்தால்( கொட்டும் மழையில் குடையை வேறு விட்டுவிட்டு வந்து விட்டேன்) “ இவ்விடம் சமஸ்கிருதம் சொல்லித் தரப்படும் என்று போர்டு தொங்கியது. பக்கத்தில் ஒரு கடை!

அதில் “இங்கு செஸ் சொல்லித் தருகிறார்களா? என்றேன்.

இல்லையே! பாட்டுதான் சொல்லித்தருகிறார்கள் என்றான் அந்தக் கடை ஆசாமி!

அடையாளம் பார்க்குக்கு எதிரில் 5 வது தெருங்க என்றேன் .

சார்! என்ன நீங்க, இது 4 வது வீதி, பார்க்கெல்லாம் இங்கு இல்லை! அடுத்த தெருவுக்குப் போங்க, என்று நான் முதலில் தேடிய தெருவைக் காண்பித்தான்.  

ஒருத்தனுக்கும் தெரியவில்லையே! என்று குழப்பத்துடம் அந்தத் தெருவில் அலைந்து விட்டு மறுபடி முதலில் போன தெருவுக்குப் போய்ப் பார்க்குக்கு எதிர் வீட்டில் பார்த்து விடுவோம் என்று காரை விட்டு இறங்கினேன்.

வழி சொன்ன அன்பு நண்பர் “ என்ன சார்? கண்டு பிடிக்கலையா?” என்றார்.

”இந்த வீடா இருக்குமா? ஏனெனில் 5 வது வீதி இதுதானாம் என்றேன்.”

அப்படியா? ஒரு மணி நேரமா நிற்கிறேன், குழந்தைகள் யாரும் இங்கு வரவில்லையே! என்றார்.

சரி சார் இருங்க உள்ளே பார்ப்போம்! என்று காமபவுண்டுக்குள் மழையுடன் உள்ளே நுழைந்தேன்.

“இங்கு செஸ் சொல்லித் தரப்படும்” என்று சார்ட் பேப்பரில் எழுதில் வெளியில் இருந்து பார்த்தால் தெரியாதபடி கதவில் தொங்க விட்டிருந்தார்கள்.

வெளியில் நின்றிருந்த நண்பரிடம் கோபத்துடன் திரும்பினேன்.

சாரி! சார், நான் வாக்கிங் போக பார்க்குக்கு வந்தேன். சும்மா மழைக்கு ஒதுங்கினேன். இதுதான் 5 வது வீதியா? நான் ஒரு வருடமாக வாக்கிங் வருகிறேன், 4 வது வீதின்னு நினைத்துக் கொண்டிருந்தேன்” என்றார்.    

எனக்கு வந்த கோபத்தில்…….

சரி! விடுங்க! நம்ம நேரம்!!

32 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
This comment has been removed by the author.
நண்டு @நொரண்டு -ஈரோடு said...

(:
சரி விடுங்க .

தேவன் மாயம் said...

நண்டு!! ?

எல் கே said...

ஹஹஹாஹ்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஒன்றுமில்லைங்க டாக்டர் .
நல்லாயிருக்கு .

வடுவூர் குமார் said...

விலாசம் சொல்லக்கூட ஆளை நிருத்திவைத்துள்ளார்கள்....இந்த நேயம் கூட இல்லாவிட்டால் தமிழகத்தில் அரசாங்கம் மீது கொந்தளிப்பே ஏற்படக்கூடும் ஏனென்றால் சென்னையிலேயே கூட பல சாலைகளுக்கு பெயர் பலகை கிடையாது.
எனக்கு ஒரு சந்தேகம்,GPS மென்பொருள் நம்மூருக்கு எடுபடுமா??

Kousalya Raj said...

interesting......!!

வேற என்ன சொல்றது என்று தெரியல....??!.

சைவகொத்துப்பரோட்டா said...

துப்பறியும் நாவல் படிச்ச மாதிரி இருந்தது. (..ஹி...ஹி..)

தருமி said...

//இந்த மழை இருட்டில் ஒரு ஆளை நிறுத்தி இருக்கிறாரே! என்னே உன் திரு விளையாடல்!//

தப்பான திருவிளையாடலாகப் போச்சோ?

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

செம செம தேவா

Chess கத்துக்க

மாதேவி said...

:(


:)))))

Jerry Eshananda said...

// நம்ம திறமை நமக்குத்தானே தெரியும் .பகலிலேயெ பசுமாடு…. கேஸ் நம்ம! //
தேவா..அது என்ன பசுமாடு...?மண்டை வெடிக்குது...என்ன ன்னு சொல்லுங்க..

அஹ‌ம‌து இர்ஷாத் said...

சுவ‌ராஸ்ய‌ம்..

Anonymous said...

ஊருக்கு எல்லாம் வைத்தியம் பார்க்கும் டாக்டருக்கே வீட்டில் ட்ரீட்மெண்ட்..ஹஹ்ஹஹஹ

யூர்கன் க்ருகியர் said...

டமாசு..தமாஸு !

Jerry Eshananda said...

// வீட்டம்மாவிடம்” நாளைக்கு …. என்று சொல்ல ஆரம்பிக்கும் போதே அவரின் முகம் போன கொடூரத்தில் வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொள்ள பயந்து வண்டியை எடுத்து விட்டேன்.// கவலை படாதீங்க தேவா....உடனே எங்க சங்கத்துல சேர்ந்துருங்க.."ஆண்கள் பாதுகாப்பு பேரவை."...விண்ணப்பம் அனுப்பிவைக்கிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)
சரியாத்தான் கெஸ் செய்திருக்கீங்க..அது திருவிளையாடல்ன்னு.
சோதனைக்கு பின் வெற்றி தானே
திருவிளையாடல் :))

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லாம் அவன் செயல்..:-))

Anonymous said...

//எனக்கு வந்த கோபத்தில்…//
ஹா ஹா.. சரி விடுங்க சார்.. அதான் வீடு கண்டுபிடிச்சிடீங்கள்ள :)

நாணல் said...

சரி விடுங்க சார் :)

Philosophy Prabhakaran said...

எது எப்படியோ... ஒரு பதிவ போட்டுட்டீங்க... நடத்துங்க... நடத்துங்க...

priyamudanprabu said...

நம்ம திறமை நமக்குத்தானே தெரியும் .பகலிலேயெ பசுமாடு…. கேஸ் நம்ம!

////

ha ha i like it

ஹுஸைனம்மா said...

//சரி! அட்ரஸ் என்னம்மா? என்று கேட்டேன். ”சுப்பிரமணிய புரம் நாலாவது தெருதான்//

//ஹெட்லைட் வெளிச்சத்தில் ஒட்டிக்கொண்டு போனேன். நாலாவது வீதி வந்து விட்டது.//

/”எத்தனாவது வீதி?” என்றார். சுனா.புரம் 5 வது வீதி என்றேன். அப்படியா? இது 4 வது வீதி, நீங்க அடுத்த தெருவில் போங்க! ஒரு வீட்டில் வெளியில் போர்டு தொங்கும்” //

தேடி வந்த நாலாவது வீதியிலேயே நின்றுகொண்டு, ஐந்தாம் வீதி என்று தப்பாச் சொல்லிருக்கீங்க, இதுல ‘உங்க நேரம்’னு பதிவு வேற!! நியாயமாப் பாத்தா, உங்க வீட்டம்மாதான் இப்படிப் புலம்பிப் பதிவு போட்டிருக்கணும்!!

:-))))))

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-))))))))), நல்ல காமெடி.

erodethangadurai said...

நல்ல காமெடி போங்கள்... !

இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/

Mahi_Granny said...

நல்ல நேரம் தான். எப்படியோ கண்டு பிடிச்சிடீங்க இல்லையா

எஸ்.கே said...

வழிகாட்டும் பதிவா! :-) ரசித்தேன்!

தேவன் மாயம் said...

வடுவூர் குமார் said...

விலாசம் சொல்லக்கூட ஆளை நிருத்திவைத்துள்ளார்கள்....இந்த நேயம் கூட இல்லாவிட்டால் தமிழகத்தில் அரசாங்கம் மீது கொந்தளிப்பே ஏற்படக்கூடும் ஏனென்றால் சென்னையிலேயே கூட பல சாலைகளுக்கு பெயர் பலகை கிடையாது.
எனக்கு ஒரு சந்தேகம்,GPS மென்பொருள் நம்மூருக்கு எடுபடுமா??//

உண்மைதான் ! ஜி. பி. எஸ் பற்றி எனக்குத் தெரியவில்லை!

தேவன் மாயம் said...

ஹுஸைனம்மா said...

//சரி! அட்ரஸ் என்னம்மா? என்று கேட்டேன். ”சுப்பிரமணிய புரம் நாலாவது தெருதான்//

//ஹெட்லைட் வெளிச்சத்தில் ஒட்டிக்கொண்டு போனேன். நாலாவது வீதி வந்து விட்டது.//

/”எத்தனாவது வீதி?” என்றார். சுனா.புரம் 5 வது வீதி என்றேன். அப்படியா? இது 4 வது வீதி, நீங்க அடுத்த தெருவில் போங்க! ஒரு வீட்டில் வெளியில் போர்டு தொங்கும்” //

தேடி வந்த நாலாவது வீதியிலேயே நின்றுகொண்டு, ஐந்தாம் வீதி என்று தப்பாச் சொல்லிருக்கீங்க, இதுல ‘உங்க நேரம்’னு பதிவு வேற!! நியாயமாப் பாத்தா, உங்க வீட்டம்மாதான் இப்படிப் புலம்பிப் பதிவு போட்டிருக்கணும்!!

:-))))))

///

இது எழுத்துப்பிழை! ஹி! ஹி!

தேவன் மாயம் said...

ஈரோடு தங்கதுரை said...

நல்ல காமெடி போங்கள்... !

இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/

//
தொடர்ந்து வருக!

'பரிவை' சே.குமார் said...

நம்ம நேரம்!

நல்லாயிருக்கு...

சரி! விடுங்க..!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory