Sunday, 31 October 2010

இன்சுலின் பம்ப்!இன்சுலின் பம்ப் என்பது தொடர்ந்து இன்சுலினை உடலுக்குள் செலுத்தும் ஒரு சிறிய கருவி. இதில் தேவையான இன்சுலின் மருந்து அடைக்கப்பட்டிருக்கும். சிறிய மோட்டார் ஒன்று மைக்ரோ சில்லினால் கட்டுப்படுத்தும் வகையில் இருக்கும்.இதில் உள்ள  மிகச் சிறிய உசி ஒன்று நம் உடலின் தோலுக்கடியில் பொருத்தும் வகையில் இருக்கும்.

இன்சுலின் பம்பின் வசதி என்னவென்றால் தினமும் பலமுறை  ஊசி குத்திக்கொள்ள வேண்டியது இல்லை. இதனை வயிற்றுப் பகுதியில் சுலபமாக பொருத்திக் கொள்ளலாம் . கருவி சிறிய செல்போன் போல் இருக்கும். அதனால் துணியில் பொருத்திக்கொள்ளலாம். வெளியே தெரியாது.  அதே போல் வீட்டுக்கு வராமல் வெளியிடங்களில் இருந்தால் அடிக்கடி மருந்து எடுத்துப் போட்டுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. உடலில் எவ்வளவு சர்க்கரை உள்ளது என்று பார்த்து தேவையான அளவு எவ்வளவு என்று கருவியே கணக்கிட்டு விடும்.   

யாருக்கு இது தேவை?
 • முதல் வகை நீரிழிவு நோய் உள்ளோருக்கு 
 • சிறுநீரகம்,நரம்பு,கண், கால் பாதிப்புகள் உள்ளவர்களுக்கு 
 • நீரிழிவு நோயின் பின் விளைவுகள் உள்ளவர்களுக்கு 
 • சாதாரண சிகிச்சை மூலம் சர்க்கரையின் அளவு குறையாதவர்களுக்கு 
 • நீண்ட நாள் சர்க்கரை உள்ளவர்களுக்கு 
 • கர்ப்பிணிகளுக்கு
 • காரணமின்றி சர்க்கரை குறைவதும் அதிகரிப்பதுமாக உள்ளவர்களுக்கு
இதன் முக்கிய பண்கள்:
 • சர்க்கரையின் அளவு   இரத்தத்தில் குறைந்து சரியான அளவுக்கு வரும் 
 • தாழ்நிலை சர்க்கரை ஏற்பட்டு மயங்கி விழுவது சீராகும் 
 • இரவில் தூக்கத்தில் சர்க்கரை குறைந்து விடுமோ என்று பயமின்றி உறங்கலாம் 
 • சரியான நேரத்தில் சாப்பிட முடியாதபடி பிசியாக வேலை செய்வோர் சற்று ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் முன்போ பின்போ உண்ணலாம் 
 • வாழ்க்கைத் தரம் உயரும்.   
1970 களிலேயே கண்டு பிடிக்கப்பட்ட இந்தக் கருவி தற்போது இலட்சக் கணக்கான  மேல் நாட்டினரால் உபயோகப் படுத்தப்படுகிறது.
சரி! இவ்வளவு அருமையான இந்தக் கருவியை நாம் உபயோகிக்க முடியுமா?
முடியும்.  ஆனால் இக்கருவியின் விலை  பதினைந்து லட்ச ரூபாய். மாதம் இரண்டு ஆயிரம் ரூபாய்  மருந்துக்கு செலவாகும்.     

23 comments:

சே.குமார் said...

payanulla migavum avasiyamaana idukai anna...

ellarukkum theriyavendiya oru visayam.

nanri.

Anna ungal mail id vendum. enakku oru treatment kuriththu ungalidam sila alosanaikal oeravendum. en mail id: kumar006@gmail.com.

தேவன் மாயம் said...

சே.குமார் said...

payanulla migavum avasiyamaana idukai anna...

ellarukkum theriyavendiya oru visayam.

nanri.

Anna ungal mail id vendum. enakku oru treatment kuriththu ungalidam sila alosanaikal oeravendum. en mail id: kumar006@gmail.com.//

THANK YOU!!
MY EMAIL IS THEVANMAYAM@GMAIL.COM
MY BLOG WAS ADDED MISTAKENLY BY TAMILMANAM IN PAID SECTION. I HAVE MAILED THEM ABOUT THIS !!THIS POST IS NOT PUBLISHED YET IN TAMILMANAM!

அன்பரசன் said...

useful Dr sir.

நட்புடன் ஜமால் said...

2ஆம் வகையினருக்கு தானே எளிதில் போட்டு கொள்ளக்கூடிய ஊசிகளின் விபரங்களும் விரைவில் வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன்

மிக்க நன்றி தேவா!

ஜீவன்பென்னி said...

ரொம்ப புது விசயம். ஆனா விலைதான் கொஞ்சம் அதிகம்.

கே.ஆர்.பி.செந்தில் said...

உபயோகமான பதிவு சார்...

எஸ்.கே said...

மிக மிக பயனுள்ள தகவல்! பலருக்கு இப்போதெல்லாம் நீரிழிவு நோய் வந்துவிடுகிறது. இது உபயோகமாக இருக்கலாம்!

அஹமது இர்ஷாத் said...

Very useful news sir..thanks for sharing..

முனைவர்.இரா.குணசீலன் said...

தேவையான தகவல்கள் மருத்துவரே

மதுரை சரவணன் said...

நல்ல பயனுள்ளத் தகவல்... வாழ்த்துக்கள்

Gayathri said...

ஆஹா இந்த கருவி கம்மி வேலைல நம்ம ஊருல கெடச்ச எவ்ளோ உபயோகமா இருக்கும்

ஹுஸைனம்மா said...

பதினைந்து லட்சமா???!!! ஆண்டவன் காக்கட்டும் இந்த நோயெல்லாம் வராதபடிக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

உபயோகமான பதிவு

Geetha6 said...

good information!

ஜெரி ஈசானந்தன். said...

//ஆனால் இக்கருவியின் விலை பதினைந்து லட்ச ரூபாய். மாதம் இரண்டு ஆயிரம் ரூபாய் மருந்துக்கு செலவாகும். //
கடைசில வச்சீங்களே ஆப்பு..

மோகன் குமார் said...

15 Lakhs!! Affordable only for rich people Doctor!!

பிரபாகர் said...

விலை ஏற்க இயலாத ஒன்று... அருமையான இடுகை...

பிரபாகர்...

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

Chitra said...

பகிர்தலுக்கு நன்றிங்க.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

நல்ல மருந்து ...... ஆனால் விலை?????

பிரியமுடன் பிரபு said...

பகிர்தலுக்கு நன்றிங்க.

பிரவின்குமார் said...

மிகவும் பயனுள்ள மருத்துவ தகவல் குறிப்புகள் தேவா சார்.

சே.குமார் said...

anna ungal gmail id-kku mail anuppa mudiyavillai.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory