Tuesday, 2 November 2010

நீர்க் குறைவால் உடலில் ஏற்படும் விளைவுகள்!


உடலில் நீர்ச்சத்து போதுமான அளவு இருப்பது  நாம் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு மிக அவசியம். உலகின் மொத்தப் பரப்பில் ௭௦ சதவீதம் நீர் இருப்பது போல் உடலில் 7௦% நீர்  உள்ளது. உடலில் நீரானது உடலின் அனைத்து செயல்களுக்கும் மிக அவசியம்.
 •  சராசரி மனித உடலில் ௩௭ லிட்டர் தண்ணீர் உள்ளது
 • இரத்தத்தில் 83%  தண்ணீர் உள்ளது.
 • மூளை 75%  நீராலானது.
 • எலும்பில் 25% நீர் உள்ளது.
 • மூச்சு விடுவதின் மூலம் தினமும் 25௦ மில்லி  நீர் உடலிலிருந்து வெளியேறுகிறது.
 • சாதாரணமாக 2 லிட்டர்கள் / அல்லது 8 குவளை  நீர்  ஒரு நாளைக்குத் தேவைப்படுகிறது.
 • அதிக உடல் உழைப்பு உள்ளோருக்கு இது போல் இரண்டு அல்லது மூன்று மடங்கு  தேவைப்படலாம்.
 •  நீர் அருந்தினால்  பசி குறைகிறது. இதனால் உடலானது சேமித்து வைத்துள்ள கொழுப்பை எரித்து உடலியக்கத்திற்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்துகொள்கிறது.
 • உடல் கொழுப்பைக் குறைப்பதற்கு எல்லா  மருந்துகளையும் விட நீர் மிகச் சிறந்தது.
நீர் உடலில் குறைவதை எப்படி அறிவது?
 • நாக்கு மற்றும் வாய் உலர்ந்து போகுதல் 
 • சிறுநீர் மஞ்சளாகப் போதல்
 • மலம் கட்டுதல் - உடலில் போதுமான நீர் இருந்தால் பெருங்குடலில் மலம் எளிதாக செல்லும்.  உடலில் நீர்ச்சத்துக் குறையும்போது பெருங்குடல் மலத்திலுள்ள நீர் முழுவதையும் உறிஞ்சிக் கொள்ளும். வெளியே விடாது. அதனால் மலம் இறுகி மலச்சிக்கல் ஏற்படும். 
 • தோலின் விரிந்து சுருங்கும் தன்மை குறையும். நீர்ச்சத்து போதுமான அளவு உள்ளோரின் தோலை இழுத்து விட்டால் தோல் பழைய நிலைக்கு உடனே திரும்பிவிடும். குசந்தைகளுக்கு வயிற்றுப் போக்கின்போது மருத்துவர்கள் வயிற்றுத் தோலை இழுத்துப் பார்ப்பார்கள். நீர்ச்சத்துக் குறைவாக இருந்தால் தோல் பழைய நிலைக்குத்திரும்புவதற்கு நேரமாகும்.
 • நெஞ்சுப் படபடப்பு - பொதுவாக உடலில் தேவையான அளவு நீர் இருந்தால்தான் இரத்தத்திலும் சரியான விகிதத்தில் நீர் இருக்கும். இது குறையும்போது இரத்தத்திலுள்ள தாது உப்புக்கள் மாறுபடுவதால் இதயத்துடிப்பு அதிகரிக்கும். 
 • தசைப்பிடிப்பு - தசை சரியாக இயங்க சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகள்  சரியான அளவு இருக்க வேண்டும். ஆனால் உடலில் நீர்ச்சத்துக் குறையும்போது இந்த தாது உப்புக்களின் அளவும் மாறுபடுகிறது. அதனால் தசைகள் பிடிப்பு,சுளுக்கு போன்றவை ஏற்படுகின்றது. இது பெரும்பாலும் நீர் அருந்தாமல் நீண்ட நேரம் கடின வேலை செய்வோருக்கும், நீண்ட தூரம் நீர் அருந்தாமல் ஓடுதல், விளையாடுதல்  ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கும் ஏற்படும். 
 • மயக்கம், கிறுகிறுப்பு 
 • சோர்வு - நீரின் அளவு இரத்தத்தில் குறைவதால் இரத்த அழுத்தம் குறைந்து , இரத்தத்தில் பிராணவாயு குறைந்து விடுவதால் தசை, நரம்புகள் செயல்பாடு குறைந்து சோர்வு ஏற்படுகிறது.
 • நீர்சத்துக் குறைந்தால் உடல் வெப்பம் அதிகரிக்கும்.  இதனால் வேர்வை சுரப்பது குறையும்.
தண்ணீர் தேவையான அளவு குடிப்பது உடல் நலனுக்கு மிகவும் அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடித்து உடல் நலம் காப்போம்.  

  24 comments:

  புவனேஸ்வரி ராமநாதன் said...

  தகவலுக்கு நன்றி.

  ஜீவன்பென்னி said...

  தகவலுக்கு நன்றிண்ணே.

  நண்டு @நொரண்டு -ஈரோடு said...

  அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள் .
  மிக அருமையான பயனுள்ள இடுகை .
  பகிர்வுக்கு நன்றீங்க டாக்டர் .
  வாழ்த்துக்கள் .

  ஈரோடு கதிர் said...

  பயனுள்ள தகவல்கள்

  நன்றி

  Gayathri said...

  mIgavum payanulla padhivu..naan avlo thanni kudikarthu illa itha padaichu konjam bhayam vandhuruku ini thanni kudikaren nandri

  Anonymous said...

  Thanks for the info.. used to get fwd to drink water ..but it is the first time we came to know side effect of drinking less water .. Pl keep your good work..
  VS Balajee

  சைவகொத்துப்பரோட்டா said...

  நீரில் இவ்ளோ விஷயம் இருக்கா! தகவலுக்கு நன்றி டாக்டர்.

  மோகன் குமார் said...

  டாக்டர் ஒரு நாளைக்கு சாதரணமாய் அதிக பட்சம் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்? நான் நான்கு லிட்டராவது குடிக்கிறேன். அதிகம் நீர் குடிப்பது சிறுநீரகத்தை அதிக வேலை வாங்கும்; எனவே போதுமான அளவு மட்டும் குடிக்க வேண்டும் என எங்கோ கேட்ட நினைவு. இது உண்மையா? பதில் தரவும்

  D.R.Ashok said...

  நல்ல பகிர்வு :)

  தமிழ் அமுதன் said...

  நல்ல பதிவு ..! நன்றி டாக்டர்..!

  சே.குமார் said...

  பயனுள்ள தகவல்கள்.

  நட்புடன் ஜமால் said...

  நன்றி தேவா!

  மலச்சிக்கலுக்கு காரணமும் நீர்சத்தா

  பயனுள்ள இடுக்கை

  Jaleela Kamal said...

  பயனுள்ள தகவல்கள், நன்றி

  பிரவின்குமார் said...

  மிகவும் பயனுள்ள மருத்துவ தகவல்கள்..!! தங்களுக்கு முன்கூட்டிய இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.. சார்!!

  ஜெரி ஈசானந்தன். said...

  தண்ணியில இம்புட்டு இருக்கா..

  ஜெரி ஈசானந்தன். said...

  டாக்டர் ஒரு டவுட்டு.......நீங்க ரெகமன்ட் பன்ற இந்த தண்ணிய எம்புட்டு குடிச்சாலும் போதையே ஏற ..மாட்டேங்குது? Why.....டாக்டர் ....Why.?

  தேவன் மாயம் said...

  புவனேஸ்வரி ராமநாதன் said...

  தகவலுக்கு நன்றி.//

  நன்றிஙக!

  -----------------------------


  Blogger ஜீவன்பென்னி said...

  தகவலுக்கு நன்றிண்ணே.//

  பென்னி நன்றி!

  தேவன் மாயம் said...

  நண்டு
  ஈரோடு கதிர்,
  காயத்ரி,
  சைவகொத்துப்பரோட்டா,
  மோகன் குமார்,
  D.R.Ashok
  தமிழ் அமுதன்
  சே.குமார்
  நட்புடன் ஜமால்
  Jaleela Kamal
  பிரவின்குமார்
  ஜெரி ஈசானந்தன்.


  மிக்க நன்றி மக்களே !!!

  Chitra said...

  பயனுள்ள குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி, டாக்டர்.

  philosophy prabhakaran said...

  மோகன் குமார் கேட்ட கேள்வியே என்னுடைய கேள்வியும்... பதில் தரவும்...

  தேவன் மாயம் said...

  சாதாரணமாக 2 லிட்டர்கள் / அல்லது 8 குவளை நீர் ஒரு நாளைக்குத் தேவைப்படுகிறது.
  அதிக உடல் உழைப்பு உள்ளோருக்கு இது போல் இரண்டு அல்லது மூன்று மடங்கு தேவைப்படலாம்///

  கட்டுரையிலேயே பதில் உள்ளது ந்ண்பரே!!
  ஆனால் அதற்கு அதிகம் குடிப்பது, வெறும் வய்ற்றில் லிட்டர் கணக்கில் குடிப்பது தவறு..
  மேலும் உங்கள் சிறு நீரகங்களை அடிக்கடி சோதித்துக்கொள்ளவும்!!

  சிங்கக்குட்டி said...

  எல்லா நோய்களையும் போக்கும் சக்தி தண்ணீருக்கு உண்டு என்று எங்கோ எப்போதோ படித்ததை உங்கள் பதிவு நினைவில் கொண்டு வருகிறது.

  நல்ல பகிர்வுக்கு நன்றி.

  அப்துல்மாலிக் said...

  தேவா சார் நல்ல பதிவு

  நீர் அதிகம் அருந்துவதால் தொப்பை போடும் என்கிறார்களே உண்மையா, கொஞ்சம் விளக்கவும்

  ரோஸ்விக் said...

  பயனுள்ளது... :-)

  Related Posts with Thumbnails

  blogapedia

  Blog Directory