Friday, 19 November 2010

மஞ்சள் காமாலை-A(HEPATITIS-A) அவசியம் அறிய வேண்டியவை!

 

image

மஞ்சள்காமாலை என்பது பொதுவாக அனைவரும் கேள்விப்பட்ட வியாதிதான். ஆனால் அது ஏன் வருகிறது வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பவை பற்றித் தேவையான தெளிவு மிக அவசியம். அவற்றைப் பற்றியே நாம் இப்போது சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம்.

1.மஞ்சள்காமாலை ஹெபடைட்டிஸ் என்றால் என்ன?

மஞ்சள் காமாலை என்பது கல்லீரலில்(LIVER) கிருமித்தொற்று ஏற்படுவதைக் குறிக்கிறது.

2.பொதுவாக மஞ்சள் காமாலை எதனால் ஏற்படுகிறது? 

பொதுவாக A,B,C என்று வகைப்படுத்தப்பட்டுள்ள வைரஸ்  கிருமி( தீ நுண்மம்) களால் ஏற்படுகிறது.

3.மஞ்சள்காமாலை ஏ (HEPATITIS-A) மஞ்சள்காமாலை ஏ பற்றி இந்தப்பதிவில் பார்ப்போம்

  • இது குழந்தைகளை அதிகம் தாக்குகிறது. 
  • மனித மலம் சிறு அளவில் விரல்களில், நக இடைவெளியில் இருக்கும். இது உணவில், நீரில் கலக்கிறது. அந்த நீர் மற்றும் உணவை நாம் சாப்பிடும்போது அது நம்மைத் தொற்றிக்கொள்கிறது. சமையல்காரர்கள் மற்றும் உணவுக்கூடங்களில் இருப்போர் மற்றும் அனைவரும் மலம் கழித்த பின் சோப்புப்போட்டுக் கை கழுவுதல், கையுறை அணிந்து சமைத்தல், குடிக்கும் தண்ணீரில் கை படாமல் இருப்பது ஆகியவை அவசியம். ஆகையாலேயே வெளியில் சாப்பிடும்போது நல்ல சுகாதாரமான உணவகங்களில் சாப்பிட வேண்டும்.    
  • இந்தக் கிருமி தொற்றிய 15-50 நாட்களில் நோய்க்குறிகள் தோன்றும்.
  • மிதமான காய்ச்சல்,  அதிக சோர்வு, உமட்டல், மேல் வயிற்று வலி, வாந்தி ஆகியவை இருக்கும். குழந்தைகள் படிக்காமல் சோர்வாகப் படுத்திருந்தாலும், குறைந்த மிதமான காய்ச்சல் தொடர்ந்து இருந்தாலும் சாதாரண வைரஸ் காய்ச்சல் என்று மிதமாக இருத்தல் தவறு.
  • அதன் பின் சிறு நீர் மஞ்சள், அடர் மஞ்சள் நிறத்தில் போகும். கண்ணின் வெண்ணிறப்பகுதி, உடலின் தோல் பகுதிகளில்  மஞ்சள் நிறம் காணப்படும். இந்த மஞ்சள் நிறம் ஒரு வாரத்தில் இருந்து நான்கு வாரங்கள் வரை இருக்கும்.
  • A வைரஸினால் வரும் மஞ்சள் காமாலை  தன்னாலேயே சரியாகிவிடும் தன்மை உடையது. ஆயினும் சில குழந்தைகள் வாந்தி, தலைவலி,சாப்பாடு செரிக்காமல் இருத்தல், பசியின்மை ஆகியவற்றால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர்.   ஆதலால் அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுதல் அவசியமாக இருக்கும். காய்ச்சலுக்கு பாரசிடமால் போன்ற சாதாரண மாத்திரையும், வாந்திக்கு மருந்துகளும் எடுத்துக்கொள்வது அவசியம்.    
  • இந்நோய் ஒருமுறை தாக்கினால் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாக்கி விடுவதால் இது மறுபடியும் வருவது இல்லை.
  • இதற்கு இரத்தப் பரிசோதனை செய்து கல்லீரலின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். இரத்தப்பரிசோதனை மூலம் A வகை மஞ்சள்காமாலைதானா அல்லது B, C போன்ற வேறு வகை மஞ்சள்காமாலையா என்பதனையும் அறிவது அவசியம்.
  • வயிறு ஸ்கேன் செய்து கல்லீரல், பித்தப்பை ஆகியவற்றின் வீக்கம், நோய் எவ்வளவு தூரம் அவற்றை பாதித்துள்ளது என்பதனையும் அறிவது அவசியம்.
  • இந்நோய் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி உள்ளது. இத்தடுப்பூசியானது 20 வருடத்துக்கும் மேல் இந்த ஏ வகை மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும்.

24 comments:

எஸ்.கே said...

மஞ்சள் காமாலை இப்போதெல்லாம் பரவலாக காணப்படும் ஒரு நோயாக மாறிவிட்டது. சரியாக கவனிக்காவிட்டால் ஆபத்துதான்!

நல்ல தகவல்! விளக்கமாக தந்திருக்கிறீர்கள்! நன்றி!

தேவன் மாயம் said...

ஆம் எஸ்.கே!கருத்துக்கு நன்றி

கே.ஆர்.பி.செந்தில் said...

மஞ்சள்காமாலை நோயை பற்றி போதிய கவனமின்மையால்தான் அது முற்றியபிறகு குணப்படுத்த சிரமப்படுகிறார்கள்..

நாட்டு வைத்திய முறையைத்தான் பெரும்பாலான மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

உபயோகமான தகவல்கள் டாக்டர் .
பகிர்வுக்கு நன்றி .
தொடருங்கள் .
வாழ்த்துக்கள் .

பிரவின்குமார் said...

அனைவரும் அறிய வேண்டிய அவசியமான பதிவு தேவா சார். இதுபோன்ற மருத்துவ தகவல்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏறபடுத்தும் வகையில் சிறப்பாக தொகுத்து இருக்கீங்க..!!

தேவன் மாயம் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

மஞ்சள்காமாலை நோயை பற்றி போதிய கவனமின்மையால்தான் அது முற்றியபிறகு குணப்படுத்த சிரமப்படுகிறார்கள்..

நாட்டு வைத்திய முறையைத்தான் பெரும்பாலான மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்..//

அதற்குக் காரணம் இந்த ஏ மஞ்சள்காமாலைதான்! ஏனெனில் இது தன்னாலேயே சரியாகி விடுவதால்தான்! பிற வகைகள் அப்படி அல்ல!

தேவன் மாயம் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

உபயோகமான தகவல்கள் டாக்டர் .
பகிர்வுக்கு நன்றி .
தொடருங்கள் .
வாழ்த்துக்கள் .//

கருத்துக்கு நன்றி !

தேவன் மாயம் said...

பிரவின்குமார் said...

அனைவரும் அறிய வேண்டிய அவசியமான பதிவு தேவா சார். இதுபோன்ற மருத்துவ தகவல்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏறபடுத்தும் வகையில் சிறப்பாக தொகுத்து இருக்கீங்க..!!//

பிரவீன் மிக்க நன்றி!

அகல்விளக்கு said...

ஒருமுறை தாக்கி சரியான பின், மீண்டும் ஏற்பட வாய்ப்பு இல்லையா அண்ணா...

சிறு வயதிலேயே நோய் தாக்கி மீண்ட பட்சத்தில்...??

தேவன் மாயம் said...

Blogger அகல்விளக்கு said...

ஒருமுறை தாக்கி சரியான பின், மீண்டும் ஏற்பட வாய்ப்பு இல்லையா அண்ணா...

சிறு வயதிலேயே நோய் தாக்கி மீண்ட பட்சத்தில்...??//

திரும்ப வராது!

ஜெரி ஈசானந்தன். said...

மருத்துவ ச்சுடரொளி தேவா ரசிகர் மன்றம் மருதையில தொடங்க அனுமதி தரீங்களா டாக்டர்.

dineshkumar said...

நல்ல பகிர்வு சார்

மஞ்சள் காமாலைக்கு நாட்டு வைத்தியம் தான் சரியான தீர்வு என்று கூருகிறாகள் எது சிறந்தது சார்

தேவன் மாயம் said...

Blogger ஜெரி ஈசானந்தன். said...

மருத்துவ ச்சுடரொளி தேவா ரசிகர் மன்றம் மருதையில தொடங்க அனுமதி தரீங்களா டாக்டர்.///

ஆகா! கெளம்பிட்டீகளா? ........

தேவன் மாயம் said...

Blogger dineshkumar said...

நல்ல பகிர்வு சார்

மஞ்சள் காமாலைக்கு நாட்டு வைத்தியம் தான் சரியான தீர்வு என்று கூருகிறாகள் எது சிறந்தது சார்//

ஏ- மஞ்சக்காமாலைக்கு மருந்ந்து தேவையில்லை.
பி,சி மற்றும் கல்லடைப்பினால் வரும் மஞ்சக்காமாலைக்கு தீவிர சிகிச்சை தேவை. இவற்றுக்கு நாட்டு மருந்து கொடுத்தால் கேட்காது!

சே.குமார் said...

நல்ல தகவல்!

விளக்கமாக தந்திருக்கிறீர்கள்!

குழந்தை நல மருத்துவன்! said...

DEAR DEVA
FEW BLOGS ARE DOING COPY&PASTE KIND OF WORK OF YOURS AND MINE .WHAT SHOULD WE DO TO PROTECT IT?

http://vinothmedical.blogspot.com/2010/09/blog-post_7426.html

http://ask4safety.com/healthmail/?p=373

http://nkl4u.in/articles/?p=30

குழந்தை நல மருத்துவன்! said...

USEFUL INFO ! I AM ALSO WRITING ABOUT JAUNDICE SINCE OCTOBER NOW POSTED TWO TOPICS ABOUT JAUNDICE.

INSPITE OF HEALTHCARE FACILITIES STILL PEOPLE GO FOR NATIVE MEDICATION AND LAND IN LIVER FAILURE(LIVER TRANSPLANT COSTS 25 LAKHS)


http://doctorrajmohan.blogspot.com/2010/10/blog-post.html

http://doctorrajmohan.blogspot.com/2010/10/blog-post_31.html

ஹேமா said...

உங்கள் வைத்தியக் குறிப்புகளை எப்போதுமே படித்து வருகிறேன்.
நன்றி டாக்டர் !

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அறிந்து கொள்ள வேண்டிய தகவல். நன்றி.

துமிழ் said...

இதனால் நாட்பட்ட /நீண்ட நாள் பாதிப்புக்கள் எவையும் ஏற்படாது.
மாறாக பி / சி வகைக் கிருமிகளால் நீண்ட நாள் பாதிப்பு, புற்று நோய் போன்றவை ஏற்படலாம்.

இந்தத் தகவலகையும் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் நண்பரே..
சும்மா ஒரு வேண்டுகோள்தான்

சென்னை பித்தன் said...

நல்ல விளக்கமான,விரிவான பதிவு.அனைவரும் அறிய வேண்டிய தகவல்கள்.தமிழ்ப் பதிவுலகில் இம்மாதிரிப் பதிவுகள் மிகச்சிலவே.
தொடரட்டும் உங்கள் பணி.

ஹரிஸ் said...

மிக அவசியமான..பயனுள்ள பதிவு..பகிர்வுக்கு நன்றி..

அன்புடன் மலிக்கா said...

தேவன்
உங்கள் வலைதளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள் http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_03.html

Anonymous said...

Concern Fresh Wind offers a construction investment for different tariff plans. Today , overcame the recent financial crisis, increasingly ponder about safe investing their funds . According to conclusions of many of the leading the best analysts, one of the most construction investment . Everyone knows that the construction of less exposed to the risk of falling prices, in addition , property has always enjoyed , and will be in demand. Even the economic crisis did not recaptured removed the desire for people to buy their own property. Therefore, investment in construction will always remain relevant and profitable.

Fwit.Biz: [url=https://fwit.biz]where to invest money[/url]

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory