Monday, 30 April 2012

டெங்கு காய்ச்சல்!!

டெங்கு காய்ச்சல் பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் படிக்கிறோம். அதன் சில முக்கிய விபரங்க்களைப் பார்ப்போம்.

டெங்குவை பரப்பும் ஈடிஸ் கொசு- காலில் வெண்ணிறப் பட்டைகள் இருக்கும்.
1.டெங்குக் காய்ச்சல் எந்தக்கிருமியால் உண்டாகிறது?
டெங்கு ஒரு வைரஸால் உண்டாகும் காய்ச்சல் ஆகும். ஈடிஸ் (AEDIS AEGYPTI) என்ற வகைக்(பெண்) கொசு இந்த வைரசைப் பரப்புகிறது.
2.டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?
  • திடீர்க் காய்ச்சல்,
  • தலைவலி,
  • தசைவலி,
  • மூட்டுவலி,
  • கண் பகுதியில் வலி 
  • தோல் தடித்து சிவத்தல் (RASHES)
  • தோலில் இரத்தப் புள்ளிகள் (PETECHIAE)- இவை முதலில் கால்களிலும், நெஞ்சிலும் ஆரம்பித்து சிலருக்கு உடல் முழுதும் பரவும்.
  • வயிற்றுவலி, உமட்டல்,வாந்தி,வயிற்றுப்போக்கு
  • வாந்தியில் இரத்தம் கலந்து வருதல்
3.தீவிரமான டெங்கு காய்ச்சல் என்ன விளைவுகள் உண்டாக்கும்?
  • அதிக காய்ச்சல்
  • கண்,மூக்கு,வாய்,காது,வயிறு மற்றும் தோலில்இரத்தக்கசிவு
4.டெங்கு ஷாக் சின்ட்ரோம்-என்றால் என்ன?
  • டெங்கு இரத்தக் கசிவினால் இரத்தத்திலிருக்கும்  நீரானது இரத்தக்குழாயிலிருந்து கசிந்து நுரையீரல் மற்றும் வயிற்றைச் சுற்றித் தேங்கும். இன்னிலையில் உயிரிழப்பு அதிகம்.
5.டெங்குவை கண்டறிய  இரத்தப் பரிசோதனைகள் எவை?
  • இரத்தத்தில் பிளேட்லெட்டுகள் குறைதல் <100,000
  • பி.சி.ஆர் ( P C R ) பரிசோதனை
6.டெங்கு வருவதைத் தடுப்பது எப்படி?
  • கொசு உருவாகும் இடங்களான உபயோகமற்ற டிரம், டயர்,பாட்டில் ஆகியவற்றை அகற்றுதல்
  • சாக்கடை நீர் தேங்காது சுத்தப்படுத்தல்
  • கொசு மருந்தடித்தல்

12 comments:

Jaleela Kamal said...

மிகவும் பயனுள்ள பகிர்வு

தேவன் மாயம் said...

நன்றிங்க நண்பரே!

'பரிவை' சே.குமார் said...

பயனுள்ள பகிர்வு...
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பயனுள்ள தகவல்.
பகிர்வுக்கு நன்றி .

புவனேஸ்வரி ராமநாதன் said...

எல்லோரும் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய
தகவல் பற்றிய பதிவு. விழிப்புணர்வுப் பதிவு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

தேவன் மாயம் said...

நன்றி! ஜலீலா! வருகைக்கும் கருத்துக்கும்!

தேவன் மாயம் said...

நன்றி குமார்!

தேவன் மாயம் said...

பயனுள்ளதாக இருப்பின் நன்றி நண்டு

தேவன் மாயம் said...

நன்றிங்க புவனேஸ்வரி ராமனாதன்!

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள இதுவரை அறிந்திராத தகவல்கள்.

பகிர்வுக்கு நன்றி .

தேவன் மாயம் said...

நன்றி! நண்பரே!

Jaleela Kamal said...

உங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.
http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_8948.html
இப்படிக்கு
ஜலீலாகமால்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory