Wednesday, 13 May 2009

பிரபல பதிவருக்கு ஆயுள் தண்டணை??

அன்பு நண்பர்களே!!!


நண்பர் ”மெல்போர்ன் கமல்” ஆஸ்திரேலியாவிலிருந்து திருச்சி பதிவர் சந்திப்புக்கு வந்திருந்தார்!!

பதிவர் சந்திப்பும் நிகழ்ந்தது! ஒரு அதிர்ச்சி என்னவென்றால் நண்பர் “மெல்போர்ன் கமலுக்கு(மெல்போர்ன் கமல் தம்பதியருக்கு இன்று திருமண ரிஷப்சன்!!


மெல்போர்ன் கமல் தம்பதியருக்கு திருமண வாழ்த்துக்கள்!!
இல்லறம் என்னும் நல்லறம் காணும்
இனிய பதிவர் மெல்போர்ன் கமலே!!

வாழ்க்கைப் பூஞ்சோலையில்
மலர்களெல்லாம் நாட்களெனில்
பொன்மலராய் சில நாட்கள்..
சில நாளில் ஒருநாள் இன்று
ஆம்!!
உலகமெல்லாம் உனைவந்து
உளமுவந்து வாழ்த்திடவே-----
ஊன் தந்த பெற்றோரின்
உயர் உள்ளம் போற்றிடவே

உனைச் சார்ந்த எல்லோரின்
உளமெல்லாம் நிறைந்திடவே

ஒளி வீசும் எதிர்காலம்
உனக்கெனவே உணர்த்திடவே!!

இல்லாளோடு இணைந்து
இன்பத்தில் திளைத்திடவே

பொன்மலராய்ப் பூத்திட்ட
திருமணநாளாம் இன்னாளில்

உளம் கனிந்து வாழ்துகிறோம்!!
வாழிய பல்லாண்டு!!


நீங்களும் கமலுக்கு திருமண வாழ்த்துக்களைச் சொல்லலாமே!!

திருச்சியிலிருந்து இப்போதுதான் வந்து இறங்கி இப்பதிவினை இடுகிறேன்!!
விபரமான பதிவு நாளை !!!


Monday, 11 May 2009

தி நைட் அட் தி மியூசியம்-2 பேட்டில் ஆஃப் ஸ்மித்சோனியன்!!


அன்பின் வலை மக்களே! இது ஒரு இன்னும் வெளிவராத ஆங்கிலத்திரைப்படம்!!

பெஞ்சமின் எட்வர்ட் ஸ்டில்லர் என்ற பென் ஸ்டில்லர் நடிக்கும் படம்.

இந்தக்கதை ஸ்மித்சோனியன் இன்ஸ்டியூசனில் நடைபெறுகிறது!! இங்கு உலகின் மிகப்பெரிய மியூஸியம் உள்ளது!!அதாவது 19 மியூஸியங்கள் இந்த நிறுவனத்தில் உள்ளன!!, உயிரியல் பூங்கா,9 ஆராய்ச்சிக்கூடங்கள் இதில் உள்ளன. 136 மில்லியன் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன இந்த மியூஸியத்தில் என்றால் பாருங்கள்!! இது அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ளது!!1846 ஆகஸ்ட் 10 ம் தேதி இது தோற்றுவிக்கப்பட்டது!! இந்த மியூசியத்தில் அமேலியா ஏர்ஹார்ட்( படத்தில் அமி ஆடம்ஸ்) அட்லாண்டிக் கடலை கடந்த பழைய விமானமும் உள்ளது!

படத்தில் இந்த மியூஸியத்தின் பாதுகாவலராக பென் ஸ்டில்லர்( படத்தில் லாரி,LARRY) வருகிறார். இந்த மியூஸியத்திலுள்ள கெட்ட சக்தியான எகிப்திய ஃபாரோ காமுன்றா(Kahmunrah, an evil Pharaoh) உயிர் பெறுகிறது!! மந்திரசக்தியால் இந்த மியூஸியத்தில் உள்ள பழைய சிலைகளான தியோடர் ரூஸ்வெல்ட்,டெக்ஸ்டர் ஆகியவையும் புதியவைகளான அல்கபோன், ஜெனரல் கஸ்டர் ஆகியோரும் உயிபெறுகின்றனர்!!இந்தக்குழுக்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகள்தான் கதை!!

நம் நாயகன் லாரி(பென் ஸ்டில்லர்), அமீலியா ஏர்ஹார்ட்டுடன் காதலும், இருவரும் சேர்ந்து மியூசியத்தை பழைய நிலைக்குக் கொண்டு வருவதும் கதையின் மீதி!!!

பென் ஸ்டில்லர் அஜித் மற்றும் இந்திய நடிகர்போல் அழகன் அல்ல! காமெடியனாக பல படங்களில் நடித்துள்ளார்.தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகவும் இருக்கிறார். இவருடைய படங்கள் $1.95 பில்லியன் சம்பாதித்துள்ளதாம்.

அமீலியா ஏர்ஹார்ட்டாக வரும் அமி ஆடம்ஸ்

கலக்குவார் என நினைக்கிறேன்!! இந்தப்படம் இந்தமாத இறுதியில் திரைக்கு வருகிறது!!

என்ன படித்துவிட்டீர்கள்!!

ஓட்டளிக்க தமிலிஷ்,தமிழ்மணம்!!

தேவா..



NIGHT AT THE MUSEUM 2: BATTLE OF THE SMITHSONIAN: Movie Trailer - Click here for more home videos
Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory