அன்பின் வலைமக்களே!!
பதிவுலகில் இவ்வளவு நாள் இருக்கிறோம். நண்பர்கள் கூடும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அது போல் அவர்களுடைய பல சொந்தக்கதைகளையும் கேட்க நேரிடுகிறது. அவர்களைப்பற்றி புரிந்து கொள்ளவும் முடிகிறது.
நான் கார்த்திகை பாண்டியின் தங்கை திருமணத்தில் கண்ட மன்மதன்கள் பற்றி இங்கு சொல்கிறேன். இவர்கள் அனைவரும் கல்யாணம் ஆகாதவர்கள். கல்யாணத்துக்குத் தயாராக உள்ளவர்கள். விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.!!!!இஃகி!இஃகி!!
கார்த்திகைபாண்டியன் தங்கை வீடியோ முதல் பாகம் பார்க்காதவர்கள் கீழே சுட்டியை தட்டிப் பார்க்கவும்!!
அன்புப் பதிவர் வீட்டு திருமணம்- காணொளி(வீடியோ!!)
இந்தக் காணொளியை யூடியூபில் பார்க்க சுட்டிhttp://www.youtube.com/watch?v=SPkq8Q75KTw
1.Anbu Mathy
- வயது: 19
- பாலினம்: ஆண்
- தொழில்: Employee
- இருப்பிடம்: sivakasi : Tamilnadu : India
இவருடைய அண்மைய பதிவின் தலைப்பைப் பாருங்கள்:
ஒரு பிரபல பதிவரின் காதல் ஏக்கங்கள்..!!!
அன்பு என்ற அன்புமதி!!இவர்தான் மிக இளையவர். நல்ல குணம் முகத்திலேயே தெரியும். குசும்பு கொஞ்சம் உண்டு. சிரித்த முகத்துடன் இருக்கும் இவரை நீங்கள் வீடியோவில் காணுங்கள்..(அடிக்கடி போன் வருவதும் தனியாகப்போய் பேசுவதுமாக இருக்கிறார்!!..............பார்ப்போம்!!)
---------------------------------------------------------------------
2.ஆதவாகுழந்தை ஓவியம்!!
வயது:20
ஆதவா அருமையான இளைஞர்!! அமைதி! அமைதி! அமைதி!! ஆதவா என்றால் அமைதி.
கவிதைகளுக்குப் புகழ்பெற்ற இவர் திருப்பூரில் டெக்ஸ்டைலில் வேலை செய்கிறார்.
இவரைக் கைப்பிடிக்கும் பெண் அதிர்ஷ்டசாலிதான்.
வீடியோவில் இவரை எளிதில் கண்டுபிடிக்கலாம்!!
-------------------------------------------------------------------------
3.ஸ்ரீதர் http://sridharrangaraj.blogspot.com/
ஸ்ரீதர்
- வயது: 33
- பாலினம்: ஆண்
- ஜோதிட ராசி: துலாம்
- ஜோதிட ஆண்டு: முயல்
- தொழில்: Self employed
- இருப்பிடம்: மதுரை : தமிழ் நாடு : India
இவர்தான் ஸ்ரீதர். திருமணத்துக்கு தயாராக உள்ளவர். பார்த்தாலே மயக்கும் தோற்றம் கொண்டவர்.
கார்த்திக்கு மிகுந்த உதவியாக இருந்தவர்! ஜாதக ஸ்பெசலிஸ்ட்!
இவர் ஜாதகம் யார் கையிலோ?( சமையலும் தெரியுமாங்கோ!!)
-------------------------------------------------------------------
4.பாலகுமார்
பாலகுமார் சோலைஅழகுபுரம்
என்ற தளத்தில் எழுதுகிறார்..
- பாலினம்: ஆண்
- தொழிற்துறை: தொலைத்தொடர்புகள்
- இருப்பிடம்: மதுரை : தமிழ்நாடு
பாலகுமார் பக்கா ஜெண்டில்மேன் தோற்றத்தில் வந்திறங்கினார். வயது 24 இருக்குமா? தோற்றம் அவ்வளவுதான்.
நல்ல தெளிவான பேச்சு. தெளிவான சிந்தனை!
எப்படித்தான் தேடிக் கண்டுபிடிக்கிறாங்களோ !!!!!என்ற இவருடைய பதிவைப் பாருங்கள்!!
இந்த வார கல்கி இதழில் இவருடைய கவிதை வந்துள்ளது.
இவரும் கால்கட்டுக்கு தயாராக உள்ளவர்!!
----------------------------------------------------------------------
5.கார்த்திகை பாண்டியன் -- சொல்லவே வேண்டாம். கல்யாண வீடியோவில் பாருங்க!! மாப்பிள்ளையும் ரெடியாக இருக்கிறார். பொண்ணு இருந்தா சொல்லுங்க. தங்கை திருமணம் முடிந்ததால் ரூட் கிளியர்!!
நம் மன்மதன்களை தொடர்ந்து செய்திகளை அவ்வப்போது தருகிறேன்!!
தமிழ்த்துளி தேவா..
-----------------------------------------------------------------
ஆதவாவுக்கு இன்று
பிறந்தநாளாம் !!! இப்போதான் தெரிந்தது!!!
வாழ்த்துவோம் நல்ல வளமான எதிகாலம் அமைய!!
--------------------------------------------------------------------