Monday 11 May 2009

தி நைட் அட் தி மியூசியம்-2 பேட்டில் ஆஃப் ஸ்மித்சோனியன்!!


அன்பின் வலை மக்களே! இது ஒரு இன்னும் வெளிவராத ஆங்கிலத்திரைப்படம்!!

பெஞ்சமின் எட்வர்ட் ஸ்டில்லர் என்ற பென் ஸ்டில்லர் நடிக்கும் படம்.

இந்தக்கதை ஸ்மித்சோனியன் இன்ஸ்டியூசனில் நடைபெறுகிறது!! இங்கு உலகின் மிகப்பெரிய மியூஸியம் உள்ளது!!அதாவது 19 மியூஸியங்கள் இந்த நிறுவனத்தில் உள்ளன!!, உயிரியல் பூங்கா,9 ஆராய்ச்சிக்கூடங்கள் இதில் உள்ளன. 136 மில்லியன் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன இந்த மியூஸியத்தில் என்றால் பாருங்கள்!! இது அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ளது!!1846 ஆகஸ்ட் 10 ம் தேதி இது தோற்றுவிக்கப்பட்டது!! இந்த மியூசியத்தில் அமேலியா ஏர்ஹார்ட்( படத்தில் அமி ஆடம்ஸ்) அட்லாண்டிக் கடலை கடந்த பழைய விமானமும் உள்ளது!

படத்தில் இந்த மியூஸியத்தின் பாதுகாவலராக பென் ஸ்டில்லர்( படத்தில் லாரி,LARRY) வருகிறார். இந்த மியூஸியத்திலுள்ள கெட்ட சக்தியான எகிப்திய ஃபாரோ காமுன்றா(Kahmunrah, an evil Pharaoh) உயிர் பெறுகிறது!! மந்திரசக்தியால் இந்த மியூஸியத்தில் உள்ள பழைய சிலைகளான தியோடர் ரூஸ்வெல்ட்,டெக்ஸ்டர் ஆகியவையும் புதியவைகளான அல்கபோன், ஜெனரல் கஸ்டர் ஆகியோரும் உயிபெறுகின்றனர்!!இந்தக்குழுக்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகள்தான் கதை!!

நம் நாயகன் லாரி(பென் ஸ்டில்லர்), அமீலியா ஏர்ஹார்ட்டுடன் காதலும், இருவரும் சேர்ந்து மியூசியத்தை பழைய நிலைக்குக் கொண்டு வருவதும் கதையின் மீதி!!!

பென் ஸ்டில்லர் அஜித் மற்றும் இந்திய நடிகர்போல் அழகன் அல்ல! காமெடியனாக பல படங்களில் நடித்துள்ளார்.தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகவும் இருக்கிறார். இவருடைய படங்கள் $1.95 பில்லியன் சம்பாதித்துள்ளதாம்.

அமீலியா ஏர்ஹார்ட்டாக வரும் அமி ஆடம்ஸ்

கலக்குவார் என நினைக்கிறேன்!! இந்தப்படம் இந்தமாத இறுதியில் திரைக்கு வருகிறது!!

என்ன படித்துவிட்டீர்கள்!!

ஓட்டளிக்க தமிலிஷ்,தமிழ்மணம்!!

தேவா..



NIGHT AT THE MUSEUM 2: BATTLE OF THE SMITHSONIAN: Movie Trailer - Click here for more home videos

20 comments:

pudugaithendral said...

நான் இந்தப் படம் பார்த்திருக்கிறேன்.

நல்லா இருக்கும்

வால்பையன் said...

//நம் நாயகன் லாரி(பென் ஸ்டில்லர்), அமீலியா ஏர்ஹார்ட்டுடன் காதலும், இருவரும் சேர்ந்து மியூசியத்தை பழைய நிலைக்குக் கொண்டு வருவதும் கதையின் மீதி!!!//

முதல் பாகத்திலேயே பென் ஸ்டில்லருக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன் இருப்பானே!

இது அதன் தொடர்ச்சி இல்லையா?

வேத்தியன் said...

கண்டிப்பா இந்தப் படம் பாக்கணும்...

தகவலுக்கு நன்றி...

முனைவர் இரா.குணசீலன் said...

கதை நல்லாருக்கே

தேவன் மாயம் said...

நான் இந்தப் படம் பார்த்திருக்கிறேன்.

நல்லா இருக்கும்///

அப்படியா? இது பார்ட் 2 !! இன்னும் படம் வரவில்லை!!

தேவன் மாயம் said...

/நம் நாயகன் லாரி(பென் ஸ்டில்லர்), அமீலியா ஏர்ஹார்ட்டுடன் காதலும், இருவரும் சேர்ந்து மியூசியத்தை பழைய நிலைக்குக் கொண்டு வருவதும் கதையின் மீதி!!!//

முதல் பாகத்திலேயே பென் ஸ்டில்லருக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன் இருப்பானே!

இது அதன் தொடர்ச்சி இல்லையா?///

படம் வரட்டும்!! முழுக்கதையும் தெரியும்!!!

தேவன் மாயம் said...

கண்டிப்பா இந்தப் படம் பாக்கணும்...

தகவலுக்கு நன்றி...///

வரட்டும்!!

தேவன் மாயம் said...

கதை நல்லாருக்கே///

ஆமாங்க!!

கார்த்திகைப் பாண்டியன் said...

படம் வந்தா பார்த்துடலாம் டாக்டர்..

வால் அண்ணே.. முத பாகத்துலையே பையனக் கூட வச்சிக்கிட்டு ஒரு பொண்ண பென் ஸ்டில்லர் ரூட்டு விடுவாரு.. இங்கிலிபீசு படத்துல இதெல்லாம் சாதரணமப்பா..

வால்பையன் said...

//முத பாகத்துலையே பையனக் கூட வச்சிக்கிட்டு ஒரு பொண்ண பென் ஸ்டில்லர் ரூட்டு விடுவாரு.. //

இல்லை அத நட்பாதான் காட்டுவாங்க!

ஏன்னா அவுங்க பென் ஸ்ட்டில்லர் சொல்றத நம்ப மாட்டாங்க! அப்புறம் நம்பிய பிறகு ஒரே ஒரு இரவு மட்டும் பிரச்சனைகளை தீர்க்க உதவிக்கு வருவாங்க!

ஆங்கில படமா இருந்தாலும் டைவர்ஸ் ஆனா மட்டும் தான் ரூட்டு வுடுவது போல் காட்டுவாங்க!

ஸ்பீல்பெர்க் ப்டங்களில் பெரும்பாலும் நாயகன் டைவர்ஸ் ஆனவராக தான் இருப்பாரு!

குடந்தை அன்புமணி said...

தகவலுக்கு நன்றி! ஓட்டும் போட்டாச்சு!

Rajeswari said...

நானும் இந்த படம் பார்த்துட்டேன்.வித்தியாசமா இருக்கும். வரப்போற இரண்டாம் பாகத்தையும் கண்டிப்பா பார்க்கணும்

அப்துல்மாலிக் said...

நிச்சயம் பாக்கோனும்

தகவலுக்கு நன்றி தேவா

சி தயாளன் said...

முதல் படம் முன்பே பார்த்தனான்...சும்மா பார்க்கலாம்...அவ்வளவு தான்

தேவன் மாயம் said...

படம் வந்தா பார்த்துடலாம் டாக்டர்..

வால் அண்ணே.. முத பாகத்துலையே பையனக் கூட வச்சிக்கிட்டு ஒரு பொண்ண பென் ஸ்டில்லர் ரூட்டு விடுவாரு.. இங்கிலிபீசு படத்துல இதெல்லாம் சாதரணமப்பா..///

பாத்துருவோம்

தேவன் மாயம் said...

ஏன்னா அவுங்க பென் ஸ்ட்டில்லர் சொல்றத நம்ப மாட்டாங்க! அப்புறம் நம்பிய பிறகு ஒரே ஒரு இரவு மட்டும் பிரச்சனைகளை தீர்க்க உதவிக்கு வருவாங்க!

ஆங்கில படமா இருந்தாலும் டைவர்ஸ் ஆனா மட்டும் தான் ரூட்டு வுடுவது போல் காட்டுவாங்க!

ஸ்பீல்பெர்க் ப்டங்களில் பெரும்பாலும் நாயகன் டைவர்ஸ் ஆனவராக தான் இருப்பாரு!///

ரூட்டைப் புடிச்சிட்டாரு வாலு!1

தேவன் மாயம் said...

தகவலுக்கு நன்றி! ஓட்டும் போட்டாச்சு!//

நன்றி அன்பு!!

தேவன் மாயம் said...

நானும் இந்த படம் பார்த்துட்டேன்.வித்தியாசமா இருக்கும். வரப்போற இரண்டாம் பாகத்தையும் கண்டிப்பா பார்க்கணும்//

பாருங்க ராஜேஸ்!!

தேவன் மாயம் said...

டொன்லீ, அபு நன்றி!!

cheena (சீனா) said...

படம் வரட்டும் - பாப்போம்ல

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory