Sunday, 10 May 2009

முகமாற்று அறுவை சிகிச்சை! மருத்துவ சாதனை!!

உலகின் முதல் முழு (80%) முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது.இதுவரை குறிப்பிட்ட அளவு முக அமைப்பு மாற்று அறுவை சிகிச்சையே செய்யப்பட்டு வந்தது. மேலும் இந்த முக மாற்று அறுவை சிகிச்சையால் பெறப்படும் இறந்த நபரின் முக உறுப்புகள் தானம் பெறுபவருக்கு ஒத்துப் போக வேண்டும்!! அமெரிக்காவில் கிளீவ்லாண்ட் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது!!

கோனி கல்ப் என்ற இந்தப்பெண்ணை 2004 ல் அவருடைய கணவன் அவரை சுட்டதால் அவர் முகம் விகாரமடைந்தது!!

இது அவருடைய உண்மையான சுடப்படுவதற்கு முன் உள்ள படம்!

சுடப்பட்டபின் அவருடைய விகாரமான முகம்! இவ்ருடைய கணவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது ! இவருடைய மூக்கு,தாடை,வாய்ப்பகுதியின் மேல்உட்புறம்,கண் ஆகியவை சிதைந்துவிட்டன!

கிளீவ்லாண்ட் மருத்துவமனையில் இவருக்கு இந்த அறுவைசிகிச்சை செய்யப்பட்டது அவருக்கு புதிய முகத்தைக் கொடுத்துள்ளது!

அவருடைய பழைய முகம் போல் இல்லாவிட்டாலும் ஓரளவு உருவமாக மாற்றிவிட்டார்கள்!!

80% முகமாற்று அறுவை உலகில் இதுவே முதல்முறை!!அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ரிசால் ஜோஹன்.

வர் முகம் தழும்புகளால் சுருங்கிக்க்காணப்பட்டதால் முதலில் தழும்புகளை அகற்றிவிட்டே அறுவை சிகிச்சையின் அடுத்தகட்டத்திற்கு செல்லமுடிந்தது.அவருக்கு தோல்,எலும்பு,அன்னம்,பற்கள்,உதடு, கீழ் இமை,தசை,ரத்தக்குழாய்கள், பரோடிட் சுரப்பி ஆகியவை மாற்றி பொறுத்தப்பட்டுள்ளன!

இன்னொரு பிரச்சினை என்னவென்றால் சிறுநீரகம் போலவே உடலும் இந்த மாற்றப்பட்ட உறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்!! அதற்காக அவருக்கு தனி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது!! சில வருடங்களில் எப்போது வேண்டுமானாலும் முகமாற்று உறுப்புகளை அவர் உடல் ஏற்றுக்கொள்ளாமலும் போகலாம்!! அதனால் அவர் தன் வாழ்நாள் முழுவதும் மருந்துகள் சாப்பிட்டாக வேண்டும்!!

இத்தகைய சிகிச்சை அனைவரும் பெறமுடியாது. ஏனெனில் இதற்கான செலவு,விதிகள்,முகதானம் பெறுவது ஆகியவை மிகக் கடினமானவை!!

சிலிக்கன் போன்ற செயற்கைப் பொருட்களாலும் இதனைச் செய்யமுடியாது. ஏனென்றால் அவை உடலால் ஏற்றுக்கொள்ளப் படாமல் போகும் அபாயம் அதிகம்!! மேலும் சிலிக்கனால் முக தசை அசைவுகள் செய்வது முடியாத காரியம்!!முகத்தின் தசைகள் அப்படியே பழைய முகத்தில் உள்ளதுபோல் தானம் கொடுத்தவரின் தசைகளால் மாற்றி பொருத்தப்பட்டு உள்ளன! அவற்றிற்கு இரத்த ஓட்டமும் உண்டு!!

இத்தனைக்கும் பிறகும் இவர் தன் கணவனை மன்னித்து விட்டதாகச் சொல்லுகிறார்!!

அங்கேயும் இப்படித்தானா? கல்லானாலும் ”கணவன் புல்லானாலும் புருசன்” என்ற நம்ம ஊர் பழமொழி காலம்,தேசங்களைக்கடந்துவிட்டதே!

ஆமா!! இவருடைய கணவன் தான் தவறுதலாக சுட்டுவிட்ட்தாகவும், அறுவை சிகிச்சைக்குப்பின் தன் மனைவியை இன்னும் நேசிப்பதாகவும், சிறைத்தண்டனை முடிந்து வந்து மீண்டும் அவருடன் சேர்ந்து வாழப்போவதாகவும் கூறியுள்ளார்!!

18 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

நேற்று தான் இச்செய்தியை மின்னஞ்சலில் கண்டேன்.அதற்குள்ளாக அச்செய்தி பற்றிய விரிவான பதிவினை இங்கு காண்கிறேன்.
பயனுள்ள பதிவாகவுள்ளது.மருத்துவவியல் பற்றி மேலும் செய்திகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல informative ஆன பதிவு டாக்டர்..

வேத்தியன் said...

நல்ல தகவல்...
நன்றி...

வேத்தியன் said...

கல்லானாலும் கணவன்...
fullஆனாலும் புருஷன் இல்ல???
:-)

thevanmayam said...

நல்ல informative ஆன பதிவு டாக்டர்..

கார்த்திகை பாண்டியன் நலமா?

thevanmayam said...

கல்லானாலும் கணவன்...
fullஆனாலும் புருஷன் இல்ல???
:-)//

ஓஹோ!! நீங்க அந்த ரூட்டில போறீங்களா?

அபுஅஃப்ஸர் said...

தொலைக்காட்சியில் கண்டேன்

மருத்துவ சாதனைக்கு வாழ்த்துக்கள்

நல்ல பதிவு

குடந்தைஅன்புமணி said...

மருத்துவ சாதனை பற்றிய விரிவான- நல்ல பதிவு!

டக்ளஸ்....... said...

Very INformatine Message..!
Thanx Doctor..

thevanmayam said...

தொலைக்காட்சியில் கண்டேன்

மருத்துவ சாதனைக்கு வாழ்த்துக்கள்

நல்ல பதிவு//

அப்ஸர்ருக்குத்தெரியாமல் ஒரு விசயம் நடக்காதே!!

thevanmayam said...

மருத்துவ சாதனை பற்றிய விரிவான- நல்ல பதிவு!///

வருகிறேன் -- உங்கள் பதிவுக்கு!!

thevanmayam said...

Very INformatine Message..!
Thanx Doctor..///

டக்ளஸ் நன்றி!!

Rajeswari said...

பயனுள்ள பதிவு.

//அங்கேயும் இப்படித்தானா? கல்லானாலும் ”கணவன் புல்லானாலும் புருசன்” என்ற நம்ம ஊர் பழமொழி காலம்,தேசங்களைக்கடந்துவிட்டதே!//

அய்யோ அய்யோ தாங்கமுடியலியே...

thevanmayam said...

பயனுள்ள பதிவு.

//அங்கேயும் இப்படித்தானா? கல்லானாலும் ”கணவன் புல்லானாலும் புருசன்” என்ற நம்ம ஊர் பழமொழி காலம்,தேசங்களைக்கடந்துவிட்டதே!//

அய்யோ அய்யோ தாங்கமுடியலியே.//

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்!!http://abidheva.blogspot.com/2009/05/blog-post_09.html

குமரை நிலாவன் said...

நல்ல தகவல்...

thevaa saar

thevanmayam said...

நல்ல தகவல்...

thevaa saar.///

வாங்க நிலவன்!

delphine said...

yeah! a very useful post indeed!!!

thevanmayam said...

Yeah! a very useful post indeed!!!

Thank U for ur commemt!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory