Thursday, 7 May 2009

மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!-1

அன்பு வலை நண்பர்களே!!

காதல் வீதியில் கனவு நாயகனாக அலைந்து கடைசியில் கல்யாணம் என்ற கடுமையான கோட்டைக்குள் அகப்பட்டுக்கொண்ட சங்கத்தின் சிங்கங்களே!!

தினமும் குடும்ப பாரத்தைச்சுமந்து மாத பட்ஜெட்டுகளைக்கண்டு மலைத்துப்போய், டேமேஜர்களின் குடைச்சல்களையும் தாங்கி களைத்துப்போய் வீடு திரும்புகையில் மனைவி காதல் பொங்கப்பார்க்கையில்!!!....இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் எப்படி இவள்? என்று காதலையே மறந்துபோன கணவர்களே(நானும்தான்)!!

நம் பிரச்சினை அன்றாடம் உள்ளதுதான்!! அன்றாட அலுவல்களில் மறந்துபோன காதலை எப்படி உயிர்கொடுத்து மீட்பது என்பதுதான் இந்த பதிவின் ( பதிவுகளின் -- தொடர்ந்து எழுதுவோம்ல) நோக்கமே!!

ஆஹா! நமக்கு உதவுமேன்னு நினைக்கிற மக்கள் தொடர்ந்து படிங்க!!

நமக்குக் கல்யாணமே ஆகலையேன்னு சொல்றவங்க மனைவிங்கிற இடத்தில் காதலின்னு போட்டுக்குங்க!!

இதிலெல்லாம் நாங்க கிங்காக்கும்!! நமக்குப்போய் அட்வைஸான்னு சீறும் சிறுத்தைகள் படித்துவிட்டு பின்னூட்டத்தில் உங்கள் யுக்திகளையும் சொல்லுங்க!! சரியா!!...

1.பிறர் முன்னிலையில், சொந்தக்காரர்களுடன் இருக்கும்போது மனைவி புகழ் பாடுங்கள்!  யார் யாரையோ புகழ்கிறோம். உங்கள் மனைவியின் நல்ல குணங்களை( அப்படி ஒன்னு இருக்கான்னு கேட்கக்கூடாது..... கொஞ்சம் யோசித்தால் அவரிடம் உள்ள நல்ல குணங்கள் தெரியும்!)புகழ்ந்துபேசுங்க!!   எல்லோர் முன்னிலையிலும் ஏன் என்னைப்பற்றிப் பேசுகிறீர்கள் என்று கோபப்படுவார்கள்!!............கண்டுக்காதீங்க!....அவர் உள்ளம் கேட்குமே மோர்!!! புகழ்வதில் உண்மை உணர்வு கலந்து ஒன்றி மெய்யாலுமே புகழ்கிற மாதிரி இருக்கணும்!! நக்கல் கலப்பு உடம்புக்கு ஆகாது!!!

2.நீங்கள் நாத்திகராக இல்லாதபட்சத்தில் உங்கள் மனைவியின் பிரார்த்தனைகளில் கலந்துகொள்ளுங்கள்! ”சாமியைக்கும்பிடுங்கப்பா! நான் முக்கியமான் பதிவு எழுதிக்கிட்டு இருக்கேன் இதோ வந்திடுறேன்”ங்கிற பதில் நல்லதல்ல! சேர்ந்து கோவிலுக்குப்போங்க!! உடல்,மன,ஸ்பிரிசுவல் என்ற் மூன்றும் கலந்ததே நம் வாழ்க்கை!! மூன்றிலும் நீங்கள் ஒன்றிப் பிணைவதே இல்வாழ்க்கை!!

3.உன்னால இந்த வேலையைக்கூட செய்யமுடியாதா? 24 மணிநேரமும் என்னதான் செய்யுற வீட்டில்? போன்ற குறைசொல்லும் செயல் கூடாது!!  செய்யாத வேலையையே குத்திக் குத்திக் காட்டாமல் (மனதை அடக்கிக்கொண்டு) புன்சிரிப்புடன் பிரச்சினைகளை அனுகவும்! “பரவாயில்லை விடு!! நாளைக்கு நானும் நீயும் சேர்ந்தே இந்த வேலையை முடிப்போம்” என்று விசய்த்தை சிம்பிளா முடிங்க!!

4.அலுவலக அலுப்பையும்,பிரச்சினைகளையும் அலுவலகத்திலேயே விட்டுவிடுங்கள்!! அதை மனைவிமீதுகாட்டி கோபப்படவேண்டாம்!! “கடுகடுன்னு இருக்கார்!!கிட்டப்போனா அவ்வளவுதான்  வள்ளுன்னு விழுவார்” என்று மனைவி பயந்து நடுங்குமாறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவேண்டாம்!!  ரொம்பத் தாங்க முடியாத பிரச்சினையா? உங்கள் மனைவியுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!! மனசும் லேசாகும்!! மனைவிக்கும் தான் மதிக்கப்படுகிறோம் என்று பெருமை ஏற்படும்!! உங்களுக்கும் பலன் உண்டுங்கோ!!!

5. 10 செகண்ட் முத்தம் என்று சுஜாதா கதை ஒன்னு எழுதினார். நமக்கும் அதுபோல் இலக்கு உண்டு! ஆமா குறந்தபட்சம் 6 வினாடி.......to...> உங்கள் இஷ்டம் முத்தம் கொடுங்க!! காலை எழுந்தவுடன் பெட்காபி போல் ஒரு முத்தம்!! கலையிலேயே மனைவி முகத்தில் புன்னகை!! அப்புறம் டூட்டி போகும் போது, புதுக்கணவன் போல ஒரு முத்தம்!! எது கொடுத்தாலும் நல்லா கொடுங்க!! அப்புறம் பாருங்க! அதன் விளைவுகளை!!

5 பாயிண்ட் எழுதுறதுக்கே தாவு தீந்துபோச்சு!! மக்கள் எப்படி சிறுகதை,தொடர்கதையெல்லாம் எழுதுறீங்களோ? ஆச்சரியந்தான்!!

மிச்சம் உள்ள விசயங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்!!! சரியா!!

பதிவு பிடித்தால் தமிழ்மணம்,தமிலிஷில் குத்துங்க!!

37 comments:

அப்பாவி தமிழன் said...

ஒட்டு போட்டாச்சு தல , உக்கார்ந்து சம்பாதிகறது எப்படின்னு ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க http://technotamil.blogspot.com/2009/05/blog-post_06.html

thevanmayam said...

ஒட்டு போட்டாச்சு தல , உக்கார்ந்து சம்பாதிகறது எப்படின்னு ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க http://technotamil.blogspot.com/2009/05/blog-post_06.html//

உக்காந்து சம்பாதிக்கும் நீங்க அப்பாவியா? பிரில்லியண்ட்!!!

சென்ஷி said...

:-)))))

நல்ல அறிவுரைகள்!

cheena (சீனா) said...

ஓட்டு போட்டாச்சு - ரெண்டு இடத்துலயேயும்

அந்த செகண்டு முததமெல்லாம் வயசுக்காலத்துலதான் -ன் கொஞ்சம் வயசான வுடன்னே புன்சிரிப்பு - மலர்ந்த முகம் - இது போதும் - அப்புறம் அந்த செகண்டெல்லாம் சேத்து - தனிமையில் தொடர் முத்தமாக் கொடுக்கலாம் - வாங்கலாம்

thevanmayam said...

:-)))))

நல்ல அறிவுரைகள்!///

வாங்க சென்ஷி!!

thevanmayam said...

அந்த செகண்டு முததமெல்லாம் வயசுக்காலத்துலதான் -ன் கொஞ்சம் வயசான வுடன்னே புன்சிரிப்பு - மலர்ந்த முகம் - இது போதும் - அப்புறம் அந்த செகண்டெல்லாம் சேத்து - தனிமையில் தொடர் முத்தமாக் கொடுக்கலாம் - வாங்கலாம்///

சீனா சார்!! பின்னிட்டீங்க!!

புதுகைத் தென்றல் said...

படிக்க நல்லாத்தான் இருக்கு.

ஆனா இதை நடைமுறைபடுத்த எம்புட்டு பேரு இருப்பாகன்னு யோசிக்கணும்.

:(

thevanmayam said...

படிக்க நல்லாத்தான் இருக்கு.

ஆனா இதை நடைமுறைபடுத்த எம்புட்டு பேரு இருப்பாகன்னு யோசிக்கணும்.

:(///

என்ன இப்பிடி சொல்லிப்புட்டீக!!!நம்ம மக்கள் செய்வாங்க!!

ஜீவன் said...

///“கடுகடுன்னு இருக்கார்!!கிட்டப்போனா அவ்வளவுதான் வள்ளுன்னு விழுவார்” என்று மனைவி பயந்து நடுங்குமாறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவேண்டாம்!! ///

இப்படியெல்லாம் ஒரு தோற்றத்தை உருவாக்க முடியுமா ?

ச்சே! நெனைச்சு பார்க்கவே எவ்ளோ சந்தோசமா இருக்கு !! ;;))

thevanmayam said...

///“கடுகடுன்னு இருக்கார்!!கிட்டப்போனா அவ்வளவுதான் வள்ளுன்னு விழுவார்” என்று மனைவி பயந்து நடுங்குமாறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவேண்டாம்!! ///

இப்படியெல்லாம் ஒரு தோற்றத்தை உருவாக்க முடியுமா ?

ச்சே! நெனைச்சு பார்க்கவே எவ்ளோ சந்தோசமா இருக்கு !! ;;))///

என்ன ஜீவன் அன்புள்ள அப்பாவியா நிங்கள்!! அட சாமி!!

வால்பையன் said...

அது என்னாங்க எப்பபார்த்தாலும் ஆண்களுக்கே அறிவுரை!

கணவன்களின் அன்பை பெற ஒருவழியாவது தங்கமணிகளுக்கு சொல்றிங்களா?

thevanmayam said...

அது என்னாங்க எப்பபார்த்தாலும் ஆண்களுக்கே அறிவுரை!

கணவன்களின் அன்பை பெற ஒருவழியாவது தங்கமணிகளுக்கு சொல்றிங்களா?//

நம்ம சொன்னா கேப்பாங்களா?
நம்ம பதிவு பக்கம் மகளிர் அணியே காணோமே!!

வழிப்போக்கன் said...

அனுபவ அறிவுரைகள் போல???
:)))

SUREஷ் said...

தமிழீஷ், மணம் இரண்டிலும் ஓட்டுப் போட்டாச்சு தல

SUREஷ் said...

ரொம்ப சைவமா இருக்கே தல

விஷ்ணு. said...

காதலியும் இல்லையே தேவா சார். யார்கிட்ட போய் நீங்க சொன்ன அறிவுரைகளை implement பண்ணுறது.

tamil24.blogspot.com said...

Blogger ஜீவன் said...

///“கடுகடுன்னு இருக்கார்!!கிட்டப்போனா அவ்வளவுதான் வள்ளுன்னு விழுவார்” என்று மனைவி பயந்து நடுங்குமாறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவேண்டாம்!! ///

இப்படியெல்லாம் ஒரு தோற்றத்தை உருவாக்க முடியுமா ?

ச்சே! நெனைச்சு பார்க்கவே எவ்ளோ சந்தோசமா இருக்கு !! ;;))

07 May 2009 08:14

பாவம் ஜீவன் நல்லாத்தான் நொந்து போனியள்....

சாந்தி

thevanmayam said...

அனுபவ அறிவுரைகள் போல???
:)))///
இதெல்லாம் கேக்கப்படாது!!

thevanmayam said...

ரொம்ப சைவமா இருக்கே தல///

கொக்கு சைவக்கொக்கு கெண்டை மீனைக்...

thevanmayam said...

காதலியும் இல்லையே தேவா சார். யார்கிட்ட போய் நீங்க சொன்ன அறிவுரைகளை implement பண்ணுறது.//

குஜிலி தேத்துவது எப்படின்னு பதிவு போடுவோம்!!

thevanmayam said...

Blogger ஜீவன் said...

///“கடுகடுன்னு இருக்கார்!!கிட்டப்போனா அவ்வளவுதான் வள்ளுன்னு விழுவார்” என்று மனைவி பயந்து நடுங்குமாறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவேண்டாம்!! ///

இப்படியெல்லாம் ஒரு தோற்றத்தை உருவாக்க முடியுமா ?

ச்சே! நெனைச்சு பார்க்கவே எவ்ளோ சந்தோசமா இருக்கு !! ;;))

07 May 2009 08:14

பாவம் ஜீவன் நல்லாத்தான் நொந்து போனியள்....

சாந்தி///

ஜீவன் கோபத்தைக்காட்டுக. அப்புறம் நான் சொன்னபடி செய்க!

புதியவன் said...

அருமையான வழிகள் மருத்துவரே அனுபவத்தோடு சொல்லுறீங்க நீங்க சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்கும்...

////மிச்சம் உள்ள விசயங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்!!! சரியா!!////

இன்னும் எழுதுங்க காத்திருக்கிறோம்...

thevanmayam said...

அருமையான வழிகள் மருத்துவரே அனுபவத்தோடு சொல்லுறீங்க நீங்க சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்கும்...

////மிச்சம் உள்ள விசயங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்!!! சரியா!!////

இன்னும் எழுதுங்க காத்திருக்கிறோம்...///

மிச்சங்களை எழுதுகிறேன்!!

இய‌ற்கை said...

:-)

Subash said...

ஆஹா
நன்றிங்கோ!!!!!!!!!!

Mohan said...

நல்ல டிப்ஸ்! தொடருங்கள்!

Anonymous said...

You mean,
Own wife? or Next door wife?

Anonymous said...

பிறர் முன்பாக புகழ்தல் குடும்பத்துக்குள் விரிசல் உண்டு என்பதன் அடையாளமாமே?

அபுஅஃப்ஸர் said...

Ha Ha Better stop with 5 lines..

Good as usual

Rajeswari said...

படிக்க நல்லாதான் இருக்கு..இப்படியெல்லாம் நிஜ வாழ்க்கையில் அமைந்தா எப்படி இருக்கும்!

குமரை நிலாவன் said...

அனுபவம்
அறிவுரையாக வந்திருக்கு
அப்படிதான தேவா சார்

இது நம்ம ஆளு said...

அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

’டொன்’ லீ said...

இப்படி மற்றவர்களை தவறாக ஐடியா கொடுத்து வழி நடத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..:-))

KRICONS said...

வாழ்துக்கள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது

Anonymous said...

Some Tips From Real Life Experience:
http://the-nutty-s.blogspot.com/2008/10/success-of-life.html

நிலாமதி said...

உங்க அட்வைசு நல்லா தான் இருக்குங்க. மேலும் எழுதுங்க.

Sunitha said...

ரொம்ப நல்லா இருக்கு. Lucky wife
Sunitha@http://tamiltospokenenglish.blogspot.com/

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory