Saturday 16 May 2009

தேர்தல் முடிவுகள்- சாட்டையடி-2 !!

இந்தத் தேர்தலின் முன் நடந்த கூத்துகளை நேரடியாகப் பார்த்துவிட்டு சும்மாதான் இருந்தேன். ஆயினும் எனக்குத்தோன்றிய சில விசயங்களை எழுதினால் என்ன என்று தோன்றியதால் எழுதுகிறேன். யார் மனதாவது புண்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள்!

1.மாயாவதி ஆட்சிக்கு வந்தபின் மிகவும் மகிழ்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவன். அரசியல் வாழ்வில் தன்னிகரற்று விளங்கிய கன்ஷிராமின் வாரிசாக மாயாவதி அரசியலுக்கு வந்தார்.1995ம் ஆண்டு சாதீய பிடிப்புகள் அதிகம் உள்ள உ.பி.யின் முதல்வர் அரியணையில் மாயாவதி அமர்ந்தார்..இந்தியாவிலேயே ஒரு மாநில முதல்வரான முதல் தலித் இவர்தான். அதோடு மட்டுமில்லை... மிக இளம் வயதில் இந்தியாவில் முதல்வரானவரும் மாயாவதிதான். முதல்வர் நாற்காலியில் அமர்ந்தபோது அவருக்கு வயது 39.

தற்போது?..... கட்சியில் அடிப்படை உறுப்பினர்களுக்கு எந்த பயனும் முன்னுரிமையும் இல்லை!! பிற கட்சிகளைப்போல் தொழில் அதிபர்கள், பணக்காரர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது!! தலீத்துகளுக்கு செய்யவேண்டியது நிறைய இருக்கும் போதே அதை விடுத்து பிரதமராகும் கனவில் தன் கட்சியை தேசிய அளவில் பிரபலப்படுத்த முயன்றார். தலீத்துகளுக்கு எதிரான அமைப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜாதி வெறியர்கள் கூட அவர் கட்சியில் பொறுப்புகளை ஏற்றதுதான் மிகக்கொடுமை.

மாயாவதியின் தமிழக வருகையும் தலித் ஓட்டுக்களைப் பிரிக்கவே உதவும்..

2.உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் மொத்தம் 120 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் அதிக தொகுதிகளை கைப்பற்றி இந்தியஅரசியலில் ஆட்சியைக்கூட்டணியாக வெல்லலாம் என்று மனப்பால் குடித்தனர்.

காங்கிரசை கழற்றி விட்டு விட்டு லோக் ஜன சக்தி தலைவர் பஸ்வானை சேர்த்துக் கொண்டு 4-வது அணியை தொடங்கினார்கள்.

பீகாரில் லல்லு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி 22 இடங்களில் 2004ல் வெற்றிபெற்றது.

இந்தத்தேர்தலில் கடைசி நேரத்தில் செய்த குழப்படியால் தோல்விமுகம் கண்டு நொந்து போயிருக்கிறார் லாலு.

அதைத் தற்போது தான் செய்த தவறு என்றும் ஒப்புக்கொள்கிறார்.

தேர்தலில் பிரதமராகலாம் என்று ஆசைப்பட்ட அனைவரும் மண்ணைக்கவ்வியுள்ளனர் இந்தத்தேர்தலில்!

அதே சமயம் பிரதமராக தானோ,தன் மகனோ பதவியேற்க முடியும் என்ற நிலையிலும் பிரதமர் மன்மோஹன் சிங்க்தான் என்று கூறியிருக்கும் காங்கிரஸ் தலைவரையும் பிரதமர் பதவியாசை பிடித்து அலைந்த இவர்களையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்க என் மனம் ஒப்பவில்லை!!! இந்திய மக்களும் அப்படித்தான்.

இதையே இந்ததேர்தல் தெளிவாக உணர்த்தியுள்ளது!

பதிவு பிடித்தால் தமிழ்மணம்,தமிலிஷில் ஓட்டிடுக.

21 comments:

Suresh said...

மீத பஸ்ட்

Suresh said...

நல்ல அலசல் மச்சான்

தேவன் மாயம் said...

மீத பஸ்ட்
நல்ல அலசல் மச்சான்///

நன்றி மாப்பிள்ளை!!

அப்துல்மாலிக் said...

//அதே சமயம் பிரதமராக தானோ,தன் மகனோ பதவியேற்க முடியும் என்ற நிலையிலும் பிரதமர் மன்மோஹன் சிங்க்தான் என்று கூறியிருக்கும் காங்கிரஸ் தலைவரையும் பிரதமர் பதவியாசை பிடித்து அலைந்த இவர்களையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்க என் மனம் ஒப்பவில்லை!!!//

நம்ம மக்கள் நல்லா தெளீவாதான்பா இருக்காங்க‌

இதுவும் ஒரு காரணம் அதிக இடங்கள் பிடித்ததற்கு

நல்ல அலசல் தேவாசார் அரசியல்லே புலியாகிட்டீங்க‌

உமா said...

திரு மன்மோகன்சிங் ஜெயித்ததும் ராகுல்,சோனியா காந்தி ஜெயித்ததும் சரிதான். ஆனால் இவர்கள் இலங்கை தமிழர் படுகொலைச் செய்யப்படுவதைக்கண்டும் ஒன்றுமே செய்யவில்லையே. இந்திய தமிழர் நலனிலும் அக்கறைக்காட்டுவார்களா? பிரபாகரன் பிடிபடும் முன் பல்லாயிரம் தமிழர்கொலைச்செய்யப்படுவது அவர்களுக்குப் பெரிதில்லையா? பதவியாசை பிடித்தவர்களில்லைதான் இவர்கள் எவருமே,ஆனால் தங்களின் இழப்புக்கு பேரிழப்புத்தான் என்றாலும் அதற்காக இலங்கைத்தமிழர் கொல்லப்படுவதை கண்டுக்கொள்ளாமல் இருப்பது சரியல்ல என்றே தோன்றுகிறது. சோனியா காந்தி மிகச்சிறந்த திறமையான அரசியல்வாதியாக வெளியாகியுள்ளார். தேர்தலில் அவர் எடுத்த முடிவுகள் சாட்சி. ராகுல் இளந்தலைவர், பொருமையாக ஆராய்ந்து சரியான முடிவெடுக்கிறார் என்பது தெளிவாகியுள்ளது. இலங்கை பிரச்சனையையும் அவ்வாறே அனுகுவார்களா? பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

குமரை நிலாவன் said...

நல்ல அலசல் தேவா சார்

தேவன் மாயம் said...

நம்ம மக்கள் நல்லா தெளீவாதான்பா இருக்காங்க‌

இதுவும் ஒரு காரணம் அதிக இடங்கள் பிடித்ததற்கு

நல்ல அலசல் தேவாசார் அரசியல்லே புலியாகிட்டீங்க‌///

அரசியல் புலி!!! சும்மா தோன்றியது!! எழுதினேன்!!

தேவன் மாயம் said...

இலங்கை பிரச்சனையையும் அவ்வாறே அனுகுவார்களா? பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.///

பின்னூட்டம் ஒரு பதிவு போல் உள்ளது!
பொறுப்பதைத்தவிர வேறு வழி?

தேவன் மாயம் said...

நல்ல அலசல் தேவா சார்///

தலை கீழாப் போச்சுல்ல எல்லாம்!!

சொல்லரசன் said...
This comment has been removed by the author.
சொல்லரசன் said...

உயர்ச்சாதிகளின் ஆதரவுடன் தான் இம்முறை முதல்வர் பதவியில் அமர்ந்தார்.அப்பொழுதே அவருடைய தலித்கொள்கையும் கேள்விக்குறியானது. அவருடைய நெருங்கிய‌ ஆலோசகர்களும் உயர்சாதிக்காரர்கள்,எனவேதான் இந்த‌ தோல்வி

அ.மு.செய்யது said...

ஆழ்ந்த பார்வையோடு நல்லதொரு அரசியல் பகிர்வு !!!

சூப்பர் தேவா !!

தேவன் மாயம் said...

உயர்ச்சாதிகளின் ஆதரவுடன் தான் இம்முறை முதல்வர் பதவியில் அமர்ந்தார்.அப்பொழுதே அவருடைய தலித்கொள்கையும் கேள்விக்குறியானது. அவருடைய நெருங்கிய‌ ஆலோசகர்களும் உயர்சாதிக்காரர்கள்,எனவேதான் இந்த‌ தோல்வி///
மிகச்சரியாகச் சொன்னீர்கள்!!நான் அதைக்குறிப்பிட்டால் ஒருபக்கம் சாய்வதுபோல் தொன்றியதால் விட்டுவிட்டேன்!!

தேவன் மாயம் said...

ஆழ்ந்த பார்வையோடு நல்லதொரு அரசியல் பகிர்வு !!!

சூப்பர் தேவா !!//

நன்றி செய்யது!!

குடந்தை அன்புமணி said...

சொல்லரசன் தன் பதிவில் சொல்லியுள்ளதுபோல் எரிகிற கொள்ளியில் எந்த கொல்லி நல்ல கொள்ளி என்றுதான் மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நிலையான ஆட்சி, மதசார்பற்ற ஆட்சியை காங்கிரஸ் தரும் என்று நம்பிக்கை மக்களிடத்தில் தோன்றியிருக்கலாம். மூணாவது அணியில் யார் பிரதமர் என்பதில் அடித்துக்கொள்ள ஆரம்பித்ததில் அவர்களுக்குள்ளிருந்த சாத்தான் வெளிப்பட்டுவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், ஈழப்பிரச்சினை இங்கு அடிபட்டுபோய்வி்ட்டதே என்கிறபோது மனதிற்கு வருத்தமாகவே இருக்கிறது. பிரபகாரன் மரணம் என்று செய்திகள் உலாவுகின்றன...என்ன நடக்கப்போகிறதோ...

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆட்சியில் அமர்ந்த பிறகு மக்கள் நலனை மறந்து போகும் அரசியல்வியாதிகள் உள்ளவரை நம்ம நாட்டை யாராலும் காப்பாத்த முடியாது தேவா சார்..

பழமைபேசி said...

திருச்சி சந்திப்புல உங்க குரல் வலுவா இருந்தது போல? இஃகிஃகி!!

காணொளியில நீங்களும் வாசுவும், நாயகன் வேசத்துக்கு போட்டி போடுறா மாதிரியே இருக்குங்க...

தேவன் மாயம் said...

திருச்சி சந்திப்புல உங்க குரல் வலுவா இருந்தது போல? இஃகிஃகி!!

காணொளியில நீங்களும் வாசுவும், நாயகன் வேசத்துக்கு போட்டி போடுறா மாதிரியே இருக்குங்க...///

காணொளி எங்கு பார்த்தீர்?

தேவன் மாயம் said...

ஆட்சியில் அமர்ந்த பிறகு மக்கள் நலனை மறந்து போகும் அரசியல்வியாதிகள் உள்ளவரை நம்ம நாட்டை யாராலும் காப்பாத்த முடியாது தேவா சார்.///

உண்மை!!

தேவன் மாயம் said...

சொல்லரசன் தன் பதிவில் சொல்லியுள்ளதுபோல் எரிகிற கொள்ளியில் எந்த கொல்லி நல்ல கொள்ளி என்றுதான் மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நிலையான ஆட்சி, மதசார்பற்ற ஆட்சியை காங்கிரஸ் தரும் என்று நம்பிக்கை மக்களிடத்தில் தோன்றியிருக்கலாம். மூணாவது அணியில் யார் பிரதமர் என்பதில் அடித்துக்கொள்ள ஆரம்பித்ததில் அவர்களுக்குள்ளிருந்த சாத்தான் வெளிப்பட்டுவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், ஈழப்பிரச்சினை இங்கு அடிபட்டுபோய்வி்ட்டதே என்கிறபோது மனதிற்கு வருத்தமாகவே இருக்கிறது. பிரபகாரன் மரணம் என்று செய்திகள் உலாவுகின்றன...என்ன நடக்கப்போகிறதோ...///
பொறுப்போம்!!

உமா said...

மன்னிக்கவும்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory