Tuesday, 26 May 2009

மனித தோல் சிற்பங்கள்!-தடை செய்ய வேண்டும்!!

 

அன்பு நண்பர்களே!

மேலேயுள்ள அமெரிக்கக் கொடி எதனால் செய்யப்பட்டிருக்கிறது தெரியுமா? தோலால்! அதுவும் மனிதத்தோலால்! கேட்கவே அதிர்ச்சியாக உள்ளதுதானே!!

Andrew Krasnow ஆன்ட்ரூ க்ராஸ்னோ என்ற அமெரிக்கக் கலைஞர்தான் இதைச் செய்தவர்.கடந்த 20 வருடங்களாக அவர் இறந்த தானம் செய்யப்பட்ட உடல்களிலிருந்து எடுக்கப்பட்ட தோல்களினால் அமெரிக்கக்கொடி,அமெரிக்க வரைபடம்,காலணி போன்ற தோல் வடிவங்களைச் செய்துவருகிறார்.

மனிதத்தோலினால் லாம்ப் ஷேட் வரிசை படைப்புகள் நாசிக்களின் கொடுமையில் முகாம்களில் கொலைசெய்யப்படவர்களை பிரதிபலிப்பதாக செய்துள்ளார்.

இதனை அமெரிக்காவின் உலகளாவிய போர் அடக்குமுறையை எதிர்த்து அவருடைய பதிவாக அவர் கருதுவதாகக் கூறுகிறார்!

இவருடைய படைப்புகளை பார்வைக்கு வைக்க இங்கிலாந்து அரசின் மனித திசுப் பிரிவு ஒப்புதல் அளித்துள்ளது!

உலக அளவில் கலை ஆர்வலர்கள் மனிதத்தோலை உபயோகிப்பதைக் கண்டனம் செய்துள்ளனர்.

மனிததோலால் கலைப்பொருள் செய்வது தவறு என்பது என் கருத்து, அது எத்தகைய காரணத்துக்காக இருந்தாலும்! ஏன் என்று கேட்கிறீர்களா?சற்று தீவிரமாக சிந்திப்போமானால் இதன் பின் விளைவுகள் கொடூரமாக இருப்பது தெரிய வரும்.

இன்று மனிதத்தோலால் செய்யும் இவர்கள் நாளை மனிதனின் வேறு உறுப்புகளையும் உபயோகிப்பார்கள்! தோலை அனுமதிக்கும் அரசு ஏன் உறுப்புக்களை அனுமதிக்கக்கூடாது என்று கேட்பர். இறந்த மனிதனின் தோல் கிடைக்காத பட்சத்தில் வேறு ஆபத்தான வழிகளுக்குச் செல்லும் வாய்ப்புகள்,இதற்கென ஏஜெண்டுகள் என்று ஒரு பெரிய சந்தையே உருவாகும். நிழல் உலகில் இந்தப் பொருட்கள் விற்பனையும் செய்ய ஆரம்பித்தால் அவ்வளவுதான்!!

விலங்குகள் போல எளிய மனிதர்களும் வெளியே தெரியாமல் வேட்டையாடப்படுவார்கள்!! இந்த விசயங்களை நீதித்துறை நீதிபதிகளும்,அரசு சட்ட வல்லுனர்களும் கவனத்தில் கொண்டு இதனை ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும் என்பதே என் கருத்து!

இதையும் இங்கிலாந்து அரசு எப்படி அனுமதித்தது என்பது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது!

உங்களின் கருத்துக்களையும் பதியுங்கள் நண்பர்களே!!

பதிவு பிடித்திருந்தால் தமிலிஷிலும் தமிழ்மணத்திலும் போடுங்க ஓட்டு!!

19 comments:

சொல்லரசன் said...

//விலங்குகள் போல எளிய மனிதர்களும் வெளியே தெரியாமல் வேட்டையாடப்படுவார்கள்!!//

உண்மைதான்,இது தடுக்கபடவேண்டியது மனிதகுல கடமை.

வேத்தியன் said...

உண்மை தான்...

நல்ல பகிர்வு...

தேனீ - சுந்தர் said...

ஒரே பதிவை இரண்டு முறை பதிவதையும் தடை செய்ய வேண்டும்.

ஆகாய நதி said...

அடக் கொடுமையே... நீங்கள் கூறுவதெல்லாம் சரியே... இன்று கிட்னி திருட ஒரு நிழல் உலகமே இருக்கு அப்படியில ஆகிடும் :(

ஆ.ஞானசேகரன் said...

//இன்று மனிதத்தோலால் செய்யும் இவர்கள் நாளை மனிதனின் வேறு உறுப்புகளையும் உபயோகிப்பார்கள்! தோலை அனுமதிக்கும் அரசு ஏன் உறுப்புக்களை அனுமதிக்கக்கூடாது என்று கேட்பர். இறந்த மனிதனின் தோல் கிடைக்காத பட்சத்தில் வேறு ஆபத்தான வழிகளுக்குச் செல்லும் வாய்ப்புகள்,இதற்கென ஏஜெண்டுகள் என்று ஒரு பெரிய சந்தையே உருவாகும். நிழல் உலகில் இந்தப் பொருட்கள் விற்பனையும் செய்ய ஆரம்பித்தால் அவ்வளவுதான்!!//

உண்மைதான் நண்பா. எப்படி இதை அனுமதித்தார்கள்? தடுக்கவேண்டிய ஒன்று. நல்ல பகிர்வுக்கு நன்றி டாக்டர் தேவன் சார்

SUREஷ் said...

கொடூரம்..

SUREஷ் said...

இங்கே ஓட்டுப் போட்டுவிட்டேன்

அ.மு.செய்யது said...

அதிர்ச்சியானதொரு தகவல்.

மனித தோலில் சிற்பங்களா ?? வேற தோலா அவங்களுக்கு கிடைக்கல ??

( தேவா !! உங்கள் மதுரை சந்திப்பின் புகைப்படங்கள் அனைத்தையும் பார்த்தேன்.அனைத்தும் அருமை )

ராஜ நடராஜன் said...

பதிவின் தகவல் அதிர்ச்சியை உருவாக்குகிறது.கூடவே உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

Suresh said...

நல்ல பதிவு மச்சான் உன் கிட்ட பேசனும் என்று கார்த்திக் கிட்ட நம்பர் கேட்டேன் .. இன்னைக்கு கால் பன்னுறேன்

வழிப்போக்கன் said...

ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு இப்ப மனுஷன கடிக்கிற அளவுக்கு போயிடுச்சு...
:)))
வருத்தம் தான் என்ன செய்ய???

thevanmayam said...

தேனீ - சுந்தர் said...
இதை அனுமதிக்கவே கூடாது டாக்டர் .

26 May 2009 22:22

தேனீ - சுந்தர் said...
அமெரிக்கன் ரசனை மட்டமானது ,என்பது நாம் முன்பே அறிந்ததுதான், இருந்தாலும் இது மிக குரூரமாக உள்ளது.,

26 May 2009 22:24

குடந்தை அன்புமணி said...
மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது உடனடியாக களையப்பட வேண்டும்.

26 May 2009 22:47

mraja1961 said...
அருமையான பதிவு எல்லா நாடுகளும் கண்டிக்க வேண்டும். அன்புடன் மகாராஜா

26 May 2009 23:10

Anbu said...
இதை அனுமதிக்கவே கூடாது டாக்டர் .

26 May 2009 23:19

தமிழிச்சி said...
இந்தச் செய்தி உண்மையில் அதிர்ச்சி தருகிறது. விலங்குகளின் தோலைப் பாவிக்கக் கூடாதென்று ஆர்ப்பாட்டம் செய்யும் இங்கிலாந்து மக்கள் இதனை எப்படி அனுமதிப்பார்கள்?

27 May 2009 00:03

இராகவன் நைஜிரியா said...
மிக மிக மோசமான முன்னூதரணம். இதை வளரவிடக்கூடாது. இதை எப்படி இங்கிலாந்தில் அனுமதித்தார்கள் என்று புரியவில்லை.

நீங்கள் சொன்னது மாதிரி, இது பலவித குழப்பங்களுக்கு வழி வகுக்கும்.

27 May 2009 00:13

முனைவர்.இரா.குணசீலன் said...
என்னங்கய்யா கொடுமையா இருக்கு?

27 May 2009 00:34

சொல்லரசன் said...
நம்முடைய பின்னுட்டத்தை காணவில்லை டாக்டர் தேவன் "மாயம்"செய்து அழித்துவிட்டாரோ என்று பார்த்தால், ஒரே பதிவை இருமுறை பதிவு செய்துஇருக்கிறீர்கள்.

பார்த்துங்க டாக்டர் சார் அகநழிகை திருச்சியில் சொன்னது போல் நடந்துவிடபோகிறது.

27 May 2009 02:02

SUREஷ் said...
கொடூரம்


கேவலம்

27 May 2009 02:27

SUREஷ் said...
ஓட்டுப் போட ஆசைதான் சார்.

ஆனால் தமிழ்மணத்திலும் தமிழீஸிலும் நீங்கள் சேர்க்கவே இல்லையே

27 May 2009 02:28

தமிழரசி said...
இறந்த உடலிடமும் இரக்கமில்லையா.... ஏங்கே எதை நோக்கி போகிறது நாகரீக வளர்ச்சியும் நவீனத்துவமும் கொடுமை.... நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால்......

27 May 2009 03:21

வால்பையன் said...
விலங்கு தோலை பயன்படுத்துறதே தப்பு!
இவனுங்க மனித தோலுக்கு போயிட்டானுங்களா?

27 May 2009 05:38

பித்தன் said...
கண்டிப்பா உலகமுழுவதும் இதை தடை செய்யவேண்டும்...

நரமாமிசம் உண்பவர்களுக்கும். இது போன்று செய்பவர்களுக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.

பணக்காரர்களுக்கு இதுபோன்ற பொருட்கலின் மீது ஆசைவந்தால்... உலகமுழுவதும் ஏழைகள் வேட்டையாடபடுவார்கள் என்பது உண்மை.

27 May 2009 05:56

"அகநாழிகை" said...

கண்டனத்திற்குரியது இது.

சிந்தனையைத்தூண்டும் பதிவு


‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

செந்தில்குமார் said...

நல்ல பகிர்வு டாக்டர்..

கண்டனத்திற்குரிய விஷயம் தான் .. தடுக்கப்படவேண்டிய ஒன்று..

ஆதவா said...

நீங்கள் சொல்வது உண்மைதான்.... மனித தோல்களினால் செய்யப்படும் க(கொ)லைப்பொருட்களை நாம் அனுமதிக்கக் கூடாது!!!! பார்க்கவே கொடூரம்!!!

Rajeswari said...

அட கடவுளே..என்ன கொடுமை இது.

ஜுர்கேன் க்ருகேர்..... said...

இப்படி அநியாயம் பண்றவன் தோல உரிக்கணும்!

ஆ.முத்துராமலிங்கம் said...

அதுவும் மனிதத்தோலால்! கேட்கவே அதிர்ச்சியாக உள்ளதுதானே!!//

மிகவும் அதிர்ச்சியான செய்தியே!!

ஆ.முத்துராமலிங்கம் said...

இறந்த மனிதனின் தோல் கிடைக்காத பட்சத்தில் வேறு ஆபத்தான வழிகளுக்குச் செல்லும் வாய்ப்புகள்//

நிச்சயம் இதுதான் நடக்கும்,
இதை ஆதரித்தால் அது வன்மையான் செயல் தற்போதைய பிந்தைய உலகில் ஆபத்தான வழிமுறைகளை பெருக்குவதற்கு வழியமைத்துக் கொடுத்து போலாகிவிடும்.

நிச்சயம் இது தவறான செயல்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory