அன்பின் வலை நண்பர்களே!!
மதுரையிலே பதிவர் கூட்டம் ஞாயிறு நேற்று நடந்தது. இப்பொழுதுதான் திருச்சியில் முடிந்த சந்திப்பு இன்னும் நினைவுகளை விட்டு நீங்காதிருக்கும்போதே அடுத்த சந்திப்பு.
என்னுடைய வேலைப் பளு என்னமோ நேற்று மிக அதிகம்!! காலையில் 6.00மணிக்கு ஒரு அறுவை சிகிச்சை! 10மணிக்கு என் நண்பர் டாக்டர் மணிராஜின் புதல்வி பூப்புனித விழா, திருச்சி சங்கீதா ஓட்டலில் மதிய சாப்பாடு!! முடித்து காரைக்குடி திரும்புகையில் நண்பரின் கார் மக்கர். காரை ஷெட்டில் விட்டு நண்பருடன் என் காரில் மதுரை சந்திப்பு!!! அதனால் கொஞ்சம் தாமதந்தான்!!!
சந்திப்பில் 14+2 பதிவர்கள் கலந்து கொண்டனர்!!
1. டக்ளஸ்
2.தேனீ-சுந்தர்
3. அன்பு- சிவகாசி
4. பாலகுமார்
5. இளைய கவி கணேஷ் குமார்
6. ஜாலி ஜம்பர்
7. சூப்பர் சுப்ரா
8. வால்பையன்
9. கார்த்திகைப் பாண்டியன்
10. ஸ்ரீதர்
11. சில் பீர்
12. டாக். தேவமாயம்
13. அருண்
15. சீனா
14. தருமி
15. ராஜா
16. கார்த்திக்
இளைய கவியை நான் எதிபார்க்கவில்லை!! வந்திருந்தார்.
இருள் கவ்விய நேரத்தில் முன் முகம் தெரியா நண்பர்கள் நமக்காக ஆர்வத்துடன் அன்புக்கதைபேச காதலியிடம் பேசுவதைவிட இனிமையாக இருந்தது அந்த மாலை!
அறியா நண்பர்கள் நம் மீது அன்பு காட்ட சொல்ல முடியாத பாசமும், பற்றும் கரை புரண்டோடும் இந்த சந்திப்புகளை நான் சொன்னால் நீங்கள் உணரமுடியாது!
வணிக மயமான இந்த உலகில் புதிய நண்பர்கள் ஏற்படுவது அபூர்வம்! அதுவும் கவிதை கதை ,பதிவுலகம் ஏதும் அறியா இயந்திர மனிதர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும் நாம்! இத்தனை மாதம் பதிவெழுதி ஒரு காரைக்குடி பதிவர்கூட என்னால் கண்டுபிடிக்கவில்லை!!
ஆனால் எங்கோ கனடாவில் இருக்கும் ”பழமைபேசியார்” என்னைத்தொடர்பு கொண்டு திருச்சி பதிவில் என் காணொளியைக்கண்டு உளம் பூரித்து தொலைபேசியில் அளவளாவியபோது......நான் அடைந்த இன்பம் ....வார்த்தைகளில் வராதது!! நான் பேசிய பேச்சில் என்னையும் அறியாமல் வந்த என் காரைக்குடி மண்ணின் தமிழ் அவரைக்கவர்ந்ததாம்!! அன்பு வலை நண்பர்களே நீங்கள் காட்டும் பாசம் அளவில்லாதது!!....அதற்கு நான் தலை வணங்குகிறேன்!!
பாசக்கார மக்களின் படங்களையும் பாருங்களேன்!! திரு.சீனா. அன்பின் தருமி!!
வால்பையன், சூப்பர் சுப்ரா, அருண்
தேனீ-சுந்தர், கார்த்திக், சில்-பீர்
அருண், தேனீ-சுந்தர், சில்-பீர்
கணேஷ் குமார்
ஸ்ரீதர், வால்பையன்
டக்ளஸ்
ஸ்ரீதர்
சூப்பர் சுப்ரா, அன்பு, ஜாலி, ஸ்ரீதர்
அன்பு, கார்த்திக்
சில்-பீர்
ஸ்ரீதர், கணேஷ் குமார், வால்ஸ், ராஜா
ஸ்ரீதர், கணேஷ் குமார், வால்ஸ், ராஜா, சில்-பீர்
அன்பு, கார்த்திகை
ஜாலி, ஸ்ரீதர், கார்த்திகை
பாசக்கார மக்களின் படங்களைப்பார்த்தீர்கள்!
போடுங்க ஓட்டு தமிலிஷிலும், தமிழ்மணத்திலும்!!
தேவா...
69 comments:
:-))
கலக்கல் சந்திப்பு மற்றும் புகைப்படங்கள்..
பகிர்விற்கு நன்றி அய்யா!!!
பதிவர் சந்திப்பு நிகழ்வுகள் நெகிழச் செய்கிறது, வாழ்த்துக்களள்
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்
உங்கள் அலைச்சலையும், அதோடு நேரத்திற்கு வந்து சேர்ந்தமைக்கும் என் வாழ்த்துக்களும் நன்றியும் .......
படங்க போட்டாச்சு...நன்றி! காணொளி?!
ஹா ஹா அருமை அழகு... ஒரு மெல்லிய மழைக்கு பின்பு வரும் அழகு போல இவர்களை பார்த்த போது மனது சந்தோசமானது...
நானும் வருகிறேன்.. உங்களை விரைவில் பார்க்க..
ரொம்ப சூப்பர்
பதிவர் சந்திப்பு சந்தோசம் கொள்ளச் செய்கின்றது. புகைப்படங்கள் அத்தனையும் அருமையா இருக்கு.
பகிர்வுக்கு நன்றி :)
நீங்கதான் எந்த போட்டோவிலுமே காணோம் !?
அமக்களமாய் இருக்கு சார்... படங்களிம் அருமை... அடுத்தமுறை எல்லொரும் சந்தித்தால் நன்று....
present sir...
thanks.
பதிவர் சந்திப்பு இனிமையாக நடந்தற்கு வாழ்த்துகள்
//இளைய கவியை நான் எதிபார்க்கவில்லை!! வந்திருந்தார்.//
அங்கேயும் ஆலப்புழை ஆயுர்வேத விளம்பரத்தை ஆரம்பிச்சுட்டாரா!!!!!!!
படங்கள் அருமை தலைவரே..
என்ஜாய் பண்ணுரிங்க..
நாங்களும் கூடிய விரைவில் ஒரு ஏற்பாடு பண்ணுறோம்..
அருமையான புகைப் படங்கள்.
மிக அருமையாக தொகுத்து அளித்துள்ளீர்கள்.
ஓட்டுப் போட்டு விடுகின்றேன்.
Santhippu Kalakkal..
:-))
கலக்கல் சந்திப்பு மற்றும் புகைப்படங்கள்..
பகிர்விற்கு நன்றி அய்யா!!!
பதிவர் சந்திப்பு நிகழ்வுகள் நெகிழச் செய்கிறது, வாழ்த்துக்களள்///
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்///
அகநாழிகை,வசந்த்துக்கும் நன்றி!!
உங்கள் அலைச்சலையும், அதோடு நேரத்திற்கு வந்து சேர்ந்தமைக்கும் என் வாழ்த்துக்களும் நன்றியும்//
உங்களுடன் நீண்ட நேரம் பேசவாய்க்கவில்லை!!
படங்க போட்டாச்சு...நன்றி! காணொளி?!//
நான் எடுக்கவில்லை!! மக்களை விசாரிக்கிறேன்!
ஹா ஹா அருமை அழகு... ஒரு மெல்லிய மழைக்கு பின்பு வரும் அழகு போல இவர்களை பார்த்த போது மனது சந்தோசமானது...
நானும் வருகிறேன்.. உங்களை விரைவில் பார்க்க..
ரொம்ப சூப்பர்///
சுரேசு! உம்மைப் பார்க்க மிகுந்த ஆசை!!
நீங்கதான் எந்த போட்டோவிலுமே காணோம் !?//
என்னை லூஸுல விட்டுட்டாங்க!!
பதிவர் சந்திப்பு சந்தோசம் கொள்ளச் செய்கின்றது. புகைப்படங்கள் அத்தனையும் அருமையா இருக்கு//
வாங்க முத்து!!!
அமக்களமாய் இருக்கு சார்... படங்களிம் அருமை... அடுத்தமுறை எல்லொரும் சந்தித்தால் நன்று....///
ஞான்ஸ்!! ஏற்பாடு செய்துவிடுவோம்!!
//இளைய கவியை நான் எதிபார்க்கவில்லை!! வந்திருந்தார்.//
அங்கேயும் ஆலப்புழை ஆயுர்வேத விளம்பரத்தை ஆரம்பிச்சுட்டாரா!!!!!!!///
சொல்லரசன் சார்!! அவர் பெரிய ஆளுங்க!!
படங்கள் அருமை தலைவரே..
என்ஜாய் பண்ணுரிங்க..
நாங்களும் கூடிய விரைவில் ஒரு ஏற்பாடு பண்ணுறோம்..///
செய்யுங்க! எந்த ஊரில்?
அருமையான புகைப் படங்கள்.
மிக அருமையாக தொகுத்து அளித்துள்ளீர்கள்.
ஓட்டுப் போட்டு விடுகின்றேன்.///
கண்டுக்க மாட்டேங்கிறீங்க!! ஓகே!!
நன்றி! நிலவன்& நையாண்டி நைனா!!
//கலக்கல் சந்திப்பு மற்றும் புகைப்படங்கள்..//
அதே ! அதே !!
//கலக்கல் சந்திப்பு மற்றும் புகைப்படங்கள்..//
அதே ! அதே !!///
வருக சதங்கா!!
நானும் பதிவு போட்டிருக்கிறேன் அண்ணா
நல்லா எஞ்சாய் செஞ்சிருக்கீங்க போல இருக்கு.
சீனா சார், வால்பையன் மட்டும் தெரியும். மத்தவங்க எனக்கு புதுசு.
எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்
படங்களை பார்த்து நிறைய பேரை தெரிந்துகொண்டேன்.(மதுரைனாலே பாசக்காரவுகதான் இருப்பாங்க...எங்க ஊருல,...)
//
thevanmayam said...
//இளைய கவியை நான் எதிபார்க்கவில்லை!! வந்திருந்தார்.//
அங்கேயும் ஆலப்புழை ஆயுர்வேத விளம்பரத்தை ஆரம்பிச்சுட்டாரா!!!!!!!///
சொல்லரசன் சார்!! அவர் பெரிய ஆளுங்க!!//
தல நீங்கா ஏல்லாம் பெரிய ஆளுங்க தல .. நீங்க மட்டும் தான் பெரிய ஆளு.. மக்களை காப்பாத்தும் கடவுள் நீங்க என்னை போய் பெரிய ஆளுன்னு சொல்லிகிட்டு.
ஆத்தாடி இம்புட்டு பேரா
நல்லாயிருங்கப்பு
நல்லது நடந்தா சரிதான்
இருள் கவ்விய நேரத்தில் முன் முகம் தெரியா நண்பர்கள் நமக்காக ஆர்வத்துடன் அன்புக்கதைபேச காதலியிடம் பேசுவதைவிட இனிமையாக இருந்தது அந்த மாலை!//
அட என்னா வர்ணிப்புங்க???
:-)
சந்திப்பு இனிதாக நடந்தது குறித்து மகிழ்ச்சி...
பதிவர் கூட்டம் வெற்றி குறித்து மகிழ்ச்சி. புகைப்படங்கள் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி.
மதுரைக்கார பயலுக ரொம்ப பாசக்கார பயலுகன்னு சும்மாவா சொல்றாங்க.
மதுரைக்காரத்தம்பி
http://maduraikarathambi.blogspot.com/
மிக்க நன்றி, என்னையெல்லாம் அழகா படம் போட்டதுக்கு.,
லட்டுடை VS வட்டுடை , மறக்க முடியாத விவாதம்
வாழ்த்துகள்.
வால்பையன் சின்ன பையன் என்று நினைத்து இருந்தேன்.
பெரிய வாலுதான்.. sorry. ஆளுதான்.
கலக்கல்.
அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி... பகிர்விற்கு நன்றி !!!!
படங்கள் அருமையாக வந்திருக்கின்றன. படத்தின் பின்புறத்தில் மழை பெய்ததின் அடையாளம் தெரிகிறது. நல்ல கிளைமேட். நல்ல சந்திப்பு மனம் குளிர்ந்திருக்கும். ம்! விரைவில் நானும் ஒரு பதிவர் சந்திப்பில் கலந்து கொள்கிறேன்.
இலங்கை இந்திய பதிவர்களுக்கிடையான பாலம்..
கேளுங்க.. கேளுங்க.. நல்லா கேளுங்க..
விரைவில்..பிரபல பதிவர்களை உங்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க களம் அமைக்கிறது.. பூச்சரம்
(இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS)
பூச்சரம் ONLINE பதிவர் சந்திப்பு வெகு விரைவில்..
பதிவர் சந்திப்பை புகைப்படங்களுடன் தொகுத்து பதிவிட்டிருப்பது பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட உணர்வை ஏற்படுத்துகிறது...
பதிவர் சந்திப்பு நிகழ்வுகள் நெகிழச் செய்கிறது, வாழ்த்துக்கள்
நானும் வருகிறேன்.. உங்களை விரைவில் பார்க்க..
பதிவர் சந்திப்பு இனிதாக நடந்தது குறித்து மகிழ்ச்சி
பதிவு அருமை தேவா சார்.. வாழ்த்துக்கள்..
கலக்கல்..முதலில் திருச்சி, இப்ப மதுரை..எந்த ஊரானாலும் போயிடுறீங்களே டொக்டர்....அப்ப அடுத்ததா சிங்கையா...? வாங்கோ...:-))))
நல்லா எஞ்சாய் செஞ்சிருக்கீங்க போல இருக்கு.
சீனா சார், வால்பையன் மட்டும் தெரியும். மத்தவங்க எனக்கு புதுசு.
எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்///
புதுகை வந்தால் ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யுங்க!!
படங்களை பார்த்து நிறைய பேரை தெரிந்துகொண்டேன்.(மதுரைனாலே பாசக்காரவுகதான் இருப்பாங்க...எங்க ஊருல,...)///
வாங்க மதுரைக்கார அம்மா!!
//
thevanmayam said...
//இளைய கவியை நான் எதிபார்க்கவில்லை!! வந்திருந்தார்.//
அங்கேயும் ஆலப்புழை ஆயுர்வேத விளம்பரத்தை ஆரம்பிச்சுட்டாரா!!!!!!!///
சொல்லரசன் சார்!! அவர் பெரிய ஆளுங்க!!//
தல நீங்கா ஏல்லாம் பெரிய ஆளுங்க தல .. நீங்க மட்டும் தான் பெரிய ஆளு.. மக்களை காப்பாத்தும் கடவுள் நீங்க என்னை போய் பெரிய ஆளுன்னு சொல்லிகிட்டு.///
இளைய கவி!! சரி!!சரி!! விடுங்க!!
ஆத்தாடி இம்புட்டு பேரா
நல்லாயிருங்கப்பு
நல்லது நடந்தா சரிதான்///
வாங்க ஜமால்!
சந்திப்பு இனிதாக நடந்தது குறித்து மகிழ்ச்சி...///
வேத்தியன் அடுத்த சந்திப்பில் கலந்து கொள்வார்!
மிக்க நன்றி, என்னையெல்லாம் அழகா படம் போட்டதுக்கு.,
லட்டுடை VS வட்டுடை , மறக்க முடியாத விவாதம்//
நீங்க உண்மையிலேயே அழகருங்க!!
வாழ்த்துகள்.
வால்பையன் சின்ன பையன் என்று நினைத்து இருந்தேன்.
பெரிய வாலுதான்.. sorry. ஆளுதான்.
கலக்கல்.///
வாங்க வண்ணத்துப்பூச்சியார்!!
அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி... பகிர்விற்கு நன்றி !!!!//
பாலகுமார்!! அடுத்தமுறை சந்திப்போம்!!
படங்கள் அருமையாக வந்திருக்கின்றன. படத்தின் பின்புறத்தில் மழை பெய்ததின் அடையாளம் தெரிகிறது. நல்ல கிளைமேட். நல்ல சந்திப்பு மனம் குளிர்ந்திருக்கும். ம்! விரைவில் நானும் ஒரு பதிவர் சந்திப்பில் கலந்து கொள்கிறேன்///
உங்களை சந்திக்க ஆசைதான் அன்புமணி!!
இலங்கை இந்திய பதிவர்களுக்கிடையான பாலம்..
கேளுங்க.. கேளுங்க.. நல்லா கேளுங்க..
விரைவில்..பிரபல பதிவர்களை உங்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க களம் அமைக்கிறது.. பூச்சரம்
(இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS)
பூச்சரம் ONLINE பதிவர் சந்திப்பு வெகு விரைவில்///
வாங்க பூச்சரம்!!
குமரை,புதியவன்,டொன்லீ,கார்த்திகை----நன்றி நண்பர்களே
வால்பையன் கூட ரூம்ல நடந்த மேட்டர் பத்தி எழுதாம விட்டுட்டீங்களே டாக்டரே..!
போனில் அழைத்து வாழ்த்து சொல்லிய நைனா, நர்சிம், மேவீ, ரம்யா அனைவருக்கும் நன்றிகள் பல.
வால்பையன் கூட ரூம்ல நடந்த மேட்டர் பத்தி எழுதாம விட்டுட்டீங்களே டாக்டரே..!
போனில் அழைத்து வாழ்த்து சொல்லிய நைனா, நர்சிம், மேவீ, ரம்யா அனைவருக்கும் நன்றிகள் பல//
டக்ளஸ்!! என் சார்பாக நைனா, நர்சிம், மேவீ, ரம்யா ஆகியோருக்கு நன்றி தெரிவித்ததற்கு நன்றி!!
எல்லா நண்பர்களயும் பாத்ததுல சந்தோஷம்...
பகிர்விற்கு நன்றி டாக்டரே....
ஆனா உங்க படத்ததான் காட்ட மாட்டேங்கிறீங்க...
:)))
எல்லா நண்பர்களயும் பாத்ததுல சந்தோஷம்...
பகிர்விற்கு நன்றி டாக்டரே....
ஆனா உங்க படத்ததான் காட்ட மாட்டேங்கிறீங்க...
:)))//
படந்தான் ஓவரா காட்டுறமே!!
அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி, சந்திப்பு என்பது ஒரு புது உத்வேகம்
வாழ்த்துக்கள் தேவா தொகுத்து வழங்கியதற்கு
பதிவர் சந்திப்பு புகைப்படம் பார்க்கும் போதே பூக்கிறது மனது....ரொம்ப நல்லாயிருக்குங்க....படங்கள் உடன் இருந்து பேசுவது போல சந்தோஷம் மனசுகுள்ள.....தொடரட்டும் அன்பின் வழி நட்பாய் என்றென்றும்....
நைட்டு நடந்த விவாதத்தால கோவிச்சிகிட்டிங்களோன்னு பயந்துட்டேன் தல!
ரொம்ப நன்றி!
அன்பின் தேவகுமார்
அருமையான படங்கள் - பதிவு - கலக்கறீங்க போங்க - நாம தான் அதிகம் பேசல - நேரமின்மை
அட என் படமும் எடுத்துபோட்டிருக்கீங்க = பலே பலே
நல்வாழ்த்துகள்
””””அங்கேயும் ஆலப்புழை ஆயுர்வேத விளம்பரத்தை ஆரம்பிச்சுட்டாரா!!!!!!!””
என் கிட்ட சொல்லிடருருய்யா?
””
லட்டுடை VS வட்டுடை , மறக்க முடியாத விவாதம்”’
அது வந்த காரனம் உங்க தாவனி கவிதை
தற்போது தான் இந்தப் பதிவைப் பார்த்தேன். படங்களும் வர்ணனைகளும் கிழியேஷ், கும்மேஷ் என்று உள்ளன.
Post a Comment