Tuesday, 5 May 2009

மாரடைப்பைத் தடுக்க-2

அன்பின் வலை நண்பர்களே!!

ஏற்கெனவே மாரடைப்பைத்தடுக்க என்று ஒரு பதிவு இட்டிருந்தேன்!!

மாரடைப்பைப்பற்றி  எழுதவேண்டியது நிறைய உள்ளது!!  மாரடைப்பைத்தடுக்கும் சில வழிமுறைகளை இந்தப்பதிவில் பார்ப்போம்!!

வயதானவர்களுக்கோ மற்றும் பரம்பரையாகவோ வரும் இதயக்கோளாறுகள் கட்டுப்படுத்த முடியாததாக இருப்பினும்(இவர்களுக்கு சிறப்பு சிகிச்சை உள்ளது), பொதுவாக மாரடைப்பை எப்படித்தடுக்கலாம் என்று பார்ப்போம்!!

கொழுப்புச்சத்து அளவையும், இரத்த அழுத்த அளவையும் குறைப்பதன்மூலம் மாரடைப்பு வருவதைக்குறைக்கலாம்!!

சாதாரணமாக 120/80 என்பதே சரியான இரத்த அழுத்தம்!! ஆயினும் வயதாக வயதாக இதில் உள்ள 120 என்ற அழுத்தம் 130 வரை செல்லலாம்! தமிழ்நாடு அரசு 130/ 90 என்ற குறியீட்டை இரத்த அழுத்த ஆரம்பக்குறியீடாகக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது!!

கொழுப்புச்சத்து என்று எடுத்துக்கொண்டால் அதில் உள்ள நல்ல கொழுப்பு,கெட்ட கொழுப்பு ஆகியவற்றை கணக்கில் கொள்ள வேண்டும்!!

LDL (Low Density Lipoprotein)- எல்.டி.எல் எனப்படும் கொழுப்பு அதிகமிருப்பது ஆபத்து!இதனைக்குறைக்கவேண்டும்!!

HDL (High Density Lipoproteins) எனப்படும் கொழுப்பு இதயத்துக்கு நல்லது. ஆகையால் இது குறையக்கூடாது!!

உடல் பருமன் - உடல் பருமன் சரியான அளவில் இருப்பது மிக முக்கியம்!! முக்கியமாக இடுப்பளவைக்குறைப்பது அவசியம்!! ஆண்களுக்கு 40 அங்குலமும்,பெண்களுக்கு 35 அங்குலமும் இருப்பதே சிறந்தது!!

சில உணவுகள் நம்மை மாரடைப்பிலிருந்து காக்கும். எடுத்துக்காட்டாக:

மீன் உணவு வாரம் 2 முறை எடுத்துக்கொள்வது 36% மாரடைப்பைக் குறைக்குமாம்! அதேபோல பழங்களும், காய்களும் தினமும் அதிகம் சேர்த்துக்கொள்வது 30% மாரடைப்பைத்தடுக்குமாம்!!

1.உடற்பயிற்சி: உடற்பயிற்சியின் அவசியத்தை நான் சொல்லத்தேவையில்லை!! இதைப்பற்றிய விழிப்புணர்வு அதிகமாகவே உள்ளது!! தினமும் நடைப்பயிற்சி மிக அவசியம்!! ஆயினும் கடினமான பயிற்சிகளை முதலில் தொடங்கும்முன் உடல் பரிசோதனை அவசியம்!! ஏற்கெனவே இதயநோய் கண்டறியப்படாமல் இருந்தால் கடினமான பயிற்சிகள் மேலும் சிக்கலை உண்டாக்கும்!!

2.உணவு: உடலுக்குகந்த உணவுகளை உணவுகளை உண்பது மிக அவசிய!! சீஸ், வெண்ணெய்,கொழுப்புக்கறி,ஆகியவற்றை குறத்துக்கொள்ள வேண்டும்!! ஆலிவ் எண்ணெய்,மீன் எண்ணை,ஆகியவற்றை சேர்த்துக்கொள்வது சிறந்தது!

ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ் எனப்படும் பொருள் சில உணவுவகைகளில் அதிகம் காணப்படுகின்றன!! இவையும் அதிகம் உணவில் இருக்க வேண்டும்!! கீழே சில ஆன்டிஆக்ஸிடனடுகள்:

1.விட்டமின் ஏ-கேரட்,தக்காளி, இன்னபிற பழங்களும்,காய்களும்!,

2.விட்டமின் சி-கொட்டைகள், முழுதானியங்கள், பச்சைக்காய்கள்,தாவர எண்ணைகள்!

3.செலினியம்-- மீன்,முட்டை,கோழி,பூண்டு,தானியங்கள்!!

4.ஃப்ளேவனாய்ட்ஸ்-Flavonoids / polyphenols-சிகப்பு ஒயின்,சோயா, கருப்பு திராட்ச்சை,மாதுளை, டீ!!

5.லைகோபீன் Lycopene--தக்காளி,தர்பூசணி,பின்க் நிற திராட்ச்சை

6.லூடின் Lutein---கரும்பச்சை காய்கறிகள்,கீரைகள்

7.லிக்னான் Lignan---ஓட்ஸ், பார்லி,ரை.

8.விட்டமின் போன்றவை--கோஎன்சைம்Q10,குளுடதோன்

எவ்வளவு சிறப்பான உணவாயினும் அதனை அளவுக்கு அதிகமாக உண்ணுதல் கூடாது!

3.புகைபிடித்தல்:புகைபிடித்தல் மிகவும் ஆபத்தானது! இதனால் மாரடைப்பு வரும் சந்தர்ப்பம் அதிகமாகிறது!! 40 வயதுக்குள் உள்ளோரில் புகை பிடிப்பவர்களுக்கு 5 மடங்கு மாரடைப்பு வரும் வாய்ப்புள்ளதாம்!! மாரடைப்பு வருபவர்களில் 80% பேர் புகைபிடிப்பவர்கள்!! சிகரெட் ரத்தக்குழாய்களையும் இதயத்தையும் சேதப்படுத்துவதே இதற்கு காரணம்!! சிகரெட் புகையில் 4000 நச்சுப்பொருட்கள் இருக்கின்றனவாம்!! புகைப்பதை விட்டுவிடுவோமா? எப்படி புகைப்பதை நிறுத்துவது என்பதற்கு இன்னொரு பதிவு போடவேண்டும்!!

4.மன அழுத்தம்!! - இன்றைய உலகில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது!! பல பேர் இதனை உணர்வதில்லை!! அப்படியே தெரிந்தாலும் அது ஒரு பெரிய விசயம் என்று எடுத்துக்கொள்வதில்லை!!மன அழுத்தம் இதயத்துடிப்பை அதிகரிக்கும்! இரத்தக்குழாய்களையும் பாதிக்கும்!!தொடர்ந்து மனஅழுத்தம் இருந்தால் அட்ரீனலின்,கார்டிசால் போன்ற சுரப்புகள் அதிகமாகும். இரத்தம் உறைந்து சிறு பந்துபோல் கெட்டிப்பட்டு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிறதாம்!! மன அழுத்தத்தை குறைப்பது மிக எளிது!! கொஞ்சம் ஓய்வும், மூச்சுப் பயிர்சியும் போதும் மன அழுத்தம் மிகவும் குறைந்துவிடும்!! சரிதானா!!

5.இது ரொம்ப முக்கியம்!! மருத்துவப்பரிசோதனை தவறாமல் செய்துகொள்ளவேண்டும்!! உங்கள் எடை,இரத்த அழுத்தம்,கொழுப்பின் அளவு ஆகியவற்றை அடிக்கடி அவரவர் உடல் தன்மைக்கு ஏற்ப தெரிந்துகொள்ள வேண்டும்!! உங்கள் தினசரி வாழ்க்கை மற்றும் வேலையின் தன்மை ஆகியவற்றையும் உங்கள் உடல் நலத்தோடு அலசிப்பார்ப்பது மிக அவசியம்!!

இன்னும் இனிப்புநோய்,மற்றும் இன்னபிற நோய்களும் மாரடைப்பை உண்டாக்கும்!! அவற்றை விரிவாக பின்னர் பார்க்கலாம்!!

--------------------------------------------------

பதிவு உபயோகமாக இருந்தால் தமிழ்மணம் தமிலிஷில் குத்துங்க வாக்கை!!

17 comments:

வழிப்போக்கன் said...

me the first...
:)))

Anonymous said...

பயனுள்ள தங்களது தகவலுக்கு நன்றி.

வால்பையன் said...

//மீன் உணவு வாரம் 2 முறை எடுத்துக்கொள்வது 36% மாரடைப்பைக் குறைக்குமாம்!//

குறைக்குமாம்னு சொல்லக்கூடாது!
குறைக்கும்னு நம்பிக்கையோடு சொல்லனும்,
நாங்களும் நம்பிக்கையோடு சாப்பிடுவோம்!

thevanmayam said...

me the first...
:)))///

போகிற போக்கில் மீ தெ ஃபர்ஸ்டா? ஓக்கே!!

thevanmayam said...

//மீன் உணவு வாரம் 2 முறை எடுத்துக்கொள்வது 36% மாரடைப்பைக் குறைக்குமாம்!//

குறைக்குமாம்னு சொல்லக்கூடாது!
குறைக்கும்னு நம்பிக்கையோடு சொல்லனும்,
நாங்களும் நம்பிக்கையோடு சாப்பிடுவோம்!///

நல்லா! நீங்க நம்பி சாப்பிடுங்க ராசா!!

ராஜ நடராஜன் said...

பயனுள்ள பதிவு மருத்துவரே.தொடருங்கள்.

thevanmayam said...

பயனுள்ள பதிவு மருத்துவரே.தொடருங்கள்.///

நன்றி நண்பரே!!

SUREஷ் said...

ஓட்டுப் போட்டாச்சு தல

வேத்தியன் said...

useful post Deva...

thanks 4 sharing...

அமுதா said...

பரம்பரையும் ஒரு முக்கியக் காரணம்,,எனவே பெற்றவர்களுக்கு வந்திருந்தால் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஜாக்கிரதையாக இருக்கணும்...குறிப்பாய் ஆண்கள்...

இராகவன் நைஜிரியா said...

மிகத் தேவையான அருமையான பதிவு.. மிக்க நன்றி மருத்துவர் தேவா அவர்களே...

அ.மு.செய்யது said...

கன்சல்டேசனெல்லாம் எல்லாம் ஓகே ..

வலைக்கு வந்ததுக்கு ஃபீஸ் எல்லாம் கேக்க மாட்டீங்களே !!!!

( பயனுள்ள பதிவு தேவா !!! நோட் பண்ணிக்கிறோம் )

Manikandavel said...

எல்லோருக்கும் ரொம்ப பயனுள்ள பதிவு.
வாழ்த்துக்கள்

ஜுர்கேன் க்ருகேர்..... said...

நன்றி அய்யா!

tamil24.blogspot.com said...

டாக்குதரய்யா நல்ல ஆலோசனைகள். யாம் பெற்ற பயன் இவ்வையகம் முழுவதும் பெறுக.

சாந்தி

இளமாயா said...

Thanks Deva...
its very useful for us..,
keep it up.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

பலருக்கும் உதவக் கூடிய பயனுள்ள பதிவு.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory