Tuesday, 5 May 2009

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் படம்!!-ஏஞ்செல்ஸ் & டெமான்!!


டான் பிரவுன் எழுதிய டா வின்சி கோடு, ஏஞ்சல்ஸ் அன்ட் டீமென்ஸ் ஆகியவை பிரசித்திபெற்றவை. இவற்றில் ஏஞ்சல்ஸ் அன்ட் டீமென்ஸ் தற்போது திரைப்படமாக வெளிவருகிறது! நாவலின் அதே பெயரிலேயே படமும் எடுக்கிறார்கள்!! ”ஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் (Angels and Demons)” டாவின்சி கோடில் நடக்கும் சம்பவங்களுக்கு முந்தைய பகுதியாகும்(Prequel). இப்புத்தகத்தின் கதாநாயகனும், அதே ராபர்ட் லாங்டன்.

கதை:குறியீடுகள் துறையில் (Symbology) பேராசிரியராக இருக்கும் லாங்டனுக்கு, ஒரு நாள் அதிகாலையில் செர்ன் என்ற அறிவியல் அறிஞர் போன் செய்கிறார். அவர் ஆய்வகத்தில் ஒரு கொலை நடந்ததையும் அதற்கு உதவுமாரும் கோருகிறார்.

பிரேதத்தின் நெஞ்சில் ரகசிய குறியீடு கண்டு அதிர்ச்சி அடைகிறார் லாங்டனுக்கு!

அந்தக் குறியீடு, கிறித்தவ தேவாலயங்களுக்கு எதிரானவர்கள் என்று கருதப்படும் அமைப்பான இல்லுமினாட்டி (Illuminaatti)-யைச் சார்ந்தது. அழிந்து போனதாகக் கருதப்பட்ட இவர்களில் ஒருவன் தற்போது முளைத்திருப்பது மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது லாங்க்டனுக்கு!!

லாங்க்டன் உடனே செர்ன் ஆய்வகத்துக்கு விரைகிறார்!ஆன்ட்டி மேட்டர் (anti-matter) என்ற செர்ன்-ன் முக்கியமான விஞ்ஞானி (கொலை செய்யப்பட்டவர்) கண்டுபிடித்த பொருள் இருக்கும் கானிஸ்டரும் (Canister) காணாமல் போயிருக்கிறது. மிகுந்த ஆபத்தானது இந்தப்பொருள்!!

அதே சமயம் வாடிகனில் இப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாகத்தகவல் வர செர்ன் அங்கு போகிறார்!!24 மணி நேரத்தில் இது வெடிக்கும் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைக்கிறது! லாங்க்டனும், அதை வடிவமைத்த விஞ்ஞானி மகள் வெட்டோரியாவும்கூட வாடிகன் செல்கின்றனர்.

வாடிகனில் போப்பைத் தேர்ந்தெடுக்கும் சடங்கு நடந்துகொண்டு இருக்கிறது.இதற்காக கார்டினல்கள் உலகம் முழுவதிலிருந்து வந்துள்ளனர்! அதிர்ச்சியாக மணிக்கொருவர்வீதம் நான்கு கார்டினல்கள் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுகிறார்கள்!!

ஏஞ்செல்ஸ் &டெமான்ஸ் என்று கீழே எழுதி இருக்கும் முறை கொஞ்சம் வித்தியாசமானது! எப்படியென்றால் இதை தலைகீழாக திருப்பிப் படித்தாலும் ஏஞ்செல்ஸ் &டெமான் என்றே வரும்!!

இப்படி எழுதுவதை ஆம்பிகிராம்ஸ் என்று அழைப்பார்கள்!!

நான்கு கார்டினல்களில்

ஒருவரின் உடலில் earth
மற்றொருவரின் உடலில் air
மற்றொருவரின் உடலில் fire
மற்றொருவரின் உடலில் water
என்று எழுதப்பட்டு இருக்கும்!! அதுவும் ஏஞ்செல்ஸ் & டெமான் எழுதியுள்ள முறையிலேயே!!

கொலையாளி யார் என்று துப்பறிவதே கதை!! இந்தக்கதையையும் கத்தோலிக்க பாதிரிகள் கண்டனம் செய்துள்ளனர்!

இதில் டாம் ஹான்க்ஸ் நடித்து உள்ளார். மே 15 அன்று இந்தப்படம் திரைக்கு வர்கிறது!!இந்தப்படத்தின் பிரிமியர் 5 மே 2009 அன்று ரோமில் நடந்துள்ளது!!மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் இப்படம் உலக ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது!!படத்தைப்பார்க்க தயாராவோம் நாமும்!!

படத்தின் ட்ரைலரைப்பார்க்கவும்:

ANGELS & DEMONS: Movie Trailer - The best video clips are right here

23 comments:

வால்பையன் said...

கதையே பரப்பரப்பா இருக்கே பாத்துருவோம்!

ஆதவா said...

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி!

ஊர் சுற்றி said...

புத்தகம் படிக்கவில்லை. படத்துக்காகத்தான் காத்துகிட்டிருக்கேன்.

thevanmayam said...

கதையே பரப்பரப்பா இருக்கே பாத்துருவோம்!///

வரட்டும்!!

thevanmayam said...

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி///

வாங்க ஆதவா!!

thevanmayam said...

புத்தகம் படிக்கவில்லை. படத்துக்காகத்தான் காத்துகிட்டிருக்கேன்.///

நானும் உங்களோடு!!

புருனோ Bruno said...

//கொலைசெய்யப்பட்ட கார்டினல்களின் உடலில் என்று எழுதப்பட்டுள்ளது!//

இல்லை

நான்கு கார்டினல்கள் கொல்லப்படுவார்கள்

ஒருவரின் உடலில் earth
மற்றொருவரின் உடலில் air
மற்றொருவரின் உடலில் fire
மற்றொருவரின் உடலில் water

Angels and demonsஎன்று யார் உடலிலும் வராது. அது தலைப்பு மட்டுமே

வேத்தியன் said...

கட்டாயமா பாக்கனும் இந்தப்படத்தை...

பகிர்தலுக்கு நன்றி தேவா...

Anonymous said...

agree with Dr Bruno

thevanmayam said...

/கொலைசெய்யப்பட்ட கார்டினல்களின் உடலில் என்று எழுதப்பட்டுள்ளது!//

இல்லை

நான்கு கார்டினல்கள் கொல்லப்படுவார்கள்

ஒருவரின் உடலில் earth
மற்றொருவரின் உடலில் air
மற்றொருவரின் உடலில் fire
மற்றொருவரின் உடலில் water

Angels and demonsஎன்று யார் உடலிலும் வராது. அது தலைப்பு மட்டுமே//

சரிதான் புரூனோ!! மாற்றிவிடுகிறேன்!!

thevanmayam said...

கட்டாயமா பாக்கனும் இந்தப்படத்தை...

பகிர்தலுக்கு நன்றி தேவா...///

பார்த்துவிடுவோம்!!

’டொன்’ லீ said...

இந்தப் புத்தகத்தை படித்து விட்டு படம் பார்க்க செல்வது நல்லது...:-)

thevanmayam said...

இந்தப் புத்தகத்தை படித்து விட்டு படம் பார்க்க செல்வது நல்லது...:-)///

லீ சொல்படி செய்வோம்11

வழிப்போக்கன் said...

நல்ல கதை...
பரபரப்பா இருக்குன்னு நினைக்கிறேன்...
:)))

சுதாகர் said...

கூடுதல் தகவல்கள்...

1. அந்த நாலு கார்டினல்களும் போப் தேர்தலில் நிற்பவர்கள்.

2. பழைய போப் மரணத்தில் சந்தேகம் கொண்டு, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வார்கள்.

Rajeswari said...

may 15த் தானே பாத்துருவோம்,

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

நல்ல பதிவு. புத்தகம் படிக்க கிடைக்கவில்லை. படத்தை எதிர்பார்க்கிறேன்.

தருமி said...

கதை கடைசியில் கொஞ்சம் "பூ சுத்தல்" நிறைய இருக்கும்!

அது சரி said...

டாக்டர்,

சில திருத்தங்கள்...

//
குறியீடுகள் துறையில் (Symbology) பேராசிரியராக இருக்கும் லாங்டனுக்கு, ஒரு நாள் அதிகாலையில் செர்ன் என்ற அறிவியல் அறிஞர் போன் செய்கிறார். அவர் ஆய்வகத்தில் ஒரு கொலை நடந்ததையும் அதற்கு உதவுமாரும் கோருகிறார்.
....

செர்ன் என்பது அறிவியல் அறிஞர் அல்ல...அது European Organization for Nuclear Research.....என்பதின் அக்ரோனிம்..Not English, but from French Conseil Européen pour la Recherche Nucléaire (CERN).

//
அதே சமயம் வாடிகனில் இப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாகத்தகவல் வர செர்ன் அங்கு போகிறார்!!
//

இது வெறும் Typo என்று நினைக்கிறேன்...வாடிகன் செல்வது Langdon...CERN அல்ல...

அது சரி said...

//
டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...
நல்ல பதிவு. புத்தகம் படிக்க கிடைக்கவில்லை. படத்தை எதிர்பார்க்கிறேன்.
//

டாக்டர்,

கிடைக்கலைன்னா என்ன அர்த்தம்?? நீங்க வாங்கலையா இல்ல தமிழ்நாட்டுல ட வின்ஸி கோட் மாதிரி,சிறுபான்மையினர் மனம் புண்படும்னு மதச்சார்ப்பற்ற அரசு தடை பண்ணிடுச்சா??

அது சரி said...

//
கொலையாளி யார் என்று துப்பறிவதே கதை!! இந்தக்கதையையும் கத்தோலிக்க பாதிரிகள் கண்டனம் செய்துள்ளனர்!
///

இந்தக் கதையையும்???

அவங்களும் பாவம் பொழைப்பை ஓட்ட வேண்டாமா?? :0))

Suddi said...

Hi,

I have read both Angels & Demons and Da Vinci Code.

Infact, Dan Brown wrote Angels & Demons first. Then only Da Vinci Code came.. But the popularity of Da Vinci code was very high when compared to A&D.

Both books touch Christianity, Jesus Christ.. Hence the opposition against it..

A&D book was banned in Vatican.. If we read or see the movie, you can understand why :-)

Last but not the least, read the book first and then see the movie..Real pleasure of the story lies in reading Dan's books.. in my viewpoint..

I read Da Vinci Code, in 1 full night. In that book, read about A&D. So went to MG Road, Bangalore road side shops (me is poor chap).. bought second hand A&D.. Took to office, read the book in 1 full day in office.. my boss gave me permission, with the condition, weeekend I should sponsore both A&D + DVC to him..

Well, A&D is much much superior than DVC.. The twists and turns of A&D is something which you need to read and experience.

Last but not the least, only these 2 novels of DB are superb.. he wrote 2 more novels, both megaserials.

Kamal and Dan Brown should join to provide a thriller.. else, JKR will take that oppurtunity

மணிவண்ணன் said...

படம் பெரிய குப்பை. காசை வீணாக்க வேண்டாம்!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory