Sunday, 7 December 2008

தண்ணி பார்ட்டியும் தமிள்நாட்டுப்பொண்ணும்

நல்லா மழை பேஞ்சி ஓஞ்சிரிந்திச்சி.24மணி நேர எமெர்ஜென்சி (எலும்பு முறிவுலெ) நான் ஒக்காந்து என்னடா மாப்ளை கேசே வ்ல்ல! தண்ணி கோஷ்டியெல்லாம் மழையில ஊட்லயே உக்காண்டானுங்களா!!!ன்னேன். பக்கத்லெ ஒக்காந்திருந்த பார்ட்டி"பாஸ் சும்ம இருந்த என்னை கெளப்பி உட்டீங்க்ளே பாஸ்.போய் ஒரு பீரை தாக்கி உட்டு வந்திரவா, குளிருக்கு கொஞ்சம் நல்லாயிருக்கும் தலைவா!!!"ன்னான்.டேய் நீ வேர ஆர்,ஆர்,எஸ்(எங்க அஸ்ஸிஸ்டன்ட் ப்ரொஃபெஸ்ஸர்ங்க)வந்தார்னா தாக்கிற்வாற்றா!ன்னேன்.
         ஓபிலெ ஏதோ சத்தம்‍.... பாத்தா ஒரு பொம்பளை உடம்பெல்லாம் கொஞசம் சிராய்ப்பு காயம்!! அவ்ளுக்கு அம்மா வயசுல ஒரு பொம்பளை!!!பின்னாடி புல் மப்புல ஒரு பார்ட்டி. "அய்யய்யோ என் மவள வந்து இந்த அடி அடிக்கிறானெ கட்டைல போறவென் தெரியாம இந்த குடிகார பயலுக்கு பொண்ணக் குடுத்துட்டனே,அனாதப்பய என் பொன்ன என்ன அடி அடிச்சிருக்காம் பாருங்க டாக்டர்"னு அந்த அம்மாகாரி ஒரே அலம்பல்.நம்ம பர்ர்ட்டி அமைதிப்பூங்காவா ஸ்டெடியா பென்ச்சுல உக்காந்திருக்காப்ல.
         சரி இவன்கலைத்திருத்த முடியாது! மாப்ள அந்த பொன்னுக்கு ட்ரீட்மென்ட முடிப்போம்.ஏதாவது எலும்பு எஙகயவது புட்டுக்கிச்சா பாருன்னேன். பாஸ்" எக்ஸ்ரே வேனாம்பாஸ்.அடி சீரியசா இல்ல போலீஸ் அடி மாரி எலும்பு ஒடயாம அடிச்சிருக்கான் பார்ட்டிதான் ஆக்ட் குடுக்கிரா"
         எம்மா சொம்மாயிரு கொஞ்சம்"போலீஸ் க்கு சொல்லி அவன் பென்டைக்களடீர்வமா"ன்னேன்.
         இது எப்பவும் நடக்குரதுதான் சார்! போலீஸ்லாம் வேணாம் அங்க போனா அவன்களுக்கும் நாங்கதான் அழுகணும்!!!வற்ற வழியுல அவனும் ஆட்டோலருந்து எறங்கி கீல உளுந்து அவனுக்கும் கொஞ்சம் காயமா இருக்கு!!! கொஞ்சம் அவனையும் கொஞ்சம் பார்த்து உட்டிருங்கன்னா அம்மாகாரி. டே பாத்தியாடா மாப்பிள்ளை! நம்ம தமிள்நாட்டுப் பொம்பளைங்கன்னா தமிள்னட்டுப்போம்பளைங்க தான்டா,அவன் இந்த அடி அடிச்சிருக்கான், அவனையும் கவனிங்கன்றா பாத்தியா!!!நீ என்னடான்னா பொன்னுகளுக்கு பயந்துக்கிட்டு கல்யாணமே வேணன்ற! போனப் போட்டு உங்கப்பாவ பொண்ணுபாக்கச் சொல்லவா?ன்னேன். "அய்யோ தலைவா! கொஞ்சம் கம்னு இருங்க ஆன்னா ஊன்னா கல்யாணத்த சொல்லி பயமுருத்திரீங்களே" சரி சரி வாங்க அவனை பாப்பம்!!!
           டேய் மவன ஏந்திர்ரா! கண்டபடி தண்ணிய பொட்டு எங்க உயிர வாங்கிரியேடா! 
           லைட்டா அவன் வாயிலருந்து "போலீஸ்"னு ஒரு சத்தம்.என்னது போலீசா வந்தான்ங்கன்னா பொட்டியக்களட்டீர்வானுங்க தம்பி கம்னு இரு உன்னால பேச முடியலல்லன்னேன்.
         பாஸ் சோத்துக்கய்ய இவனால ஆட்ட முடியல பாஸ் ,எடது கைலயும் காயம் இருக்கு உளுந்து ஒடச்சுக்கிட்டான் போல ,எக்ஸ்ரே எடுத்திட்ரேன் பாஸ்ன்னான் .  
         சரி சரி எடு இவனுக்கெல்லாம் எக்ஸ்ரே ஒரு கேடா? பிலிம்தான்டா வேஸ்ட்டு சாவடிக்கனுன்டா இவன்கள!!! ஆம்பிலைங்க பேர கெடுக்கிறான்கடா!!!!ன்னேன்.
        கொஞச நேரத்ல எக்ஸ்ரே வந்திருச்சு பார்த்தா வலது கை எலும்பு உடஞ்சு இருந்திச்சி, இடது கை எலும்பு ஆறுமாசத்துக்கு முன்னாடி உடஞ்சு சேந்தாப்ல் இருந்திச்சு," சரி கட்டப்பொடு இவனுக்கு சரியான தண்டனைதான்"ன்னுட்டு கட்டு பொட்டு முடிச்சு தூங்கப்போயிட்டோம்.
          காலையில  வார்ட்ல பார்த்தா பார்டி தெளிஞ்சு ஒக்காந்திருந்தான்.
போய் "ஏன்டா இப்பிடி தண்ணிய போட்டு பொண்டாட்டிய அடிக்கிரீங்க"ன்னேன்.
சார் நான் தண்ணிய போட்டு ரகள பண்ணது உண்மதான், ஆனா நான் கீள எல்லாம் உளுகலே. எம்பொண்டாட்டியும் அவ அம்மாவும் சேந்து என்னையெ அடிச்சுதான் கைய ஒடச்சுப்புட்டள்ங்க!!! நான் நைட்டே சொல்லப்பாத்தேன் மப்புல முடியலன்னான்!!!! 
அடப்பாவி   ....... "சரி அந்தக்கையி?"    .....ஆரு மாசம் முன்னாடி தண்ணீல‌
அவுங்க ரென்டு பேரும் ஒடைச்ச்துதான். அப்ப நீங்க இல்ல வேர டாக்டர் இருந்தாரு!!!!!!!   
    

21 comments:

அதிரை ஜமால் said...

தமிழ் ரொம்ப உடைஞ்சிருக்கு, அத கொஞ்சம் எக்ஸ்ரே பண்ணி ரிலீஸ் பண்ணுங்கோ பாஸ் அப்பதான் நீங்க பாஸ்

SUREஷ் said...

அனுபவக் கதை நல்லாயிருக்கு சார். ஆனா மொழிதான் கொஞ்சம் புரிய நேரம் எடுக்குது.

thevanmayam said...

ஒரே சிட்டிங்லெ ஒக்காந்து எழுதினதுனால நிறய பிழைகள் இருக்கு!! இன்னொரு முறை படிச்சிங்கன்னா அந்த மாணவர்கள் உபயோகிக்கும் மொழி தெரியும்.அதுக்காகத்தான் அப்படி எழுதியுள்ளேன்!!!!உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி.

thevanmayam said...

சுரேஷ் மிக்க நன்றி காலைல அவசரமா எழுதியது.
உண்மையில இது நடந்ததுதான்!
மொழியில் இன்னும் கவன்ம் எடுக்கிறேன்.
தேவா.

Kali said...

you have told the story in a nice way!!

thevanmayam said...

Thanks kali for coming!!!

Anonymous said...

தமிழை பேச்சு நடையில் எழுதியிருக்கிறீர்கள்! தண்ணிபார்ட்டி
என்றால் தண்ணி அடித்த நபர் தானே!!! கல்லூரி பாஷை எல்லோருக்கும்
புரியுமா.... அடுத்தமுறை எழுதும்போது அருஞ்சொல் பொருள் தருக!!!!

thevanmayam said...

thanks anonymous for your suggestion!!!

syed hakkim said...

thanniya pottadunala evan adi vanginaan thanni podama avan wife en adi vanginaa ????

சந்தனமுல்லை said...

:-))

நசரேயன் said...

நல்லா எழுதுறீங்க, இது என்ன சொந்த கதையா?

கிழஞ்செழியன் said...

மகுடத்துக்கு வாழ்த்துகள்!

ராஜ நடராஜன் said...

பாஷை நல்லாவே புரியுது.புரியாதவங்கள கூப்பிட்டு ரெண்டு நாளக்கி டியுசனு கொடுத்தீங்கன்னா மட்டும் போதும்:)

thevanmayam said...

Hakkim thanni party is the man who got hit by his wife & mother in law. Thats due to his over ரகளை! after taking alcohol.This is a true incident man!!!!

thevanmayam said...

சந்தனமுல்லை வருகைக்கு நன்றி!
அமைதி காத்துவிட்டீரே நண்பரே!!!

thevanmayam said...

ஆம்! இது நடந்த கதை!உண்மைக்கதை!
தங்கள் வருகை தொடரட்டும்(நசரேயன்) நண்பரே!!!

thevanmayam said...

செழியன் நன்றி!உங்கள் விமர்சனம் சொல்லாமல் விட்டு விட்டீர்களே!

thevanmayam said...

நன்றி ராஜ நடராஜன்!!!!
முதல் வருகை!!தொடரட்டும்!!!

உருப்புடாதது_அணிமா said...

உண்மை கதையோ??

உருப்புடாதது_அணிமா said...

இது என்ன தமிழ் ??
இருந்தாலும் அருமை நண்பரே

இனியா said...

கதை நன்றாகவுள்ளது,
மொழி நடை ,விளங்கிகொள்ள சற்று சிரமமாகவுள்ளது.
நட்புடன்
இனியா.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory