Friday, 26 December 2008

அமெரிக்க அரசியல்வாதியும்- தமிழக தங்கங்களும்!!!                        சமீபத்தில் ஒரு மெயிலில்(கொஞ்சம் பழைய மெயில்தான்) படித்தேன்! ஒரு நார்வே பெண்மணி சுமார் 10-15 வருடங்களுக்கு முன், பணம் இல்லாமல் ஐரோப்பிய விமான நிலையம் ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது-ஒரு உயரமான வாலிபர் அவர் நிலை அறிந்து அவருக்கு பண உதவி செய்து அனுப்பிவைத்தார்.
                      
                        நீண்ட நாட்கள் கழித்து அந்தப்பெண் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டிருந்தபோது அதே நபரை தொலைக்காட்சியில் பார்த்துப்பரவசம் அடைந்தார். நாம் அவருக்கு உதவி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஆறிந்து தன் சொந்தக்காரர்கள் அனைவருக்கும் போன் செய்து இந்த நிகழ்ச்சியைக்க்கூறி அவரை ஆதரிக்க வேண்டினார்!!!
                        உங்கள் அனைவருக்கும் தெரியும் !!! அந்த இளைஞர் பாரக் ஒபாமா!!!!! என்று! இந்த நிகழ்சி மிகவும் மனதைத் தொட்டது!! அவர் இந்தியாவுக்கு உதவுவாரா போரை நிறுத்துவாரா என்பது எல்லாம் வேறு விஷயம்! ஆனால் அவருடைய மனிதத்தன்மை இந்த நிகழ்வில் போற்றத்தகுந்தது!!
                      
                      நான்கு நாட்களுக்கு முன் ஒரு அரசியல் கோஷ்டி நிதி கேட்டு என்னிடம் வந்தனர்! அவர்கள் கட்சித்தலைவர் தலைநகர் வருவதாகவும் ,பெரிய அளவில் நிதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டனர்!!

                        மாவட்டத்தலைவர் என்று என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டவரை இதுவரைய  நான் பார்த்ததில்லை அவருடைய பெயரைச்சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டார்!பெயரைக்கேட்டவுடன் எனக்கு அவரைப்பற்றி ஞாபகம் வந்து விட்டது! ( அவர் என் சக மருத்துவரைப்பற்றி அவதூறான போஸ்டர் போட்டவர்) .
                                                                      ஓ!!! நீங்களா அது?.... போஸ்டர் எல்லாம் அடித்து ஒட்டினீர்களே?..... என்று கேட்டேன்!! இப்படிக்கேட்டவுடன் அவர் முகம் சுருங்கி விட்டது!!
                        
                        நீங்க வேற கட்சியில் இருந்தீர்களே?..... என்றேன்!  ஆமாம் நாங்கள் எல்லாம் இந்தக்கட்சிக்கு வந்துவிட்டோம் என்றார்!!.....மிக நல்லது!! ஆனால்.. சாரி, தற்போது என்னால் பணம் தர முடியாது என்று கூறி ஒரு வழியாக அனுப்பி விட்டேன்!!!

                         வெளியே செல்லும் பொது பெரிய பெரிய விளம்பரங்கள் கண்ணில் பட்டன. 
                         அதில் எனக்குத்தெரிந்த அரசியல் வாதிகள் கை கூப்பிக்கொண்டு இருந்தனர். ஆச்சரியம்! மிக குறுகிய காலத்தில் நிறைய பேர் கட்சி மாறி விட்டனர்!! 
                       அதில் இருந்த இன்னொரு நபர் என்னிடம் அவர் கட்சி பேப்பருக்கு சந்தா வாங்கி விட்டு ஏமாற்றியவர்! அவருடன் சிரித்துக்கொண்டு போஸ் கொடுத்தவர் என் இன்னொரு நண்பரிடம் பணம் கேட்டு மிரட்டி போலீசால் தேடி
மாவட்டம் மாவட்டமாக ஓடி ஒளிந்தவர்!!
                                                                                     இப்படி போஸ்டர்களைக்கண்டு மனம் வெறுத்துப்போனேன்!
                                             புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களும் , அரசியல் வாதிகளும் அவர்கள் கட்சிக்கு சேர்க்கும் நபர்களின் மீது உள்ள வழக்குகள், பிண்ணனிகளை ஆராயாமல் குற்றவாளிகளையும், ஏமாற்றுப்பேர்வழிகளையும் கட்சியில் சேர்த்துக்கொள்கின்றனர்!!!
                                                                             இது புதியவர்கள்மீது உள்ள நம்பிக்கையைத் தகர்க்கிறது!!! தமிழ்நாட்டு அரசியல் நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது!!!! 
                                         தமிழகத்தின் எல்லா இடத்திலும் இதுதான் நடக்கிறது என்று நினைக்கிறேன்!
                                புதியவர்களும், படித்தவர்களும் அரசியலுக்கு வர தயங்குவதும் இத்ற்கு ஒரு காரணமா? 
                                 வலைஞர்கள் தங்கள் கருத்தை எழுதலாமே!!!

24 comments:

Kali said...

நம்ம அரசியவாதிகள் பத்தித்தான் தெரியுமே பாஸ்!!!!
ஜோக்கா எழுதிக்கிட்டிருந்தீங்க!இப்ப சீரியஸா எழுத ஆரம்பிச்சுட்டிங்க!!!

ஹரிணி அம்மா said...

நம்ம ஊரில் நல்ல அரசியல் ஆட்களும் இருக்காங்க!!!படிச்சவங்க அரசியல் பக்கம் வரமாட்டேங்கிறீங்க

thevanmayam said...

///நம்ம அரசியவாதிகள் பத்தித்தான் தெரியுமே பாஸ்!!!!
ஜோக்கா எழுதிக்கிட்டிருந்தீங்க!இப்ப சீரியஸா எழுத ஆரம்பிச்சுட்டிங்க!!!///

எத்தனை நாள்தான் ஜோக் எழுதுறது?

thevanmayam said...

///நம்ம ஊரில் நல்ல அரசியல் ஆட்களும் இருக்காங்க!!!படிச்சவங்க அரசியல் பக்கம் வரமாட்டேங்கிறீங்க///

நன்றி! தங்கள் வருகைக்கு!!!

Kali said...

///புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களும் , அரசியல் வாதிகளும் அவர்கள் கட்சிக்கு சேர்க்கும் நபர்களின் மீது உள்ள வழக்குகள், பிண்ணனிகளை ஆராயாமல் குற்றவாளிகளையும், ஏமாற்றுப்பேர்வழிகளையும் கட்சியில் சேர்த்துக்கொள்கின்றனர்!!!///

Kali said...

///ஐரோப்பிய விமான நிலையம் ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது-ஒரு உயரமான வாலிபர் அவர் நிலை அறிந்து அவருக்கு பண உதவி செய்து அனுப்பிவைத்தார்.///

அப்ப அப்படியிருந்தார்! இப்ப எப்படியிருப்பார்னு தெரியலியே!!!

தங்கராசா ஜீவராஜ் said...

///அந்த இளைஞர் பாரக் ஒபாமா!!!!! என்று! இந்த நிகழ்சி மிகவும் மனதைத் தொட்டது!! ///

இப்படியும் இருக்கிறார்கள்..

நல்லவர்களின் பங்களிப்பு விமர்சனத்தோடு நின்று விடுகிறது அரசியலில்.....

thevanmayam said...

///அந்த இளைஞர் பாரக் ஒபாமா!!!!! என்று! இந்த நிகழ்சி மிகவும் மனதைத் தொட்டது!! ///

இப்படியும் இருக்கிறார்கள்..

நல்லவர்களின் பங்களிப்பு விமர்சனத்தோடு நின்று விடுகிறது அரசியலில்.....///

நம் நாட்டு அரசியலில்!!!
தேவா....

பழமைபேசி said...

//புதியவர்களும், படித்தவர்களும் அரசியலுக்கு வர தயங்குவதும் இத்ற்கு ஒரு காரணமா?
//

ஆமாங்க... அது மட்டும் இல்ல, புதுசா வர்றவிங்ககளை இருக்குற ஆட்கள் சுலபமா போட்டுத்தள்ளிடுவாங்க அல்லது மாத்திடுவாங்க... இஃகிஃகி!

தாரணி பிரியா said...

முதல்ல அரசியல் சாக்கடை அப்படின்ற எண்ணம் மாறணும். அதே மாதிரி அரசியல் ஈடுபாடு இருக்கிறவங்களை தேவையில்லாம குறை சொல்லறதை நிறுத்தி அவங்க ஏதாவது நல்ல காரியம் செஞ்சா கொஞ்சம் பாராட்டலாம்.

//புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களும் , அரசியல் வாதிகளும் அவர்கள் கட்சிக்கு சேர்க்கும் நபர்களின் மீது உள்ள வழக்குகள், பிண்ணனிகளை ஆராயாமல் குற்றவாளிகளையும், ஏமாற்றுப்பேர்வழிகளையும் கட்சியில் சேர்த்துக்கொள்கின்றனர்//

ஹீம் எங்க ஊருல ஒரு கவுன்சிலர் பயங்கர ஏமாற்று பேர்வழி. ஊழலுக்கு பேர் போன அந்த கட்சியிலிருந்தே அவரை துரத்திட்டாங்க. இப்ப பார்த்தா அவர் ஒரு ந்டிகரோட கட்சியில சுறுசுறுப்பா இயங்கிட்டு இருக்கார் :(

MayVee said...

its the insecurity which prevails in the politics which stops the educated youth from entering it. none can give gurrantte for one's live in politics......

even if educated youth enters the politics means, thy are being
forced to do third rate politics.
(sds is BE graduate, subramani sami is highly qualified person, dhayanidi maran is MBA, Ramdoss is an DOCTOR etc)

ஆளவந்தான் said...

//
நீங்க வேற கட்சியில் இருந்தீர்களே?..... என்றேன்! ஆமாம் நாங்கள் எல்லாம் இந்தக்கட்சிக்கு வந்துவிட்டோம் என்றார்!!.....மிக நல்லது!!
//

பொழைக்கத் தெரிஞ்ச மனுசன்

akathy said...

தானமும் தயை கொடை யாவும் பிறிவிக்குணம் என்கின்றாள் ஒளவை. ஆளுமை ஒரு மனிதால் வளர்த்துக் கொள்ளப்படுவது. ஒபாமாவின் சாதனை எல்லோருக்கும் முன் உதாரணம். கறை வேட்டிக்காரர் கரை வேட்டி கட்டி ஆள நினைப்பது தான் உங்க நாட்டுப் பிரச்சனை.

Mahesh said...

ரொம்ம்ம்ப நல்லவரா இருக்கீங்களே !!!

நம்ம அரசியல்வாதிகள்ல விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத் தவிர மற்ற லட்சக்கணக்கான அனைவரும் சுயநலவாதிகள், சந்தர்ப்பவாதிகள்தானே! தலைவர்களே அப்படி இருக்கும்போது தொண்டர்களையும் மற்றவர்களையும் என்ன சொல்வது :((

கார்த்திக் said...

இப்போது அரசியல் வாதிகளும் உணர்ந்திருக்காங்க மக்கள் தங்கள் மேல் அளவு கடந்த வெறுப்போட இருக்கறதா.இது அவங்களுக்கு புரிஞ்சதாலதான் மும்பை தாக்குதல் நடந்த சிலமணி நேரத்துலயே மும்பையிலும் டில்லியும் சில இலாக்காக்கள் மற்றம் செய்யப்பட்டன.அன்று காமராஜர் தோல்வியுரசெயதனர் நம்மக்கள் அதன் விளைவு திராவிடக்கட்சிகள் வளர அது வழிசெய்தது.அவர்களின் வரவுக்கு பிந்தைய தமிழகத்தில் தான் ஊழல் மிகுந்தது.
மாற்றம் ஒன்றே உலகில் மாற்றம் இல்லாதது.
மாற்றம் வரும் நம்பிக்கையோடு இருப்போம்.

நல்ல பதிவு தேவன்

thevanmayam said...

//புதியவர்களும், படித்தவர்களும் அரசியலுக்கு வர தயங்குவதும் இத்ற்கு ஒரு காரணமா?
//

ஆமாங்க... அது மட்டும் இல்ல, புதுசா வர்றவிங்ககளை இருக்குற ஆட்கள் சுலபமா போட்டுத்தள்ளிடுவாங்க அல்லது மாத்திடுவாங்க... இஃகிஃகி!///

சரியாக சொன்னீர்கள்!!!
தேவா..

thevanmayam said...

முதல்ல அரசியல் சாக்கடை அப்படின்ற எண்ணம் மாறணும். அதே மாதிரி அரசியல் ஈடுபாடு இருக்கிறவங்களை தேவையில்லாம குறை சொல்லறதை நிறுத்தி அவங்க ஏதாவது நல்ல காரியம் செஞ்சா கொஞ்சம் பாராட்டலாம்.

//புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களும் , அரசியல் வாதிகளும் அவர்கள் கட்சிக்கு சேர்க்கும் நபர்களின் மீது உள்ள வழக்குகள், பிண்ணனிகளை ஆராயாமல் குற்றவாளிகளையும், ஏமாற்றுப்பேர்வழிகளையும் கட்சியில் சேர்த்துக்கொள்கின்றனர்//

ஹீம் எங்க ஊருல ஒரு கவுன்சிலர் பயங்கர ஏமாற்று பேர்வழி. ஊழலுக்கு பேர் போன அந்த கட்சியிலிருந்தே அவரை துரத்திட்டாங்க. இப்ப பார்த்தா அவர் ஒரு ந்டிகரோட கட்சியில சுறுசுறுப்பா இயங்கிட்டு இருக்கார் :(///
எல்லா கட்சியிலும் ஒரே மட்டைகள்தான்!!!

thevanmayam said...

its the insecurity which prevails in the politics which stops the educated youth from entering it. none can give gurrantte for one's live in politics......

even if educated youth enters the politics means, thy are being
forced to do third rate politics.
(sds is BE graduate, subramani sami is highly qualified person, dhayanidi maran is MBA, Ramdoss is an DOCTOR etc)///

All, when see the easy& abuntant
money change!!!

thevanmayam said...

நீங்க வேற கட்சியில் இருந்தீர்களே?..... என்றேன்! ஆமாம் நாங்கள் எல்லாம் இந்தக்கட்சிக்கு வந்துவிட்டோம் என்றார்!!.....மிக நல்லது!!
//

பொழைக்கத் தெரிஞ்ச மனுசன்///

நீங்க ஆளவந்தாத்தான் சரியா வரும்!!!

thevanmayam said...

ரொம்ம்ம்ப நல்லவரா இருக்கீங்களே !!!

நம்ம அரசியல்வாதிகள்ல விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத் தவிர மற்ற லட்சக்கணக்கான அனைவரும் சுயநலவாதிகள், சந்தர்ப்பவாதிகள்தானே! தலைவர்களே அப்படி இருக்கும்போது தொண்டர்களையும் மற்றவர்களையும் என்ன சொல்வது :((///

சரிதான் நீங்க சொன்னது!!!

thevanmayam said...

தானமும் தயை கொடை யாவும் பிறிவிக்குணம் என்கின்றாள் ஒளவை. ஆளுமை ஒரு மனிதால் வளர்த்துக் கொள்ளப்படுவது. ஒபாமாவின் சாதனை எல்லோருக்கும் முன் உதாரணம். கறை வேட்டிக்காரர் கரை வேட்டி கட்டி ஆள நினைப்பது தான் உங்க நாட்டுப் பிரச்சனை.///

எங்க பிரச்சினயை புரிந்து வைத்து இருக்கிறிர்கள்!!!

thevanmayam said...

இப்போது அரசியல் வாதிகளும் உணர்ந்திருக்காங்க மக்கள் தங்கள் மேல் அளவு கடந்த வெறுப்போட இருக்கறதா.இது அவங்களுக்கு புரிஞ்சதாலதான் மும்பை தாக்குதல் நடந்த சிலமணி நேரத்துலயே மும்பையிலும் டில்லியும் சில இலாக்காக்கள் மற்றம் செய்யப்பட்டன.அன்று காமராஜர் தோல்வியுரசெயதனர் நம்மக்கள் அதன் விளைவு திராவிடக்கட்சிகள் வளர அது வழிசெய்தது.அவர்களின் வரவுக்கு பிந்தைய தமிழகத்தில் தான் ஊழல் மிகுந்தது.
மாற்றம் ஒன்றே உலகில் மாற்றம் இல்லாதது.
மாற்றம் வரும் நம்பிக்கையோடு இருப்போம்.

நல்ல பதிவு தேவன்///

நம்பிக்கையே வாழ்க்கை!!!

tamil24.blogspot.com said...

""தமிழகத்தின் எல்லா இடத்திலும் இதுதான் நடக்கிறது என்று நினைக்கிறேன்!
புதியவர்களும், படித்தவர்களும் அரசியலுக்கு வர தயங்குவதும் இத்ற்கு ஒரு காரணமா""

தமிழகத்திற்கொரு புதிய விடியல் வரவேண்டும்.

நம்புவோம்.

சாந்தி

kajan's said...

ஒபாமா றம நல்லவரு போல இருக்கு

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory