
எல்லோரையும் ஆதரிக்கும் மூத்த பதிவர் , சமீபத்தில் தன்னிடம் தன் மனக்குறையை கூறியதாகக் கூறியதை எழுதியிருந்தார்!
அதாவது உடல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தமிழகத்தில் சரியான மரியாதை தருவதில்லை என்றும், சான்றிதழ் வழங்குவதற்கு எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்றும் எழுதியிருந்தார்!!
அதைப்படித்ததில் இருந்து அதைப்பற்றி அவருக்கு விள்க்க வேண்டிய கடமை நம்மில் யாவருக்கும் உள்ளது என்பதை உணர்ந்தேன்.
அதன் விளைவாகவே இந்த இடுகை!!
அவருடைய உணர்வுகள் உண்மையனவைதான்!! ஏறக்குறைய ஊன்முற்றோர் சான்றிதழ் பெறுவது மிகவும் கடினமாக இருந்தது உண்மைதான்!!
தற்போது உள்ள சூழ்நிலையை நான் கூறுகிறேன்!!!
அவரை மறுத்தோ, அவர் சொன்னது தவறு என்றோ நான் கூற வரவில்லை!!
நான் இன்று காலை 9.00 மணிக்கு உடல் குறைபாடு சான்றிதழ் வழங்கும் முகாமுக்குச் சென்றேன்!! 6.45 வரை அங்கு இருந்து விட்டுத்தான் வந்தேன்! தற்போது அரசு உத்தரவுப்படி கலெக்டர்,தாசில்தார்,RDO, BDO, Revenue inspector, VAO, தலையாரி அனைவரும் வர வேண்டும்! அனைவரும் நான் சொன்ன நேரம் வரை இருக்க வேண்டும்!! முகாம் மாதம் இருமுறை சுழல் முறையில் குறிப்பிட்ட ஊர்களில் நடக்கும்.
இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் அங்கேயே , மூன்று சக்கர வண்டிகள்,ஊன்றுகோல்,செயற்கைக்கால்கள்(எனக்கே ஆச்சரியம்) பதியப்பட்டு உடனடியாக வழங்கப்பட்டன. பயணர்கள் உடனடியாக ஓட்டியும் செல்கின்றனர்.
இத்தனைக்கும் கொஞ்சம் சதவிகிதம் குறைவாக இருந்தாலும் கூட்டிப்போட்டு உதவித்தொகை 400 ரூபாய் மாதம் உடனடியாக வழன்குகிறார்கள்!! இதற்கு அவர்கள் வி.ஏ.ஓ , ஆர்.ஐ, என்று அலைய வேண்டியதில்லை!! அவர்களும் முகாமில் கடைசிவரை அமர்ந்து இருப்பார்கள்!
இதில் யாருக்கும் எந்தப்பணமும் தர வேண்டியது இல்லை!!! ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் உண்மை.
மற்றபடி முன்பு போல் அலைய வேண்டியதோ பணம் தர வேண்டியதோ தற்போது இல்லை!!
இந்த செய்தி தமிழகமும் சில விஷயங்களில் முன்னேறித்தான் வருகிறது என்பதை தொல தூர நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால்தான்!!!!
தேவா........
29 comments:
தயவு செய்து இந்த இடுகைக்கு அதிக பரிந்துரைகள் செய்தும் அதிக ஹிட்டுகள் கொடுத்து சூடான் இடுகை ஆக்கி அனைவருக்கும் இது தெரியுமாறு செய்யவும்
thank you Suresh!!!1
ஆங்காங்கே சில நல்ல விஷயங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
அதை தெரியப்படுத்திய தேவாவுக்கு நன்றி.
///ஆங்காங்கே சில நல்ல விஷயங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
அதை தெரியப்படுத்திய தேவாவுக்கு நன்றி.///
ஜமால் திடீர்னு எங்கே ஆளைக்கானோம்?
தேவா....
உபயோகமுள்ள பதிவு...ஆனால் எல்லோருக்கும் இது தெரிய வேண்டுமே?
அன்புடன் அருணா
// இந்த செய்தி தமிழகமும் சில விஷயங்களில் முன்னேறித்தான் வருகிறது என்பதை தொல தூர நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால்தான்!!!! //
நல்ல விசையம்
நன்றி தேவன்
அட! நெசமாச் சொல்றீங்க!!!!!!
நல்லது நடக்கும்போது அதை மனதாரப் பாராட்டுகின்றோம்.
அறியத் தந்தமைக்கு நன்றி.
இப்படி நடப்பவைகளுக்கு சிறப்பு முகாம் என்று பெயர்
முன்னதாகவே அறிவித்து விட்டு கிராமங்களில் இருக்கும் பள்ளிக்கூடத்திலேயே நடத்துவார்கள்
அந்த வட்டத்தில் இருக்கும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாச்சியர், நலிந்தோர் திட்ட வட்டாச்சியர், மற்றும், காது முக்கு தொண்டை மருத்துவர், கண் மருத்துவர், எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர், மனநல மருத்துவர் என்று அனைவரும் ஒரே இடத்திற்கு வருவார்கள்
அன்று காலை சென்றால் மாலை சான்றிதழ் வாங்கி வரலாம்
சிறப்பாக செயல்படும் திட்டங்களில் இதுவும் ஒன்று
///உபயோகமுள்ள பதிவு...ஆனால் எல்லோருக்கும் இது தெரிய வேண்டுமே?
அன்புடன் அருணா///
தெரிய வேண்டும் என்பதால்தான் இதை இடுகையாக்கினேன்!!!!
ந்ன்றி
தேவா
///அட! நெசமாச் சொல்றீங்க!!!!!!
நல்லது நடக்கும்போது அதை மனதாரப் பாராட்டுகின்றோம்.
அறியத் தந்தமைக்கு நன்றி.///
வருகைக்கு நன்றி!!!!
பாராட்டுக்கும் !!!
தேவா..
///இப்படி நடப்பவைகளுக்கு சிறப்பு முகாம் என்று பெயர்
முன்னதாகவே அறிவித்து விட்டு கிராமங்களில் இருக்கும் பள்ளிக்கூடத்திலேயே நடத்துவார்கள்
அந்த வட்டத்தில் இருக்கும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாச்சியர், நலிந்தோர் திட்ட வட்டாச்சியர், மற்றும், காது முக்கு தொண்டை மருத்துவர், கண் மருத்துவர், எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர், மனநல மருத்துவர் என்று அனைவரும் ஒரே இடத்திற்கு வருவார்கள்
அன்று காலை சென்றால் மாலை சான்றிதழ் வாங்கி வரலாம்
சிறப்பாக செயல்படும் திட்டங்களில் இதுவும் ஒன்று///
புருனோ!!! தெளிவாகக்கூறிவிட்டீர்கள்!!
நன்றி!!!
தேவா...
// இந்த செய்தி தமிழகமும் சில விஷயங்களில் முன்னேறித்தான் வருகிறது என்பதை தொல தூர நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால்தான்!!!! //
நல்ல விசையம்
நன்றி தேவன்///
வருக கார்த்திக்!!!
நன்றி....
நல்ல தகவல். அறியத் தந்ததற்கு நன்றி.
///நல்ல தகவல். அறியத் தந்ததற்கு நன்றி///
நன்றி நண்பரே!!!
தேவா....
ஆயிரம் தான் நாம் வக்காலத்து வாங்கினாலும், மேலை நாடுகளைப் பார்க்கும் பொழுது நாம் இன்னும் பின்னடைந்தே உள்ளோம்.
நீங்கள் லண்டன், துபாய் விமான நிலையம் சென்றாலே அதை உணர்வீர்கள். நம் நாட்டவர்க்கு இன்னமும் மனது விரிய வில்லை.
குப்பன்_யாஹூ
நல்லதொரு பதிவு. எப்போதுமே நிலமை ஒரேமாதிரியில்லையென்பதற்கு உதாரணம்.
சாந்தி
நல்லதொரு பதிவு. எப்போதுமே நிலமை ஒரேமாதிரியில்லையென்பதற்கு உதாரணம்.
சாந்தி///
முதல் வருகைக்கு நன்றி!!!
நீங்கள் சொல்வது சரி!!!!
தேவா...
ஆயிரம் தான் நாம் வக்காலத்து வாங்கினாலும், மேலை நாடுகளைப் பார்க்கும் பொழுது நாம் இன்னும் பின்னடைந்தே உள்ளோம்.
நீங்கள் லண்டன், துபாய் விமான நிலையம் சென்றாலே அதை உணர்வீர்கள். நம் நாட்டவர்க்கு இன்னமும் மனது விரிய வில்லை.///
மெல்லச்சிறகுகள் விரியும்!!!
தேவா...
அப்படி உண்மையாக இருக்கும் பட்சத்தில்
.....
வரவேற்கிறேன்
நல்ல பதிவு, பலரும் அறிய வேண்டும். ஓட்டு போட்டாச்சு
Dheva anna
Good post.......
Keep it up.
sinthu
Bangladesh
அப்படி உண்மையாக இருக்கும் பட்சத்தில்
.....
வரவேற்கிறேன்///
உண்மைதான்!!!!
உங்களையும் வரவேற்கிறேன்!!!
தேவா...
நல்ல பதிவு, பலரும் அறிய வேண்டும். ஓட்டு போட்டாச்சு///
மிக்க நன்றி!!1
தேவா...
Dheva anna
Good post.......
Keep it up.
sinthu
Bangladesh///
keep visiting my blog!1
Deva...
அண்ணா இனி ஒரே வருகை தான்..........
சொல்லீட்டீங்கள் இல்ல.............
அண்ணா இனி ஒரே வருகை தான்..........
சொல்லீட்டீங்கள் இல்ல.............
அண்ணா இனி ஒரே வருகை தான்..........
சொல்லீட்டீங்கள் இல்ல....///
வாங்க!!
புயலோ!
தென்றலோ
எதுவானாலும்!!!
நல்ல தகவல் மற்றும் கட்டுரை தேவா. இதில் இருக்கும் முரன் நகையைப் (IRONY) பார்த்தீர்களா? கடமையை செய்வதற்கே ஆச்சரியப்பட்டு பாராட்டும் நிலை.
///நல்ல தகவல் மற்றும் கட்டுரை தேவா. இதில் இருக்கும் முரன் நகையைப் (IRONY) பார்த்தீர்களா? கடமையை செய்வதற்கே ஆச்சரியப்பட்டு பாராட்டும் நிலை.///
உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் அப்படியே!!!
தேவா...
Post a Comment