Tuesday, 20 January 2009

இரண்டு பால்!!!

வணக்கம்!
கவிதை,கவிஜ எல்லாம் படிச்சு இருப்பீங்க! புதுசா ஏதாவது போட்டுக்கிட்டெ இருக்கணும்.இல்லேன்னா தமிழ் வாக்காளப்பெருமக்களிடம் நம்ம நிக்க முடியுமா?
எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தாங்க-நான் இப்ப சொல்லப்போறது!

ரெண்டு பால் மனிதனுக்கு முக்கியங்க!!
ஒன்னு தாய்ப்பால்!
குழந்தை பிறந்தவுடனேயே அம்மாவுடைய தாய்ப்பால் கொடுக்கணுங்க!ஏன்னு நம்ம எல்லாருக்குமே தெரியுமுங்க.அதுல நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்குங்க.நம்ம வீடுகள்ள மாடு கண்ணு போட்டுச்சின்னா சீம்பால்னு திக்கா பால் நமக்குத்தருவாங்க.கண்ணுக்குட்டி குடிச்சது போக மிச்சமிருக்கும்-நமக்குதருவாங்க.இப்பத்தான் வீடுகள்ள மாட்டயே காணுமே.அதுனால இப்ப உள்ள பிள்ளைகளுக்கு சீம்பால்னா தெரிய ஞாயமில்லைங்க.
அதுபோல தாய்ப்பாலும் எங்கங்க குழந்தைக்குக் கொடுக்க முடியுது! பிறந்தவுடனேயே பால் சுரக்கலைன்னு டப்பா பால் வாங்கி வந்து வச்சிடுறாங்க.”என் ரெண்டு குழந்தைக்குமே டின் பால்தான்”ங்கிறது ஃபேஷனாப்போச்சு!

சரி இந்தப்பால் கொடுக்க முடியல! விடுங்க!ரெண்டாவது பால் ரொம்ப இதேபோல ரொம்ப முக்கியங்க! நான் என்ன சொல்ல வற்றேன்னு உங்களுக்கே தெரிந்து இருக்கும்!!

ஆமாங்க! தமிழ்ப்பால்தாங்க!!தாய் மட்டுமில்லாமல்,தந்தை,சகோதரன்,சகோதரி என்று எல்லோருமே இந்தப்பால் ஊட்டலாமுங்க.களிமண் இறுகுவதற்குள்ள சட்டியாவோ,பானையாவோ புடிக்குறோம்.அதுபோல குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே தமிழைக்கத்துக்குடுத்து விடவேண்டுங்க!

நம்ம எல்லாம் சின்ன வயசிலேயே நாவல்,கதை எல்லாம் படிக்க ஆரம்பித்து இருப்போம்!இப்ப நம்ம குழந்தைகள் எழுத்துக்கூட்டி படிக்கவே சிரமபடுறாங்க! தமிழும் தெரியலெ!ஆங்கிலமும் தெரியலே!எல்லாம் பாதி பாதி!
தமிழை சின்னவயதிலேயே கத்துக்கொடுத்து விடனுங்க.அப்பத்தான் தமிழில் சிந்திக்க ஆரம்பிப்பாங்க.தமிழும்,தமிழனும் இந்த உலகத்தில் இருக்கமுடியும்!
ஆங்கிலத்தை விடுங்க! தமிழில் படித்த தமிழர்கள் ஆங்கில கணிணித்துறையையே பார்பொற்றும் விதத்தில் கட்டி ஆளுகிறார்களே!!

தமிழ்ப்பற்று தேவா...

ஒரு மாற்றத்துக்காகா உள்தலைப்பு கீழே!!

தாய்ப்பாலும் தமிழ்ப்பாலும்!

37 comments:

அ.மு.செய்யது said...

நல்ல பதிவு...

இப்பல்லாம் பள்ளிகளில் மாணவர்கள் ஆங்கிலமும் செகண்ட் லேங்குவேஜாக இந்தியையும் பிரஞ்சையும் தான் எடுக்கிறாங்க...தமிழ் மீதுள்ள பற்றும் பாசமும் வெகுவாக குறைந்து விட்டது.பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

குடுகுடுப்பை said...

தமிழ் ஒரு பாடமாகவாவது கத்துக்கொடுக்கவேண்டும்.

நட்புடன் ஜமால் said...

தாய்(ப்) பாலின் அவசியத்தையும் சொல்லி

தமிழ் பாலின் உணர்வையும் சொல்லி

நல்லா இருக்குங்க ...

நட்புடன் ஜமால் said...

\\தமிழில் படித்த தமிழர்கள் ஆங்கில கணிணித்துறையையே பார்பொற்றும் விதத்தில் கட்டி ஆளுகிறார்களே!!\\

சந்தோஷம் தரும் விடயம் தான்.

கோவி.கண்ணன் said...

தாய்பால் தமிழ்பால்,

பின்னிட்டிங்க !

நட்புடன் ஜமால் said...

தேசப்பற்று தேவா

இப்போ

தமிழ்ப்பற்று தேவா ...

கலக்குங்க தேவா ...

அபுஅஃப்ஸர் said...

தாய்ப்பாலைவிட தமிழ்பால் முக்கியம் என்பதை உங்கள் பதிவு சொல்லுது, இப்போது உள்ள காலத்திற்கு இது முக்கியமான/ தேவையான பதிவுங்க.. வாழ்த்துக்கள்

புதியவன் said...

//தமிழ்ப்பற்று தேவா...//

நிரூபிச்சிட்டீங்க தேவா...

thevanmayam said...

நல்ல பதிவு...

இப்பல்லாம் பள்ளிகளில் மாணவர்கள் ஆங்கிலமும் செகண்ட் லேங்குவேஜாக இந்தியையும் பிரஞ்சையும் தான் எடுக்கிறாங்க...தமிழ் மீதுள்ள பற்றும் பாசமும் வெகுவாக குறைந்து விட்டது.பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.///

நீங்க
சொல்வது
சரிதான்
செய்யது...

thevanmayam said...

தமிழ் ஒரு பாடமாகவாவது கத்துக்கொடுக்கவேண்டும்.///

உண்மைதான் நண்பரே!

thevanmayam said...

தாய்(ப்) பாலின் அவசியத்தையும் சொல்லி

தமிழ் பாலின் உணர்வையும் சொல்லி

நல்லா இருக்குங்க ..////

இரண்டு பாலும்
தேவைதானே!!!

thevanmayam said...

\\தமிழில் படித்த தமிழர்கள் ஆங்கில கணிணித்துறையையே பார்பொற்றும் விதத்தில் கட்டி ஆளுகிறார்களே!!\\

சந்தோஷம் தரும் விடயம் தான்.///

உண்மைதான்!!
இன்னும் 20 வருடத்தில்
உலகம் முழுக்க இந்திய்
இளைஞர்கள்தான்
இருப்பார்கள்!!!

thevanmayam said...

தாய்பால் தமிழ்பால்,

பின்னிட்டிங்க !///

நன்றி கோ.வி!!
வருகைக்கும்
கருத்துரைக்கும்!!!
தேவா...

thevanmayam said...

தேசப்பற்று தேவா

இப்போ

தமிழ்ப்பற்று தேவா ...

கலக்குங்க தேவா ..///

இப்படியாவது
நம்ம
பற்றைக்காட்டிக்கொள்வோமே!!

thevanmayam said...

தாய்ப்பாலைவிட தமிழ்பால் முக்கியம் என்பதை உங்கள் பதிவு சொல்லுது, இப்போது உள்ள காலத்திற்கு இது முக்கியமான/ தேவையான பதிவுங்க.. வாழ்த்துக்கள்///

இது முக்கியமான காலம்!
50 வருடத்தில் தமிழ் அழியும் என்று
UNESCO சொல்லியுள்ள நேரம்..

thevanmayam said...

//தமிழ்ப்பற்று தேவா...//

நிரூபிச்சிட்டீங்க தேவா...///

நன்றி
நண்பரே!!!

Sinthu said...

அருகி வரும் மொழிகளில் தமிழ் கிட்டத்தட்ட வது இடத்தில் இருக்கிறது என்பது கவலை தரும் விடயம் அண்ணா................
எல்லா பிள்ளைகளின் பெறோர்களும் தங்கள் குழந்தைகள் ஆங்கில மட்டத்தில் படிக்க வேண்டும் என்றே நினைக்கிறார்களே...
ஆங்கில மட்டத்தில் படிக்கும் பொது தான் தனிளில் இருக்கின்ற பற்று அதிகமாகிறது அண்ணா......

என் பதிவையும் கொஞ்சம் கவனியுங்கோ........... தேவா அண்ணா.....

vinoth gowtham said...

கண்டிப்பாக தமிழை சிறு வயதிலேயே கற்று கொடுக்க வேண்டும்.
இன்னும் சில குழந்தைகள் Mummy, Daddyனு கூப்பிடுவதையே பெற்றோர்கள் விரும்பிகிறார்கள்..
அவர்களும் கொஞ்சம் மாற வேண்டும்..மிக நல்ல பதிவு..

என்னோடைய Blogயும் ஒரு Blog என்று மதித்து வருகை புரிவதற்கும் கருத்து கூறுவதற்கும் மிக்க நன்றிங்க..

thevanmayam said...

கண்டிப்பாக தமிழை சிறு வயதிலேயே கற்று கொடுக்க வேண்டும்.
இன்னும் சில குழந்தைகள் Mummy, Daddyனு கூப்பிடுவதையே பெற்றோர்கள் விரும்பிகிறார்கள்..
அவர்களும் கொஞ்சம் மாற வேண்டும்..மிக நல்ல பதிவு..

என்னோடைய Blogயும் ஒரு Blog என்று மதித்து வருகை புரிவதற்கும் கருத்து கூறுவதற்கும் மிக்க நன்றிங்க..///

அப்படியெல்லாம் இல்லைங்க!!
உங்க பதிவுக்கு என்ன குறை!!
என் கருத்திப்புரிந்து,
பின்னூட்டமிட்டதற்கு
நன்றிங்க!
நிறைய எழுதுங்க!!!

தேவா.....

ராஜ நடராஜன் said...

//ஆங்கிலத்தை விடுங்க! தமிழில் படித்த தமிழர்கள் ஆங்கில கணிணித்துறையையே பார்பொற்றும் விதத்தில் கட்டி ஆளுகிறார்களே!!//

கட்டி ஆள்பவர்களுக்கும் பொட்டி ஆள்பவர்களுக்கும் நல்ல ஊட்டச்சத்து.

thevanmayam said...

//ஆங்கிலத்தை விடுங்க! தமிழில் படித்த தமிழர்கள் ஆங்கில கணிணித்துறையையே பார்பொற்றும் விதத்தில் கட்டி ஆளுகிறார்களே!!//

கட்டி ஆள்பவர்களுக்கும் பொட்டி ஆள்பவர்களுக்கும் நல்ல ஊட்டச்சத்து.///

ஆமாங்க!
நம்தமிழர்
பார்
போற்ற
வாழ்வதில்
மிகுந்த
மகிழ்ச்சிங்க!!

தேவா..

பழமைபேசி said...

தேவையான பதிவு....

தாமதமாயிடுச்சி வர...இஃகிஃகி!

Thusha said...

என்னை உலகுக்கு அறிமுகப்படுத்தியவால் - என் தாய் உலகை எனக்கு அறியப்படுத்தியதும உணர்த்தியதும் - என் தமிழ்
எத்தனை உறவுகள் இருந்தாலும் அவை தாய்க்கு இடாகாது அதே போல் எத்தனை மொழி கற்றாலும் அவை என் தமிழுக்கு இடாகாது

நல்ல பதிவு அண்ணா
துஷா

thevanmayam said...

தேவையான பதிவு....

தாமதமாயிடுச்சி வர...இஃகிஃகி!///

வணக்கம்!!! அதுனால என்ன!!நீங்க ஒரு பக்கம் பிசி!!!
தேவா.....

சந்தனமுல்லை said...

ஒரு நல்ல டாக்டர்-னு நிரூபிச்சிட்டீங்க!! :-)

வேத்தியன் said...

நல்ல பதிவு...

Sinthu said...

அண்ணா எங்களையும் கொஞ்சம் கவனியுங்க................ உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கு வாங்க...............

’டொன்’ லீ said...

:-)

thevanmayam said...

என்னை உலகுக்கு அறிமுகப்படுத்தியவால் - என் தாய் உலகை எனக்கு அறியப்படுத்தியதும உணர்த்தியதும் - என் தமிழ்
எத்தனை உறவுகள் இருந்தாலும் அவை தாய்க்கு இடாகாது அதே போல் எத்தனை மொழி கற்றாலும் அவை என் தமிழுக்கு இடாகாது

நல்ல பதிவு அண்ணா
துஷா///

வருக! துஷா!
இளம் தலைமுறைதான் தமிழை எடுத்துச் செல்ல வேண்டும்!!

thevanmayam said...

ஒரு நல்ல டாக்டர்-னு நிரூபிச்சிட்டீங்க!! :-)///

மிக்க நன்றி
சந்தனமுல்லை அவர்களே!
நீங்க சொன்னா சரி.......

thevanmayam said...

நல்ல பதிவு...///

நன்றி வேத்தியன்!!

thevanmayam said...

அண்ணா எங்களையும் கொஞ்சம் கவனியுங்க................ உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கு வாங்க...............///

கவனிக்கிறேன்.......

thevanmayam said...

:-)///

டொன் லி நன்றி..

thevanmayam said...

:-)///

டொன் லி நன்றி..

நிலாவன் said...

மனிதனாய் பிறந்த
ஒவ்வொருவருக்கும்
குழந்தை பருவத்தில்
தாய்ப்பால் அவசியம்
தமிழனாய் பிறந்த
ஒவ்வொருவருக்கும்
தமிழ்ப்பால் அவசியமக்கப்படவேண்டும் ...

Arulkaran said...

மிக நல்ல பதிவு...

viji said...

நல்ல பதிவு...

www.newspaanaai.com ல் சேற்கவும்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory