Friday, 23 January 2009

பல கோடிகளும் சில குழப்பங்களும்!!!


இனிய (காலை,மதியம்&இரவு) வணக்கம்!!!!

கொஞ்ச நாள் முன்பு ஒரு செய்தி படித்தேன்!!! என்னவென்றால் மனித உடலில் உள்ள கார்பன், ஆக்ஸிஜன்,ஹைட்ரஜன் மூலக்கூறுகள் - 10 to the power of 32-வருடங்கள் அழியாமல் இருக்கும்.அதாவது 32’0000000000 வருடங்கள்?எவ்வளவுன்னு எண்ணிப்பார்த்தால் மூளை குழம்பிப்போயிடும்!!
அதாவது ஏதாவது ஒரு வடிவில் இருக்கும்! அத்தனை வருடங்களுக்குப்பின்புதான் அதற்கு அழிவு.
சற்று யோசித்தால்” கோடி” என்ற சொல்லை நாம்,கணக்கிலோ,பணத்திலோ எத்தனை முறை உபயோகித்து இருப்போம்.? .......குறைவாகத்தான் இருக்கும்.
அப்படியாயின் புராண காலத்தமிழர்களுக்கு- கோடி,கோடானுகோடி,அதற்கு மேலும் பயன்படுத்தவோ சிந்திக்கவோ,அவற்றை எழுத்தில் பதியவோ வேண்டிய தேவை என்ன? இதுக்கு ஏதாவது காரணங்கள் இருக்கலாம்! தெரிந்தவர்கள் சொல்லுங்க...
என்னடா இரண்டையும் போட்டுக்குழப்புகிறானே என்று நினைக்க வேண்டாம்.
இந்த சிந்தனை என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும், ரொம்ப நாளா..
அதே போல இந்து மதம் மற்றும் இன்னபிற மதங்களிலும் மனிதனின் இறப்பிற்குப்பின் தொடரும் வாழ்க்கை பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
என்னங்க எவ்வளவு வருடம் சிரமப்பட்டு சேர்த்த அறிவு,நினைவுகள் எல்லாம் ஒரே நாளில் மண்ணோடு மண்ணாகிப்போவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே!!உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுதா?
இறந்த பின்னும் நமக்கு வாழ்க்கை ஏதோவொருவடிவில் இருக்கிறது என்ற திருப்தியோடுதான் ஆன்மீகவாதியெல்லாம் இருக்கிறார்கள்.
என்னை உயிருடன் சமாதியில் வையுங்கள் என்று சில (என்ன நம்பிக்கை பாருங்கள்?) சாமியார்கள் சாவதைப் பார்க்கிறோம்!
எல்லோரும் அப்படி நம்பிக்கையோடுதான் இருக்கிறார்களா?........... இல்லை இதுக்கு மேல் ஒன்றும் இல்லை!....குடும்பம்,குழதைகள் எல்லோருடனும் இனி எந்த தொடர்போ,எதுவுமோ இல்லை என்று மனசங்கடத்துடன்சாகிறார்களா?
அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்,உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் கூறுகிறேன்............என்பதுபோல அடுத்த பிறவியில் உங்களுக்கு பதில் அளிக்கிறேன் என்று நான் எழுத முடியுமா?இஃகி. இஃகி...இஃகி...........

அடுத்த பிறவியில நீங்க எனக்கு மனைவியாகவும், நான் உங்களுக்கு கண்வனாகவும் வந்து நீங்க எனக்குச் செய்கிற கொடுமைக்கெல்லாம் பழி வாங்குவேன்னு நம்ம மனைவிமார்கள் எவ்வளவு நம்பிக்கையோடு சொல்றாங்க பாருங்க!!
சில கிராமத்து மனிதர்கள் சாகும்போது “அதோ என் புருஷன் வந்து கூப்பிடுகிறார் நான் போகிறேன்” என்று சொல்லுவதை கேட்டிருக்கிறோம்..
அப்ப ரொம்ப அறிவியல் தெரியாதவன் சந்தோசமா சாகிறானோ?

நமக்குத்தான் பயம்,குழப்பம் எல்லாமா?
அடுத்த பிறவியிலே என்னவாப்பிறக்கப்போறோம் என்று தெரியவில்லை.
நாயாவோ,காக்கையாவோ,ஓணானாகவோ ஏன், கல்,மண்ணகவோ பிறக்கும் வாய்ப்புக்கூட இருக்கும் போல........
(நாயை கல்லால எறியாதீங்கப்பா! காக்கைக்கு சாப்பாடு வைங்க!)
இதைதான்” கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன்! ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலயில் மரமாவேன்” என்று கவிஞன் பாடினானோ??

நான் குழம்பியதும் இல்லாம உங்களையும் நல்லா குழப்பி விட்டேனா?
உங்கள் கருத்தையும் போட்டு எல்லாரையும் குழப்பிவிடுங்க!!

குழப்புகிற தேவா......

34 comments:

அ.மு.செய்யது said...

//அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்,உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் கூறுகிறேன்............என்பதுபோல அடுத்த பிறவியில் உங்களுக்கு பதில் அளிக்கிறேன் என்று நான் எழுத முடியுமா?இஃகி. இஃகி...இஃகி...........
//

ஹா ஹா..வெகுவாக ரசித்தேன்..

அ.மு.செய்யது said...

மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை..இருந்தாலும் உங்கள் பதிவு கொஞ்சம்
சுவாரஸ்யமாகவே இருந்தது.

புரிஞ்ச மாதிரியே இருக்கு...கொஞ்சம் மேகமூட்டமா இருக்கு..

Anonymous said...

நல்ல ஆராய்ச்சி. மனிதனின் இறப்புக்கு பிறகு என்ன? விஞ்ஞானிகளும் கண்டு பிடிக்க முடியாத தனி உலகம். இந்த தனி உலகத்தை ஆன்மீகத்தின் வழியில் அடைந்தால் வாழ்வுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.

Anonymous said...

நல்ல ஆராய்ச்சி. மனிதனின் இறப்புக்கு பிறகு என்ன? விஞ்ஞானிகளும் கண்டு பிடிக்க முடியாத தனி உலகம். இந்த தனி உலகத்தை ஆன்மீகத்தின் வழியில் அடைந்தால் வாழ்வுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.

நட்புடன் ஜமால் said...

\\அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்,உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் கூறுகிறேன்............என்பதுபோல அடுத்த பிறவியில் உங்களுக்கு பதில் அளிக்கிறேன் என்று நான் எழுத முடியுமா?இஃகி. இஃகி...இஃகி...........\\

சீரியஸா படிச்சிக்கிட்டு வந்தேன் திடீர்ன்னு சிரிக்க வச்சிட்டீங்க.

thevanmayam said...

//அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்,உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் கூறுகிறேன்............என்பதுபோல அடுத்த பிறவியில் உங்களுக்கு பதில் அளிக்கிறேன் என்று நான் எழுத முடியுமா?இஃகி. இஃகி...இஃகி...........
//

ஹா ஹா..வெகுவாக ரசித்தேன்..///

நல்லா ரசிங்க!!சிரிங்க!
கருத்துக்கு நன்றி..

thevanmayam said...

மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை..இருந்தாலும் உங்கள் பதிவு கொஞ்சம்
சுவாரஸ்யமாகவே இருந்தது.

புரிஞ்ச மாதிரியே இருக்கு...கொஞ்சம் மேகமூட்டமா இருக்கு..///

எல்லாம் எனக்கும் புரியவில்லை!!!

thevanmayam said...

நல்ல ஆராய்ச்சி. மனிதனின் இறப்புக்கு பிறகு என்ன? விஞ்ஞானிகளும் கண்டு பிடிக்க முடியாத தனி உலகம். இந்த தனி உலகத்தை ஆன்மீகத்தின் வழியில் அடைந்தால் வாழ்வுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.///

அதைத்தவிர தற்போது வேறு வழியில்லை...

thevanmayam said...

\\அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன்,உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் கூறுகிறேன்............என்பதுபோல அடுத்த பிறவியில் உங்களுக்கு பதில் அளிக்கிறேன் என்று நான் எழுத முடியுமா?இஃகி. இஃகி...இஃகி...........\\

சீரியஸா படிச்சிக்கிட்டு வந்தேன் திடீர்ன்னு சிரிக்க வச்சிட்டீங்க.//

சீரியஸும் சிரிப்பும் கலந்த மிக்ஸர்..

பிரபு said...

குழப்புகிற தேவா......
சரியான பெயர்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

மறுபிறப்பில் எனக்கு நம்பிக்கை கிடையாது.
ஆயினும் உங்கள் கட்டுரை சுவையாக இருக்கிறது.
அதே நேரம் சற்றுக் குழப்புவதாகவும் உள்ளது.
குழப்பத்தின் பின்தானே தெளிவு கிடைக்கும்.

thevanmayam said...

குழப்புகிற தேவா......
சரியான பெயர்///

நானே குழம்பிப்போய்தான்
எழுதியுள்ளேன்

தேவா.....

thevanmayam said...

மறுபிறப்பில் எனக்கு நம்பிக்கை கிடையாது.
ஆயினும் உங்கள் கட்டுரை சுவையாக இருக்கிறது.
அதே நேரம் சற்றுக் குழப்புவதாகவும் உள்ளது.
குழப்பத்தின் பின்தானே தெளிவு கிடைக்கும்.///

ஆம்!! இந்த தலைப்பில் தேர்ந்தவர்கள்
கருத்து எழுதினால் குழப்பம் தீரும்...

Arulkaran said...

மறுபிறப்பில் எனக்கும் நம்பிக்கை இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஆயினும் குறுகிய காலமேயான எமக்கு தெரிந்த எம்மால் தீர்மானிக்க முடிகிற இந்த வாழ்க்கையை நாம் நம்பிக்கையாலும் மகிழ்ச்சியாலும் மனிதாபிமானத்தாலும் நிரப்ப வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்...

நிலாவன் said...

இந்த பிறவியில் செய்த பாவத்திற்கு
அடுத்த பிறவியில் தண்டனை கிடைக்கும்
என்று பெரியோர்கள் சொல்லுவாங்க
அது இப்பிறவியில் பாவம் செய்யாம இருக்கத்தான்
மத்தபடி அடுத்த பிறவிங்கறது இருக்கா இல்லையா
தெரியாது ....
கட்டுரை குழப்புது ...

Nilavum Ammavum said...

தமிழ் துளின்னு வச்சதுக்கு பதிலா அறிவியல் துளி , சிந்தனை துளின்னு வசுருக்கலமோ?

எனக்கு இந்த பதிவு படிச்சப்ப...அருணா ஆதித்தனார் நான் தன் ஜோதா பாய் என்று சொன்னது தான் ந்யபகம் வருகிறது.....ஒரு வேலை அவர்கள் அங்க விட்டு வைத்த க்மூசு காற்று தான் இப்போ நினைவுகளை தூண்டி விடுதோ....என்னமோ போங்கையா....நான் எப்போ என் பழைய அரண்மனைக்கு போகுறது.....என் மூச்சு கத்து கண்டு பிடிக்குறது....

\\உங்க முந்தைய பதவின் கருத்துரை உண்மை தான்...அதற்க்கான உடற்ப்பயிர்ச்சிகளை செஞ்சுட்டு தான் இருக்குறேன்.. ///

thevanmayam said...

மறுபிறப்பில் எனக்கும் நம்பிக்கை இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஆயினும் குறுகிய காலமேயான எமக்கு தெரிந்த எம்மால் தீர்மானிக்க முடிகிற இந்த வாழ்க்கையை நாம் நம்பிக்கையாலும் மகிழ்ச்சியாலும் மனிதாபிமானத்தாலும் நிரப்ப வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்...//

தெளிவா இருக்கீங்க நண்பரே!!!

thevanmayam said...

இந்த பிறவியில் செய்த பாவத்திற்கு
அடுத்த பிறவியில் தண்டனை கிடைக்கும்
என்று பெரியோர்கள் சொல்லுவாங்க
அது இப்பிறவியில் பாவம் செய்யாம இருக்கத்தான்
மத்தபடி அடுத்த பிறவிங்கறது இருக்கா இல்லையா
தெரியாது ....
கட்டுரை குழப்புது ...///

அடுத்த பிறவி ,இந்த பிறவி எல்லாமே குழப்பந்தானே!!

thevanmayam said...

தமிழ் துளின்னு வச்சதுக்கு பதிலா அறிவியல் துளி , சிந்தனை துளின்னு வசுருக்கலமோ?

எனக்கு இந்த பதிவு படிச்சப்ப...அருணா ஆதித்தனார் நான் தன் ஜோதா பாய் என்று சொன்னது தான் ந்யபகம் வருகிறது.....ஒரு வேலை அவர்கள் அங்க விட்டு வைத்த க்மூசு காற்று தான் இப்போ நினைவுகளை தூண்டி விடுதோ....என்னமோ போங்கையா....நான் எப்போ என் பழைய அரண்மனைக்கு போகுறது.....என் மூச்சு கத்து கண்டு பிடிக்குறது....

\\உங்க முந்தைய பதவின் கருத்துரை உண்மை தான்...அதற்க்கான உடற்ப்பயிர்ச்சிகளை செஞ்சுட்டு தான் இருக்குறேன்.. ///
///

ஆஹா! மிக்க நன்றி .
உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்டீர்களா...வலிய உடல் பெற வாழ்த்துக்கள்!!!!!

’டொன்’ லீ said...

//மனித உடலில் உள்ள கார்பன், ஆக்ஸிஜன்,ஹைட்ரஜன் மூலக்கூறுகள் - 10 to the power of 32-வருடங்கள் அழியாமல் இருக்கும்//

உண்மைதானே...பெற்றோலியப் பொருட்கள் அப்படித்தானே உருவானவை...?

Deva said...

//மனித உடலில் உள்ள கார்பன், ஆக்ஸிஜன்,ஹைட்ரஜன் மூலக்கூறுகள் - 10 to the power of 32-வருடங்கள் அழியாமல் இருக்கும்//

உண்மைதானே...பெற்றோலியப் பொருட்கள் அப்படித்தானே உருவானவை...?//

சரிதான்!!
தூண்,துரும்பு,பெட்ரொல் அனைத்திலும்.....
இன்னும் குழப்பம்>>>>>>>>>>

Sinthu said...

தேவா அண்ணா தெளிவாகக் குழப்பிவிட்டீர்கள்........ நன்றி..........

thevanmayam said...

தேவா அண்ணா தெளிவாகக் குழப்பிவிட்டீர்கள்........ நன்றி......///

நீ முன்பு தெளிவில்லாத குழப்பத்தில்தானே இருந்தாய்...
இப்ப பரவாயில்லைதானே!!!

இராகவன் நைஜிரியா said...

நாளைக்கு என்ன நடக்க போகுது அப்படின்னு தெரியல...

இதுல இறந்த பின் நடப்பதை பற்றி யோசிக்க உங்களுக்கு எங்க நேரம் கிடைச்சது நண்பா...

thevanmayam said...

நாளைக்கு என்ன நடக்க போகுது அப்படின்னு தெரியல...

இதுல இறந்த பின் நடப்பதை பற்றி யோசிக்க உங்களுக்கு எங்க நேரம் கிடைச்சது நண்பா...///

முயற்சி செய்தால் எல்லாவற்றிற்கும் நேரம் கிடைக்கும் நண்பரே!!!
நன்றியுடன்
தேவா...

vinoth gowtham said...

சார்,
இந்த மறு ஜென்மம் பத்தி அமெரிக்கன் டாக்டர் ஒருத்தரோட Book ஒன்னு இருக்கு. அவற்கு ஒரு Patientதோட நேர்ந்த அனுபவம்.. அப்புறம் அது கூட சம்பந்தா பட்ட அவருடுய வாழ்க்கை நிகழ்வுகள்.. அவரோடைய குடும்பதில் ஏற்பட்ட மாற்றங்கள் அதுல சொல்லி இருப்பார். அதுல என்னன்னா நம்மொடைய இந்த பிறவியில் நம்மோடு இருக்கும் அப்பா அம்மா தம்பி தங்கை மனைவி இப்படி பல பேர் நம்மடைய அடுத்த பிறவிளுயும் நமக்கு முன்னாடி இருக்குற பிறவிலையும் எதோ ஒரு வகையுல நம்மக்கு Related ட இருப்பாங்க நம்ம எடுக்குற எல்லா பிறவிலையும் நம்ம அவங்கல எதோ ஒரு வகையுல Cross பண்ணி தான் வருவோம் அப்படினு சொல்லி இருப்பாரு. எனக்கு அந்த BOOK ட content தான் தெரியும் ..மத்தபடி யாரு ஆசிரியர், பெயர் இது எல்லாம் மறந்து விட்டேன். எப்பயோ படிச்சு இருக்கேன். உண்மைய கூட இருக்கலாம்..ஆனா அந்த புக் அது வந்த கால கட்டதில் பரபரப்பாக பேச பட்டது. இதை பற்றி குருமூர்த்தி என்பவர் கூட துக்ளக்கில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார் few years bac.. நிறைய Spelling mistake மன்னிச்சிடுங்க..

vinoth gowtham said...

சார் இந்த பிறவிகள் பத்தி அமெரிக்கன் டாக்டர் ஒருத்தரோட BOOK ஒன்னு இருக்கு. அது வந்த கால கட்டதில் பரபரப்பாக பேசப்பட்டது என்று கேள்வி பட்டு இருக்கிறேன். அந்த புக் பற்றி குருமூர்த்தி அவர்கள் கூட துக்ளக்கில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். ஆனா எனக்கு BOOK Name, Author இதெல்லாம் மறந்து போச்சு. Content மட்டும் ஞபகத்துல இருக்கு..அதுல என்ன சொல்லி இருப்பர்ன அவர்கிட்ட PATIENT வந்த ஒரு பொண்ண பத்தி சொல்லி இருப்பாரு..அவரு ஒரு Psychiatristஅந்த பொண்ணோட பிரச்சனை, அந்த பொன்னல தன் வாழ்வில் நடந்த மாற்றங்கள், அந்த பென்னோடைய பூர்வ ஜென்ம நிகழ்வுகள், அந்த நிகழ்வில் தன்னுடைய பங்கு ..இப்படி போகும்.. அதுல சிம்பிள் லாஜிக் என்ன சொல்லி இருப்பருனா இந்த பிறவியில் நம்முடன் இருக்கும் அம்மா அப்பா தங்கை தம்பி அண்ணன் Friends இப்படி பல பேர் நம்ம முன் பிறவியுளும் பின் பிறவியுளும் எதோ ஒரு வகையில் நம்மக்கு Related இருப்பாங்க நம்ம எதாச்சும் ஒரு வகையுள அவங்கள கண்டிபா CROSS பண்ணி தான் வருவோம்நு சொல்லி இருப்பாரு..உண்மைய இருக்கலாம் ..நிறைய Spelling mistakes மன்னிச்சிடுங்க..

ஹேமா said...

அச்சோ...தேவா என்ன சொன்னீங்க இப்போ.ஒண்ணுமே விளங்கல.
திருப்பிச் சொல்லுங்க.மறுபிறப்பு இருக்கா?

ஹேமா said...

எனக்குக் கனநாளா ஒரு கேள்வி.
மனுசன் செத்தா பேயா வந்து கதைக்கிறான்,அழுகிறான்,சாப்பாடு கேகிறான், சத்தம் கேட்டது என்று!நான் கேக்கிறது நாய் பூனை மாடு செத்தால் பேயாய் வந்து சாப்பாடு கேக்காதா?

thevanmayam said...

சார்,
இந்த மறு ஜென்மம் பத்தி அமெரிக்கன் டாக்டர் ஒருத்தரோட Book ஒன்னு இருக்கு. அவற்கு ஒரு Patientதோட நேர்ந்த அனுபவம்.. அப்புறம் அது கூட சம்பந்தா பட்ட அவருடுய வாழ்க்கை நிகழ்வுகள்.. அவரோடைய குடும்பதில் ஏற்பட்ட மாற்றங்கள் அதுல சொல்லி இருப்பார். அதுல என்னன்னா நம்மொடைய இந்த பிறவியில் நம்மோடு இருக்கும் அப்பா அம்மா தம்பி தங்கை மனைவி இப்படி பல பேர் நம்மடைய அடுத்த பிறவிளுயும் நமக்கு முன்னாடி இருக்குற பிறவிலையும் எதோ ஒரு வகையுல நம்மக்கு Related ட இருப்பாங்க நம்ம எடுக்குற எல்லா பிறவிலையும் நம்ம அவங்கல எதோ ஒரு வகையுல Cross பண்ணி தான் வருவோம் அப்படினு சொல்லி இருப்பாரு. எனக்கு அந்த BOOK ட content தான் தெரியும் ..மத்தபடி யாரு ஆசிரியர், பெயர் இது எல்லாம் மறந்து விட்டேன். எப்பயோ படிச்சு இருக்கேன். உண்மைய கூட இருக்கலாம்..ஆனா அந்த புக் அது வந்த கால கட்டதில் பரபரப்பாக பேச பட்டது. இதை பற்றி குருமூர்த்தி என்பவர் கூட துக்ளக்கில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார் few years bac.. நிறைய Spelling mistake மன்னிச்சிடுங்க..///

இந்தியாவிலும் இது சம்பந்தமாக நிறைய பதிவுகள் உள்ளன.
உங்கள் பதிலே ஒரு பதிவு போல உள்ளது..
தொடர்ந்த பதிவு இயலுமா என்று பார்ப்போம்...

Vishnu... said...

நல்ல பதிவு நண்பரே...
ஆமா ஏன் இப்படி ???..
என்னாச்சு உங்களுக்கு ??
ரொம்ப யோசிக்க
ஆரம்பிச்சிடீங்களா ???

மறு பிறவி பத்தி இப்ப சிந்தனை வர காரணம் என்னவோ நண்பரே ...

எது எப்படி என்றாலும் யோசிக்க வேண்டிய விஷயம் தான் நீங்கள் சொல்வதும் ..

கண்டிப்பா இத பத்தி தெரிஞ்சிட்டு வந்து கொஞ்சமாவது நானும் குழப்ப முயற்சி செய்கிறேன் ...

அன்புடன்
விஷ்ணு

பழமைபேசி said...

ஐயா, முற்பிறவின்னு சொல்லுறப்ப அடுத்த பிறவின்னு ஒன்னு இருக்கலாம்ன்னுதான் நினைக்கேன்... கொஞ்சம் பயமாவும் இருக்கு... இஃகிஃகி!

thevanmayam said...

நல்ல பதிவு நண்பரே...
ஆமா ஏன் இப்படி ???..
என்னாச்சு உங்களுக்கு ??
ரொம்ப யோசிக்க
ஆரம்பிச்சிடீங்களா ???

மறு பிறவி பத்தி இப்ப சிந்தனை வர காரணம் என்னவோ நண்பரே ...

எது எப்படி என்றாலும் யோசிக்க வேண்டிய விஷயம் தான் நீங்கள் சொல்வதும் ..

கண்டிப்பா இத பத்தி தெரிஞ்சிட்டு வந்து கொஞ்சமாவது நானும் குழப்ப முயற்சி செய்கிறேன் ...

அன்புடன்
விஷ்ணு///

வருகைக்கு நன்றி விஷ்ணு!!
தகவலோட வாங்க...

thevanmayam said...

///ஐயா, முற்பிறவின்னு சொல்லுறப்ப அடுத்த பிறவின்னு ஒன்னு இருக்கலாம்ன்னுதான் நினைக்கேன்... கொஞ்சம் பயமாவும் இருக்கு... இஃகிஃகி!///

நன்றி/
வருக நண்பரெ!!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory