கண்ணுக்குத் தெரியாத
எதிகளின் இரவு
அணிவகுப்பு!
நினவா கனவா என்ற
நிலை புரியாத
அவஸ்தை!
எழ முடியாமல்
மூட்டுக்களை முடக்கும்
கயமைத் தனம்!
அனலாய்க் கொதிக்கும்
மூச்சு!
மாறி மாறி
உடலையும்
உள்ளதையும் சிதைக்கும்
வன்மம்!!
எதற்காக இந்த கொடூரம்?
எலும்பையும் சதையையும்
முடக்கி
மானுடத்தைச் செயலிழக்கும்
உன்னை யார் தண்டிப்பர்?
எந்த எதிரிகள்
ஏவிய பானம் நீ!!
எழுத்தில் சொல்ல முடியாத
அவஸ்தைக்கு
நீதான் காரணம் என்பதறிவாயா?
தான் என்ன செய்கிறோம்
என்று அறியாத
இவற்றிற்கு ஏன்
இவ்வளவு சக்தி?
இறைவா!
அழித்தி விடு இவர்களை!
உறக்கக் கலக்கத்தில்
நீ உருவாக்கிய
இவை எல்லா
உயிர்களையும் அழிக்குமுன்
நீ விழித்தெழு!!
33 comments:
தலைவரே, காய்ச்சலுக்கு ஒரு கவிதயா? ரைட்டு..
Blogger கார்த்திகைப் பாண்டியன் said...
தலைவரே, காய்ச்சலுக்கு ஒரு கவிதயா? ரைட்டு./
நம்ம சும்மா விட முடியுமா! காய்ச்சல் வந்தாலும் கை துறுதுறுங்குதே!!
காய்ச்சலின் தீவிரம் தெரிகிறது...விரைவில் குணமடைவீர்கள்..
//நம்ம சும்மா விட முடியுமா! காய்ச்சல் வந்தாலும் கை துறுதுறுங்குதே!!
//
இந்த பிளாக்கரேய காய்ச்சலுக்கு மருந்து கிடையாதே டாக்டர்
புலவன் புலிகேசி said...
காய்ச்சலின் தீவிரம் தெரிகிறது...விரைவில் குணமடைவீர்கள்..
10 December 2009 07:10///
வந்து நல்ல வார்த்தை சொன்னது ரொம்ப ஆறுதலா இருக்கு!1
அத்திரி said...
//நம்ம சும்மா விட முடியுமா! காய்ச்சல் வந்தாலும் கை துறுதுறுங்குதே!!
//
இந்த பிளாக்கரேய காய்ச்சலுக்கு மருந்து கிடையாதே டாக்டர்
10 December 2009 07:11//
இது நட்பும் அன்பும் கலந்த காய்ச்சல் சாமி!! விடாது!!
பாவுங்க அந்த மனுசன்(இறைவன்) பொரிகடலையும், பொங்கலையும் திங்கவே அவனுக்கு நேரம் சரியா இருக்கு.
உங்க சமூகம்(மருத்துவ சமூகம்) ஏற்கனவே பல கண்ணுக்கு தெரியாத எதிரிகளை அழித்ததுபோல இந்த எதிரிகளையும் அழித்து கடவுலாகிடுங்க (அழித்தல் கடவுள்) -:)))
// தேவன் மாயம் said...
Blogger கார்த்திகைப் பாண்டியன் said...
தலைவரே, காய்ச்சலுக்கு ஒரு கவிதயா? ரைட்டு./
நம்ம சும்மா விட முடியுமா! காய்ச்சல் வந்தாலும் கை துறுதுறுங்குதே!!
//
பர்பைக்ட் பிளாக்கர் -:)))
//உறக்கக் கலக்கத்தில்
நீ உருவாக்கிய
இவை எல்லா
உயிர்களையும் அழிக்குமுன்
நீ விழித்தெழு!!///
............. காய்ச்சலிலும் கவிதை பார்வை. சூப்பர், போங்க!
semaiya irukku...
ama yaarukku fever???
அன்பின் தேவா
விரைவில் குணமாகி விடும்
கணினியில் நேரத்தைச் செலவழிக்க வேண்டாம் - ஓய்வெடுக்கவும்
நல்வாழ்த்துகள்
Paracetamol + கொஞ்சம் வெந்நீர்!
ஒரு புறாவுக்கு போரா ??
ஒரே அக்கப்போரல்லாகவா இருக்கிறது.
(Voted !!! )
என்னா வைத்தியரே
மாத்திரை சாப்பிட பயமா ...
காய்ச்சல் வந்தாலும் கை துறுதுறுங்குதே!!//
:))))
காய்ச்சலிலும் கவிதை
கருத்துக்கள் புதுமை
இரவிலா வந்தார்கள் எதிரி?
மருந்தும் ஓய்வும் உதவி
காய்ஸல் ஒடிவும் பதறி.
விரைவில் குணமடைக.
காய்ச்சலிலும் கவிதை
கருத்துக்கள் புதுமை
இரவிலா வந்தார்கள் எதிரி?
மருந்தும் ஓய்வும் உதவி
காய்ச்சல் ஒடிவிடும் பதறி.
விரைவில் குணமடைக.
இதுக்குக் கூட கவிதை எழுதமுடியுமா?
ரொம்ப அவதி பட்டிங்களா டாக்டர்....
விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்..
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.கவிதை நல்லா இருக்கு.
மாறுப்பட்ட கோணத்தில் நல்லதோர் கவிதை... பாரட்டுக்கள் மருத்துவரே.
//கண்ணுக்குத் தெரியாத
எதிகளின் இரவு//
எதிரிகளின் என்று இருக்க வேண்டுமோ?
எதிரிகளை அழிக்க கொசுவத்தி சுத்தவும். :-))
அழிக்கனும்ணா ஸ்ட்ராங்கான ஆன்டிபயாடிக் கொடுத்துட வேண்டியது தானே டாக்டர்!! சரி, இப்போ உடல் நலம் எப்படி இருக்கு?
காய்ச்சல் அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறென்.
//கண்ணுக்குத் தெரியாத
எதிகளின் இரவு
அணிவகுப்பு!//
எதிரிகூட எதி ஆயிடுச்சு.
// ஜெகநாதன் said...
Paracetamol + கொஞ்சம் வெந்நீர்!//
சூப்பர்.
மருத்துவருக்கே பயம்வந்துடுச்சா
எல்லோருடைய வேண்டுதலும் இதேதான்
மாறுப்பட்ட கோணத்தில் நல்லதோர் கவிதை... பாரட்டுக்கள்
//இறைவா!
அழித்தி விடு இவர்களை!
உறக்கக் கலக்கத்தில்
நீ உருவாக்கிய
இவை எல்லா
உயிர்களையும் அழிக்குமுன்
நீ விழித்தெழு!!//
நல்லாயிருக்கு டாக்டர்...
ரொம்ப நல்லா இருக்கு தேவா.
குறிப்பாக இறுதி வார்த்தைகள் அருமை :-)
ஆஹா, அழகா இருக்கு. வாழ்த்துக்கள். [உடம்பு சரியில்லைனாலும் யோசித்துக்கொண்டே இருப்பீகளா?]
நெருப்பைப் படைத்தவன்
நீரையும் படைத்தான்...
தன் இருப்பை
மறந்து மனிதன்
இயந்திரமாய்
மாறாதிருக்க
இவைகளைப் படைத்து
தடுக்க
உங்களையும் [மருத்துவர்கள்] படைத்து விட்டான்...
இறைவன் இதயம் உள்ளவன் தான்.
காய்ச்சலுக்கு கவிதையா? வித்தியாசமான சிந்தனை. படிக்கும்போது எதோ கொசுவுக்குத்தான் எழுதி இருப்பீர்கள் என்று நினைத்தேன். பின்னூட்டங்களைப் பார்த்துதான் காய்ச்சலுக்கு கவிதை என அறிந்தேன். நல்லாருக்கு!
awareness through kavithai eh?
nice.
நல்ல யோசனை.
-பதுமை.
விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்
Post a Comment