Monday, 21 December 2009

தமிழ் வலைப் பதிவுகள்- சில கருத்துக்கள்!

அன்பு நண்பர்களே!!

பதிவுலகத்தில் நாமும் தொடர்ந்து பல்வேறு விசயங்களை எழுதி வருகிறோம். அவற்றை உடனுக்குடன் தொகுத்து வெளியிட திரட்டிகளும் உள்ளன. பல திரட்டிகளில் பதிவுகளைத் திரட்ட தானியங்கி மின்னணுக்கருவிகளும் உள்ளன! நம் கருத்துக்களை எழுதி, அதனை அஞ்சலில் அனுப்பி, ஆசிரியர் குழு அதனைப் பரிசீலித்து அதன்பின் அதனை வெளியிடும் பழைய முறையை(தற்போதும் பத்திரிக்கைத்துறையில் உள்ள)விட மின்னல் வேகத்தில் இணையத்தில் பதிவிட நம் படைப்புகள் அடுத்த சில நொடிகளில் உலகமெங்கும் பார்க்கப்படுவது முன்னெப்போதும் நாம் கனவில்கூட நினைத்துப்பார்த்திருக்க முடியாத ஒன்று.

ஆயினும் நாம் என்ன எழுதுகிறோம் என்று அலசி ஆராயும் நேரமும், அவற்றை உடனடியாக அறிந்து முறைப்படுத்தி, தவறுகளைத் தடுக்கும் வசதிகள் தற்போதைய திரட்டிகளில் இருக்கிறதா? என்பது தெரியவில்லை.

அவ்வாறு செய்வது தேவையா? அது எந்த அளவுக்கு தமிழ் இணைய வளர்ச்சிக்கும்,பதிவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்பது விவாதத்துக்குரிய விசயம்.

தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பு ஈரோட்டில் வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பது பாராட்டுதலுக்கும் வரவேற்புக்கும் உரியது. பதிவர் சந்திப்புகளும் பதிவுலக நட்பும் பெருகிவருவது ஆக்க பூர்வமான ஒன்று. பதிவுலக நட்பில் எந்தவிதப் பாகுபாடும் இன்றி அனைவரும் கலந்து கொள்வதும் மிகவும் சிறப்பான விசயம்.

இது போன்ற பதிவர் சந்திப்புகளின் முக்கிய நோக்கங்கள் என்னவாக இருக்கவேண்டும்? அதாவது பதிவர்களின் இந்தச் சந்திப்புகள் ஒரு கலந்து மகிழ்தல் மட்டும்தானா? இல்லை அதையும் மீறிய இலக்குகள் உள்ளனவா? என்பது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று.

அவ்வாறு பார்க்கும்போது பதிவர்களின் இடுகைகளை தமிழ்ப்பத்திரிக்கை உலகம் தொடர்ந்து கண்காணித்து வருவது நம் இடுகைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற ஒரு பொறுப்புணர்வை நமக்குத்தருகின்றன! அதே போல் பல பத்திரிக்கைகள் நம் பதிவர்களின் பல படைப்புகளை வெளியிடவும் செய்கின்றன.

பல பதிவர்கள் பத்திரிக்கைக்களுக்குத் தொடர்ந்து எழுதும் நிலைக்குச் சென்றிருப்பதும், நிருபர்களாகப் பணிபுரிவதும் பாராட்டவேண்டிய ஒன்று.

பன்றிக்காய்ச்சல் போன்ற மிகவும் சிரமமான நேரங்களில் தமிழ்ச் செய்தித்தாள்கள் பத்திரிக்கைகளை விஞ்சிய செய்திகளையும் தகவல்களையும் உடனுக்குடன் தமிழ்ப் பதிவர்கள் தந்தனர். அவற்றைப் பத்திரிக்கைகளும் வெளியிட்டன.

பதிவுலகப் படைப்புகள் இணையம் என்ற (மாய?) உலகிலிருந்து அச்சுக்குச் செல்லும் அடுத்த கட்டத்தினை இணைய எழுத்தாளர்கள் அடைந்திருப்பது சமீப காலத்தில் நாம் காணும் ஒரு நிகழ்வு. பொன்.வாசுதேவன் அவர்களின் அகநாழிகை பத்திரிக்கையும், அகநாழிகை பதிப்பகமும் அப்பதிப்பகத்தின் சார்பாக வெளியிடப்படும் இணைய எழுத்தாளர்களின் படைப்புகளும் நிச்சயம் புதிய இணைய பதிவர்களுக்கு உற்சாகமூட்டும் என்பதில் ஐயமில்லை.

அதே போல் தமிழ்ப்பதிவுலகில் இலக்கியம் சம்பந்தமான இடுகைகளும், செய்தி, அரசியல், சினிமா போன்ற துறைகளிலும் சிறப்பான இடுகைகள் தொடர்ந்து பதிவிடப்படுகின்றன. அரசியல் பற்றி தனி நபர் அல்லாத வலுவான அமைப்புகளும், சில தனி நபர்களும் மிகத்துணிவுடன் பதிவுகள் எழுதுவதைக் காண்கிறோம். நேர்வினையோ, எதிர்வினையோ அரசியல், சினிமா போன்ற பிரிவுகளில் அச்சமின்றி வரும் பதிவுகள் அனைத்தும் எந்தவிதத் தய்க்கமுமின்றி எழுதப்படுகின்றன.

இவ்வாறு இருக்கையில் சட்டம், மருத்துவம் ஆகிய சில துறைகளில் இடுகைகள் மிகவும் குறைவாகவே பதிவிடப்படுகின்றன. கண்ணித் துறை போன்ற தொழில்நுட்பத் துறை சார்பாக வரும் பதிவுகளைக் கணக்கில் கொள்ளும்பொழுது மருத்துவம் சட்டம் சார்ந்த இடுகைகள் மிகக் குறைவு என்பது என் கருத்து.

இத்துறைகளில் இடுகைகள் குறைவு என்பதைவிட இத்துறைகளில் சில சட்டம் சார்ந்த இடுகைகளை பதிவர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதும்போது சில பிரச்சினைகளையும் நாம் சந்திக்க வேண்டியுள்ளது. அவ்வாறு பதிவர்கள் இன்னலில் சிக்கும்பொழுது அவர்களுக்குக் குரல் கொடுக்கவும், சட்ட ரீதியாக அவர்களுக்கு உதவவும் வலுவான அமைப்பு ஒன்று தேவையா? என்பதே இப்போதைய கேள்வி.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதிவர்களும், பதிவுகளும் அதிகரித்திருக்கும் நிலையில் இதன் முக்கியத்துவத்துவத்தையும் தேவையையும் நாம் ஆராய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

ஈரோட்டில் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டோரின் எண்ணிக்கையும், பதிவர் சந்திப்புகளின் வெற்றியும் பதிவர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல், பதிவு சுதந்திரம் அவற்றிற்கான நெறிமுறைகள் ஆகியவற்றை வகுக்கவும் வழிவகுக்க வேண்டும் என்ற கருத்தை நான் இங்கு முன் வைக்கிறேன்.

அதேபோல் கோவையில் உலகச் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் இணைய எழுத்தாளர்களுக்கு என்ன பங்கு உள்ளது? அதில் 2010 க்கான உலகத் தமிழ் இணைய மாநாடும் நடைபெறும் நடைபெறும் என்று தெரிகிறது. அதில் இணையப் பதிவர்களின் பங்கு என்ன? என்பதையும் நாம் உறுதிசெய்யவேண்டும். இதற்கான சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதா? அக்குழு முதல்வரைச் சந்தித்து இது பற்றிக்கலந்தாலோசிக்குமா? போன்ற பல கேள்விகள் எழுகின்றன.இது பற்றி பதிவுலக முன்னோடிகள், ஆர்வலர்கள் ஆலோசிக்க வேண்டும்.

புனைப் பெயரில் பதிவுகளை எழுதினாலும் நாம் யார் எங்கிருந்து எழுதுகிறோம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆங்கிலம் போன்ற மொழிகளில் உள்ளது போல் அனைத்துப் பிரிவுகளிலும் தமிழ் சிறக்கவேண்டும் என்பதே என் அவா. தமிழை இணையப் பதிவுகளே தமிழை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் சிறப்பான ஊடகமாகத் தெரிகிறது. அதற்குப் பதிவர்களின் வலிமையும் மிக அவசியம். வாழ்க தமிழ்!

43 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வழிமொழிகிறேன்

ராமலக்ஷ்மி said...

அருமையான இடுகை.

Muruganandan M.K. said...

உங்கள் கருத்துக்கள் இன்றைய நிலையில் மிக முக்கியமானவை.

காரணம் ஆயிரம்™ said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
வழிமொழிகிறேன்.

அடியேனும்!

கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com

Thekkikattan|தெகா said...

சிந்திக்கபட வேண்டிய கருத்துக்கள், முன் மொழிவுகள்.

கட்டுரைக்கு நன்றி.

வால்பையன் said...

உங்களை எதிர்பார்த்தேன் தல!

பூங்குன்றன்.வே said...

நல்ல கருத்துக்கள் அடங்கிய இடுகை தான்.நானும் வழிமொழிகிறேன் !!!

துளசி கோபால் said...

வழிமொழிகின்றேன்.

தமிழ் உதயம் said...

சரியான ஆலோசனைகள். வளர்ச்சியின் அடுத்த கட்டம் ஆரோக்யமானதாய் இருக்க வேண்டும். அப்போது தான் பதிவர்களுக்கும் பெருமை. வாசிப்பவர்க்கும் பெருமை.

துபாய் ராஜா said...

நல்ல கருத்துக்கள் டாக்டர்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்ல கருத்துக்கள், சிந்திக்க வேண்டிய விடயங்கள். மொத்தத்தில் அவசியமான பதிவு.
நன்றி தேவா.

Anonymous said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

புலவன் புலிகேசி said...

ம்..நானும் வழிமொழிகிறேன்

நட்புடன் ஜமால் said...

நல்ல பதிவு தேவா!

உண்மை தான் ஆக்கப்பூர்வமாக எடுத்து செல்ல வேண்டும் இந்த சக்தியை.

நல்லது தேவா!

வேலன். said...

ஒவ்வோரு வரிகளும் உண்மைதான் தேவா சார்...பதிவர்களும் - அரசும் சிந்திக்கட்டும்....

வாழ்க வளமுடன்,
வேலன்.

cheena (சீனா) said...

அன்பின் தேவா

நல்ல சிந்தனை - நல்ல இடுகை - உடன்படுகிறேன் கருத்துகளுக்கு

நல்வாழ்த்துகள்

sathishsangkavi.blogspot.com said...

உங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன்.......

அன்புடன் நான் said...

மிக தெளிவான.... பரிந்துரைக்க வேண்டிய பதிவுங்க... ஆதரிக்கிறேன் மருத்துவரே.

Ramesh said...

அவசியமான கருத்துககள்.. நல்ல பதிவு

Jerry Eshananda said...

வழிமொழிகிறேன்.

ஷங்கி said...

நல்லா எழுதியிருக்கீங்க தேவன்மாயம்.
உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துகள்.

Anonymous said...

நானும் வழிமொழிகிறேன்...சார்

தேவன் மாயம் said...

என் கருத்துக்கள் உங்கள் கருத்துக்களாகவும் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
SUREஷ் (பழனியிலிருந்து) ராமலக்ஷ்மி
Dr.எம்.கே.முருகானந்தன்
காரணம் ஆயிரம்,
தெகா,
வால்பையன்,
பூங்குன்றன்,
திருமதி.துளசிகோபால்,
தமிழுதயம்,
துபாய்ராஜா,
ஜெஸ்வந்தி,
தமிழினி,
புலவன் புலிகேசி,
ஜமால்,
வேலன்,
சீனா,
சங்கவி,
கருணாகரசு,
ரமேஷ்,
ஜெரி,
ஷங்கி,
தமிழரசி
அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்!!

S.A. நவாஸுதீன் said...

///சட்டம், மருத்துவம் ஆகிய சில துறைகளில் இடுகைகள் மிகவும் குறைவாகவே பதிவிடப்படுகின்றன. கண்ணித் துறை போன்ற தொழில்நுட்பத் துறை சார்பாக வரும் பதிவுகளைக் கணக்கில் கொள்ளும்பொழுது மருத்துவம் சட்டம் சார்ந்த இடுகைகள் மிகக் குறைவு என்பது என் கருத்து. ///

உண்மைதான் தேவா சார். அட்லீஸ்ட் நீங்களாவது இருக்கீங்களே என்ற சந்தோசமுண்டு எங்களுக்கு

Paleo God said...

சட்டம், மருத்துவ பதிவுகள் மிக முக்கியம் நிச்சயம் நம் மூலமாக விரைவில் மக்களுக்கு சென்றடையும்.. மேலும் consumer awareness போன்றவற்றிற்காக கூட இதை நாம் பயன்படுத்தலாம் ஏதேனும் நஞ்சுகள் தவறாய் விற்கப்பட்டால் முளையிலேயே கிள்ளி ஏறிய நமது தளம் உதவும் என்பது என் கருத்து. நல்ல பதிவு நானும் வழிமொழிகிறேன்.

Jaleela Kamal said...

நல்ல அருமையான பகிர்வு, எல்லோரையும் சிந்திக்கவைக்கும் பதிவு.

முனைவர் இரா.குணசீலன் said...

அதேபோல் கோவையில் உலகச் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் இணைய எழுத்தாளர்களுக்கு என்ன பங்கு உள்ளது? அதில் 2010 க்கான உலகத் தமிழ் இணைய மாநாடும் நடைபெறும் நடைபெறும் என்று தெரிகிறது. அதில் இணையப் பதிவர்களின் பங்கு என்ன? என்பதையும் நாம் உறுதிசெய்யவேண்டும். இதற்கான சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதா? அக்குழு முதல்வரைச் சந்தித்து இது பற்றிக்கலந்தாலோசிக்குமா? போன்ற பல கேள்விகள் எழுகின்றன.இது பற்றி பதிவுலக முன்னோடிகள், ஆர்வலர்கள் ஆலோசிக்க வேண்டும்.//

ஆம் மருத்துவரே ஈரோடு பதிவர் சந்திப்பு வெறும் சந்திப்பாக மட்டும் அமையாமல்..

பல பயனுள்ள விவாதங்களோடும் அமைந்தது..

மாநாட்டில் வலைப்பதிவர்களின் இருத்தல் பற்றிய செய்தியும் விவாதகிக்கப்பட்டது. ஆயினும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை..

ஹுஸைனம்மா said...

உங்கள் பதிவு உட்பட பல மருத்துவப் பதிவுகளைப் பார்க்கிறேன். ஆனால் எல்லாத்துறையிலும் புலமையுடைய மருத்துவர் அல்லது மருத்துவக் குழாம் சேர்ந்து ஒரு பதிவு ஆரம்பித்தால் பலரும் சந்தேகங்களை அல்லது வழிகாட்டுதல் கேட்க வசதியாக இருக்கும்.

வக்கீல் ஒருவர் எழுதும் சட்டப் பதிவு ஒன்றே ஒன்று பார்த்த நினைவு.

சொல்லரசன் said...

//அவ்வாறு பதிவர்கள் இன்னலில் சிக்கும்பொழுது அவர்களுக்குக் குரல் கொடுக்கவும், சட்ட ரீதியாக அவர்களுக்கு உதவவும் வலுவான அமைப்பு ஒன்று தேவையா? என்பதே இப்போதைய கேள்வி.//

உண்மைதான்,அதுபற்றி சிந்தனை ஈரோடு சங்கமத்தில் துளிர்விட்டு இருக்கும் என நினைக்கிறேன்.உங்கள் வரவை எதிர்பார்த்தேன் பின் கார்த்தி சொல்லி உங்கள் நிலையை தெரிந்துகொண்டேன்.

முனைவர் இரா.குணசீலன் said...

முதல் சந்திப்பு ஆகையால் 3 மணி நேரத்துக்குள் முடிந்துவிட்டது..

சில செய்திகள் மட்டுமே விவாதிக்கப்பட்டன..

அனானி
பதிவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சட்டவிதிகள்..
தொழில்நுட்பம்..
போன்ற செய்திகளே விவாதப்பொருளாக அமைந்தன..

anujanya said...

கட்டற்ற சுதந்திரம் என்னும் சுகத்தை அனுபவிக்கிறோம். அதன் பயன்களுடன் தீமைகளையும் காண்கிறோம். ஒரு சுயக்கட்டுபாட்டு அமைப்பு (Self Regulatory Organisation) கூடிய விரைவில் தேவைப்படலாம். அந்த வகையில் உங்கள் இடுகை மிக முக்கியமானது.

அனுஜன்யா

அப்துல்மாலிக் said...

ஆகா சாரே கலக்கிட்டீல், மனசுலே உள்ளதை அப்படியே கொட்டிவிட்டீர், பார்ப்போம் எந்தளவிற்கு ரெஸ்பான்ச் வருதுனு

க.பாலாசி said...

சிறந்த கருத்துள்ள இடுகை... உலகத்தமிழ் மாநாட்டில் தமிழ்ப்பதிவர்களின் பங்குபற்றி சிறுது நேரமே எங்களால் விவாதிக்க முடிந்தது.

தங்களின் கருத்தினை ஏற்பதில் ஐயமில்லை.

பின்னோக்கி said...

நாள் முழுவதும் கம்பியூட்டரில் வேலை செய்வதால், கம்பியூட்டர் துறையிலிருப்பவர்கள் அதிகமாக பதிவு எழுதுகிறார்கள் என நினைக்கிறேன். மருத்துவம், அறிவியல் பற்றி மேலும் பல பதிவர்கள் எழுதவேண்டும். அறிவியல் பற்றி எழுதலாம், ஆனால் மருத்துவம் பற்றி எழுதுவது சற்று சிக்கலானது. தவறான தகவல் மிக கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

"உழவன்" "Uzhavan" said...

அவசியமான கருத்தை முன் வைத்துள்ளீர்கள்.

பீர் | Peer said...

உண்மையில் சட்டம் மருத்துவம் போன்ற துறை சார்ந்த தமிழ் பதிவுகளை வாசிக்க ஆவல். ஆனால் இங்கு எனக்கு சரியான தீனி கிடைக்கவில்லை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

தமிழ்த்துளி, பயணங்கள், மணற்கேணி தவிர வேறு தமிழ் பதிவுகள் இத்துறையில் எழுதப்படுகிறதா?

Unknown said...

நல்ல இடுகை வாழ்த்துக்கள்...,

சங்கரின் பனித்துளி நினைவுகள் said...

இதுவரை எந்த முயற்சியும் இன்றி எழுதிக்கொண்டு இருக்கும் பதிவுலக நண்பர்களுக்கு ஒரு புதிய முயற்சி இங்கு பூத்திருப்பதைப் பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் .உங்களின் இந்த சிறந்த கருத்துக்களை நானும் வழிமொழிக்கிறேன் .

என்றும் அன்புடன்
சங்கரின் பனித்துளி நினைவுகள்

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல விஷயத்த சொல்லி இருக்கீங்க தேவா சார்.. வாழ்த்துகள்..

நசரேயன் said...

வழிமொழிகிறேன்

CS. Mohan Kumar said...

நீங்கள் சொல்வது சரியே. சட்டம் குறித்த பதிவுகள் சில நானும் எழுத எண்ணுகிறேன். (நான் சட்டம் படித்தவன் என அறிவீர்கள் தானே?)

நீச்சல்காரன் said...

நல்ல சிந்தனை முதல் நாளே படித்துவிட்டேன் ஆனால் அன்று என்னால் கருத்துயிடமுடியாததால் இன்று இடுகிறேன்

சே.வேங்கடசுப்ரமணியன் said...

நல்ல கருத்து

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory