Thursday 7 January 2010

பிரேதப்பரிசோதனை-சூப்பர் இம்போசிஷன்

பிரேதப்பரிசோதனை-சூப்பர் இம்போசிஷன்

பிரேதப் பரிசோதனையில் அடையாளம் தெரியாத் உடலை அடையாளம் காண உபயோகப்படுத்தப்படும் முறைகளில் ஒன்றுதான் சூப்பர் இம்போசிஷன்.

பொதுவாக

1.அடையாளம் தெரியாமல் சிதைந்த முகத்துடன் சிதைந்த உடலையும் அடையாளம் காணவும்

2.தலைதனியாகவும் உடல் தனியாகவும் உள்ள சிதைந்த பிரதங்களை அடையாளம் காணவும் பெருமளவில் இது பயன்படுகிறது.

3.இதற்கு இறந்த நபரின் புகைப்படம் தேவை. புகைப்படம் புதிதாக இருத்தல் நலம்.

4.புகைப்படத்தில் முகம் நேராக இருக்கவேண்டிய அவசியமில்லை. பக்கவாட்டுத்தோற்றமாக இருந்தாலும் ஒப்பிட முடியும்.

5.இறந்த பிரேதத்தில் உள்ள கபால எலும்புகளின் அளவுக்கு முகத்தின் புகைப்படம் பெரிதாக்கப்பட்டு இரண்டிலும் முக எலும்புகள் ஒப்பிட்டுப்பார்க்கப்படுகின்றன.

6.கண்கள் இருக்கும் பகுதி,மூக்கெலும்பின் இடம்,மேல்தாடையின் கீழ்பாகம்,தாடை எலும்பு,பற்கள், காதுக்குழி ஆகியவை முக்கியமாக ஒப்பிட்டுப்பார்க்கப்படுகின்றன.

7.இந்தச் சோதனையின் மூலம் இறந்தவரின் தலை இதுவல்ல என்பதையே உறுதியாகக் கூறமுடியும்.

8.இறந்தவரின் தலை அடையாளம் தெரியாத பிரேதத்தின் புகைப்படத்தில் உள்ள தலையுடன் ஒத்துப்போகிறதா என்பதனை மட்டுமே நாம் கண்டு பிடிக்க முடியும். ஒரே அளவுள்ள இரட்டையர்கள், அல்லது அதே உடல் அமைப்புள்ளவர்களின் முக எலும்புகளும் ஒத்துப்போகலாம்.

9.இந்த முறையில் இறந்தவரின் கபால எலும்புகளின் பகுதிகள் கிடைத்தால் கூட இறந்தவரின் புகைப்பத்துடன்   ஒப்பிட்டுப்பார்க்க முடியும்.

10.இந்த முறையில் குறைகள் சில இருந்தாலும் இன்னும் பல இடங்களில் இது உபயோகப்படுகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் இது அதிகம் பயன்படுகிறது.

விரிவாகப் படிப்பதற்கு சுட்டி:

1.http://www.fbi.gov/hq/lab/fsc/backissu/oct2004/case/2004_10_case01.htm

17 comments:

ரமேஷ் said...

உபயோகமான தகவல்

நட்புடன் ஜமால் said...

புதிய தகவல்(கள்).

நன்றி தேவா!

தேவன் மாயம் said...

நன்றி ரமேஷ், ஜமால்!!

க.பாலாசி said...

இது சம்பந்தமாக சில சந்தேககங்கள் இருந்ததுண்டு. இப்போது தெரிந்துகொண்டேன். நன்றிகள்.

முனைவர் இரா.குணசீலன் said...

தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவக்குறிப்புகளை எளிமையாகக் கூறியமைக்கு நன்றி மருத்துவரே..

Rajeswari said...

புது தகவல்கள்..நன்றி தேவன் சார்

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

இது போன்று
இன்னும்
சொல்லுங்க

நன்றி

குடந்தை அன்புமணி said...

புதிய தகவல்களை அறிந்து கொண்டோம்.

ஹேமா said...

டாக்டர் ரொம்ப நாளாச்சு உங்க பக்கம் வந்து.சுகம்தானே.புத்தாண்டு வாழ்த்தும் உங்களுக்கு.

எப்பவும்போல உபயோகமான நல்ல தகவல் தேவா.

வடுவூர் குமார் said...

வெளி நாடுகளில் கைரேகை Data base மாதிரி இங்கு இருந்தால் இந்த Super imposition முறை தேவையில்லாமல் போகக்கூடும் அல்லவா?

சைவகொத்துப்பரோட்டா said...

அருமையான, எளிமையான விளக்கம். நன்றி.

சிங்கக்குட்டி said...

நன்றி தேவா!

தேவன்மாயம் said...

க.பாலாசி
குணசீலன்,
ராஜேஸ்,
நண்டு-நொரண்டு,
குடந்தை அன்புமணி,
சைவ கொத்துபுரோட்டா,
ஹேமா,
சிங்கக்குட்டி
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துககள்!!

புலவன் புலிகேசி said...

தெரியாத தகவல்.இப்படித்தான் கண்டு புடிக்கிறீங்களா. பகிர்வுக்கு நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் தேவா

புதிய தகவல்கள்

பகிர்ந்தமைக்கு நன்றி

நல்வாழ்த்துகள்

S.A. நவாஸுதீன் said...

நிறைய புதிய தகவல்கள். நன்றி தேவா சார்.

அன்புடன் நான் said...

புதிய தகவலுக்கு நன்றியும்...பொங்கல் வாழ்த்துக்களும்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory