ஒருவரைக் கொலை செய்வது மிகவும் கடினமான காரியம்.
”சிரிஞ்சில் காற்றை இழுத்து தமனிக்குள்(vein) செலுத்தினான்-படுத்திருந்த அவன் கொஞ்சம் கொஞ்சமாக துடித்து இறந்து போனான்”
என்பதுபோல் இறப்பு என்பது எளிமையானதா?
இத்தகைய இறப்புகள் நடைமுறையில் சாத்தியமா?
இறப்பின் காரணங்களில் ஒன்றாக கிரைம் நாவல்கள் சிலவற்றில் ’ஏர் எம்பாலிசம்’ என்று நாம் படித்திருப்போம். ஏர் எம்பாலிசம் என்றால் நம் இரத்தக் குழாய்க்குள் காற்று செல்வதைக் குறிக்கிறது.
இரத்தம் எடுப்பதற்கு நாம் சாதாரணமாக 5 அல்லது 10 மில்லி சிரிஞ்சுகளை உபயோகிக்கிறோம். இத்தகைய சிரிஞ்சில் தவறுதலாக இரத்தம் எடுக்கும்போது காற்றை உள் செலுத்திவிட்டால் மரணம் ஏற்படுமா?
1.இரத்தம் எடுக்கும் சிரிஞ்சுக்குள் காற்று இருந்தது. அதை உள்ளே செலுத்தியதால் 10 நாள் கழித்து கை வீங்கி இறந்து போனார் என்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை. சில பத்திரிக்கைகளில் இப்படி செய்திகள் வருவது வருந்தத்தக்கது.
2.ஒருவருடைய இரத்தக் குழாய்க்குள் 100-300 மில்லி காற்றைச் செலுத்தினால்தான் ஒருவருக்கு மரணம் ஏற்படும்.
3. 1.ஏர் எம்பாலிசம் இறப்புகள் ஆழ்கடலில் மூழ்குவோருக்கு ஏற்படுகின்றன.
3.2.பெரிய இரத்தக் குழாய் அறுவை சிகிச்சைகள்.
3.3.சிசேரியன் அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை போன்றவை.
3.4.விபத்துக்களில் நெஞ்சில் பலத்த காயம் ஏற்படுதல்.
ஆகிய காரணங்களாலேயே ஏர் எம்பாலிச இறப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் நீரில் மூழ்கும் ( SCUBA DIVERS) களிலேயே இது அதிகம்.
ஒருவரை தெரிந்தோ தெரியாமலோ கையில் ஊசிபோடும்போதோ, இரத்தம் எடுக்கும்போது தவறுதலாக காற்று உள்ளே சென்றோ இறப்பை ஏற்படுத்துவது இயலாத செயல்.
26 comments:
இயலாது என்று சொல்லியிருக்கீங்க
நல்லதே!
இப்படி தப்பு தப்பா படத்துல வாறதும் நல்லதே - சரியான ஐடியா! குடுத்தா அப்புறம் அதுவே தவறான விடயங்களுக்கு வழிகாட்டியாயிடும்.
அப்படியல்ல ஜமால்! புரியாமல் டாக்டர்தான் கொன்றுவிட்டார் என்று சொல்கிறார்கள்!!
காலேல தமிழ்மணம் வந்தா கொலை...கொலைன்னு இருக்கு.வாலு கொலை செய்திட்டதா சொல்றார்.தேவா செய்யமுடியுமான்னு கேக்கிறார்.என்ன இது பொங்கலும் அதுவுமா !
இனிக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
நல்ல விளக்கம் தேவா சார்.
//ஹேமா said...
காலேல தமிழ்மணம் வந்தா கொலை...கொலைன்னு இருக்கு.வாலு கொலை செய்திட்டதா சொல்றார்.தேவா செய்யமுடியுமான்னு கேக்கிறார்.என்ன இது பொங்கலும் அதுவுமா !
//
அதானே....
useful news.
thanks
நல்ல விளக்கம், நன்றி. (தலைப்பை பார்த்ததும் ஏதோ க்ரைம் நோவேல் என்று நினைத்தேன்
நீண்ட நாள் குழப்பம் தீர்ந்தது!
விளக்கமான பதிவுக்கு நன்றி.
கையில் டிரிப் ஏற்றும்போது, சலைன் பாட்டில் காலியாகிவிட்டாலோ, அல்லது சலைன் ஏறுவது நின்றுவிட்டாலோ உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று செவிலியர்கள் சொல்வது ஏன்?
அவ்வாறு சொல்லாமல் காலதாமதம் ஆனால், அடுத்த பாட்டில் ஏறத் தொடங்கும்போது சிறிது நேரம் அதிக வலி ஏற்படுகிறதே, ஏன் டாக்டர்? காற்றுதான் காரணமா? அவ்வாறு உள்செல்லும் காற்று பின் என்ன ஆகும்?
ஹுஸைனம்மாவின் கேள்வியை ரிப்பீட்டுகிறேன்
நல்லதொரு விழிப்புணர்வு கட்டுரை டாக்டர்.
டாக்டர்
சிறிதளவு காற்று செல்லுகிறது என வைத்துக்கொள்ளுவோம் ,
அந்தக்காற்று என்ன ஆகும் .
ஜாமால் சொன்னதையே வழி மொழிகிறேன்... மருத்துவரே.
தங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.
வணக்கம் டாக்டர்,.... தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல் நன்றிங்க
ஹேமா வருகைக்கு நன்றி. கொலை தன்னால் அமைந்து விட்டது!! பொங்கல் வாழ்த்துக்கள்!!
நவாஸ்,
தருமி,
அகல்விளக்கு,
சைவ.கொ.பு,
வால்
நன்றியுடன் பொங்கல் வாழ்த்து!!
ஹுஸைனம்மா said...
விளக்கமான பதிவுக்கு நன்றி.
கையில் டிரிப் ஏற்றும்போது, சலைன் பாட்டில் காலியாகிவிட்டாலோ, அல்லது சலைன் ஏறுவது நின்றுவிட்டாலோ உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று செவிலியர்கள் சொல்வது ஏன்?
அவ்வாறு சொல்லாமல் காலதாமதம் ஆனால், அடுத்த பாட்டில் ஏறத் தொடங்கும்போது சிறிது நேரம் அதிக வலி ஏற்படுகிறதே, ஏன் டாக்டர்? காற்றுதான் காரணமா? அவ்வாறு உள்செல்லும் காற்று பின் என்ன ஆகும்?
//
அவ்வளவு எளிதாக காற்று உள்ளே சென்று விட முடியாது. கொஞ்சம் உட்செல்லும் காற்று சிறு சிறு குமிழிகளாகி கரைந்துவிடும்!!
சங்கர்,
இராதாகிருஷ்னன்,
நண்டு,
ஸ்ரீ,
கருணா,
ஞானசேகரன்
அனைவருக்கும் நன்றி!
நல்ல பகிர்வு.
நல்ல வேலை இப்ப சொன்னீங்க, இதை பயன்படுத்தி பலரை கொல்ல நான் மனதில் நினைத்து இருந்தேன் :-)
சே இந்த சப்பை மேட்டருக்கு பயந்து நர்சுகளுக்கிட்ட வாலாட்டாம ரொம்ப நல்ல புள்ளையா இருந்துட்டமே....:-)) - தமாசுக்கு.
நீண்ட நாள் குழப்பம் தீர்ந்தது. நன்றி டாக்டர்.
நல்ல அருமையான கட்டுரை தேவா சார்
நீண்ட நாள் குழப்பம் தெளிந்தது.. நன்றி டாக்டர்....
இப்படி பதிவுல பப்ளிக்கா சொல்லி சினிமாகாரர்களின் ஒரு ஐடியாவா கொலை பண்ணிட்டீங்களே டாக்டர்... வடை போச்சே... சாரி ஒரு சீனு போச்சே
கொலைசெய்யும் சமயம் ஒரு வார்த்தை விட்டுவிட்டது டாக்டர்:-
அதிலும் நீரில் மூழ்கும் ( SCUBA DIVERS) களிலேயே இது அதிகம்.
அதிலும் நீரில் மூழ்கும் (SCUBA DIVERS)சமயங்களிலேயே இது அதிகம்.
கட்டுரை அருமை...
வாழ்க வளமுடன்,
வேலன்.
அன்பின் தேவா
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
அரிய தகவலுக்கு நன்றி
தேவையான இடுகை சார்.
Post a Comment