எந்த நிறம் அழகு?
பொதுவாக நம் நாட்டில் பெண்ணோ ஆணோ சிகப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். சிகப்பாக இல்லையே என்று வருத்தப்படும் பெண்களும் உண்டு.
முதல் பெண் ஆப்பிரிக்காவில் தோன்றியதாக தற்போது விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதன் பின் பல்கிப் பெருகி அனைவரும் வெளியேறி வாழ்நிலைகளின் தகவமைப்புக்கு ஏற்ப தோல் நிறங்கள் மாறியதுதான் உண்மை.
அப்படி இருக்கும்போது நாம் ஏன் சிகப்பாக இருப்பவர்களை நாம் பிரமிப்புடன் பார்க்கிறோம்? என்பதற்கு மரு.ஷாலினி ஒரு விளக்கம் கூறினார்.
அதாவது இந்தியாவிலும் கடவுள்கள் சிவன் முதல் கிருஷ்ணன் வரை கருப்பாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். அதே போல் வரலாற்றில் குறிப்பிடப்படும் அழகி ராணி கிளியோபாட்ராவே கருப்புதான்.
கருப்பாக இருப்பதை அப்போது யாரும் குறையாக நினைக்கவில்லை.
அப்படியென்றால் ஏன் சிகப்பாக இருப்பது அழகாகக் கருதப்படுகிறது?
நம்மவரை நம்மவரே ஆண்டபோது ஆண்டவர்கள், அரசர்குலமே கருப்பாக இருந்ததால் கருப்பு மதிப்பாக இருந்தது.
அதன் பின் பிரிட்டிஷ், ஐரொப்பிய காலனிகளாக உலகம் மாறிய பிறகு நம்மையும் உலகின் முக்கால் பாகத்தையும் வெள்ளைத் தோல் மனிதர்கள் ஆள ஆரம்பித்தனர். அதன் பின்னரே சிகப்பு மோகம் ஏற்பட்டது. தம்மை ஆள்பவர்கள், பலம் போருந்தியவர்கள் எந்த நிறமே அதுவே விரும்பப்படும், மதிக்கப்படும் நிறமாக மாறும், மாறியது.
தற்போது பலம் பொருந்திய அமெரிக்காவை கருப்பின ஒபாமா ஆள்வதால் அவர் மனைவி அணியும் உடைகள் தற்போது பிரபலமாகின்றன. பார்பி பொம்மையும் கருப்பு அழகியாக தற்போது உருவெடுத்துள்ளது.
இவையெல்லாம் இருக்க இந்த வருட அமெரிக்க அழகியாக ’காரெஸ்ஸா கமெரான்’ என்ற கருப்பின அழகி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதுவரை எட்டு ஆப்பிரிக்க அமெரிக்க அழகிகள் ‘அமெரிக்க அழகி’ களாக கிரீடம் சூட்டப்பட்டுள்ளனர்.
இனிவரும் மனித குலம் ஒன்றிணைந்து கருப்பு வெள்ளை இல்லாத ஒரு பழுப்பு நிறத்தில்தான் இருக்கப்போகிறதாம்.
என்ன சரியா? கருப்பு சிகப்பு எல்லாம் ஒன்றுதான்!!
26 comments:
டாக்டர்,படத்துல சிரிச்சிட்டு இருக்கிறது அப்படியே எங்க அயித்த மக மாதியே இருக்கு,இந்த குட்டிய எங்க ராசா புடிச்சீக?
டாக்டர்,படத்துல சிரிச்சிட்டு இருக்கிறது அப்படியே எங்க அயித்த மக மாதியே இருக்கு,இந்த குட்டிய எங்க ராசா புடிச்சீக?
///
புல்லாங்குழலோட போஸ் குடுக்குறது நீங்கதானா? நல்லா ஊதுங்கப்பு!!!
பழுப்பு தான் எனக்கு புடிச்ச கலருன்னு பாட்ட மாத்திட வேண்டியது தான்.
--------------
மனசு வெள்ளையாக இருந்தால் போதுமுன்னு சொல்றாங்களே - இங்கையும் நிறம் முக்கியபடுத்த படுதோ
திடீர் சந்தேகத்துடன் ...
படத்துலே இருக்குறவக கூட மேக்கப்போட்டு தன்னை வெள்ளையா காட்ட முயற்சி செய்திருக்காக, இது ஏன்? அப்போ தான் கருப்பா இருக்கிறேன் என்ற காம்ப்ளக்ஸ் தானே?
கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு..........
கருப்பா இருந்தாலும் களையாத்தேன்
இருக்கு இந்த புள்ள :))
கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு....ஆங்...
இது ஒரு கருப்பா? ;)
பார்த்திபன் கருப்பா நடிச்சதே நிறையாப் பேருக்கு பிடிக்கல தலைவரே..,
சோ... இனிமே கருப்பா இருக்கறதப்பத்தி கவலப்படக்கூடாதுங்கறீங்க.. சரிதான்...
எல்லா படமும் சூப்பரு.. சொன்ன கருத்தும் சூப்பரு
பழுப்பு தான் எனக்கு புடிச்ச கலருன்னு பாட்ட மாத்திட வேண்டியது தான்.
--------------
மனசு வெள்ளையாக இருந்தால் போதுமுன்னு சொல்றாங்களே - இங்கையும் நிறம் முக்கியபடுத்த படுதோ
திடீர் சந்தேகத்துடன் .///
மனசு வெள்ளையைச் சொல்கிறீர்கள்... ஒன்னுமே இல்லாமல் இருப்பதைச் சொகிறார்கள்!
படத்துலே இருக்குறவக கூட மேக்கப்போட்டு தன்னை வெள்ளையா காட்ட முயற்சி செய்திருக்காக, இது ஏன்? அப்போ தான் கருப்பா இருக்கிறேன் என்ற காம்ப்ளக்ஸ் தானே?///
படத்தைப் போடும்போதே யோசித்தேன் யாராவது கேட்பார்கள் என்று!!
கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு..........
///
வாங்க சங்கவி!!!
கருப்பா இருந்தாலும் களையாத்தேன்
இருக்கு இந்த புள்ள :))
அதுதான் அழகுராணியாகி விட்டதே!!
கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு....ஆங்...
அண்ணா! மியூசிக்கோட வந்திட்டீங்க!!
இது ஒரு கருப்பா? ;)///
நம்ம ஊரு வெள்ளைத்தோலே அங்கு கருப்புங்க!!
பார்த்திபன் கருப்பா நடிச்சதே நிறையாப் பேருக்கு பிடிக்கல தலைவரே..,
///
திறமைக்கு நிறம் ஒரு தடை இல்லையே சுரேஷ்!!!
சோ... இனிமே கருப்பா இருக்கறதப்பத்தி கவலப்படக்கூடாதுங்கறீங்க.. சரிதான்...
///
அதுதான் பாலாசி!!
எல்லா படமும் சூப்பரு.. சொன்ன கருத்தும் சூப்பரு
///
நன்றி அண்ணாமலையான்!!
வெளுப்பு உடனே ஈர்க்கும்.ஆனால் பார்க்க பார்க்க சலிக்கும்.
கருப்பு உடனே விலக்கும்.ஆனால் பார்க்க பார்க்க கவரும் .
சிவப்பானஅழகில் நிறைய பேர் இருந்தாலும் அது தட்டையானது.
கருப்பான அழகில் குறைவான பேர் இருந்தாலும் அது ஆழமானது.
கமல் அழகு.ஆனால் ரஜினி கவர்ச்சி.
இரண்டும் வேறுவேறு contrast .
இரண்டையும் ஒப்பிடுதல் சரியான அளவுகோல் அல்ல.
வெளுப்பு உடனே ஈர்க்கும்.ஆனால் பார்க்க பார்க்க சலிக்கும்.
கருப்பு உடனே விலக்கும்.ஆனால் பார்க்க பார்க்க கவரும் .
சிவப்பானஅழகில் நிறைய பேர் இருந்தாலும் அது தட்டையானது.
கருப்பான அழகில் குறைவான பேர் இருந்தாலும் அது ஆழமானது.
கமல் அழகு.ஆனால் ரஜினி கவர்ச்சி.
இரண்டும் வேறுவேறு contrast .
இரண்டையும் ஒப்பிடுதல் சரியான அளவுகோல் அல்ல.
///
உங்கள் கருத்தும் ஒரு புதிய கோணத்தில் சிறப்பாக இருக்கிறது...
அட நீங்களுமா சார்? நான்கூட போட்டிருந்தேன் ஒரு பதிவு இதைப்பத்தி...'
கருப்புத்தான் சார் அழகு. ஒட்டிக்கும்...
அவங்களோட ஒரு வார்த்தைய ஒரு முழு இடுகை ஆக்கிட்டீங்களே.. தெய்வமே.. நீங்க எங்கயோ போயிட்டீங்க..
If you take only physiognomy (human face), it is not the most beautiful face - mainly because of its oversize teeth.
One might argue here, it is the healthy teeth that matter. But in a beauty contest, the size, and the evenness and color - all do matter.
If you take color of the skin, it is ok. Even if it is charcoal black, it is ok. Beauty is, as Doctor Shalini told us, determined in context. However, beauty is also determined in isolation and thus, you find beautiful girls among the poor. Natural beauty, you should call it.
'Beauty is not caused.
It is'
- Ironically, the above lines are from a woman poet of America - the most famous next only to Robert Frost, Ms Emily Dickinson.
Miss America is awsome in her swimsuit. Her overall figure - from top to toe - is a celebration of beauty, which in turn, means, a hellelua to God for such a creation.
It is amusing and strange that none of the feedbackers has a word of appreciation for such swelte figure - a glory to God!
However, many women are endowed with such bounty of God, I mean, perfect figure. Not all participate though.
So, Miss America is Miss America only from among the contestants, not from among the whole population.
Thanks.
டாக்டர், உங்க பதிவ பார்த்துதான் மனச தேத்திக்க வேண்டியதா இருக்கு. எங்க பாட்டி இன்னும் "சூட்டுக்கு ஒரு ருசி, சிகப்புக்கு ஒரு அழகு"-ன்னு சொல்லி என்ன ரொம்ப வெருப்பேத்திகிட்டு இருக்காங்க.
Post a Comment