சிறிது நேரம் முன்புதான்
அவர்கள்
இதைக் கடந்திருக்க வேண்டும்!
காய்ந்த சிறகுகள்
பாதம் பட்டு நொறுங்குதல்
பற்றி
அவர்கள்
கவலைகொள்ளவில்லை!
உறங்கும்
ஆன்மாக்களின்
கல்லறைகளின் மீதே
அவர்கள்
பயணம் அமைந்தது!
இங்கிருந்த வேர்களை
வெட்டி அவர்களின்
படகுகளைச்
செய்துகொண்டனர்!
அவர்கள் கடந்த
கரையோரங்க்ளில்
புதையுண்டு கிடந்தன
கடந்த காலத்தின்
நிழல்கள்!
கழற்றி எறியப்பட்ட
ஆடைகளில்
இன்னும் மீதமிருந்தது
குருதியின் வாசனை!
புனைவுகளின்
மறைவுகளில்
அவர்களின்
புதிய முகங்கள்
செதுக்கப்பட்டன!
அவர்கள் அங்குதான்
இருக்கிறார்கள்!
31 comments:
/புனைவுகளின்
மறைவுகளில்
அவர்களின்
புதிய முகங்கள்
செதுக்கப்பட்டன!/
அருமையான செதுக்கல்!
நல்ல செதுக்கல்...
எப்பொழுதுமே கொஞ்சும் தேநீராக இருக்குமே - இந்த முறை கொஞ்சலில்லை ...
அன்புடன் அருணா said...
/புனைவுகளின்
மறைவுகளில்
அவர்களின்
புதிய முகங்கள்
செதுக்கப்பட்டன!/
அருமையான செதுக்கல்!///
அருணா நன்றி!!
நல்ல செதுக்கல்...
எப்பொழுதுமே கொஞ்சும் தேநீராக இருக்குமே - இந்த முறை கொஞ்சலில்லை ///
ஜமால் கொஞ்சம் மாற்றம்... அவ்வளவுதான்
ரொம்ப அருமையா இருக்கு கவிதை வரிகள் தொகுப்பு :-)
வரிகள் அனைத்தும் பேசிக்கொள்கின்றன... அருமை
:-)))))))
"ரொம்பவே நல்லா - இருக்கு!"
கவிதை ரசித்தேன்,தொலைபேசியில் பேசும் பொது கூறுகிறேன், புத்தகம் வெளியீடு எப்போ?.
சிங்கக்குட்டி said...
ரொம்ப அருமையா இருக்கு கவிதை வரிகள் தொகுப்பு :-)
நன்றி நண்பரே!!
---------------------
ஆ.ஞானசேகரன் said...
வரிகள் அனைத்தும் பேசிக்கொள்கின்றன... அருமை
உங்களிடம் பேசினால் சரிதான்!
------------------------------
கார்த்திகைப் பாண்டியன் said...
:-)))))))//
ஓகே கார்த்தி!!!
----------------------------- சைவகொத்துப்பரோட்டா said...
"ரொம்பவே நல்லா - இருக்கு!"
தொடர் கருத்துக்களுக்கு நன்றி நண்பா!
------------------------
D.R.Ashok said...
:)
அசோக்கு நன்றி!!
-----------------------
ஜெரி ஈசானந்தா. said...
கவிதை ரசித்தேன்,தொலைபேசியில் பேசும் பொது கூறுகிறேன், புத்தகம் வெளியீடு எப்போ?.
ஜெரி!!! காத்திருக்கிறேன்!!
============================
நன்றாக இருக்கிறது. பல்வேறு கற்பனைகளை என் சுதந்திரத்திற்கு விடுகிறது.
அழகாய் இருக்கிறது வார்த்தை பிரயோகங்கள்
Sai Ram said...
நன்றாக இருக்கிறது. பல்வேறு கற்பனைகளை என் சுதந்திரத்திற்கு விடுகிறது.
///
உங்கள் கருத்து மிகுந்த சந்தோசமளிக்கிறது!!
Rajeswari said...
அழகாய் இருக்கிறது வார்த்தை பிரயோகங்கள்
ராஜேஸ்!நலமா?
பதிவில் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது!!
இந்த கவிதை ஒரு அழகிய மாடர்ன் ஆர்ட் போல ஏதேதோ விஷயங்களை சொல்கிறது.
nalla sethukkal. mika arumai.
"புனைவுகளின்
மறைவுகளில்
அவர்களின்
புதிய முகங்கள்
செதுக்கப்பட்டன!"
நன்கு சுவைத்தேன் உங்கள் வரிகளை.
ன
ரசித்து படித்தேன்,ஆஹா...தேன்.
kailash,hyderabad said...
இந்த கவிதை ஒரு அழகிய மாடர்ன் ஆர்ட் போல ஏதேதோ விஷயங்களை சொல்கிறது.///
கைலாஷ் !! நன்றி!!
Madurai Saravanan said...
nalla sethukkal. mika arumai.
வாங்க மதுரை சரவணன்!!
Dr.எம்.கே.முருகானந்தன் said...
"புனைவுகளின்
மறைவுகளில்
அவர்களின்
புதிய முகங்கள்
செதுக்கப்பட்டன!"
நன்கு சுவைத்தேன் உங்கள் வரிகளை.
கருத்துக்கு மிக்க நன்றிங்க!
SUREஷ் (பழனியிலிருந்து) said...
ன
//
இது என்னங்க்ணா!!
இளமுருகன் said...
ரசித்து படித்தேன்,ஆஹா...தேன்.
///
முதல் வருகைக்கு நன்றிங்க!!
நெசமாவே நல்லா இருக்குங்க...
பேநா மூடி said...
நெசமாவே நல்லா இருக்குங்க///
உண்மையைச் சொல்லுங்க சார்!!
அருமை. பாராட்டுக்கள் தேவா
வரிகளின் கோர்வைகள் தேனீ ராய் இனித்தது..
// தேவன் மாயம் said...
பேநா மூடி said...
நெசமாவே நல்லா இருக்குங்க///
உண்மையைச் சொல்லுங்க சார்!!
//
நெசமா தாங்க.........,
தேனீர் நல்லாயிருக்கு மருத்துவரே.
கதை சொல்ல முற்பட்டு, அது
கவிதையானது புதினம்..
(என் கவிதையிலிருந்து ஒரு பகுதி; இங்கே மிகப் பொருத்தம்)
இது சொல்லும் கதை, மிக நல்ல கவிதை.
என் பதிவிற்கு வந்தமைக்கு நன்றி. நானும் இனி உங்கள் வாசகன்.
Post a Comment