யாருமறியா ஆழங்களில்
வித விதமாய்ப் பொய்கள்,
சிறு பிரம்மனாய்,
அவற்றை ஒன்றிணைத்து
ஒப்பனைகளுடன் சுட்டெடுக்கிறேன்
அன்றன்றைய
என்னை!!!
உண்மையின்
கசப்பினை விட
அவை இனிமையானவை,
வக்கிரம் மறைத்து
உலாவரும் என்
பிம்பங்களுடனேயே
நீங்கள் கலந்து மகிழ்ந்தீர்கள்!
அவற்றின் பிரித்தெடுக்கப்பட்ட
பிரதிகள்
அம்மாவுக்கு, அப்பாவுக்கு,மனைவிக்கென
எவருக்கும் போதுமானதாய்
இருந்தன,
அனைவருக்கும் பிடித்திருக்கிறது,
பொய்களால் ஆன
என்னை!!!
34 comments:
வாவ், அட்டகாசம், அருமை மருத்துவரே.
இடுகையை மறுபடியும் திருத்தி பிரசுரித்ததில் நண்பர் விதூஷின் கமெண்ட் டெலீட் ஆகிவிட்டது!! மன்னிக்கவும்!!
சைவகொத்துப்பரோட்டா said...
வாவ், அட்டகாசம், அருமை மருத்துவரே.
///
நன்றி
நண்பரே!!
அருமையா இருக்குங்க ‘கவி’டாக்டர்...
தமிழ்மணத்துல இணைக்கவில்லையா?
தமிழ்மணத்துல இணைக்கவில்லையா///
தவறைத் திருத்தி பதிவிடும்போது பழைய இடுகை அழிந்துவிட்டது..
அருமை கலக்கல்.....தமிழ்மணத்தில் இணையுங்கோ
கவிதையின் இறுதி வரிகள் மிக நேர்த்தி... பாராட்டுக்கள்... மருத்துவரே.
போனால் போகட்டும்.. மறுபடியும்...
///வாஹ்... தாஜ்....// :)
என் நண்பி ஒருவர் எழுதிய வேடதாரி எனும் கவிதையினை போன்ற கரு. பொய்கள் எனத் தெரிந்து இருப்பதே உண்மைதான் மருத்துவரே. கவிதை அழகு.
class.............sir..
பொய்களால் ஆன “என்னை”
அருமையான உண்மை.
டாக்டர் அசத்தல் பொய்யான கவிதை.
ஊசி போடறமாதிரியே இருக்கு !
"அனைவருக்கும் பிடித்திருக்கிறது"
ம்.. ம்..ம்
//அனைவருக்கும் பிடித்திருக்கிறது,
பொய்களால் ஆன
என்னை!!!//
இது தான் உண்மை. :-)
அருமை டாக்டர்... அருமை.
கலக்குறீங்க.
தேவா,கொஞ்சம் தேநீர் புத்தகம் ரிலீஸ் எப்போ?
கவிதை உண்மையாய் இருக்கிறது தேவா,வார்த்தைகளில் ஆழம் தெரிகிறது.
றமேஸ்-Ramesh said...
அருமை கலக்கல்.....தமிழ்மணத்தில் இணையுங்கோ
இணைக்கப் பெரும்பாடாகிவிட்டது!!
சி. கருணாகரசு said...
கவிதையின் இறுதி வரிகள் மிக நேர்த்தி... பாராட்டுக்கள்... மருத்துவரே.///
கவிதை அதில்தானே உள்ளது!! மிக்க நன்றி!!
V.Radhakrishnan said...
என் நண்பி ஒருவர் எழுதிய வேடதாரி எனும் கவிதையினை போன்ற கரு. பொய்கள் எனத் தெரிந்து இருப்பதே உண்மைதான் மருத்துவரே. கவிதை அழகு.//
பலர் தொட்டதைத்தான்...நாமும் தொடவேண்டியுள்ளது... மிக்க நன்றி!!
தமிழரசி said...
class.............sir..
///
நன்றி தமிழ்!!!
-------------------------------
நட்புடன் ஜமால் said...
பொய்களால் ஆன “என்னை”
அருமையான உண்மை.
///
ஜமால் !! பொய்கள் உண்மைதானே!!
ஹேமா said...
டாக்டர் அசத்தல் பொய்யான கவிதை.
ஊசி போடறமாதிரியே இருக்கு !
///
சுருக்கென்று தைக்கிறதா?
மாதேவி said...
"அனைவருக்கும் பிடித்திருக்கிறது"
ம்.. ம்..ம்
//
உங்களுக்கு???
ரோஸ்விக் said...
//அனைவருக்கும் பிடித்திருக்கிறது,
பொய்களால் ஆன
என்னை!!!//
இது தான் உண்மை. :-)
அருமை டாக்டர்... அருமை.
//
ரோஸ்விக்!! நன்றி!!
ஸ்ரீ said...
கலக்குறீங்க.
//
வாங்க ஸ்ரீ!
-------------------------------
ஜெரி ஈசானந்தா. said...
தேவா,கொஞ்சம் தேநீர் புத்தகம் ரிலீஸ் எப்போ?///
ஜெரி! ஐடியாவே இல்லை!!
---------------------------------
ஜெரி ஈசானந்தா. said...
கவிதை உண்மையாய் இருக்கிறது தேவா,வார்த்தைகளில் ஆழம் தெரிகிறது.
///
ஜெரி மிக்க நன்றி!!!
------------------------------
அவற்றின் பிரித்தெடுக்கப்பட்ட
பிரதிகள்
அம்மாவுக்கு, அப்பாவுக்கு,மனைவிக்கென
எவருக்கும் போதுமானதாய்
இருந்தன,
.........உண்மை. பொய்களில் ஒளிந்து இருந்திருக்கும் உண்மை. :-)
Chitra said...
அவற்றின் பிரித்தெடுக்கப்பட்ட
பிரதிகள்
அம்மாவுக்கு, அப்பாவுக்கு,மனைவிக்கென
எவருக்கும் போதுமானதாய்
இருந்தன,
.........உண்மை. பொய்களில் ஒளிந்து இருந்திருக்கும் உண்மை. :-)
///
ஆகா! கண்டுபிடித்துவிட்டீர்களே!!!
//க.பாலாசி said...
அருமையா இருக்குங்க ‘கவி’டாக்டர்...
//
மருத்துவக் கவிஞர்!
மிக மிக அருமையான கவிதை.பிடிச்சிருக்கு........
பழமைபேசி said...
//க.பாலாசி said...
அருமையா இருக்குங்க ‘கவி’டாக்டர்...
//
மருத்துவக் கவிஞர்!
///
அதெல்லாம் ஒன்றுமில்லை...சும்மா.
vidivelli said...
மிக மிக அருமையான கவிதை.பிடிச்சிருக்கு........
///
நன்றி விடிவெள்ளி!!
அட அருமையா இருக்குங்க.... வாழ்த்துக்கள்..
வாழ்வின் நிஜம் சொல்லும் கவிதை.!! ”சிறு பிரம்மனாய்..” நல்ல கற்பனை. பொய்களை கோர்த்து கட்டிய மாலைதான் பெரும்பாலும் விலை போகிறது..!!
Post a Comment