கொக்கைன் ஒரு போதைப் பொருள் என்று பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். இது கொக்கா என்ற ஒருவகைச் செடியின் இலையிலிருந்து கிடைக்கும் போதைப் பொருள்.
ஆதிகாலத்திலேயே இதனை தென் அமெரிக்கப் பழங்குடியினர் புகையிலையுடன் சேர்த்து உபயோகித்து வந்துள்ளனர்.
கொக்கைன்
1.மூக்கில் பொடி போல் உறிஞ்சுதல்
2.சிகரெட் போல் புகைத்தல்,
3.ஊசி மூலம் செலுத்திக்கொள்ளுதல்
ஆகிய வழிகளில் உபயோகிக்கப்படுகிறது.
Crack Cocaine கிராக் கொக்கைன்: என்பது கொக்கைனுடன் பேக்கிங் சோடா, நீர் கலந்து சிகரெட் போல் புகைக்கத் தயாரிக்கப்படுவது.
கொக்கைன் டானிக்குகளிலும் பல் வலி நிவாரணிகளிலும் முன்பு பயன்படுத்தப்பட்டது. 1885லேயே இது சிகரெட்டாகவும்,பொடியாகவும், நரம்பில் செலுத்தும் ஊசியாகவும் சில மருந்துக் கம்பெனிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது.
கோகோ கோலா அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 20 ஆண்டுகளில் அதில் அதிக அளவு கொக்கைன் கலக்கப்பட்டது!!(தற்போது கொக்கைன் கலப்பது இல்லை)
2005ல் அமெரிக்காவில் மட்டும் 70 பில்லியன் டாலர் அளவு கொக்கைன் விற்கபட்டுள்ளது!!!
கொக்கைனின் தீய பண்புகள்:
1.உபயோகித்த 5 நிமிடத்தில் போதை உண்டாகும். அதிக உணர்ச்சிவசப்படுதல், அதிக பேச்சு, ஆகியவை இருக்கும்.
2.அதன் பின் சோர்வு, இரத்த அழுத்தக்குறைவு, தலைவலி, துரித மூச்சு, படபடப்பு ஆகியவை ஏற்பட்டு வலிப்பு கூட வரலாம்.
3.அதிகம் உபயோகித்தால் ஒரு மணி நேரத்தில் மூச்சு விடுதல் குறைந்து, வலிப்பு ஏற்பட்டு இறப்பும் ஏற்படலாம்.
4.ஊசி வழியாக உபயோகிக்கும் போது இதயம் பாதிக்கப்பட்டு உடனடி மரணம் ஏற்படலாம்.
ஒரு கிராமுக்கு அதிகமான அளவு கொக்கைன் உபயோகித்தால் மரணம் ஏற்படும்!!
கொக்கைனுக்கு அடிமையானவர்களுக்கு:
1.உடல் எடை குறைவு,பசியின்மை,
2.தூக்கமின்மை, கண் குழு விழுதல்,
3.பல்லும் நாக்கும் கருத்துக்காணப்படும்.
4.மன நிலை மாற்றங்கள்
5.தோலுக்கடியில் மணல் இருப்பது போலும், சிறு வாண்டுகள் ஊர்வது போலவும் தோன்றி தோலில் அரிப்பு ஏற்படுதல்
6.நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மனநோயாளியாக மாறிவிடுதல்.
கஞ்சாவுக்கு அடுத்து உலகில் அதிகம் உபயோகிக்கப்படும் போதைப் பொருள் கொக்கைன். அதன் பிடியில் இளைஞர்களைக் காப்பது நம் கடமையாகும்.
19 comments:
மிக நல்ல பதிவு....
இளைய சமூதாயத்தினர் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் பதிவு.
அண்ணாமலையான் said...
மிக நல்ல பதிவு..///
நன்றி அண்ணாமலையான்!!
Chitra said...
இளைய சமூதாயத்தினர் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் பதிவு.
//
கருத்துக்கு நன்றிங்க!
டாக்டர் போட்டோவுல இருக்குற அம்மிணிய எங்கயோ பார்த்த மாதி இருக்கே....
நம்ம கோவா போனோமே,அப்ப சும்மா வளைச்சு,வளைச்சு போட்டோ எடுத்தீங்களே...அந்த அம்மிணி தான?.
ஜெரி ஈசானந்தா. said...
டாக்டர் போட்டோவுல இருக்குற அம்மிணிய எங்கயோ பார்த்த மாதி இருக்கே.///
நெட்டில் சுட்ட அம்மிணி!!
ஜெரி ஈசானந்தா. said...
நம்ம கோவா போனோமே,அப்ப சும்மா வளைச்சு,வளைச்சு போட்டோ எடுத்தீங்களே...அந்த அம்மிணி தான?.
///
நாம கோயிலுக்குப் போனபோது நீங்க சுத்தி சுத்தி வந்து கும்பிட்டீங்களே அந்த அம்மிணிங்கோவ்!!
நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு.., சும்மா ஜிவ்வுனு ஏறுது..,
மிக மிக தேவையான பதிவு.
coke பேரு இப்படித்தான் வந்திச்சா
நல்ல பகிர்வு தேவா.
SUREஷ் (பழனியிலிருந்து) said...
நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு.., சும்மா ஜிவ்வுனு ///
முதலில் ஏறும்... பிறகு.. தொல்லைதானே சுரேஷ்!!
இராகவன் நைஜிரியா said...
மிக மிக தேவையான பதிவு.
///
நன்றி!
நட்புடன் ஜமால் said...
coke பேரு இப்படித்தான் வந்திச்சா
நல்ல பகிர்வு தேவா.
//
ஆம் ஜமால்!
இத இவ்வளவு விவரமா, ingredients, recipe details-ஓட எழுதணுமா டாக்டர்?
விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பதிவு.
ஹுஸைனம்மா said...
இத இவ்வளவு விவரமா, ingredients, recipe details-ஓட எழுதணுமா டாக்டர்?///
ஆங்கிலத்தில் இன்னும் தெளிவான விபரங்கள் உள்ளன. தமிழ் பதிவுகளைப் பெரும்பாலும் பதிவு பற்றித் தெரிந்தவர்கள்தான் படிக்கிறார்கள். அவர்களுக்காகவே இப்பதிவு!!
சைவகொத்துப்பரோட்டா said...
விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பதிவு.
//
நன்றி நண்பரே!!
விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயனுள்ள பதிவு.
Post a Comment