Thursday 25 February 2010

அனல்ஜெசிக் நெஃப்ரோபதி(வலிநீக்கி சிறுநீரகவாதம்!!)

ஆறு மாதங்களுக்கு முன் என்னிடம் ஒரு பெண் நோயாளியை அழைத்து வந்திருந்தனர். அழைத்து வந்தவர்கள் என் நீண்ட நாள் நண்பர்கள். ஆனால் அந்தப்பெண்ணுக்கு 35 வயதிருக்கும். முகமெல்லாம் வீங்கி உடல் மெலிந்து, கண்களில் மரண பயத்துடன் இருந்தார்.

கொஞ்ச நேரம் கழித்தே அவரை எனக்கு அடையாளம் தெரிந்தது. அவரும் அவருடைய அக்காவும் தையல் கடை வைத்திருந்தனர்.கடினமாக் உழைக்கும்  இருவரும் அடிக்கடி பக்கத்தில் உள்ள மருந்துக்கடையில் கை கால் வலிக்கு மாத்திரை வாங்கிச்சாப்பிடுவார்கள். 10-15 வருடமாக இது நடந்துவந்தது.

இந்த வயதில் அந்தப் பெண்ணிற்கு என்ன வியாதி? அதுதான் வலிநீக்கியால் உண்டாகும் சிறுநீரக செயலிழப்பு.( அனல்ஜெசிச் நெஃப்ரோபதி)

அன்பு நண்பர்களே! அனல்ஜெசிச் என்றால் வலிநீக்கி மருந்துகளைக் குறிக்கும். நெஃப்ரோ- என்றால் ”சிறுநீரகம் சார்ந்த” என்று கொள்ளலாம்.

1.எந்த மருந்துகளால் பொதுவாக வருகிறது?

  • ஆஸ்பிரின்- aspirin
  • பாரசிடமால்-acetaminophen
  • புருஃபன்-ibuprofen
  • டைக்ளோஃபெனாக்-Diclofenac sodium
  • இது போன்ற பல வலிநீக்கிகளை உண்ணும்போது.

2.ஆண்,பெண் இருபாலரில் யாருக்கு அதிகமாக வருகிறது?

30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு.

3.இந்த நோயின் அற்குறிகள் என்ன?

  • உடல் சோர்வு
  • சிறுநீரில் இரத்தம்
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  • சிறுநீரின் அளவு குறைதல்
  • முகம், உடல் வீக்கம்
  • முதுகு இடுப்பின் பக்கவாட்டில் வலி
  • சிலருக்கு மேலே சொன்னவை இல்லாமலும் இருக்கலாம்.

4.என்ன பரிசோதனைகள் செய்யலாம்?

  • இரத்த யூரியாநைட்ரஜன் Blood Urea Nitrogen- 7-18மிகி/டெ.லிட்டர்
  • கிரியேட்டினின் - Serum creatinine- 0.7-1.5மிகி%
  • மேலும் பொதுவான இரத்தப்பரிசோதனைகள்.

5.இது வராமல் தடுப்பது எப்படி?

வலி நிவாரணிகளை அடிக்கடி  உண்பதை நிறுத்த வேண்டும்.

வலி நீக்கிகள் இந்தியாவில் மருந்துக்கடைகளில் தாராளமாகக் கிடைக்கின்றன. மருத்துவர்கள் தரும் மாத்திரைகளைவிட வீரியமான மருந்துகளை கடைகளில் தருகின்றனர். இதற்கு ஏழை மக்களில் பலர் அடிமையாகவே  இருக்கிறார்கள்.

இது பற்றிய விழிப்புணர்வு மேலைநாடுகளில் ஏற்பட்டுள்ளதல் இதனால் ஏற்படும் சிறுநீரக கோளாறுகள் அங்கு குறைய ஆரம்பித்துள்ளன.

நம் நாட்டில் வலிநிவாரணியால் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு மிக அதிகமாக உள்ளது. நாமும் விழிப்புணர்வு பெறுவோம்.

18 comments:

தமிழ் அமுதன் said...

அவசியமான பதிவு ..! நன்றி டாக்டர்..!

அன்புடன் நான் said...

மிக பயனுள்ள பதிவு மருத்துவரே.... எனக்கு அது போல பழக்கம் இல்லை எனக்கு தெரிந்தவர்களுக்கு அது போல பழக்கம் உண்டு... அவர்களுக்கு நீங்க சொல்லியதை பரிந்துரை செய்கிறேன்..... பதிவுக்கு மிக்க நன்றிங்க.

நட்புடன் ஜமால் said...

நல்ல பகிர்வு நன்றி தேவா!

சைவகொத்துப்பரோட்டா said...

புளிப்பு மிட்டாய் சாப்பிடுவது போல் (இந்த மாதிரியான) மாத்திரைகளை சாப்பிடும் சிலரை
நானும் பார்த்திருக்கிறேன், மிக அவசியமான நல்ல பதிவு மருத்துவரே.

துளசி கோபால் said...

நல்ல இடுகை.

எனக்கு ஒரு கார் விபத்தில் முதுகில் அடி. முதுகுத்தண்டில் 13 வது எலும்பு ஒரு பக்கம் நசுங்கிருச்சு. அறுவை சிகிச்சை செஞ்சுக்கிட்டால் ரிஸ்க் கூடுதல் என்றதால் செஞ்சுக்கலை. ஆனால் முதுகு இடுப்பு வலி பயங்கரம். அதுக்கு மருந்தா ibuprofen 800 தினம் ஒன்னுன்னு சிலவருசங்களாகத் தொடர்ந்து எடுத்துக்கறேன். இல்லைன்னா வேலை ஒன்னும் செய்ய முடியாது. வலியில் துடிக்கணும்:(

இராகவன் நைஜிரியா said...

மிக நல்ல அவசியமான இடுகை. நன்றி மருத்துவரே.

தேவன் மாயம் said...

அவசியமான பதிவு ..! நன்றி டாக்டர்..//

மிக்க நன்றி ஜீவன்!!

தேவன் மாயம் said...

சி. கருணாகரசு said...
மிக பயனுள்ள பதிவு மருத்துவரே.... எனக்கு அது போல பழக்கம் இல்லை எனக்கு தெரிந்தவர்களுக்கு அது போல பழக்கம் உண்டு... அவர்களுக்கு நீங்க சொல்லியதை பரிந்துரை செய்கிறேன்.....//

கருணா!! நன்றி!!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
நல்ல பகிர்வு நன்றி தேவா!

///
ஜமால் நன்றி!

------------------------------


சைவகொத்துப்பரோட்டா said...
புளிப்பு மிட்டாய் சாப்பிடுவது போல் (இந்த மாதிரியான) மாத்திரைகளை சாப்பிடும் சிலரை
நானும் பார்த்திருக்கிறேன், ///


கட்டாயம் சொல்லுக்கள்!!

தேவன் மாயம் said...

நல்ல இடுகை.

எனக்கு ஒரு கார் விபத்தில் முதுகில் அடி. முதுகுத்தண்டில் 13 வது எலும்பு ஒரு பக்கம் நசுங்கிருச்சு. அறுவை சிகிச்சை செஞ்சுக்கிட்டால் ரிஸ்க் கூடுதல் என்றதால் செஞ்சுக்கலை. ஆனால் முதுகு இடுப்பு வலி பயங்கரம். அதுக்கு மருந்தா ibuprofen 800 தினம் ஒன்னுன்னு சிலவருசங்களாகத் தொடர்ந்து எடுத்துக்கறேன். இல்லைன்னா வேலை ஒன்னும் செய்ய முடியாது. வலியில் துடிக்கணும்://

மருத்துவரிடம் மறுபடி காட்டுங்கள்!

Anonymous said...

எனக்கென எழுதியதைப் போல இருந்தது நானும் எதற்கெடுத்தாலும் மாத்திரை வாங்கி போடும் பழக்கம் உள்ளவள்..இனி திருந்துகிறேன் சார்...

அன்புடன் அருணா said...

அவசியமான பதிவு ..!

cheena (சீனா) said...

நல்லதொரு தகவல் - நன்றி மருத்துவரே ! நல்வாழ்த்துகள்

Chitra said...

நம் நாட்டில் வலிநிவாரணியால் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு மிக அதிகமாக உள்ளது. நாமும் விழிப்புணர்வு பெறுவோம்.


...... கண்டிப்பாக தேவை... பகிர்வுக்கு நன்றி.

க.பாலாசி said...

இப்ப வயசானவங்களுக்கு எதுக்கெடுத்தாலும் கைகால் வலி, இடுப்புவலி, மூட்டு வலின்னு வருது... அவங்களுக்கு இந்த மாத்திரைய விட்டா வேற வழிதான் என்ன.??? டைக்ளோபினக் அல்லது ஓவிரான் இன்ஜக்சன் பண்ணினா அதுனால எந்த பாதிப்பும் வராதா?

விஜய் said...

NSAID எனப்படும் இவ்வகை மருந்துகள் மிக தாரளமாக மருந்து கடைகளில் தரப்படுகிறது. இதோடு Chlorzoxazone வேறு.

அடித்தட்டு மக்களுக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வு அவசியம் தரவேண்டும்.

மிகுந்த நன்றி டாக்டர்.

விஜய்

சொல்லச் சொல்ல said...

இப்போவெல்லாம் நோயாளிகளே பாதி மருத்துவராகி விட்டனர். சிறு குழந்தைகளுக்குக் கூட மற்றவர்கள் (மருத்துவர் அல்லாதவர்கள்) பரிந்துரை செய்கின்றனர். தன்னைத்தான் காப்பாற்றிக்கொள்கிறோம் என்ற பெயரில் தானே சீரழிந்துக் கொள்கிறோம் என்பது நன்றாக புரிகிறது.

Jerry Eshananda said...

ஹாய் தேவா,தலைப்ப பாத்துட்டு "ஹிந்தி படம் விமர்சனம்னு நினைச்சு வந்து பார்த்தா டெர்ரர் பதிவா இருக்கு."

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory