நேற்று சன் செய்திகள் பார்த்து தமிழகமே அதிர்ந்து போயிருக்கிறது. அதன் பாதிப்பைக் கண்கூடாக பதிவுலகிலும் காண்கிறோம். இந்த விசயம் குறித்துப் பதிவு எழுதாதவர்களே இல்லை என்னும் அளவில் ஏராளமான பதிவுகள்!! அதுபற்றி சில பதில் கிடைக்காத கேள்விகள் என் மனதில்!!
1.மதக் கருத்துக்கள் பற்றி எல்லா மதத்திலும் தேவையான அளவு புத்தகங்கள் இருக்கும் போது குமுதம், ஆனந்தவிகடன் போன்ற போன்ற புத்தகங்கள் காசுக்காகவும், விளம்பரத்துக்காகவும் இவர்களைப் போன்ற பணம் உள்ள சாமியார்களைப் பற்றிய செய்திகளை வெளியிட்டு இவர்களின் வளர்ச்சிக்குத் துணை போவது எவ்வளவு மோசமான செயல். இதில் இவர்கள் புத்தகங்கள் எழுதி அதையும் பதிப்பிட்டு இந்தப்பத்திரிக்கைகள் காசு பார்க்கின்றன!! இவற்றை வன்மையாகக் கண்டிப்பதுடன் இவற்றைப் புறக்கணிக்கவும் வேண்டும்.
2.புலனாய்வுப் பத்திரிக்கைகளில் சிறப்பான கட்டுரைகளை எழுதும் நிருபர்களும் ஒருபுறம் இருக்க, நேரெதிர் முரண்பாடாக இது போன்ற போலி சாமி, போலி லாட்ஜ் மருத்துவர்கள், மந்திரித்த தாயத்து தகடு விளம்பரங்களையும் சகட்டுமேனிக்கு வெளியிடுவதை யாரும் தடுப்பதுமில்லை. அவரவர்கள் எதை வேண்டுமானாலும் விளம்பரப்படுத்தலாம் என்பது மிகவும் ஒழுங்கீனமான ஒரு சமுதாய அமைப்பில் நாம் வாழ்வதைத்தானே காட்டுகிறது!!
3.கடவுள் நம்பிக்கை இருக்கவேண்டியதுதான். ஆலமரத்தடியில் இருக்கும் சாமியைக் கும்பிட்டுவிட்டுப் போகாமல் பணக்காரச் சாமியார் மோகம் தலை விரித்தாடும் நம் மக்கள் எப்போது திருந்துவார்கள்!
4.நடிப்புத் துறை என்பது நல்ல துறை. எல்லாத்துறையிலும் ஒழுங்கீனங்கள் இல்லாமல் இல்லை. அந்த நடிகை நல்லவர், அந்த நடிகர் சிறந்தவர் என்று அவர்களைத் தெய்வமாகக் கொண்டாடி அவர்களை உச்சியில் தூக்கிவைத்து ஆடி ஒரு இளம் சமுதாயமே அழிவுப்பாதையை நோக்கிச் செல்வதை எண்ணி வருத்தம்தான் ஏற்படுகிறது. அவர்களைக் கோடீசுவரர்களாக்கி வேட்பாளர்களாக்கி நம்மையே அவர்கள் ஆளும் மடமை ….. கொடுமை!!!
5.காவல் துறையும், சட்டம் ஒழுங்குத் துறையும் காலையில் எழுந்தவுடன் தொலைக் காட்சிதோறும் ஒளிபரப்பப்படும் சாமியார்களின் நிகழ்ச்சிகளைத் தடை செய்தால் நல்லது!!
6.இப்போது பரப்ரப்பாக செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சி அமைப்புகள் மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்று போடுகிறார்களா? இல்லை பார்வையாளர் எண்ணிக்கையைக் கூட்டும் பப்ளிசிடி ஸ்டண்டா? அப்படி நல்ல நோக்கில் இதை வெளியிட்டால் இவர்களைப் போன்ற போலிகளின் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியினர் புறக்கணிப்பார்களா?
இன்னும் நிறையக் கேள்விகள் உள்ளன… தொடர்வோம்..
35 comments:
பக்தி என்பது இப்பொழுது ஒரு பகட்டாகி விட்டது, அதன் பின் விளைவுகள்தான்
இவை எல்லாம், சரியாதான் கேட்டு இருக்கீங்க.
எல்லா கேள்வியும் நச்
தேவா,என்ன இது?ஆறு கேள்வியோடு நின்னுடீங்க?
சார் இவங்க எல்லாம் எத்தனை கேள்வி கேட்டாலும் திருந்த மாட்டாங்க சார்.....
இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,எனக்கும்,எந்த தமிழ் நடிகைகளுக்கும் தொடர்பில்லை,ஏன்,மலையாள,கன்னட,தெலுங்கு,ஹிந்தி,மராத்தி,ஒரியா,வங்காள நடிகைகளுக்கும் தொடர்பில்லை என்று என் செல்ல தோழியும் ஹாலிவுட் நடிகையுமான "ஏஞ்சலினா ஜோலி "மீது சத்தியமாக தெரிவித்து கொள்கிறேன்.
சைவகொத்துப்பரோட்டா said...
பக்தி என்பது இப்பொழுது ஒரு பகட்டாகி விட்டது, அதன் பின் விளைவுகள்தான்
இவை எல்லாம், சரியாதான் கேட்டு இருக்கீங்க.
//
புரியவேண்டுமே மக்களுக்கு!!
அத்திரி said...
எல்லா கேள்வியும் நச்
//
நன்றி நண்பரே!!
ஜெரி ஈசானந்தா. said...
தேவா,என்ன இது?ஆறு கேள்வியோடு நின்னுடீங்க?
//
தொடருவோம் ஜெரி!!
Sangkavi said...
சார் இவங்க எல்லாம் எத்தனை கேள்வி கேட்டாலும் திருந்த மாட்டாங்க சார்....//
சொல்வதைச் சொல்லிக்கொண்டே இருப்போம்!!
ஜெரி ஈசானந்தா. said...
இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,எனக்கும்,எந்த தமிழ் நடிகைகளுக்கும் தொடர்பில்லை,ஏன்,மலையாள,கன்னட,தெலுங்கு,ஹிந்தி,மராத்தி,ஒரியா,வங்காள நடிகைகளுக்கும் தொடர்பில்லை என்று என் செல்ல தோழியும் ஹாலிவுட் நடிகையுமான "ஏஞ்சலினா ஜோலி "மீது சத்தியமாக தெரிவித்து கொள்கிறேன்.
//
நீங்களும் பிரேமானந்தா, நித்தியாமந்தா எல்லாம் நண்பர்களாமே!!! ஹி! ஹி!!
//நீங்களும் பிரேமானந்தா, நித்தியாமந்தா எல்லாம் நண்பர்களாமே!!! ஹி! ஹி!!//
சத்தியமாக இல்லை,எனக்கு என்று,ஆசிரமமோ,பக்தகோடிகளோ இல்லை,உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் எந்த கிளைகளும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்
ஜெரி ஈசானந்தா. said...
//நீங்களும் பிரேமானந்தா, நித்தியாமந்தா எல்லாம் நண்பர்களாமே!!! ஹி! ஹி!!//
சத்தியமாக இல்லை,எனக்கு என்று,ஆசிரமமோ,பக்தகோடிகளோ இல்லை,உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் எந்த கிளைகளும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன///
வாலண்டியரா நீங்களே ஆஜராகும்போதே சந்தேகமாஅ இருக்கே!! ....ஜீப் கீப் வந்துவிடப்போகுது.......ஹி...ஹி.
சீக்கிரமே, ஒரு ஆசிரமத்தை கட்டி செட்டிலாயிடலாம்னு நம்பி....ஒரு ,,இடத்துக்கு டோக்கன் அட்வான்சே போடுறதுக்குள்ள "இந்த பாவிப்பய,நித்யா..என்..business la கல்லைத்தூக்கி போட்டுட்டானே."
//.ஜீப் கீப் வந்துவிடப்போகுது.......ஹி...ஹி.//
ஜீப் வந்தால் கூட பரவாயில்லை.... ஆனால் கீப் வந்தால் அடுத்த செய்திகளின் நாயகம் இவர் தான்
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல டாக்டர் சார்....
நாளைக்கு இன்னொருத்தன் வந்தா அவன்
பின்னாடி போவாங்க...
கேள்வியெல்லாம் நல்லாத் தான் கேக்குறோம், ஆனா மக்கள் திருந்தவே மாட்டேங்கிறாங்களே? ;-)
////.ஜீப் கீப் வந்துவிடப்போகுது.......ஹி...ஹி.//
ஜீப்பும்,கீப்பும்,எங்கயாவது,சீப்பா கிடச்சா சொல்லுங்கப்பு.
எல்லாமே சரியான கேள்விகள்.....
//போலி சாமி, போலி லாட்ஜ் மருத்துவர்கள், மந்திரித்த தாயத்து தகடு விளம்பரங்களையும் சகட்டுமேனிக்கு வெளியிடுவதை யாரும் தடுப்பதுமில்லை.//
நியாயமான கேள்வி தான்!
மட்டுற வரைக்கும் யார் கண்டுக்குறா!?
தலைப்புச்செய்தி போடுவதற்குமுன் விளம்பரங்கள் அதிகம் போடசொல்லி காசு குவியுதாமே, இதுவும் ஒரு வகை பிஸினெஸ் தானோ>
2 vadhum, 6 vadhum enakulayum ezhuntha kelvigal...enna panna... indha suyanala ulagil.... :(
என்ன யாரையும் காணாம்,"பூராம் sun TV பாக்க போயிருச்சுகளோ?
உங்கள் கேள்விகளில் பதிலும் இருக்கு. மக்கள் ஏமாறத் தயாராக இருக்கு போது......
எனக்கு விஜய் டிவியில் இளையராஜாவைப் போலவே ஒருவன் வருவானே, அவனைப் பார்த்தாலே பற்றிக் கொண்டு வருகிறது. அவன் எல்லாம் மாட்ட மாட்டானா?
நல்ல கேள்வி. நல்ல பதிவு. போலிகள் என்று தெரிந்து ஏமாறும் மக்களை என்ன் செய்வது?
//ஜெரி ஈசானந்தா. said...
இதனால் சகல ஜனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,எனக்கும்,எந்த தமிழ் நடிகைகளுக்கும் தொடர்பில்லை,ஏன்,மலையாள,கன்னட,தெலுங்கு,ஹிந்தி,மராத்தி,ஒரியா,வங்காள நடிகைகளுக்கும் தொடர்பில்லை என்று என் செல்ல தோழியும் ஹாலிவுட் நடிகையுமான "ஏஞ்சலினா ஜோலி "மீது சத்தியமாக தெரிவித்து கொள்கிறேன்.
//
நீங்க அடுத்த ஆசிரமம் ஆரமிக்கணும்
>>>மதக் கருத்துக்கள் பற்றி எல்லா மதத்திலும் தேவையான அளவு புத்தகங்கள் இருக்கும் போது<<<
இது மட்டும் சரியாய்த் தோணவில்லை என்று படுகிறது. இத்தனை வலைப்பதிவுகள் ஏற்கெனவே இருக்கிறப்போது புதிதாய் ஏன் இன்னும் நிறையா பேர் எழுத வேண்டும்? ஏற்கெனவே நிறைய சினிமா எடுத்து விட்ட பிறகு புதுசாக படம் எடுப்பவர்கள் என்ன கிழித்து விடப் போறார்கள்? குறளுக்கு ஆயிரமாயிரம் உரைகள் இருக்கிறப்போது புதுசாய் ஏன் மறுபடி எழுதுகிறார்கள்? இப்படி நிறைய சொல்லலாம்.
//நீங்க அடுத்த ஆசிரமம் ஆரமிக்கணும்//
ஆ.....சிரமம்.
நசரேயன் விருப்பத்தை "நிறைவேற்ற முடியாத ஏக்கத்தில் இருக்கிறேன்",எனவே,யாரும் எனது பக்தகோடிகளாக சேர வேண்டி,வீட்டை விட்டோ,வீட்டு சுவர் ஏறி குதித்தோ வரவேண்டாம் என மீண்டும் ஏக்கத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
நீங்க, நாம எத்தனை கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் பணம் தான்.
நாங்க நெனைத்தோம் நீங்க எழுதிட்டீங்க.
Hello, my friend!
I loved this work and this space. have a nice weekend.
உங்களின் கருத்து எண்(3) நூறு சதவிகிதம் சரி என தோன்றுகிறது
மிகச்சரியான கேள்விங்க.....மருத்துவரே
சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்கணுமே!
கேள்வி கேட்டுவிட்டீர்கள்;
பதிலதான் இன்னும் கிடைக்கவில்லை!
இதையும் படிங்களேன்:நித்தியானந்தாவும் பிரேமானந்தாவும் - நகைச்சுவைக் கதை!
Post a Comment