நீங்கள்( நாம்) மனதுக்குள் எடுத்த உறுதிமொழியை எவ்வளவு வருடம் காப்பாற்றுவீர்கள்?
நீங்கள் எத்தனை முறை இரத்தம் கொடுப்பீர்கள்?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஜேம்ஸ் ஹாரிசனின் வாழ்க்கை ஒரு நம்ப முடியாத் உறுதி வாய்ந்த பதிலாக உள்ளது.
ஆஸ்திரேலியர் ஜேம்ஸ் ஹாரிசன் செய்துள்ள செயற்கரிய செயலைப் பாருங்கள்.
’ஆன்டி டி’ ஊசி என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். தாயின் இரத்தம் –Rh negative வகையாகவும், தந்தையின் இரத்தம் Rh positive ஆகவும் இருக்கும் பட்சத்தில்
- குழந்தை Rh negative இரத்த வகையாக இருந்தால் குழந்தை பிரசவம் ஆகிவிடும்.
- குழந்தையின் இரத்தவகை Rh positive ஆக இருந்துவிட்டால், குழந்தையின் இரத்தமும் தாயின் இரத்தமும் பிரசவத்தில் கலந்துவிடக்கூடாது- ஏனெனில் பிளஸ் மைனஸ் இரண்டும் சேர்ந்தால் இரத்தம் முறிந்துவிடும். அது ஆபத்து.
இதன் விளைவுகளைத் தடுக்கத்தான் ஆன்டி டி ஊசி போடுகிறோம்.
அந்த தடுப்பு ஆண்டிபாடிக்கள் ஹாரிசனின் இரத்தத்தில் இருந்தது.
அவர் உடலில் ஆர்.எச் பாசிடிவ் இரத்தத்தை ஊசியால் செலுத்துவார்கள். இது இவர் உடலில் இரத்தத்தில் ஆண்டிபாடிகளை உருவாக்கும். பின் இவருடைய இரத்திலிருந்து ஆண்டிபாடிகளை பிரித்து எடுத்து மருந்தாக உபயோகிப்பார்கள்!!!
18 வயதில் இரத்தம் கொடுக்க ஆரம்பித்த இவர் (தற்போது 74 வயதாகிறது), கடந்த 56 வருடங்களாக சில வாரங்களுக்கு ஒருமுறையென இரத்தம் கொடுத்து இதுவரை 984 முறை இரத்தம் கொடுத்திருக்கிறார்!!! ( அவசரத்துக்கு ஒரு தடவை இரத்தம் கொடுக்கவே இங்கு தயங்குகிறோம்!!!!)
சரி அவர் எடுத்த உறுதிமொழி என்ன? என்கிறீர்களா?
அவருடைய 14ம் வயதில் அவருக்கு மார்பு அறுவை சிகிச்சைக்கு 13 பாட்டில் இரத்தம் தேவைப்பட்டதாம். அன்றே அவர் தன் இரத்தத்தை இருக்கும்வரை தானம் செய்யவேண்டும் என்று உறுதிகொண்டாராம்.( எவ்வளவு உறுதியான மனம் பாருங்கள்) அதை 74 வயதுவரை கடைப்பிடிக்கிறார்!!!!
( 74 வயதிலும் இரத்தம் கொடுக்கிறார் என்றால் நம்பமுடியவில்லை!!)
இவருடைய இரத்தத்தால் 2.2 மில்லியன் குழந்தைகள் உயிர்பிழைத்துள்ளன!!
வாழ்க்கையில் வெறுப்பு, தோல்வி ஆகியவற்றால் தன்னிரக்கத்தால் வாடும் இளைஞர்களே ஜேம்ஸ் ஹாரிசனைப் பாருங்கள்!
வாழ்க ஹாரிசன்!!
தமிழ்த்துளி தேவா.
20 comments:
உயிரின் நிறம் சிவப்பு.[நல்ல தகவல்].
பாராட்டப்பட வேண்டிய மனிதர்.
(என்னை ஒரே ஒரு தடவை பாராட்டலாம் (ஹி....ஹி...) ஒரு தடவை இரத்த தானம் கொடுத்துள்ளேன்,
அடுத்த முறைக்கு வெய்ட்டிங்கு - மூன்று மாத இடைவெளி வேண்டுமாமே)
நன்றி ஜெரி!!!
சைவகொத்துப்பரோட்டா said...
பாராட்டப்பட வேண்டிய மனிதர்.
(என்னை ஒரே ஒரு தடவை பாராட்டலாம் (ஹி....ஹி...) ஒரு தடவை இரத்த தானம் கொடுத்துள்ளேன்,
அடுத்த முறைக்கு வெய்ட்டிங்கு - மூன்று மாத இடைவெளி வேண்டுமாமே)
///
பாராட்டுக்கள்!! இவர் 3 மாதத்துக்குள்ளேயே கொடுப்பார் போல!!
இதன் காரணமான இறப்புகள் இன்றும் நடக்கிறது..:(
பாராட்டப்படவேண்டிய மனிதர்.
நல்லதொரு மனிதரின் அறிமுகம்
நன்றி தேவா!
nalla manithar
பாடமாய் ஒரு பதிவு....
நல்ல அறிமுகம்.
...very inspiring post.
என்னுடைய உடல் எடையைப் பார்த்து இரத்தம் எடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்கள் :(
உங்களை ஒரு தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறேன்.
http://ekanthabhoomi.blogspot.com/2010/03/blog-post_26.html
வாழ்க ஹாரிசன் .
மகத்துவம் பொருந்திய மனிதர்... பகிர்விற்கு நன்றி...
//இவருடைய இரத்தத்தால் 2.2 மில்லியன் குழந்தைகள் உயிர்பிழைத்துள்ளன!!//
இதுதான்.... மிக முக்கியமானது
நல்ல அறிமுகம்....
மிக நல்ல தகவல் மருத்துவரே...
பாராட்டப்பட வேண்டிய மனிதர்!!!
great man.
http://www.virutcham.com
அவருக்கும் பகிர்ந்த உங்களுக்கும் பூங்கொத்து!
அருமையான பகிர்வு !
இரத்ததின் முக்கியதுவத்தை உணர்ந்து... இன்றும் இரத்த அளிக்கும் அவருக்கு என் சிரம் தாழ்த்திய நன்றியையும்...
அவர் மேலும் பல்லாண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டியும்..
Post a Comment