Monday, 10 May 2010

ஆன்டிபாடி! ஆட்டோ ஆன்டிபாடி!!

ஆன்டிபாடி என்று தட்டச்சு செய்தால் ’ஆண்டிபாடி’ என்றுதான் விண்டோஸ் லைவ் ரைட்டரில் எழுதுகிறது! கூகிளும் அப்படித்தான்….ஆச்சரியமாக இருந்தால் தட்டிப்பாருங்கள்.
ஆன்டிபாடி என்றால் என்ன என்று நான் சொல்ல வேண்டுமா என்ன? பலருக்குத் தெரிந்திருக்கும்…நோய் எதிர்க்கும் சக்திகள், நம் இரத்தத்தில் இருப்பவை. இவை புரதத்தால் ஆனவை!
இவை இரத்தத்தில் பாக்டிரியாக்கள், வைரஸுகள், உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் ஆகியவற்றைக் கண்டு பிடித்து அதைச் சுற்றிவளைக்கின்றன. பின்னர் இவற்றை இரத்ததில் உள்ள வெள்ளை அணுக்கள் அழிக்கின்றன.அப்படி அழிக்க முடியாவிட்டால் நாம் அந்தக் கிருமியால் ஏற்படும் நோயால் தாக்கப்படுவோம்.
ஆட்டோ ஆன்டிபாடிகள் என்றால்? - ஆன்டிபாடிகள் எப்படி உடலுக்கு அன்னியமான பொருட்களைக் சரியாகக் கண்டுகொள்கின்றன என்பது ஒரு ஆச்சரியம். பொதுவாக கிருமிகள், ஒவ்வாத பொருட்களின் மேல் ஆன்டிஜென் என்ற பொருள் காணப்படும். இந்த ஆன்டிஜென்களை இவை எதிரிகள் என்று இனம் கண்டு கொள்கின்றன.
ஆனால் சிலருடைய உடலில் உள்ள உறுப்புகளையும், திசுக்களையும் கூட இந்த ஆன்டிபாடிகள் தவறுதலாக எதிரிகளாகக் கணித்து விடுகின்றன. இதனால் இவற்றை அவை தாக்க ஆரம்பித்து விடுகின்றன. இத்தகைய ஆன் டிபாடிகளையே ஆட்டோ ஆன்டிபாடிகள் என்கிறோம்.
இப்படி நம் உடல் ஆன்டிபாடிகளே நம் உடலுக்கு எதிராகச் செயல்படும்போது ஏற்படும் நோய்களுக்கு- ஆட்டோ இம்மியூன் வியாதிகள் என்று பெயர்.
சரி! இதெல்லாம் ஏன் சொல்கிறீர்கள் என்கிறீர்களா? ஆட்டோ இம்மியூன் வியாதிகள் பற்றி அறிந்தால் அரண்டு போவீர்கள்!
 • உலகின் 6 பேரில் ஒருவருக்கு ஏதாவதொரு இந்த வகை வியாதி வருகிறது.
 • இதயநோய், கேன்சர் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மனிதனுக்கு அதிகம் துன்பம் ஏற்படுத்துபவை இவ்வகை நோய்கள்தான்.
 • Type 1 சக்கரை நோய்
 • ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ்
 • முடக்குவாதம், ஆங்கிலோசிங்க் ஸ்பாண்டிலோசிஸ்
 • குல்லன் பாரி நோய்
 • சில சிறுநீரக வியாதிகள்
 • மயஸ்தீனியா கிரேவிஸ்
 • சொரியாஸிஸ்
 • அல்சரேடிவ் கொலைடிஸ் எனப்படும் குடல் நோய்
 • வாஸ்குலைடிஸ் என்ப்படும் இரத்தக் குழாய் நோய்
 • மல்டிபிள் ஸ்கிளரோசிஸ் என்னும் நரம்பு நோய்
உள்ளிட்ட 40 வகை நோய்கள் இந்த வகைதான். இன்னும் சிக்கலான மனநோய் போன்றவற்றுக்கும் இது காரண்மாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மனிதன் எதிநோக்கும் மிகப்பெரிய பிரச்சினையில் ஆட்டோ இம்மியூன் வியாதிகள் மிக முக்கியமானவை. இவற்றைக் குணப்படுத்த முடியாவிட்டாலும் ஆரம்பத்திலேயே அறிந்து அதனால் ஏற்படும் கொடிய விளைவுகளில் இருந்து தப்பிக்கலாம்.

22 comments:

ரோகிணிசிவா said...

thanks for sharing it ,in a simple way, easy to understand .

சைவகொத்துப்பரோட்டா said...

தகவலுக்கு நன்றி மருத்துவரே.

அஹமது இர்ஷாத் said...

Useful Article..Thanks Dr..

ஜெரி ஈசானந்தன். said...

ஏதோ ...ஆண்டி பத்தி செய்தி போட்டு இருக்கீங்கன்னு நம்பி..வந்தா..இப்பிடி கவுத்தி புட்டீகளே .

ஹேமா said...

//ஜெரி ஈசானந்தன்...
ஏதோ ...ஆண்டி பத்தி செய்தி போட்டு இருக்கீங்கன்னு நம்பி..வந்தா..இப்பிடி கவுத்தி புட்டீகளே .//

ஜெரி...உங்களுக்கு ரொம்பத்தான் சேட்டை கூடிப்போச்சு.டாக்டரே ஏதோ மனம் வச்சு நல்ல செய்தி சொல்றார்.
குழப்பாதீங்க.

இடைக்கிடை இப்பிடி நல்ல செய்தியும் சொல்லுங்கோ தேவா.

ஹுஸைனம்மா said...

ம்ம்.. ஆனால், இந்த வியாதிகள் வராதபோதும், இந்த ஆண்டிபாடிகளைச் செயற்கையாகத் தட்டி வைக்க வேண்டிய நிலை ஒருசிலருக்கு வரும். கவனமாக இருக்கவேண்டும்.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு மகிழ்ச்சி
நல்லாயிருக்குங்க

க.பாலாசி said...

தேவையான தகவலுங்க... அறியத்தந்தமைக்கு நன்றிகள்....

தேவன் மாயம் said...

ரோகிணிசிவா said...
thanks for sharing it ,in a simple way, easy to understand .//

thank you!!

தேவன் மாயம் said...

சைவகொத்துப்பரோட்டா said...
தகவலுக்கு நன்றி மருத்துவரே.///

வாங்க நண்பா!

தேவன் மாயம் said...

அஹமது இர்ஷாத் said...
Useful Article..Thanks Dr..//

நன்றி அஹமத்!!

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தன். said...
ஏதோ ...ஆண்டி பத்தி செய்தி போட்டு இருக்கீங்கன்னு நம்பி..வந்தா..இப்பிடி கவுத்தி புட்டீகளே//

அய்யா!! அப்படி எழுதினா திட்டுறாங்கைய்யா!!

தேவன் மாயம் said...

ஹேமா said...
//ஜெரி ஈசானந்தன்...
ஏதோ ...ஆண்டி பத்தி செய்தி போட்டு இருக்கீங்கன்னு நம்பி..வந்தா..இப்பிடி கவுத்தி புட்டீகளே .//

ஜெரி...உங்களுக்கு ரொம்பத்தான் சேட்டை கூடிப்போச்சு.டாக்டரே ஏதோ மனம் வச்சு நல்ல செய்தி சொல்றார்.
குழப்பாதீங்க.

இடைக்கிடை இப்பிடி நல்ல செய்தியும் சொல்லுங்கோ தேவா.
///

ஜெரி ஆட்டம் தாங்கல... நல்ல புத்தி சொல்லுங்க ஹேமா..

தேவன் மாயம் said...

ஹுஸைனம்மா said...
ம்ம்.. ஆனால், இந்த வியாதிகள் வராதபோதும், இந்த ஆண்டிபாடிகளைச் செயற்கையாகத் தட்டி வைக்க வேண்டிய நிலை ஒருசிலருக்கு வரும். கவனமாக இருக்கவேண்டும்.//

அட!! அசத்திட்டீங்க!!

தேவன் மாயம் said...

நண்டு@நொரண்டு -ஈரோடு said...
பகிர்வுக்கு மகிழ்ச்சி
நல்லாயிருக்குங்க///

வாங்க வாங்க!!

தேவன் மாயம் said...

க.பாலாசி said...
தேவையான தகவலுங்க... அறியத்தந்தமைக்கு நன்றிகள்....

///

மிக்க நன்றி பாலாஜி!

Chitra said...

பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றி. :-)

ஜில்தண்ணி said...

செய்திகளுக்கு நன்றி மருத்துவரே!

ஜெயந்தி said...

//ஆட்டோ இம்மியூன் வியாதிகள் பற்றி அறிந்தால் அரண்டு போவீர்கள்!//
உண்மையாவே பயமாத்தான் இருக்கு.

~~Romeo~~ said...

பயனுள்ள தகவல்கள் .. அருமை


எனது வலைத்தளம் மாற்றப்பட்டு உள்ளது. நேரம் இருப்பின் வந்துசெல்லவும்.

http://romeowrites.blogspot.com/

நீச்சல்காரன் said...

தேவா அண்ணே,
நல்ல தகவல் சொல்றேங்க, உங்கள் மருத்துவ தகவல் மற்றவருக்கும் எளிதாக போய்ச் சேர மருத்துவம் சார்ந்த tag பயன்படுத்தி ஒரு குழுவில் போடுங்கள் அதனால் feedலும் எளிதாக பிரித்து தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். இதையேன் சொல்கிறேன் என்றால் மருத்துவம் சார்ந்த பதிவுகள் குறைவு.

Anonymous said...

எப்பவும் போல் இதுவும் பயனுள்ள தகவல்... நன்றிங்க பகிர்வுக்கு

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory