Monday 2 August 2010

அன்பால் இணைந்த பதிவர்கள்-5

மணற்கேணிக்கு சிங்கை சென்றது ஒரு புதிய உலகின் கதவைத் திறந்துவிட்டது போல் இருந்தது. நிறைய பதிவர்கள் தமிழ் ஆர்வலர்களைச் ச்ந்திக்க முடிந்தது.

பூக்களின் பெயரை அறியாத வண்டு தேன் அருந்தியது போல் நான் சந்தித்த பலரின் பெயரும் எனக்கு நினைவிலில்லை.

சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்க சிரமப்பட வேண்டியதில்லை. முப்பத்தி ஒரு (31)டக் டூர் என்ற பயண பேருந்த்கள் உடல் முழுக்க டக்  டூர் என்ற பெரிய எழுத்துகளையும் படங்களையும் தாங்கி நகர் முழுக்க சுற்றிக்கொண்டிருக்கும். நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அருகில் டக் டூர் பஸ் எஙுகு வரும் என்று கேட்டு ஏறிக்கொள்ளலாம். அதிலேயே டிக்கெட்டும் வாங்கிக் கொள்ளலாம். ஒரு பஸ்ஸில் டிக்கெட் வாங்கினால் அன்று முழுவதும் எங்கு வேண்டுமானாலும் இறங்கி இடங்களைப் பார்த்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் மீண்டும் அவர்களின் எந்த் பஸ்ஸில் வேண்டுமானாலும் ஏறலாம.

Boarding location @ Suntec City (Galleria)

Operating Hours: 10am – 6p

Duration : 60 minutes
Frequency
: Hourly departures
: 31 DUCKies
: S$33/Adult
   S$17/Child (3-12 years)
   S$2/Toddler (Below 3 yrs)
Phone reservation are highly  recommended.
Call us @ 6-33-868-77 (TOURS).

சன்டெக் சிட்டி என்றொரு மாபெரும் மால் உள்ளது. இது நம் ஸ்பென்சர் பிளாசா போல் ஐந்து பிரமாண்டமான மால்கள் ஒரு பெரிய ரவுண்டானாவைச் சுற்றிக் கட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மேலே:சண்டெக் சிட்டியின் 5 பெரிய கட்டிடங்கள்,நீரூற்று!

ஐந்து கட்டிடங்களுக்கும் நடுவில் உலகின் மிகப்பெரிய செயற்கை நீரூற்று அமைந்துள்ளது. சண்டெக் சிட்டியில் உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களின் கடைகளும் உள்ளன. அனைத்து வகை உணவுக்கூடங்களும் உள்ளன.

அங்குள்ள வாசகர் வட்டம் பற்றிச்சொல்லியிருந்தேன். அதில் முக்கியப்பங்கு வகிப்போர்  திருமதி.சித்ரா,திருமதி ஜெயந்தி.

 clip_image001[6]

திருமதி.ஜெயந்தி ஏகப்பட்ட சிறுகதைகளும் நாவல்களும் எழுதியுள்ளார். சீன மொழியிலும் கவிதைத் தொகுப்பு மொழிபெயர்த்து எழுதியுள்ளார். ஆனால் வெகு எளிமையாகப் பழகுகிறார். சித்ரா அவரை மேடையேற்ற முயற்சி செய்தும் முடியவில்லை. மேடைப்பேச்சுப் பழக்கமில்லையாம்.

அவருக்கு நேரெதிர் நம் சித்ரா அவர்கள். மணற்கேணி அமைப்பின் எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தைத் திறனாய்வு செய்தார். சுமார் அரை மணிநேரம சுவையுடன் அவர் கொடுத்த விமரிசனம்.. சொல்ல முடியாத அளவு சிறப்பாக இருந்த்து. இவரும் கதை, பட்டிமன்றம் என்று சிங்கையைக் கலக்கி வருபவர். நமக்காக வந்திருந்த் சித்ரா, ஜெயந்தி இருவருக்கும் நன்றி!

திருமதி.சித்ரா

clip_image001

மேலே ஜெயந்திசங்கர், சித்ரா, செந்தில்நாதன்,குழலி

clip_image001[4]

டொன்லீ- http://donthelee.blogspot.com/2009/03/blog-post_23.html  சிறப்பாகக் கதைகள் எழுதிக்கொண்டிருந்த சிங்கை மாணவர். படிப்புச்சுமை காரணமாகத் தற்சமயம் கொஞ்சம் எழுத்தைக்குறைத்துவிட்டார். கணினியும் கையுமாக இருந்தார்.

clip_image001[8]

டொன்லீ

பக்கத்து ஊர்க்காரரான( சிங்கம்புணரி) பாண்டித்துரையைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.http://pandiidurai.wordpress.com/ நாம் என்று அவரும் அவர் நண்பர்களும் நடத்தும் இதழினைப் பரிசளித்தார். தமிழ் இலக்கியம் வளர சிங்கையில் இவர்களின் பணி பாராட்டுக்கு உரியது.

clip_image001[10]

பாண்டித்துரை

மலேசியாவிலிருந்து விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள கே.பாலமுருகன் வந்திருந்தார். அமைதியுடன் அமர்ந்திருந்த இவர்  இலக்கிய வட்டத்தில்  எல்லோருக்கும் நன்குhttp பரிச்சயமானவர்.://bala-balamurugan.blogspot.com/  இலக்கியம் பற்றிப்பேசுவத்ற்கு சந்த்ர்ப்பமேதும் இல்லாமல் போயிற்று. 

clip_image001[12]

கே.பாலமுருகன்

அநங்கம்  மலேசிய இலக்கிய சிற்றிதழ்

அநங்கம் (december 2009) மலேசிய இலக்கிய சிற்றிதழ்
அநங்கம் என்ற மலேசிய இலக்கியச் சிற்றிதழுக்கு ஆசிரியராகவும் இருக்கிறார்.

சிங்கப்பூர் பிளையர் என்கின்ற ராட்சத ரங்கராட்டினம் சிங்கப்பூரில் சுற்றுலாச் செல்வோர் பார்க்க வேண்டிய ஒன்று. மயக்கம், தலைசுற்றல் வருமோ என்று பயப்படத்தேவையில்லை. ஏனெனில் நகருவதே தெரியாதவண்ணம் மெதுவாக சுற்றுகிறது. 

இரவில் சிங்கையைப் பிளையரில் பார்ப்பது மிக அழகு.

தேவா.

30 comments:

Ponchandar said...

உங்கள் பதிவை வாசித்த பின் சிங்கை காண வேண்டும் என்கிற ஆவல் ஏற்படுகிறது. புகைப்படங்களும் அருமை.

அப்பாவி முரு said...

//Ponchandar said...
உங்கள் பதிவை வாசித்த பின் சிங்கை காண வேண்டும் என்கிற ஆவல் ஏற்படுகிறது. புகைப்படங்களும் அருமை.//

வாங்க., வாங்க காத்துக்கிட்டு இருக்கோம்

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

i missed it. india vanthapiraku ippadi panreengale. avvvvvvvvvvvvvvv

தேவன் மாயம் said...

உங்கள் பதிவை வாசித்த பின் சிங்கை காண வேண்டும் என்கிற ஆவல் ஏற்படுகிறது. புகைப்படங்களும் அருமை.
///

சிங்கைக்கு அப்பாவி முரு என் சார்பாக வரவேற்றுள்ளாரே!

தேவன் மாயம் said...

வரவேற்புக்கு நன்றி முரு!

தேவன் மாயம் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
i missed it. india vanthapiraku ippadi panreengale. avvvvvvvvvvvvvvv

///
ரமேஷ்! போகும்போது கூப்பிடுங்க!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வழமை போல் பதிவு அருமை!

தொடர் சிறக்கிறது!

தேவன் மாயம் said...

நன்றி ஜோதிபாரதி!

நட்புடன் ஜமால் said...

3 வருடம் அங்கிருந்தும் ஃப்ளையரிலோ

சுற்றுலா பஸ்ஸிலோ போகவேயில்லை

போட்டோஸ் ரொம்ப தெளிவா இருக்குங்க தேவ்!

முனைவர் இரா.குணசீலன் said...

தேவையான பதிவு மருத்துவரே..

'பரிவை' சே.குமார் said...

வழமை போல் பதிவு அருமை!

தொடர் சிறக்கிறது!

விக்னேஷ்வரி said...

சிங்கைக்கு அழைத்துச் சென்ற அழகான குறிப்புப் பதிவு.

குமரை நிலாவன் said...

வழமை போல் பதிவு அருமை

சி தயாளன் said...

//படிப்புச்சுமை காரணமாகத் தற்சமயம் கொஞ்சம் எழுத்தைக்குறைத்துவிட்டார். கணினியும் கையுமாக இருந்தார்//

:-) நன்றி

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் டாக்டர்.. வழக்கம் போல பதிவு அழகு அருமை....

சிநேகிதன் அக்பர் said...

அருமையான பதிவு.

Praveenkumar said...

மிக அருமையான தொகுப்பு. புகைப்படங்களின் தொகுப்பும் வழக்கம்போல் அருமை. பகிர்வுக்கு நன்றி மருத்துவரே..!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
3 வருடம் அங்கிருந்தும் ஃப்ளையரிலோ

சுற்றுலா பஸ்ஸிலோ போகவேயில்லை

போட்டோஸ் ரொம்ப தெளிவா இருக்குங்க தேவ்!

//
போட்டோஸ் நம் நண்பர்கள் எடுத்தது!!

தேவன் மாயம் said...

முனைவர்.இரா.குணசீலன் said...
தேவையான பதிவு மருத்துவரே..//

நன்றி! நண்பரே!

தேவன் மாயம் said...

சே.குமார் said...
வழமை போல் பதிவு அருமை!

தொடர் சிறக்கிறது!
//

வருகைக்கு நன்றி நண்பரே!

priyamudanprabu said...

மருத்துவரே கலக்கலா இருக்கு
அடிக்கடி வந்து போங்க

தேவன் மாயம் said...

விக்னேஷ்வரி said...
சிங்கைக்கு அழைத்துச் சென்ற அழகான குறிப்புப் பதிவு.

//
கருத்துக்கு நன்றிங்க!

தேவன் மாயம் said...

குமரை நிலாவன் said...
வழமை போல் பதிவு அருமை

//
உங்களைப்பற்றித் தனிப்பதிவுல்ல போடனும்!

தேவன் மாயம் said...

’டொன்’ லீ said...
//படிப்புச்சுமை காரணமாகத் தற்சமயம் கொஞ்சம் எழுத்தைக்குறைத்துவிட்டார். கணினியும் கையுமாக இருந்தார்//

:-) நன்றி

டொன்லீ! கொஞ்சம் எழுதலாமே!

தேவன் மாயம் said...

ஆ.ஞானசேகரன் said...
வணக்கம் டாக்டர்.. வழக்கம் போல பதிவு அழகு அருமை....
//

ஞான்ஸ்! நலமா?

தேவன் மாயம் said...

அக்பர் said...
அருமையான பதிவு.

//
நன்றி அக்பர்!

தேவன் மாயம் said...

பிரவின்குமார் said...
மிக அருமையான தொகுப்பு. புகைப்படங்களின் தொகுப்பும் வழக்கம்போல் அருமை. பகிர்வுக்கு நன்றி மருத்துவரே..//

பிரவீன் நன்றி!

தேவன் மாயம் said...

பிரியமுடன் பிரபு said...
மருத்துவரே கலக்கலா இருக்கு
அடிக்கடி வந்து போங்க
//

கட்டாயம் வருகிறேன்!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

படங்கள் நல்ல தெளிவாக இருக்கின்றன. நேரே இருந்து உங்கள் பயண அனுபவம் சொல்வதைப் போல் இருக்கிறது. தொடருங்கள் தேவா.

தேவன் மாயம் said...

ஜெஸ்வந்தி said...
படங்கள் நல்ல தெளிவாக இருக்கின்றன. நேரே இருந்து உங்கள் பயண அனுபவம் சொல்வதைப் போல் இருக்கிறது. தொடருங்கள் தேவா.///

ஏற்கெனவே நிறைய எழுதிவிட்டேன்!! இன்னுமா எழுத!!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory