Monday 9 August 2010

வாழ்க்கைப்பயணிகள்!

 

நெருங்கிய உறவினர் கல்யாணத்துக்குப் போகவேண்டும் என்றால் நமக்கு ஒரு பிரச்சினையுமில்லை. கல்யாணமென்றாலும் சரி வேறு எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, இஸ்திரி போட்ட ஒரு செட் பேண்டும், சட்டையும் இருந்தால் போதும் கிளம்பிவிடலாம். ஆனால் பெண்களின் கதை அப்படி அல்ல. கல்யாணத்தில் மணப்பெண் என்ன பட்டுப்புடவை, என்ன நகை போட்டிருக்கிறார் என்று கவனிப்பதை விட நாத்தனார் என்ன பட்டுச்சேலை கட்டியிருக்கிறாள், வேறு சொந்தக்காரப் பெண்கள் என்ன புதிய வகை பட்டுக்கட்டியிருக்கிறார்கள் என்பதில் ஆரம்பித்து கழுத்தில் போட்டிருக்கும் செயின், ஆரங்களின் வகை,புதுவகை நெக்லஸ், வைரக்கல் வைத்ததா? எங்கு வாங்கியது? எத்தனை பவுன் என்றெல்லாம் விசாரிப்புகள்தான் வேலையாக இருக்கும். இதில் முடிந்த அளவு நகைகளை அள்ளிப்போட்டுக்கொண்டு அலங்காரத் தேர்களாக பவனி வருவதும், யாராவது “இது நல்லாயிருக்கே! எங்கே வாங்கினீர்கள்?”என்று கேட்டவுடன் நகை,சேலைப் புராணங்களை அள்ளிவிட்டு “ஒரு நட்சத்திரப் பெருமையுடன் அலைவதும் நடுவயது மகளிரின் வாடிக்கை.

இதில் நமக்கென்ன வந்த்து என்கிறீர்களா? எங்கேயோ இடி இடிக்க எங்கெயோ மழை பெய்த மாதிரி

“என்னங்க உங்க பெரியம்மா பொண்ணு போட்டிருந்தாங்களே ஒரு ஆரம் அது ரொம்ப நல்லாயிருந்ததுங்க! மதுரையில்தான் அந்த டிசைன் இருக்காம்! அடுத்த வாரம் போகும் போது வாங்கலாம்னு பார்க்கிறேன், என்ன சொல்றீங்க!!” என்று மெதுவாகப் பேச்சு ஆரம்பிக்கும். அது சரி என்று சொன்னால் நம் ஜி.பி.எஃப் லோனாகவோ அல்லது வேறுவகையிலோ நம் பணத்துக்கு ஆப்பாக முடியும். பணம் கையிலிருந்தாலோ கேட்கவே வேண்டாம், “தங்கம் விலை கூடிக்கிட்டே போகுதுங்க! பணத்தை வீணாகக் கையில் வைத்திருக்க வேண்டாம். நான் என்ன எனக்கா நகை கேட்கிறேன். இப்ப இருந்தே நகை சேர்த்தால்தானே பொண்ணுக்கு கல்யாணத்துக்கு ஆகும்! நீங்க வேற செலவுக்குப் பணம் வேண்டுமென்றாலும் இதை அடகு வச்சு வாங்கிக்கலாம், வட்டி ரொம்பக் குறைவுதான்! ( இதைக் கேட்கும் உங்களுக்கே சொல்வது நியாயம் போலத்தெரியுமே!!) என்று நமக்கு சமாதானம் வேறு! இப்படிப்பட்ட அனுபவங்கள் கல்யாணமான பதிவர்கள் அனைவருக்கும் இருக்கும் என நினைக்கிறேன்.

சரி! சொல்ல வந்ததை விட்டுவிட்டேன்! கல்யாணத்துக்குப் போவதற்கு முன் நம்மிடம் உள்ள நகைகளையே புதிது போல் மெருகு போட்டு, அணிந்து செல்வதும் நடக்கும்.

இது வழக்கமாக என் வீட்டில் நடப்பதுதான். அப்படி நான் செல்லும்போது பழக்கமானவன்தான் ஜெய்லானி! ஜெய்லானிதான் பெயர் என்றாலும் நகைக்கடை பஜாரில் லைலா என்றுதான் கூப்பிடுவார்கள்!

ஜெய்லானி ஒல்லியாக சற்றே சிவப்பாக கூரிய மூக்குடன் இருந்தான். அவனுடைய முகம் எப்போதும் சிரிப்புக்குத் தயாரான நிலையில் இருப்பது போல் இருக்கும். அவன் என்னிடம் வந்தது ஒரு சான்றிதழுக்காக. அதுவும் அவனுடைய அண்ணனுடைய சாவுக்கான இறப்புச்சான்றிதழ்!

பொதுவாகத் தங்கநகை மெருகு போடுபவர்கள் சயனைடு உபயோகிப்பது வழக்கம். சயனைடு என்பது மிகக் கொடிய விசம். இதை எப்படி நகைத் தொழிலாளிகள் வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை.

இந்த சயனைடைத்தான் அவனுடைய அண்ணன் சாப்பிட்டு விட்டு இறந்து போனார். இறந்து போனவருடைய உடலைப் போஸ்ட்மார்ட்டம் செய்து சயனைடு சாப்பிட்டதை உறுதி செய்து சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஏதோ ஒரு இன்சூரன்ஸில் அவர் போட்ட பணம் இருந்தது. அது அவர் இறப்பதற்கு ஒரு மாதம் முன்பாகத்தான் கட்டும் தேதி முடிந்திருந்தது. அதனால் அவர் அந்தக் கட்டும்தேதிக்கு முன்பாக இறந்ததுபோல் ஒரு சான்றிதழ் அரசு மருத்துவரிடம் வாங்கினால் பணத்தை எடுத்துவிடலாம் என்று யாரோ ஒரு வில்லங்கமான ஏஜண்ட் சொன்னதுமட்டுமல்லாமல் ”இன்னாரிடம் போ” என்று என் பெயரை வேறு சொல்லியனுப்பிவிட்டான். உள்ள வில்லங்கங்கள் போதாதென்று இது வேறு வில்லங்கமா? என்று அவர்களிடம் மறுத்துச் சொல்லி அனுப்பிவைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.

சரி சான்றிதழ்தான் கொடுக்க முடியவில்லை என்று அவனிடம் நகை மெருகு போட அடிக்கடி கொடுப்பது வழக்கம். பேசுவது சுவையாகப் பேசுவான். போகும்போதெல்லாம் நிறைய நகைகளை வைத்து மெருகு போட்டுக் கொண்டிருப்பான். ஏன் உன் அண்ணன் தற்கொலை செய்துகொண்டான் என்றால் பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பிவிடுவான்.

கொஞ்ச நாள் நான் அவன் கடைக்குச் செல்லவில்லை. ஒரு வாரம் முன்பு காலையில் அரசு மருத்துவமனையில் இருந்தபோது சார்! போஸ்ட்மார்ட்டம் ஒன்று உள்ளது. எல்லோரும் அவரவர் முறையை முடித்துவிட்டார்கள். இது உங்கள் முறை என்றார் உதவியாளர். ”என்ன கேஸ்?” என்றேன். சயனைடு பாய்ஸன் சார் என்றார். நான் என்னை அறியாமலேயே ஜெய்லானியா? என்றேன். உதவியாளர் முகத்தில் ஆச்சரியம் !!

(தொடரும்).

26 comments:

நட்புடன் ஜமால் said...

கொடுமை தான் :(

தேவன் மாயம் said...

வருகைக்கு ந்ன்றி ஜமால்!

'பரிவை' சே.குமார் said...

கொடுமை தான்.

thodarungal.

Anonymous said...

kathaiyaga irunthu irunthal konjam aaruthalaga irunthu irukkum....irunthalum engalai pottu nallavey varuthu eduthutenga muthalla......

தேவன் மாயம் said...

சே.குமார் said...
கொடுமை தான்.

thodarungal.///

கருத்துக்கு நன்றி குமார்!

தேவன் மாயம் said...

தமிழரசி said...
kathaiyaga irunthu irunthal konjam aaruthalaga irunthu irukkum....irunthalum engalai pottu nallavey varuthu eduthutenga muthalla......
///

உள்ளதை நகைச்சுவையுடன் சொன்னேன்!!!

இளைய கவி said...

ரொம்ப கொடுமைதான் தல..... நம்ம நாட்டுல தான் கஷ்ட்ட படுறவன் மட்டும் கஷ்ட்ட பட்டுகிட்டே இருக்குறான்

இளைய கவி said...

Jerry Eshananda said...

தொடர்கிறேன் தேவா

தேவன் மாயம் said...

இளைய கவி said...
ரொம்ப கொடுமைதான் தல..... நம்ம நாட்டுல தான் கஷ்ட்ட படுறவன் மட்டும் கஷ்ட்ட பட்டுகிட்டே இருக்குறான்
///
இது தொடர்கதைதான்!!

தேவன் மாயம் said...

ஜெரி நன்றி!

Jerry Eshananda said...

நன்றியெல்லாம் செல்லாது..செல்லாது...போன பதிவுல நீங்க "முட்டை" போட்டத பத்தி ஏன் எனக்கு சொல்லல?

Praveenkumar said...

விதி யாரை விட்டது தேவா சார். எது நடக்குமோ அது நடந்தே தீரும் என்பதற்கு இப்பதிவும் ஒரு சாட்சி. ஆனால் முடிவுல கொடுமையோ... கொடுமை.....
பகிர்வுக்கு நன்றி ஐயா.

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தன். said...
நன்றியெல்லாம் செல்லாது..செல்லாது...போன பதிவுல நீங்க "முட்டை" போட்டத பத்தி ஏன் எனக்கு சொல்லலை?

அய்யா!! இனி கோழி முட்டை போடும்போதெல்லாம் சொல்லியனுப்புகிறேன் சரியா?

தேவன் மாயம் said...

பிரவின்குமார் said...
விதி யாரை விட்டது தேவா சார். எது நடக்குமோ அது நடந்தே தீரும் என்பதற்கு இப்பதிவும் ஒரு சாட்சி. ஆனால் முடிவுல கொடுமையோ... கொடுமை.....
பகிர்வுக்கு நன்றி ஐயா.///

தொடர்கின்றன கொடுமைகள்! நன்றி பிரவீன்!

Gayathri said...

அடக்கவுளே...என்ன கொடுமை...ரொம்பவே கஷ்டமா இருக்கு...அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..

தேவன் மாயம் said...

Gayathri said...
அடக்கவுளே...என்ன கொடுமை...ரொம்பவே கஷ்டமா இருக்கு...அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..///

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அப்துல்மாலிக் said...

awaiting till end

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//சே.குமார் said...
கொடுமை தான்.

thodarungal.///

கருத்துக்கு நன்றி குமார்! //




அண்ணே.....,

சிநேகிதன் அக்பர் said...

முதலில் காமெடியாக அரம்பித்து பின்பு மனதை கனக்க செய்து விட்டீர்களே.

குடந்தை அன்புமணி said...

வருந்தத்தக்க சம்பவம்தான். கத்தி எடுத்தவன் கத்தியால சாவுங்கிற மாதிரியில்ல இருக்கு... பொழப்புக்காக சயனைடு உபயோகிப்பவர்கள், பொழப்பில்லாமல் அதையே அருந்தி உயிர் துறப்பது கொடுமைதான் சார். இதற்கு நீங்கள் வைத்த தலைப்பு ரொம்ப டசசிங்கா இருக்குது. யார் எப்போது இறங்குவார்கள் என்று தெரியாத பயணம்...

ஆ.ஞானசேகரன் said...

//சயனைடு பாய்ஸன் சார் என்றார். நான் என்னை அறியாமலேயே ஜெய்லானியா? என்றேன். உதவியாளர் முகத்தில் ஆச்சரியம் !!

(தொடரும்).
///

என்ன கொடுமைசார்.....

ஆ.ஞானசேகரன் said...

தலைப்பும்.... யோசிக்க வைக்கின்றது

ஆதவா said...

நகைத்தொழிலாளிகள் கொதிக்க வைத்த சயனடை நீரில் மெருகு அல்லது கலர் போடுவார்கள். கலர் போடப்படும் சயனைடு நீர் அடர்த்தி குறைவானது. ஆனால் ஆபத்தானது. பூச்சக் கொட்டைகளை நீரில் ஊறவைத்து பித்தளை பிரஷால் தேய்த்து கூட மெருகு போடுவார்கள்.

உங்கள் கதை சுவாரஸியமா இந்த பாகத்தில் முடிஞ்சிருக்கு.... அடுத்த பாகத்திற்கு ஓடு ஆதவா!!!

Ravichandran Somu said...

டாக்டர் சார், ஜோவியலா ஆரம்பிச்சு கடைசியில மனம் கணக்க வைத்து விட்டீர்கள்:(

மதுரை சரவணன் said...

அருமையான விவரிப்பு.. வாழ்த்துக்கள்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory